வள்ளுவம் 4 - குலம்

குலம்-வள்ளுவரின் கண்ணோட்டம்
ஆக்கியோன்: எஸ். சங்கரன்.
'சாதி' என்ற சொல்லே ஒரு வேண்டாத ஒன்றாக இப்போது கருதப்படுகிறது. அதை ஒழிக்க பலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதி, குலம், வர்ணம் ஆகிய வார்த்தைகள் ஒருவர் பிறந்த குடியினைக் குறிக்கும். சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், அந்த சாதியின் பெயரால் அரசியல் கட்சிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 'எங்கள் சாதி ஜனங்கள் முன்னேற இது அவசியம்' என்பது அவர்கள் வாதம். 'எங்கள் சாதி மக்கள் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். படிப்பு, இருப்பிடம், சுகாதரம், வேலை வாய்ப்பு-இவைகளைப் பெற, தனி ஒதிக்கீடு இருந்தால் தான் எங்கள் சாதி மக்கள் முன்னேற முடியும். சுதந்திர இந்தியாவில் எங்களது ஜனத்தொகைக்கு ஏற்ப ஒதிக்கீடு சதவிகிதம் இருக்க வேண்டும்' என்ப்து தான் அவர்களின் கோரிக்கை.

'சாதியை ஒழுக்க வேண்டுமா?' என்ற கேள்வியே இப்போது அர்த்தமற்றதாகப் போய் விட்டது என்றுதான் பலருக்குப் படும். ஆனால், 'சாதியைப் பற்றி வள்ளுவரின் கருத்து என்ன?' என்பதை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாரதி எழுதியதாகப் பரவலாக அவரது பாட்டு புத்தகங்களிலும், மேடைகளிலும் சொல்லப் படுகின்றன. ஆனால், பாரதி சொன்ன வார்த்தைகள் இதுதான்: 'சாதிக் கொடுமைகள் இல்லையடி பாப்பா'. அது, திருத்திப் பதிப்பிக்கப் பட்டு, பாரதியின் கருத்து மாற்றப் பட்டுவிட்ட்து.
'சாதிகள் உண்டு. அதை அழிப்பது இயலாது அல்லது அவசியமன்று அலலது கடினம். ஆனால், சாதிகள் கடைப்பிடிக்கும் பல கொடுமைகள் அறவே ஒழியவேண்டும். தீண்டாமை என்னும் பேயை ஒரேயடியாக நாட்டை விட்டே ஓட்டி விடவேண்டும்' என்பது தான் பாரதியின் கருத்து. இதையே, புகழ்பெற்ற சிறுகதை ஆசிரியரான புதுமைப் பித்தனும் பாரதியின் கருத்தை ஆதரித்துள்ளார். ஆகையால், 'சாதிகளை ஒழிக்க முடியாது. அவைகளில் இருக்கும் கொடுமைகள் அத்தனையையும் பூண்டோடு ஒழுக்க வேண்டும்' என்ற நிலைதான் சரி என்று படும். இதைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டு, வாதிட்டு-ஏன், சண்டைக்குக் கூட வரக்கூடும்.
வள்ளுவரின் கருத்தை அறிவதற்கு முன், ஒளவைப் பாட்டி சாதியைப் பற்றி என்ன சொல்கிறாள் என்பதைப் பார்ப்போம். மூதுரையில் உள்ள ஒரு பாட்டும், நல்வழியில் உள்ள ஒரு பாட்டும் அவரது எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன.

மூதுரை:'நீரின் உயரத்திற்கு ஏற்ப, அதன் கண் வளரும் ஆம்பலின் உயரமும் இருக்கும். கற்ற நூலின் அளவுக்கு ஏற்பவே, ஒருவனின் நுண்ணறிவு இருக்கும். முன்பு செய்த தவத்தின் அளவிற்கு ஏற்பவே, ஒருவனது செல்வம் இருக்கும். அதைப்போல்தான், பிறந்த குலத்தின் தன்மைக்கு ஏற்பவே, ஒருவனது குணங்களும் அமைந்திருக்கும்.'

நல்வழி:'நீதி வழுவா நெறிமுறையின் படி சாதி என்பது இரண்டுதான். இட்டார் அதாவது தானம் செய்பவர் பெரியோர். இடாதார் அதாவது தானம் செய்யாதோர் இழிகுலத்தோர் என்பதுதான் அறநூலில் சொல்லியிருக்கிறது.''
எல்லா சாதி ஜனங்களின் குணங்களையும் உயர்த்த வேண்டும்' என்பது தான் ஒளவையின் கருத்து. தானம் என்று குறிப்பிட்டதும் குணத்தின் ஒரு தன்மைதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சாதியை ஒழுக்க வேண்டும் என்று சொல்வதாகப் படவில்லை. 'குணத்தால் அனைவரும் உயரவேண்டும். அதற்குத் தான் எல்லோரும் பாடுபடவேண்டும்' என்று ஒளவையார் வாதிடுவதாகப் படுகிறது.

வள்ளுவர் 'குலம்' என்ற சொல்லை மூன்று குறளில் பிரயோகம் செய்திருக்கிறார். ஈகை அதிகாரம் (குறள்:223), குடிமை அதிகாரத்தில் மூன்று குறள்கள் (குறள்: 956, 958 & 960). அப்பாக்களில் எல்லாம் அவர் குணத்தைத்தான் முக்கியமாகக் குறிப்பிடுகிறார்.

'குடிமை' என்றால் உயர்ந்த குடியில் பிறந்தவரது தன்மையாகும். 'குடிமை' என்ற அதிகாரத்தின் பத்துப் பாக்களும் உயர்ந்த குடியில் பிறந்தவரது தன்மை விவரிக்கப்பட்டிருகிறது. பரிமேலழகர் தன் உரையில், 'உயர்ந்த குடிப்பிறப்பு, நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதலின், அச் சிறப்புப் பற்றி குடிமை முன் வைக்கப் பட்டது' என்கிறார். ஆகையால், 'உயர்ந்த குணங்கள் தான் உயர் சாதியாகும். அவைகள் அல்லாத இழிகுணங்கள் கீழ் சாதி' என்கிறார் திருவள்ளுவர்.

'குணத்தால் அனைவரும் உயருங்கள்; உய்வடையுங்கள்' என்பதுதான் திருவள்ளுவர் நமக்குச் சொல்லும் உபதேசமாகும்; உத்தரவாகக் கூட அவைகளைச் சொல்லாம். இதிலிருந்து தெரிவது என்ன வென்றால், 'குலம் என்பது அழிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; குணத்தால் உயர்ந்து, வளம்பெறவும்' என்பதுதான் திருவள்ளுவரின் கொள்கையாகும்.

'அப்படி யென்றால், நல்ல குலத்தின் குணாதிசியங்கள் என்ன?' என்பதற்கு, வள்ளுவரின் பதில் 10 குறட்பாக்களிலும் ஒரு பட்டியல் போல் இருக்கின்றது.1. நடுநிலைமை 2. நாணம் 3. ஒழுக்கம் 4. வாய்மை 5. நகை (முகமலர்ச்சி) 6. ஈகை 7. இன்சொல் 8. இகழாமை 9. பணிவு 10. அன்புடைமை.ஒவ்வொரு குணத்தையும் விரிவாக வள்ளுவர் சொல்லி இருக்கிறார். 'நடுநிலைமை, நாணம் - இவ்விரண்டு குணங்களும் உயர்குடியில் பிறந்தவர்களிடம் இயல்பாக அமைந்து இருக்கும். மற்றவர்களிடம் இயற்கையாக அமைவது இல்லை' என்ற குறள் சில குணங்கள் குலத்தால்தான் அமையும் என்பது பலருக்கு வியப்பாகக் கூட இருக்கும்.அத்துடன் நிற்காமல், ஒழுக்கம், வாய்மை மற்றும் நாணம் - ஆகிய இம்மூன்றும் கல்வியால் அடைய முடியாது. ஏனென்றால் அவைகளை இயற்கையாக உயர்குடிப்பிறந்தோர் தாமாகவே பின்பற்றி வாழ்வார் என்றும் திருவள்ளுவர் சொல்கிறார். கல்வியால் சில குணங்களைப் பெற முடியாது என்ற திருவள்ளுவரின் கருத்து பலருக்கும் வியப்பாக இருக்கும். அவைகளை மறுக்கவும் அவர்கள் விழையலாம். இருப்பினும், குலத்தால் தான் சில குணங்களைப் பெறமுடியும் என்பது திருவள்ளுவர் கருத்தாக இருப்பது என்னவோ உண்மை.

இதை எல்லாவற்றையும் விட திருவள்ளுவரின் குறட்பா 958 மிகவும் முக்கியமான ஒன்றாகும். அது அதீதமான உஷ்ணத்தைக் கக்கும் தீயாக வெகு உக்கிரமாக கனல்பொறிபறக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

'ஒருவன் உயர்குடியில் பிறந்தவன். நல்ல பண்புகள் உடையவன் தான். ஆனால், அவனிடத்தில் ஈரம் -அதாவது அன்பில்லை என்றால், அவன் குலத்தின் கண் ஐயப்படும்' என்று திருவள்ளுவர் எரிமலையாக வெடிக்கிறார். இதிலிருந்து அவர் சொல்வது என்ன வென்றால், 'பிறப்பால் உயர்குடிப் பிறந்தோன் அன்பில்லாமல் இருப்பானேயானால், அவன் பிறப்பையே சந்தேகப்படவேண்டும்' என்கிறார் வள்ளுவர். இது மிகவும் தீயாகக் கக்கும் வாசகமாகும். இதன் மூலம் வள்ளுவர் குலத்தின் குணத்தையும், குலம் என்பது மனித இனத்திற்கு அவசியமான ஒன்றாகவும் சித்தரிக்கிறார்.

அந்தக் குறள்:
நலத்தின் கண் நார் இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின் கண் ஐயப்படும்.

வள்ளுவரின் கருத்துக்கள் கசப்பாகச் சிலருக்குப் படலாம். மறுக்கவும் தயங்கலாம். ஆனால், திருவள்ளுவர் சந்தேகத்திற்கு இடமின்றி, குலத்தைப் பற்றிய தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார் என்பதில் எந்த வித அபிபிராய பேதமும் இருக்காது.
(குறட்பாக்கள்: 223, 951 to 960)

சாதியும், சாதிக் கொடுமைகளும்
எழுதியவர்: எஸ். சங்கரன்.

சாதி அல்லது குலம் என்பதை அழிக்க முடியாது. அழிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதை நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். எல்லோராலும் போற்றப் படும் திருவள்ளுவர் சொல்கிறார் என்றால், அதில் உள்ள சூக்ஷுமத்தை அறிய வேண்டியது அவசியம். (மேலே உள்ள 'குலம்-வள்ளுவர் கண்ணோட்டம்' கட்டுரையைப் படிக்கவும்.) ஜீன்ஸ் என்ற பரம்பரை இயல்புகள் அல்லது குணங்கள் அமைவதை நிர்ணயிக்கும் நுட்ப அணு பிறவியிலேயே ஏற்படும் ஒன்று. அதை மாற்ற முடியாது. அதற்குக் காரணம் தாய்-தந்தையரின் மரபணு. அவர்களின் மரபணுவுக்கு அவர்கள் குலம் காரணமாகும். குலம் என்றால் அவர்களின் வாழ்க்கை முறையாகும் - உணவு, உடை, உறைவிடம், கல்வி, ஈகை, அன்பு, உரையாடல் போன்ற பலவும் இதில் அடங்கும்.
இந்த சமயத்தில், உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும். இது 1957-ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் சிங்கராச்சாரித் தெருவில் இருக்கும் என் நண்பன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது நடந்தது. அப்பொழுது இரவு 8 மணி இருக்கும். அடுத்த வீட்டு வாசப்படியிலிருந்து ஒரு பிச்சைக்காரன் 'அம்மா! சாதம் போடுங்க தாயே!' என்று கத்திக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்தேன். ஏதோ துரதிஷ்ட வசமாக பிச்சை யெடுக்கும் நிலைக்கு வந்து விட்டவன் போல்தான் அவனது தோற்றம் இருந்தது. கையிலே வாழை இலையை மடித்துப் பாத்திரம் போல் செய்து வைத்துக் கொண்டிருந்தான். அவன் அரையை சிறிது அழுக்குப் படிந்த வேஷ்டி ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, அடுத்த வீட்டிலிருந்து, அவனுக்குச் சாதம் கொண்டு யாரோ ஒரு அம்மாள் போட்டாள். அவன் அதை வாங்கிக் கொண்டான். சாதம் போட்டவளை அவன் கூர்ந்து நோக்கினானோ என்னவோ?அவன் பிறகு எங்கள் பக்கம் மெதுவாக நகர்ந்து வந்து, அடுத்த வீட்டைச் சுட்டிக் காட்டி, 'இது பிராம்ணா வீடு தானே?' என்று கேட்டான். 'இல்லையே!' என்று நாங்கள் சொன்னோம். உடனே அவன், 'நான் பிராம்ணா வீடுன்னா நினைச்சேன்! மற்றவர்களிடம் நான் வாங்கிச் சாப்பிடுவது கிடையாது' என்று மெதுவாகச் சொன்னான். பக்கத்தில் உள்ள பெரிய கல்லின் மேல் சாதம் உள்ள அந்த இலையை வைத்து விட்டு நகர்ந்து விட்டான். அவன் பிராமணன் இல்லை. இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், பிச்சைக்காரனும் - அவனே அப்பிராமணனாக இருந்தாலும், பிரமணர் வீட்டுப் பிச்சையைத்தான் ஏற்கிறான். அதற்குக் காரணம் அவனது நம்பிக்கை - பிராமண குலமும், குணமும் உயர்ந்தது என்ற அவனது நம்பிக்கை. 'பிராமணர்கள் புலால் சாப்பிட மாட்டார்கள். ஆகையால், அவர்களது வீட்டுப் பிச்சைதான் என்னால் ஏற்க முடியும்' என்ற அவனது குணம்கூடக் காரணமாக இருக்கலாம். 'பசி எடுத்தாலும், என் கொள்கையில் உறுதியுடன் இருப்பேன்' என்ற வைராக்கியம் பிச்சைக்காரனுக்கு இருக்கலாமா என்பது அல்ல நம் வாதம். பிச்சைக்காரனும் குலம் பார்க்கிறானே என்றுதான் நான் ஆச்சரியபட்டேன்.

அசைவம் சாப்பிடுபவர்கள் வீட்டிலேயே ஆடு-கோழிகளைக் கொன்று, பிறகு அவைகளைச் சமைப்பதைப் பார்க்கும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கத்தியும், ரத்தமும் பயத்தை அளிக்காது. கொல்லப்படும் பொழுது ஆடு-கோழிகள் துடிப்பதும் அவர்களுக்கு விளையாட்டாகப் பட்டுவிடும். இதனால் கொலையில் உள்ள பயத்துடன், பாப எண்ணமும் மறைந்து போய்விடும். இதுவே அவர்களின் வாழ்க்கை நெறியாகவும் இருக்கும். மனமும் இறுகி விட வாய்ப்புண்டு. இது குலத்தின் குற்றம். அதன் மூலம் அடையும் குணமும் குறைபாடுடையதாகி விடும்.

ஒரு சம்பவம் இதை மிகவும் நிதர்சனமாக எடுத்துக் காட்டும் என்று நினைப்பதால் அதைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நாகாலாந்தில் வேலை நிமித்தமாகச் சென்ற ஒரு இளம் பிரமசாரிய அதிகாரி அங்குள்ள ஒரு பெண்ணின் மேல் காதல் வயப்பட்டார். அவரின் பெற்றோர்கள் இதை ஆட்சேபித்தனர்.

'இது எந்த விதத்திலும் சரிப்பட்டு வராது. அவர்களது கலாச்சாரம் வேறு. நமது கலாச்சாரம் வேறு. உணவு-உடை, பழக்க வழக்கங்கள் - இவைகள் எல்லாம் முற்றிலும் வேறு பட்டவைகள். ஏன், அவர்கள் மிகவும் கொடிய மூர்க்கமான முறைகளைப் பின்பற்றுபவர்கள். நமது நம்பிக்கைகள் அவர்களது நம்பிக்கைகளுக்கு எதிர் துருவங்களாகும்!'

ஆனால், அந்த அதிகாரி 'குலத்தைக் குப்பையிலே போடு. இது நவநாகரீக உலகம்' என்று அந்தப் பெண்ணையே கல்யாணம் செய்து கொண்டான்.

அவனுக்கு நாய் என்றால் ரொம்பவும் பிரியம். ஆகையால், அவன் ஒரு நாயை வீட்டிலே வளர்த்து வந்தான். ஜூலி என்று பெயர் சூட்டிக் கொஞ்சி மகிழ்ந்தான். உண்மையைச் சொல்லப் போனால், அந்த நாயிடம் அவன் தன் உயிரையே வைத்திருந்தான். அவன் மனைவி அந்த நாயிடம் எந்த அன்பும் கிடையாது. அது வீட்டில் வளரும் ஒரு ஐந்து. அவ்வளவுதான். ஆனால், அவள் அவனது கணவனை ரொம்பவும் நேசித்தாள். அன்பைப் பொழுந்தாள். அவன் வேலை நிமித்தமாக ஒரு வாரம் வெளியூர் சென்றிருந்தான். அவளுக்கு அவனது நினைப்பே இருந்தது. அவன் வரும் நாளில் ஒரு சிறப்பு விருந்தே வைப்பதாக முடிவெடுத்தாள்.

அவன் வந்ததும், 'நான் உங்களுக்கு சிறந்த அசைவ உணவு தயாரித்திருக்கிறேன்!' என்று சொல்லி, அவனை சாப்பிட அழைத்து உணவருந்த வைத்தாள். அவனுக்கும் நல்ல பசி. நன்கு ருசித்துச் சாப்பிட்டான்.

'ஆஹா! என்ன ருசி..என்ன ருசி!' என்று, அவளை அன்போடு அணைத்து, முத்தமிட்டான்.

திடீரென்று அவனுக்கு தன் அன்பு நாயான ஜூலியின் நினைப்பு வந்தது. 'ஹலோ! எங்கே என் இன்னெரு டார்லிங்க!' என்று தன் மனைவியைக் கேட்டான். 'ஒரு டார்லிங்க் போறாதா உங்களுக்கு!' என்று அவன் மனைவி அவனை ஆலிங்கலம் செய்தாள்.

'நீ ஒரு கண் என்றால், என் மற்றொரு கண் என் அன்பு ஜூலி! .. எங்கே என் ஜூலி!' என்று அவன் பரபரத்தான்.

'உங்கள் ஜூலி இங்கே என்று,,' அவன் மனைவி அவனது வயிற்றைத் தொட்டுக் காட்டினாள். அவனுக்கு விஷஜுரம் வந்தது போல் படபடத்தான்.

'எங்கே என் ஜூலி.. சொல்லு, சொல்லு!' என்று அவன் தன் மனைவியை உலுக்கிக் கேட்டான்.

'அதைத்தான் உங்களுக்கு சிறப்பு விருந்து வைத்து, நீங்களும் ருசித்திச் சாப்பிட்டு விட்டீர்களே!' என்று தன் மனைவி சொல்லக் கேட்டதும், அவன் தலை சுற்றி மயங்கி விழுந்து விட்டான்.

விழித்தெழும் பொழுது, அவனது மனைவி அவனது தலையைத் தன் மடியில் வைத்து அன்பாகத் தடவிக் கொண்டிருந்தாள். 'அடே, பாவி!..' என்று மேற்கொண்டு எதுவும் சொல்லமுடியாமல், அவளை உக்கரமாகத் தள்ளினான். தன் கைகளால் தலை, வயிறு - ஆகியவற்றைப் பலமாக அடித்துக் கொண்டான். 'ஐயோ, ஐயோ!,,' என்று அழுது புலம்பினான். அவன் உடனே அவளை விட்டு விலகி, விவாகரத்து செய்து விட்டான். ஆனால், அவன் மனைவிக்குத்தான் அவனது செய்கை புரிய வில்லை.

'நாய்க் கறி என்பது விசேஷமான விருந்து. இதற்கு ஏன், இந்த ஆர்ப்பாட்டம்!' என்று தான் அவனது மனைவி எண்ணினாள். அவள் வளர்ந்த வாழ்க்கை முறையில், இது சர்வசாதாரணம்.

'தான் செய்தது எந்த விதத்திலும் தவறு இல்லை; தன் அன்பின் வழிப்பாடே தன் செயல்' என்று தான் அவனது மனைவி நினைத்தாள். 'இந்த தன் அன்பின் வழிப்பாட்டை ஏன் தன் கணவன் புரிந்து கொள்ளவில்லை' என்பது தான் அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதுதான் அவளது குல தர்மம். அவனது குல தர்மமும் அவளது குலதர்மமும் வேறுபடும் பொழுது, அவைகள் வெடித்துச் சிதறி விடுகின்றன. மேல் சாதி - கீழ் சாதி என்ற பிரிவு தவிற்க முடியாததாகும். பிறப்பாலும், குணத்தாலும் இந்த வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். சில குணங்கள் மாறாதவைகள் - அவைகள் ஜீன்ஸ் என்ற அணுவால் அமைவதாகும். இது ஒரு விஞ்ஞான உண்மையாகும். ஜீரணிக்கச் சிரமமாக இருக்கத்தான் செய்யும். சில குணங்கள்தான் உணவாலும், கல்வியாலும், உறவாலும் ஏற்ப்படும். யானைக்குப் பலமும், அதன் உருவமும் அதனின் ஜீஸ்ஸ்சால் தான். மானின் வேகத்திற்கும், புலியின் சீற்றத்திற்கும், சிங்கத்தின் கர்ஜனைக்கும், குயிலின் இனிமைக்கும், மயிலின் அழகு தோகைக்கும் அதனதன் ஜீன்ஸ்கள் தான் காரணம். குணத்தால் உயர்வதுதான் மனித இயல்பு. உயர்ந்த ஒன்று இருந்தால் தான், நாம் அடையவேண்டிய லட்சியத்தை ஒரு இலக்காக வைத்து, வாழ்வை மேன்மை அடையச் செய்ய முடியும். குலத்தை அழிக்க நினைப்பது அந்த இலக்கையே அழிப்பதற்கு ஒப்பாகும். இலக்கு அழிந்தால், லட்சியமும் அழிந்து போகும்.

செப்பனிட்ட பாதையில் பயணிப்போம். பாதையில் பள்ளங்களை உண்டு பண்ணி, பயணத்தை வீணடிக்க வேண்டாம்.

உண்மைகள் சில சமயங்களில் கசப்பாகத்தான் இருக்கும். அதற்காகச் சொல்லாமல் இருக்கலாமா? சொல்லி விட்டேன். நான் சோர்ந்து விடும்படி, எதிரான கருத்துக்கள் வரத்தான் செய்யும். நான் சொல்வது உண்மையிலேயே உண்மையென்றால், அதுவே தன்னைக் காத்துக் கொள்ளும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017