அரசியல் சட்டத்தில் உள்ள செக்குலர் வார்த்தையின் சரித்திரம்
1977 வருடம். இந்திராவின்
எமர்ஜென்சிக்குப் பிறகு, மொரார்ஜி பிரதம மந்திரியாக ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில்
ஒரு அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது. அதில் ‘செக்குலர்’ என்ற வார்த்தைக்கு
விளக்கம் அளிக்கப்பட்டது. ‘செக்குலர் என்பது அனைத்து மதத்தினருக்கும் சம அந்தஸ்து’ என்ற விளக்கம்
உள்ள அந்த மசோதா லோக் சபாவில் ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்ற காரணத்தால் நிறைவேறியது. ஆனால் ராஜ்ய
சபாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை உள்ளதால், அந்த மசோதா
தோல்வி அடைந்தது.
ஏன் இந்த விளக்கம் காங்கிரசிற்கு ஏற்புடையதில்லை
என்பது அது சிறுபான்மை இன மதத்தவர்களான முஸ்லீம்கள் - கிருஸ்துவர்கள்
ஆகியவர்களுக்கு தனிச் சலுகைகளை அளிப்பதில் இது தடையாக இருக்கும் என்ற பயம் தான் காரணம்.
ஆனால், சோனிய காந்தி
ஜூன் 9, 2007 அன்று அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சேர்பெர்சன்
என்ற ஹோதாவில் ஹாக்கில் உள்ள நெக்ஸஸ் இன்ஸ்டிடூடில் பிரசங்கம் செய்யும் போது சொன்னார்: ‘இந்தியா
ஒரு செக்குலர் நாடு. செக்குலர் என்ற அந்தச் சொல் - அனைத்து
மதங்களுக்கும் சம அந்தஸ்து என்பதைக் குறிக்கும்’
இது தான் காங்கிரசின் பேச்சிற்கும் - செய்கைக்கும்
உள்ள வித்தியாசம். மன்மோஹன் சிங் பிரதமராக இருக்கும் போது, ‘மைனாரிடி
முஸ்லீம்களுக்கு நாட்டின் செல்வத்தை அனுபவிப்பதில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்’ என்று செக்குலர்
கொள்கையையே கொன்ற போது, அம்மையார் மவுனம் காத்தார்.
இந்த இரட்டை வேடம் காங்கிரசின் சொத்து. இந்திய
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்தக் குழுவில் நிதிஷ், லல்லு, திக்விஜய், முலாயம், கருணாநிதி, உமர் அப்துல்லா. மம்தா என்று
பட்டியல் நீளும்.
Comments