மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்
கடந்த இரண்டு வருடங்களாக பாரத பூமியில் நடந்த சம்பவங்களையும், அவைகளை அரசியல் நோக்கில் பார்த்து, தேச மக்கள் நலனை கிஞ்சித்தும் சிந்திக்காது கட்சி நலனையும், ஓட்டு வங்கியையும் மனதில் கொண்டு, செயல் பட்ட ராஹுல் காங்கிரஸ், மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவால் ஆம் ஆத்மி, உத்தவ் சிவசேனா, பவார் காங்கிரஸ், ஸ்டாலின் திமுக, தேஜஸ்வி ராஷ்ட்ரிய ஜனதா தால், அகிலேஷ் சமஜ்வாதி ஆகிய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைப் பார்த்தும், கேட்டும், பரிசீலித்தும் இருக்கும் நல் இதயம் கொண்ட இந்திய மக்கள் அவர்களை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்ற தீர்மானத்தில் இருப்பது பாரத பூமியின் சிறப்பு அம்சமாகும்.
கொரோனா காலத்தில் இந்த அரசியல் தலைவர்கள் சில்லரைத் தலைவர்களாக மக்கள்
மடிவதை ஆர்வத்துடன் பகிர்ந்து மோடி அரசுக்கு அவப்பெயரை இந்தியாவிலும், உலக
அளவிலும் பரப்பி, சிதைத் தீயில் குளிர் காய்ந்த அவலத்தையும் பாரதம்
கண்டது. சிதையில் எரியும் உடல்களையும், கங்கையில்
மிதக்கும் இறந்த உடல்களையும் பரவலாகப் படம் பிடித்து உள்ளூர் மற்றும் உலகளாவிய
அளவில் இருக்கும் ஊடகங்களுடன் பகிர்ந்து பணம் பண்ணி ‘பத்திரிகைச்
சுதந்திரம்’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு பேடிகளாக வலம்
வந்தனர். இப்படிப்பட்ட செய்திகளின் உள்நோக்கம் பற்றி ஒரு
சிறிதும் கவலைப்படாமல் பல அரசியல் கட்சிகள் முக நூல், டிவிட்டர், இன்ஸ்டாக்ராம்
ஆகியவைகள் மூலமாக பரப்பி பாரத தேசத்தினை குறைசொல்வதன் மூலம் மோடி அரசைச்
சாடினார்கள்.
காங்கிரஸ் கட்சி டூல் கிட் என்ற பிரசார அலோசனைகள், பிரசார
கோஷங்கள், பிரசார தட்டிகள், பிரசார நோட்டீஸ்கள்
என்று இந்த அதிபயங்கரமான கொரோனா தொற்று நோயால் இந்திய மக்கள் பாதிக்கப்பட்டும்
செத்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மோடி எதிர்ப்பலைகளை ஏற்படுவதற்கு இது
தான் தகுந்த தருணம் என்று கொலை உள்ளம் கொண்டு செயலில் இறங்கியதை பாரத மக்கள்
மறக்கவும் தயாராயில்லை. மன்னிக்கவும் தயாராயில்லை. அவர்களைத்
தண்டிக்கவும் தகுந்த தருணத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி வைரஸ், மோடி கொரோனா தடுப்பு ஊசி,
மோடி
இந்த நேரத்தில் தனக்கு ஒரு பெரிய பங்களா கட்டுகிறார், கும்பமேளா
கூட்டத்தை அனுமதித்து கொரோனாவைப் பரப்பியவர் மோடி,
தேர்தல்
பிரசாரம் செய்து கொரோனாவைப் பரப்பிய மோடி, கொரோனா தடுப்பு
மருந்து இந்தியாவிற்கே போராத போது அதை வெளி தேசத்திற்கு ஏற்றுமதி செய்யும் மோடி, ஆக்ஸிஜன்
தட்டுப் பாட்டை தீர்க்காத மோடி, அமெரிக்காவிலிருந்து
கொரோனா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்யாமல் இருக்கும் மோடி என்று அவதூறு
பரப்பினார்கள். அது மட்டுமல்ல. இந்த கொடூரனமான கொரோனா
காலத்தில், ‘மோடியை 2024 லோக் சபா தேர்தலில்
தோற்கடிப்போம். அதற்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரணியில் திரளுவோம்’ என்ற
மம்தாவின் அறைகூவல். இந்தக் கூத்துக்களை
எல்லாம் பார்த்த பாரத மக்கள் ‘இவைகளை ஒரு போதும்
மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம்.
அவர்கள்
அனைவருக்கும் தகுந்த பாடம் தகுந்த நேரத்தில் புகட்டுவோம்’
என்று சபதம் ஏற்கும் மனநிலையில் இருப்பது ஒரு ஆறுதலான விஷயம்.
உருப்படியாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொரோனா தொற்றை
தடுக்கும் எந்தவித முயற்சிகளிலும் திறம்பட ஈடுபடவில்லை. ஈடுபட
முடியவில்லை.
மத்திய அரசு இந்தியா பூராவும் ஊரடங்கு, ஹாஸ்பிடல்
வசதிகளை அதிகரித்தல், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் உற்பத்தியை அதிகரித்தல், வெளிநாடுகளிலிருந்து
துரித கதியில் ஆக்ஸிஜனை வரவழைத்தல், கொரான தடுப்பூசியை
இந்தியாவிலேயே தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிற்கும்
அளித்தல் என்ற பல நடவடிக்கைகளையும் குற்றம் கண்டவர்கள் தான் இந்த எதிர்க்கட்சித்
தலைவர்கள்.
அவசர கால தடுப்பூசியை இந்தியாவில் போட - அதுவும் முதலில் கொரோனா வாரியர்களாக தங்கள் உயிரையும் பணயம் வைத்து
உழைக்கும் டாக்டர், நர்ஸ், ஆம்புலன்ஸ்
ஓட்டுனர்கள், மற்ற பல ஊழியர்கள் என்பவர்களுக்கு – முயன்ற
போது, ‘இந்த தடுப்பூசியை வைத்து மோடி அவர்களைக் கொல்லப்
பார்க்கிறார். அந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார மையத்தின் அனுமதியைப்
பெறவில்லை. அது ஆபத்தானது’ என்று பயத்தை
அவர்களிடம் உண்டாக்கியவர்கள் தான் இந்த எதிர்க்கட்சி மற்றும் ஊடகங்கள்.
‘மோடி முதலில் போட்டுக் கொள்ளட்டும். இது
மோடி ஊசி. கொரோனாவைத் தடுக்காது இந்த ஊசி. மக்களைக்
கொன்றுவிடும் தன்மை கொண்டது’ என்று மக்களிடையே
பிரசாரம் செய்த இந்த மஹா பாவிகளை மக்கள் மறக்கவோ,
மன்னிக்கவோ
தயாராயில்லை.
ஆக்சிஜன் தயாரிப்பு, தடுப்பூசி பெறுதல், ஊரடங்கு
உத்திரவு ஆகியவைகளை அந்தந்த மாநில அரசே ஏற்று அதற்கு ஏற்ப செயல்பட மத்திய அரசு
உத்திரவிட்டது. இது சில எதிர்க்கட்சிகள் –
சுகாதாரம் ஒரு மாநிலத்தின் கிழ் வருகிறது. ஆகையால் அதை அந்த
மாநிலமே பார்க்க அனுமதிக்க வேண்டும். அது தான் மாநில
சுயாட்சித் தத்துவம் – என்ற கோரிக்கையினால் மத்திய அரசு எடுத்த முடிவாகும். கொரோனா
தடுப்பூசிகளை நாங்களே வெளிநாடுகளிலிருந்து வாங்கவும் அனுமதி தேவை என்பதையும்
மத்திய அரசு ஏற்று, அனுமதி அளித்தது. ஆனால் இதில் உள்ள
நடைமுறை சிக்கலால், மாநில அரசுகள் மத்திய அரசே கொரோனா தடுப்பூசி
விநியோகத்தை ஏற்க வேண்டும் என்று ஜகா வாங்கினார்கள்.
அவர்கள்
கொரோனா தடுப்பூசியைப் பற்றிய பயத்தை ஜனங்களிடம் பரப்பியதால், தடுப்பூசி
போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டாமல், பல மாநிலங்களில்
தடுப்பூசி வீணாகியதையும் பார்த்தோம்.
பல எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில். ஊரடங்கை
அமல் படுத்துவதில் ஒரே குழப்பம். பதற்றம். கொரோனா
பரவுவதைத் தடுப்பதிலும், அதை டெஸ்ட் மூலம் அறிவதிலும், ஹாஸ்பிடல்
அனுமதி – அங்கு சிகிச்சை என்று பல விதத்திலும் திட்டமிடுதலும்
இல்லை,
செயல்திறனும் இல்லை. குற்றம் குறை சொன்னவர்கள்
கொரோனா பரவுதடுப்பதில் படுதோல்வி அடைந்து, மத்திய அரசே
அனைத்தையும் தனது நேரடிப் பார்வையில் செயல்படுத்த வேண்டும் என்று பின் வாங்கியதை
மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ போவதில்லை.
சிறிது கற்பனை செய்து பார்ப்போம்.
மோடி
இடத்தில் மம்தாவும், அமித்ஷா இடத்தில் ராஹுலும் மத்தியில் ஆட்சியில்
இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் இந்த
இக்கட்டான நேரத்தில் எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். மோடி
– அமித்ஷா
ஆகியவர்களை விட செயல்பட்டிருப்பார்களா? – என்று நினைத்துப்
பார்த்தால் தான் மோடி அரசின் ஆளூமையும், அரசாட்சி செய்யும்
திறமையும், தீர்க்கமான முடிவெடுத்து அசுர வேகத்தில்
செயல்படுத்துவதும் தெரியவரும்.
பாரத மக்கள் 2014 பார்லிமெண்ட்
தேர்தலில் கண்டெடுத்த சொர்ணமயமான தங்கம் மோடி. அவரது ஐந்து வருட
செயல்திறனைப் பார்த்து 2019-ல் மீண்டும் அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்தனர் பாரத
மக்கள். 2024-லும் மோடியைத் தான் பிரதம மந்திரியாகத் தேர்வு
செய்வார்கள் – தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் நாட்டின் நலனில்
அக்கறை கொண்டவர்களின் பிரார்த்தனை. பாரத மாதாவின்
ஆசியுடன் மோடி மீண்டும் 2024-ல் அரியணையில் அமர்ந்து பாரத தேசத்தை அகில உலகத்திலும்
புகழ்ந்து பாராட்டும் விதமாக ஆட்சி செய்ய மக்கள் ஆசி வழங்க வேண்டும் என்பது தான்
வாய்மையின் விருப்பம். அது தான் வாய்மையே ஆட்சி செய்யும் தருணமாகவும் அமையும்.
பாரத மக்களே! நினையுங்கள். நிகழ்த்துங்கள். சத்யமேவ
ஜெயதே! பாரத மாதாவுக்கு ஜே!

Comments