வள்ளுவம்: நடமாடும் பிணங்கள் & சாதலே நன்று
வள்ளுவம் 7:நடமாடும் பிணங்கள்
ஆக்கம் : எஸ். சங்கரன்.
பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளின் செயல்பாட்டில் உச்சகட்ட வெறுப்படையும் பொழுது, 'நீ இருப்பதை விட இறப்பதே மேல்' என்று சொல்வார்கள். 'நீ ஏன் இறக்க வேண்டும்? நாங்களே செத்தொழிகிறோம்!' என்றும் பெற்றோர்கள் சொல்வது உண்டு.ஆனால், உலகத்திற்கே நீதி போதிக்க வந்த வள்ளுவர் இது மாதிரிச் சொல்லி இருந்தால், உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் சொல்லப் போனால், வள்ளுவர் இன்னும் அதீதமான சொற்பிரயோகம் செய்கிறார். 'சில பேர்கள் சில கெட்ட எண்ணங்கள் கொண்டு திரிகிறார்களே! அவர்கள் எல்லாம் நடமாடும் பிணங்கள்!' என்று எரிமலையாகச் சீறுகிறார் வள்ளுவர். தெய்வப் புலவர் வள்ளுவர் இவ்வாறு சீறுகிறார் என்றால், அதில் காரணம் இல்லாமல் இருக்காது. அதுவும், 'இனிய சொற்கள் இருக்கும் பொழுது கடுமையான சொற்களைக் கூறல், கனிகள் இருக்கும் பொழுது காய்களைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்' என்று சொன்ன வள்ளுவரே இப்படிக் கடுமையாகக் கூறி இருந்தால், அது தார்க்குச்சி போட்டு நம்பை விழிக்கச் செய்யத்தான்.
வள்ளுவரின் இந்த அதீத வெறுப்பு ஆறு குறட்பாக்களில் வெளிப்படுகிறது. அவரது அதீத வெறுப்படையக் காரணங்கள் ஐந்து குணங்களால் ஆகும். இரண்டு குணங்கள் மனிதர்களிடம் இருக்க வேண்டும், மூன்று குணங்களை மனிதர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இந்த ஐந்து குணங்களையும் வரிசையாகவோ அல்லது ஒரே அதிகாரத்திலேயோ வள்ளுவர் சொல்லவில்லை. இவைகள் வெவ்வேரு அதிகாரங்களில் திருக்குறளில் பரவலாக இடம்பெற்றிருக்கின்றன.அந்த ஐந்து குணங்கள் தான் எவைகள்?
இருக்க வேண்டிய குணங்கள் இரண்டு:அன்பு, உதவி.
தவிர்க்க வேண்டிய குணங்கள் மூன்று: கோபம், பயம், காமம்.
ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு பாக்கள் என்று ஒதிக்கிய வள்ளுவர் காமத்திற்கு இரண்டு குறட்பாக்களை ஒதிக்கி இருகிறார்.
அன்பு: அறத்துப்பாலில் இல்லறவியலில் அன்புடைமை அதிகாரத்தின் குறட்பா எண்: 80 உதவி: அறத்துப்பாலில் இல்லறவியலில் ஒப்புரவறிதல் அதிகாரத்தின் குறட்பா எண்: 214 கோபம்: அறத்துப்பாலில் துறவறவியலில் வெகுளாமை அதிகாரத்தின் குறட்பா எண்: 310 பயம்: பொருட்பாலில் அமைச்சியலில் அவை அஞ்சாமை அதிகrாரத்தின் குறட்பா எண்: 730 காமம்: அறத்துப் பாலில் இல்லறவியலில் பிறனில் விழையாமை அதிகrாரத்தின் குறட்பா எண்: 143 பொருட்பாலில் நட்பியலில் வரைவின் மகளிர் அதிகாரத்தின் குறட்பா எண்: 913 பயத்தைத் தவிர மற்ற குணங்களெல்லாம் அறத்துப் பாலில் தான் இருக்கின்றன. பொருட்பாலிலும் காமமும் இடம்பெற்றிருப்பது அதன் முக்கியத்துவத்தைத்தான் குறிப்பிடுகிறது.
இன்னும் ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா? அன்பு, கோபம், பயம் - இவைகள் அந்த அதிகாரத்தின் கடைசிப் பாடலாகும்! இந்த ஐந்து குணங்களும் நன்கு ஒருவனுக்கு அமைந்து விட்டால், அவன் வாழ்விலே வெற்றி பெற்றவனாகக் கொள்ளலாம் என்பது வள்ளுவரின் கருத்தாகப் படுகிறது.
இந்த ஐந்து குணங்களைப் பற்றியும் சிறிது விளக்கமாக வள்ளுவர் என்னதான் சொல்கிறார் என்று இப்போது பார்ப்போம்.முதலில் அன்பை எடுத்துக் கொள்வோம். அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் இருக்கும் உடம்பு ஆகும். அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த உயிரல்லா உடம்பாகும். அதாவது அன்பு இல்லாதவர்கள் பிணத்திற்குச் சமம் என்று சீறுகிறார் வள்ளுவர்.
அன்புக்கும் உடம்புக்கும் என்ன அவ்வளவு சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். அன்பு என்றால் என்ன? முதலில் பிறரிடம் அன்பாகப் பேசுவதும், பழகுவதும் ஆகும். ஆனால், அத்துடன் நின்று விடாமல் பிறருக்கு உடம்பால் உழைத்து உதவி செய்ய வேண்டும். சேவை என்று சொல்கிறோமே அது செயல்பட அன்பு உடம்புமூலம் வெளிப்படவேண்டும். அது ஒன்று தான் நீ உயிரோடு இருக்கிறாய் என்பதற்கான சான்று. இல்லாவிடில், இருந்தும் இறந்தவனாவாய் என்கிறார் வள்ளுவர்.
அடுத்த முக்கிய குணம் என்று சொல்வது உதவி. உலக நடைமுறை அல்லது வேத நெறி அறிந்து ஒழுகுதல் என்பதில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கூடி வாழவேண்டும் என்பது தெளிவுரக் கூறப்பட்டிருக்கிறது இக்குறட்பாவில். இப்படி ஊரோடு ஒத்துவாழாதவன், செத்தவனுக்குச் சமம் என்று வள்ளுவர் முடிக்கிறார். சமூக சேவையைத் தான் இங்கும் வலியுறுத்துகிறார்.
கோபமே படாமல் இருப்பது என்பது சாலச் சிறந்தது என்றாலும், நடைமுறையில் அது சாத்தியப்படாது. ஆனால் அந்தக் கோபமே நம்மை ஆட்டிப் படைக்காமல் அதை ஒரு எல்லைக்குள் அடைக்கி வைப்பது அவசியம். 'கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்' என்பது நம்பமுடியாத ஒன்று. கோபம் கொள்பவர்கள் கோபம் தவிர்த்து கட்டாயம் குணம் காட்டவேண்டும் என்ற நியதியைக் குறிக்கவே இப்படி ஒரு சொற்றொடர் எழுந்திருக்கலாம். 'அளவில்லா கோபம் கொண்டவர் செத்தவருக்குச் சமம். கோபத்தை அடியோடு துறந்தவர்கள் துறவிகளுக்குச் சமம்' என்கிறார் வள்ளுவர். இக்குறட்பா துறவியலில் இருக்கிறது. ஆகையால், மற்றவர்களுக்குக் கோபம் கட்டுக்குள் இருந்தாலும், துறவிகளுக்கு கோபம் சிறிதும் கூடாது என்பதுதான் வள்ளுவரின் கருத்து.
பயம் என்பது தவிர்க்கப் படவேண்டிய ஒன்றாகும் என்பது பொதுவான வாதம். அறிவுடைமை அதிகாரத்தில் வள்ளுவர் மிகத் தெளிவாகச் சொல்வது, 'அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சாதிருப்பது அறியாமை. அஞ்சத்தக்கதற்கு அஞ்சுவதுதான அறிவுடையார் தொழில்' என்பதாகும். ஆனால், சபைக்கு அஞ்சி, அறிஞர்கள் நியாயத்தைச் சொல்லாமல் இருப்பாரேயானால், அவர்கள் பிணத்திற்குச் சமம் என்று பயம் இல்லாமல் நியாயத்திற்குப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். எல்லோருக்கும் இது பொருந்தும் என்றாலும், மெத்தப் படித்த மேதாவிகளைத் தான் வள்ளுவர் சாடுகிறார். பயத்தின் காரணமாக உண்மைக்குக் குரல் கொடுத்து வாதாடாமல் இருந்தால், அப்படிப்பட்ட மேதாவிகள் உயிரோடு இருந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவார் என்று உரக்கக் கூறுகிறார்.
தவிர்க்கப் படவேண்டிய முக்கியமான குணம் காமம். இதில் இரண்டு விஷயங்களைத் தெரிவிக்கிறார். ஒன்று பிறன் மனைவியைக் காமுறல். மற்றொன்று, பொதுமகளிரிடம் புனருதல். பிறன் மனைவியை விரும்புபவர் செத்தவருக்குச் சமம் என்கிறார் வள்ளுவர். அதாவது, இத்தகைய எண்ணம் உள்ளவர்கள் சாகடிக்கப் படவேண்டியவர்கள் என்ற தொனியில் வள்ளுவர் தீப்பிழம்பாய் தகிக்கிறார். பொதுமளிரிடம் புனருபவர்களை இன்னும் கடுமையாகவே சாடுகிறார். அப்படிப்பட்டோர்களெல்லாம், இருட்டறையில் பிணத்தைத் தழுவும் காமுகர்கள் என்கிறார். இதற்கு மேல் அதீத சொற்பிரயோகம் இருக்க முடியாது.
வள்ளுவர் எரிமலையாகச் சீறியது நமது நல்வாழ்வுக்குத்தான். அன்பு கொள்ளல், உதவி செய்தல், கோபம் தவிர்த்தல், பயம் தவிர்த்தல், காமம் தவிர்த்தல் - ஆகிய ஐந்தும் இருப்பின், ஒருவனது வாழ்வு சிறந்து விளங்கும். அதுதான் வாழ்க்கையின் கொள்கையாக இருக்கவேண்டும். இதுதான் வள்ளுவரின் வேதவாக்கியங்கள்.
ஆதாரம்: குறட்பாக்களின் எண்கள்: 80 , 143, 214, 310, 730, 913.
வள்ளுவம்: 8
சாதல் நன்று
எழுதியவர்: எஸ். சங்கரன்
மனிதர்கள் வாழ்விற்கு அவசியமான குணங்களையும், தவிர்க்கப்பட வேண்டிய குணங்களையும் சொல்ல வந்த திருவள்ளுவர், சில தவிர்க்கப் பட வேண்டிய குணங்க்ள் அவர்களிடம் குடிகொண்டிருந்தால், அப்படிப் பட்ட மனிதர்கள் வாழ்வதை விட சாவதே மேல் என்று சொல்கிறார். இதன் மூலமாக அக் குணங்கள் எவ்வகையிலேனும் மனிதர்களால் தவிர்க்கப் படவேண்டியவைகளாகின்றன..அக்குணங்களின் மூன்றை வெவ்வேரு குறள்களில் சொல்லி இருக்கிறார். புறங்கூறல், செவியின் சுவை உணராமை, மதியார் பின் சென்று உயிர் வாழல் ஆகியவைகள் தான் அந்த மூன்றும் தவிர்க்கப் படவேண்டிய குணங்களாகும்.
1. புறங்கூறல்:அற நூல்கள் ஒருவன் தானே தன் உயிரை மாய்த்துக் கொள்வது பாபம் என்கிறது. ஆனால் இதற்கு ஒரு விதி விலக்கு உண்டு என்று திருவள்ளுவர் சொல்வதாகத் தான் படுகிறது. ஒருவன் பிறரைப் பற்றி அவர் இல்லாத பொழுது குறைகூறி அதன் மூலம் வயறு வளர்த்து உயிர் வாழ்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்படிப் பட்டவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டு சாவது அறநூல்களுக்கு எதிர் அன்று என்கிறார் திருவள்ளுவர். 'அப்படிப்பட்டவன் சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அதாவது அறம் அதனால் பாதிக்கப் படமாட்டாது-காக்கப் படும்' என்கிறார். அப்படிப் பட்டவன் அழிவதலினால், அவன் செய்கையான கோள் சொல்லலும் அழிவதால், அறம் கூறும் ஆக்கம் தரும் என்பதாகிறது என்பது பரிமேலழகர் விளக்கமாகும்.
2. செவியின் சுவை உணராமை:'செலவதுத்துள் செல்வம் செவிச் செல்வம் அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்ற குறளில் கேள்வி ஞானத்தைப் பற்றி மிகவும் தெளிவாகப் பாடிய திருவள்ளுவர், அந்தக் கேள்விஞானத்தின் உண்மையான அவசியத்தை உணராமல் சிலர் சாப்பாட்டு ராமன்களாக இருக்கிறார்க்ளே என்று அங்கலாக்கிறார். அப்படிச் செவியின் சுவை உணராமல், வாய் உணர்வினை மட்டும் உணரும் மாந்தர், இருந்தால் என்ன- இறந்தால் என்ன? - என்று பொங்கி எழுகிறார். 'அப்படிப்பட்ட மாக்கள் அவியினும் வாழினும் என்' என்பது தான் அவரது குறளாகும்.(குறிப்பு: செவியால் நுகரப்படும் சுவைகள் இரண்டு: சொற்சுவை, பொருட் சுவை. அவற்றுள் சொற்சுவை இருவகைப்படும்: குணம், அலங்காரம். பொருட்சுவை: ஒன்பது வகைப்படும்: காமம், நகை, கருணை, வீரம், கோபம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம்.வாயால் நுகரப்படும் சுவைகள் ஆறாகும்: கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு.)
3. மதியார் பின் சென்று உயிர் வாழல்உழைத்துச் சம்பாதித்து உயிர் வாழ்வதுதான் உத்தமம். அதை விடுத்து, ஒருவன் தன்னை மதிக்காமல், இகழ்ந்து கொண்டிருப்பனின் பின்னே சென்று, பொருள் பெற்று அதனால் உயிர் வாழ்கிறான் என்றால் அந்த அவனது வாழ்வு மிகவும் கேவலமானது என்கிறார் வள்ளுவர். அவர் அத்துடன் நின்று விடாமல், அப்படிப் பட்டவன் செத்துப் போவது அவனுக்கே நல்லது என்று சாடுகிறார்.'தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின், அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று' என்பதுதான் அந்தக் குறளின் கருத்தாகும்.
ஆதாரம்: குறள்கள்: 183, 420, 967

Comments