கல்விக் கூடமா? கலவரக் கூடாரமா?
அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். உண்மையில் அரசியல்
வாதிகளில் பலரின் மனங்கள் மிகவும் கேவலமான எண்ணங்களால்
நிரம்பி வழிவதால் அரசியலில் சாக்கடை மணம் தான் கம கம என்று கமக்கிறது. பேச்சுத் சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் நாகரீகமோ அல்லது தேசியச்
சிந்தனையோ இல்லாமல் இந்தியாவின் சுதந்திரமான அமைப்பின் அஸ்திவாரத்தையே அசைத்து
ஆட்டம் காண வைக்கும் அவலம் இன்று உலா அவலம் நிகழ்கிறது.
கல்வி கற்க வந்த மாணவ-மாணவிகளிடம் விஷ விதைகளைத் தூவி அந்த
மாணவ-மாணவிகளைத் தடம் புரள வைக்கும் பல அரசியல் கட்சிகள்
கல்விக் கூடத்தின் புனிதத்தைச் சீர்குலைத்து, அதை கலவரக்
கூடாரமாக மாற்றி அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே நிர்மூலமாகச் செய்து
விடுகின்றனர். இது சமீபகாலத்தில் மிகவும் வெளிப்படையாகத்
தெரிய வருகின்றது.
கல்விக் கூடத்தின் முக்கிய பங்கு மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக
கல்வியைப் புகட்டி, ஒழுங்கினைப் போதித்து, ஒப்பற்ற குடிகளாக உருவாக்க வேண்டியது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத
ஒன்றாகப் போய் விட்டது. அதற்குக் காரணம், கல்லூரிகளில்- அதிலும் குறிப்பாக அரசுக் கல்லூரிகள் -
சர்வகலாசாலைகள் ஆகியவைகளில்
அரசியல் கட்சிச் சார்பில் மாணவ-மாணவிகள் பலவிதமான
குழுக்களாகிச் செயல்படுவதால் இந்தியாவின் அரசியல் மாற்றங்கள் அங்கேயும்
எதிரொலிக்கும் படி ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் மாணவ-மாணவிகளைத்
தூண்டி விடுகின்றனர்.
இந்த அவல நிலைக்கு சமீபத்தில் நடந்த - நடந்து கொண்டிருக்கிற
ஜவஹர்லால் நேரு யுனிவர்சிடி சம்பவமே சாட்சி.
9-ம் தேதி பிப்ரவரி 2016
அன்று ஜவஹர்லால் நேரு யுனிவர்சிடியின் சில மாணவ-மாணவிகள் 3 வருடங்களுக்கு முன் 9-02-2013 அன்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் படி தூக்கிலப்பட்ட தீவிரவாதி அஃஸல்
குரு என்ற முஸ்லீமிற்கு ஆதரவாகக் கூட்டம் நடப்பதற்கு யுனிவர்சிடி அனுமதி மறுத்த
உத்திரவையும் மீறி ‘கலாச்சார மாலைத் தெருக்கூட்டம்’ நடத்தினர்.
‘ஒரு போஸ்ட்
ஆபீஸ் இல்லாத நாடு’ என்று இந்தியாவை இகழும் போஸ்டர் அடித்து
அதில், “பிராமணக் கருத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த மனசாட்சி!
அஃஸல் குரு & மஹ்பூல் பட் ஆகியவர்களை
நீதிப்படுகொலைகளுக்கு எதிராக! காஷ்மீர மக்கள் விடுதலை
இயக்கத்திற்கு ஆதரவாக! 9-ம் தேதி பிப்ரவரி மாலை 5 மணிக்கு சபர்மதி டாபாவில். இந்தியா ஆக்கிரமிப்பை
கடுமையாக எதிர்க்கவும், தீவிரமாகப் போராடும் காஷ்மீர் மக்களுக்கு
ஆதரவாக குரல் எழுப்பி உங்கள் உக்கிரத்தை வெளிப்படுத்தவும் உங்களைத் திரண்டுவர
வரவேற்கிறோம்.”
அந்த மாலைக் கூட்டத்தில், இந்தியாவிற்கு
எதிராகவும், காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாகவும் கோஷம் செய்தனர். அஃஸல் குரு
பார்லிமெண்ட் வளாகத்தை 13-12-2001
அன்று தாக்கிய பாகிஸ்தான்
தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டான் என்ற குற்றச் சாட்டு நிரூபணமாகி, உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்ததை ஜவஹர்லால் நேரு யுனிவர்சிடியின் அந்த போராட்டக்கார மாணவ-மாணவிகள் - அந்தத்
தீர்ப்பையே -“நீதிக் கொலை” என்று சொன்னதுடன், “பாகிஸ்தான்
வாழ்க - இந்தியா ஒழிக - காஷ்மீர் விடுதலை ஜிந்தாபாத் - இந்தியாவைத் துண்டாடுவோம்” என்று இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை
எழுப்பி தேசத் துரோகத் செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்திய ராணுவத்தினரை இழிவாகவும், பாகிஸ்தானுக்கு
ஆதரவாகவும், அஃஸல் குரு மற்றும் மெக்பூல் பட் (ஒரு கொலைக்
கேசில் 1984-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டவன்) ஆகியவர்களுக்கு
ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து பாஜக எம்பி மகேஷ் கிரி போலீசில் புகார் செய்தார்.
இதேபோல் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியும் புகார் தெரிவித்திருந்தது.
இதையடுத்து ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா
குமாரை பல்கலைக் கழக மாணவர் விடுதியில் போலீசார் கைது செய்தனர். அப்போது அப்சல்
குருவுக்கு ஆதரவாகவும்,
இந்தியாவுக்கு எதிராகவும்
முழக்கங்களை மீண்டும் மாணவர்கள் எழுப்பியுள்ளனர். ஒரு பிரிவு மாணவர்கள், பாகிஸ்தான்
ஜிந்தாபாத் எனவும் வெறித்தனமாக முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். லஷ்கர் இ தொய்பாவின்
தலைவர் ஹபீஸ் சயீத்தும் ஜே.என்.யூ. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆகையால் இத்தகைய தேசவிரோத
மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நிலை உண்டாகிவிட்டது என்பது போலீஸ் வாதம்.
கங்கையா குமார் கலாசாலையில் நடந்த மாலைக் கூட்டத்தில் பங்கேற்று முன்னின்று நடத்தியவர்.
இதை
கங்கையா குமார் கோர்ட்டில்
மறுத்தாலும், மாஜிஸ்ட்ரேட்டே அதற்குரிய வீடியோவைப் பார்த்து ஊர்ஜிதம் செய்தபிறகு அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்திரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து பல இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டு, வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர்.
6-ம்
தேதி அன்று ஜம்மு & காஷ்மீர் பார் அசோசியேஷன் ஒரு
சிறப்புக் கூட்டம் கூட்டி ஷஹீத் மக்பூல் பட் & ஷஹீத்
மொஹமத் அஃஸல் குரு ஆகிய இருவரையும் புகழ்ந்துள்ளனர். ‘காஷ்மீர்
மக்களின் விடுதலைக்காகப் போராடும் காரணத்திற்காக அவர்கள் மிகவும் காட்டுமிராண்டித்
தனமாகவும் மனிதப்பண்பு இல்லாமலும், கொடூரமாகவும் டெல்லி
தீகார் சிறையில் 11-02-1984 & 09-02-2013 அன்று தூக்கிலிடப்பட்டனர்.
.. அந்த தியாகிகளுக்கு வந்தனம் செய்யும் விதமாக அனைத்து
வக்கீல்களும் 9 மற்றும் 11-ம்
தேதிகளில் வேலைகளைப் புறக்கணிக்கும் படி வேண்டுகிறோம்’ என்ற
அறிவிப்பையும் எழுத்து மூலமாகத் தெரிவித்துள்ளனர்.
ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டியில் நடந்த
சம்பவங்கள் பேச்சுச் சுதந்திரத்தைப் பற்றிய விஷயமல்ல என்பது மேலே உள்ள குறிப்புகள்
உணர்த்தும் என்பது திண்ணம். விவாதம், வாக்குவாதம் ஆகியவைகள் ஆரோக்கியமான
சூழ்நிலையில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் இன்றி கல்லூரிகளில் அனுமதிப்பதில்
தவறு இல்லை. ஆனால், மாணவ-மாணவிகள் அரசியலை அலசலாம். ஆனால் அரசியல்வாதிகள்
போல் போராடுவது, அவர்கள் கல்விக்குக் கலங்கம் அளிப்பதுடன்,
மற்றவர்களையும் படிக்க விடாமல் தடுக்கிறது. தலித்
மாணவர்கள் கல்வியில் தங்களுக்குள்ள குறைகளைக் கூறி நியாயம் கேட்கலாம். ஆனால், அரசியல்வாதிகளைப் போல் கல்லூரி வளாகங்களை
கலவர பூமியாகவும், இந்தியாவின் இறையாண்மைக்குக் குந்தகம்
வரும் அளவில் தேசத் துரோகக் கோழங்களுடன், செயல்களிலும்
இறங்குவதை இந்திய மக்கள் ஒருபோதும் இனி சகித்துக் கொள்ளப்போவதில்லை.
பேச்சுச் சுதந்திரம் என்றால் அது
அனைவருக்கும் பொது. ‘ஹிந்துக்களையும்,
அவர்கள் மதங்களையும், அவர்கள் கோட்பாடுகள் -
பழக்க வழக்கங்கள் அனைத்தையும் எதிர்த்தும், கேலியும்
செய்வோம். எங்கும் எதிர்ப்போம், எப்போதும்
எதிர்ப்போம். ஹிந்துக்கள் எதிர்க்குரல்களை ஒலிக்க
விடமாட்டோம்’ என்று பெரும்பான்மையான ஹிந்துக்களின்
பேச்சுரிமையைப் பறிப்பது எந்த விதத்தில் ஞாயம்? மற்ற
மதத்தில் உள்ள பல குறைபாடுகள் - அதிலும் குறிப்பாக இஸ்லாம்
மதத்தில் உள்ள அறிவியலுக்கும், முன்னேற்றத்திற்கும், பெண்கள் சுதந்திரத்திற்கும் முட்டுக்கட்டை போடும் பல கோட்பாடுகள் -
கல்லூரிகளிலோ மற்ற மன்றங்களிலோ விவாதிக்கப்படுவதில்லை. பயம் தான் அதற்குக் காரணம். இடது சாரிக் கொள்கை மாணவ
மணிகள் - கடவுளை நம்பாத நாஸ்திகர்கள் என்று தங்களுக்குப்
பட்டம் சூட்டிக் கொண்ட காம்ரேட்கள் - ஹிந்துக் கடவுள்
நம்பிக்கையைத் தான் கேலி செய்வார்களே அன்றி, முஸ்லீம் கடவுள்
நம்பிக்கையைப் பற்றி மவுனம் சாதித்து சாதனை படைப்பார்கள்.
மாணவ-மாணவிகள் முதலில் தங்களது முதல் கடமை
கல்வி கற்பது என்பதை முன்னிலைப் படுத்தி, மற்ற அரசியல்
சம்பந்தமானவைகளை இரண்டாம் பட்சமாக விவாதப் பொருட்களாகக் கருதியும், கருத்தில் கொண்டும் செயல்பட்டால், அவைகள்
அவர்களுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.
‘கற்க கசடறக் கற்க’
என்ற வள்ளுவர் வாக்கை அனைத்து மாணவர்களும் கடைப்பிடிக்க அவர்களுக்கு
உயர்ந்த சிந்தனைகளை அவர்கள் உள்ளங்களில் விதைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோமாக.
இந்திய தேசம் வாழ்க. இந்திய ஜனநாயகம் வாழ்க.
இந்திய வீரர்கள் வெல்க. இந்திய விவசாயிகள்
ஒங்குக.
Comments