வள்ளுவம் - 1 . தும்மல்
முன்னுரை: திருவள்ளுவரின் திருக்குறள் தமிழ் படித்த அனைவருக்கும் தெரிந்த நூல். பரிமேளழகர் முதல் பலரும் அந்த நூலைப் பற்றி பலபட ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள் - இனி எழுதுவதற்கு மிச்சமில்லை என்ற அளவிற்கு. இந்த நிலையில் நான் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? என்ற கேள்வி எழுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இருப்பினும், திருக்குறளை ஒரு புதிய கோணத்தில் பார்த்து, ஒரு சில கட்டுரைகளை எழுதத் துணிந்துள்ளேன். அந்த கோணத்தில் எழுதிய முதல் கட்டுரை தான் இது.
தும்மினால் யாரோ ஒருவர் உங்களை நினைக்கிறார்கள் என்பது வள்ளுவர் காலத்திற்கு முன்னாலிருந்தே நிலவி வரும் நம்பிக்கை. தும்மினால் அருகிலுள்ளவர்கள் 'நீடுவாழ்க' என்று வாழ்த்தும் வழக்கமும் வள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே இருத்திருக்கிறது.இந்த தும்மல் நம்பிக்கைகளை வைத்து அழகாக மூன்று குறள்களில் சித்திரிக்கிறார் வள்ளுவர்.
காதலனும், காதலியும் ஒன்றாக இருக்கிறார்கள். காதலனுக்கு தும்மல் வந்து தொலைக்கிறது. 'முதல் தும்மல் தான், க்வலை இல்லை' என்று நினைக்கிறான் காதலன். அவன் எண்ணப்படியே, காதலியும் 'நீவிர் நூறாண்டு வாழ்க' என்று ஆசையோடு வாழ்த்துகிறாள்.
'ஆஹா! நான் பாக்கியவான்!' என்று அக மகிழ்கிறான் காதலன். இது ஒரு நிமிடம்தான் நிலைத்து நின்றது.
காதலி தனக்குள் நினைத்தாள்:'இவன் என் காதலனா அல்லது கள்வனா? கள்ளத்தொடர்பு வைத்திருப்பவனா? அவள் நினைத்துத் தான் இவன் தும்முகிறானா? இவனையா வாழ்த்தினேன்?'
காதலியின் சந்த்தேகம் வலுப்பட்டு விட்டது.'யார் அந்தக் கள்ளி? அவள் நினைத்ததால் தானே நீர் தும்மினீர்?' என்று அழ ஆரம்பித்தாள்!
'ஐயகோ! யாரிடமும் எனக்குத் தொடர்பில்லை! நான் ஏகபத்தினி விரதன்! என்னை நம்பு!' என்று காதலன் சொன்னான்.
சொல்லி முடிக்கு முன்பே, இன்னொரு தும்மல் வர, அதை காதலன் அடக்கிக் கொண்டான். இதைக் காதலி கவனித்து விட்டாள்.
'ஆஹா! அந்தக் கள்ளி திரும்பவும் உன்னை நினைக்கிறாள், நீரும் அதை எனக்குத் தெரியாத படி மறைக்க அந்தத் தும்மலை அடைக்குகிறீர்!' என்று காதலி மீண்டும் அழுகிறாள்.
'நீர் தும்மலை அடக்குவதிலிருந்து என்ன தெரிகிறது? என்னை நினைப்பவர் போல் பாசாங்கு செய்து, அவளை நினைத்து என்னை நினைக்காமல் விடுகின்றீர்' என்று காதலி மீண்டும் புலம்புகிறாள்.
காதலனோ தும்மமும் முடியாமல், தும்மலை அடக்கவும் முடியாமல் அவதிப்படுகிறான்.
ஆதாரம்: குறள்கள்: 1203, 1317 & 1318

Comments