கரும்புள்ளி
ஒரு நாள்
கல்லூரி ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
‘இன்று நான் உங்களுக்கு ஒரு
ஆச்சரியமான பரிட்சையை வைக்கப்போகிறேன்’ என்றார்.
பிறகு ஒவ்வொரு
மாணவர்களிடமும் எழுத்துள்ள பக்கம் கீழே இருக்கும் படி கவிழ்த்து ஒரு காகிதத்தை அவர்களின்
டெஸ்க்கில் வைத்தார்.
‘மாணவர்களே! இப்போது உங்கள் எதிரே உள்ள காகிதத்தைத் திருப்பிப் பார்க்கவும்’ என்றார். எல்லா மாணவர்களும் அப்படியே செய்தார்கள்.
ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம். அதில் எந்தக் கேள்வியும்
இல்லை. நடுவில் ஒரு கரும்புள்ளிதான் இருந்தது. மாணவர்களின் குழப்பத்தை அறிந்த ஆசிரியர், ‘மாணவர்களே!
நீங்கள் காகிதத்தில் காண்பதைப் பற்றி எழுதவும்’ என்று சொன்னார்.
மாணவர்களுக்கு
குழப்பமாகப் போய் விட்டது.
இருப்பினும் தங்களுக்குத் தோன்றியதை எழுதினார்கள். பிறகு ஆசிரியர் மாணவர்களின் காகிதங்களை வாங்கி, அவர்கள்
அதில் எழுதி இருந்தவைகளை ஒவ்வொன்றாக உரக்கப்படித்தார். அத்தனை
மாணவர்களும் அந்தக் கரும்புள்ளையைப் பற்றியும், அது காகிதத்தில்
இருக்கும் இடம் பற்றியும் தான் எழுதி இருந்தனர்.
பிறகு
ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
‘மாணவர்களே! நீங்கள் எழுதியவைகளுக்கு மார்க் போடப்போவதில்லை.
இந்தப் பரிட்சை உங்களை சிந்திக்க வைக்கச் செய்யவே என்னால் உங்களுக்குத்
தரப்பட்டதாகும். நீங்கள் எழுதியதைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
அனைவரும் காகித்த்தின் மையப்பகுதியில் இருக்கும் கரும்புள்ளையைப் பற்றித்தான்
எழுதி இருந்தீர்கள். அது காகித்தில் 1% கூட இருக்காது. ஆனால் 99% உள்ள
வெள்ளைப் பகுதியைப் பற்றி ஒருவரும் சிந்திக்கவோ, எழுதவோ இல்லை!
இதைத்
தான் நாம் நமது வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறோம். நம் முன்னே ஒரு வெள்ளைக் காகிதம்
நம்மை பார்க்க வைத்து, சந்தோஷப்படுத்த இருக்கிறது. ஆனால், நாம் மிகவும் சிறியதாக உள்ள கரும்புள்ளியிலேயே
மனத்தைச் செலுத்தி நிம்மதியையும், சந்தோஷத்தையும் இழக்கிறோம்.
நமது வாழ்க்கை கடவுள் நமக்கு அளித்த வரப்பிரசாதம். அன்பு, அரவணைப்பு, எப்போதும் குதூகலமாக
கொண்டாடும் நிலை நம் முன் தோன்றுகிறது. இயற்கைச் சூழல் நம்மை
ஒவ்வொரு நாளும் உற்சாக மூட்டுகிறது. நம் சுற்றி நமது தோழர்கள்
இருக்கிறார்கள். நமது ஜீவனத்திற்கு நல்ல வேலை உண்டு. நல்ல செய்திகள் ஒவ்வொரு நாளும் நம்மைச் சூழும்.
இருப்பினும், இந்த அற்புத
நிகழ்ச்சிகளை எல்லாம் புறம் தள்ளி, கரும்புள்ளியைத் தான் நாம்
தேடி கவனமாகப் பார்க்கிறோம். கரும்புள்ளியான - ஆரோக்கியமற்ற நிலை, பணத்தட்டுப்பாடு, குடும்ப்ப் பிரச்சனை, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு
- ஆகியவைகளால் நாம் பாதிக்கப்படுகிறோம்.
ஆனால், இந்தக் கருப்புப்
புள்ளி நமக்குக் கிடைத்த நல்லவைகளான மற்றவைகளை ஒப்பிடும் போது மிகவும் சிறியது.
இருப்பினும், அந்தக் கரும்புள்ளி நமது மனத்தைப்
பாழாக்கி விடுகிறது.
ஆகையால், உங்கள் வாழ்க்கையில்
சந்திக்கும் கரும்புள்ளியிலிருந்து உங்கள் கண்களை அகற்றுங்கள். வெள்ளை நிறத்தில் இருக்கும் உங்கள் வாழ்க்கையின் உன்னதமான நிலைகளை நினைத்து,
வாழ்க்கையை சந்தோஷமாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
Comments