அச்சே தின் ஜரூர் ஆயேங்கே - நல்ல நாள் சீக்கிரம் வரும்

அச்சே தின் ஜரூர் ஆயேங்கே - நல்ல நாள் சீக்கிரம் வரும்



பிரிட்டன் பிரதம மந்திரி டேவிட் கெமரின் 13-11-2015 அன்று இங்கிலாந்தின் வெம்லே அரங்கத்தில் கூடி இருந்த 70,000 அயல் நாட்டு  இந்திய வம்சாவளியினர் மத்தியில் மிகவும் உருக்கமாக உரை ஆற்றும் போது முழக்க மிட்டார்: ‘ஒரு சாய்வாலா இந்தியாவின் பிரதம மந்திரியாக முடியாது என்று சொன்னார்கள். ஆனால், இதோ மோடி இங்கே இந்தியாவின் பிரதமராக உங்கள் முன் நிற்கிறார். மோடி சொன்னார்: அச்சே தின் ஆனேவாலே ஹை - நல்ல நாள் வர இருக்கிறதுஎன்று. ஆனால் நான் சொல்கிறேன்:  அச்சே தின் ஜரூர் ஆயேங்கே - நல்ல நாள் சீக்கிரம் வரும்.’

இந்தப் புகழுரையைச் சொல்லுவதற்கு முன் கேமரின் சாதக-பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டும். அவர் உரையைக் காது கொடுத்துக் கேட்டவர்கள், கேமரின் எவ்வளவு உணர்வு பூர்வமாக - ஆத்மார்த்தமாகச் சொன்னார் என்பதை உணர்ந்திருப்பார்கள்.

கேமரின் மேலும் சொன்ன வாசகங்கள் இந்திய வம்சாவளியினருக்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்க்கும்.

கேமரின் தொடர்ந்து சொன்னவைகள்: நமஸ்தே வெம்லே! இந்த மா பெரும் கூட்டத்தைப் பார்த்தவுடன், எனக்கு ஒன்று புரிகிறது: நாம் எல்லோரும் இன்று வெற்றி வீர்ர்களாகத் திகழ்கிறோம். வரும் காலத்தில் இந்திய வம்சாவளியினரில் ஒருவர் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகக் கூட வர முடியும். இந்திய வம்சாவளியினர் எங்களது பள்ளிகளில் பாடம் நடத்துகிறார்கள். வீதிகளைப் பாதுகாக்கின்றனர். எங்களது ராணுவத்தில் பணி புரிகிறார்கள். இதனால், நாம் ஒன்றாக ஒரு மிகவும் வெற்றி வாய்ந்த பன்முக அறிவுசார்ந்த சுதந்திர நாடாக உலத்திற்கு உதாரணமாகத் திகழ்வோம்.

இந்தியாவும் - இங்கிலாந்தும் ஒன்றாக வன்முறை அச்சுறுத்தலை எதிர்கொள்வோம். ஒன்றாக முறியடிப்போம். டீம் இந்தியா, டீம் யு.கே. ஆகிய இரண்டும் ஒரு வெற்றிக் கூட்டணியாக இணைவோம். மோடியும், நானும் நாட்டை ஆளுவதில் மிகவும் கடினமான நேரத்தில் இருக்கிறோம். ஆனால், எங்களது லட்சியத்தின் உயரத்தினால் நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம். பிரிட்டன் என்பதற்கு முன் உள்ள கிரேட்என்ற அடை மொழியை இந்திய வம்சாவளியினர் தான் கொடுத்துள்ளனர்.

நீங்கள் பம்பாயில் அவதிப்பட்டீர்கள். நாங்கள் லண்டனில் அவதிப்பட்டோம். ஆகையால், நாம் இருவரும் ஒருங்கிணைந்து, வன்முறையினை முறியடிப்போம். இந்தக் கூட்டம் உண்மையிலேயே இந்தியா-பிரிட்டிஷ் உறவில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்தியாவிற்கு யு.என். பாதுகாப்பு சபையில்  இடம் கிடைக்க நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

இந்த கேமரின் உரை இந்திய சரித்திரத்தில் இடம் பெறும். இது மோடியால் இந்திய வம்சாவளியினருக்குக் கிடைத்த அரிய புகழ் கிரீடமாகும். ‘இந்திய மண்ணில் இல்லையே என்ற மன ஏக்கம் ஒரளவுக்கு யு.கே. வாழ் இந்திய வம்சாவளியினருக்கு போயிருக்கும் என்பதே மோடியின் யு.கே. விஜயத்தின் வெற்றியாகக் கொள்ளலாம். இந்தியன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா - என்று பாரதி பாணியில் பாடி மோடிக்கும் - கேமரினுக்கும் நன்றி சொல்வோமாக

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017