108 சொர்ண புஷ்ப அர்ச்சனையின் பின்னணி


 



அர்ச்சனை செய்யும் ஒவ்வொரு சொர்ண புஷ்பமும் 23 கிராம் எடை கொண்டது. அந்த தங்க மலர்கள் அத்தனையையும் குண்டூரைச் சேர்ந்த ஷேக் மஸ்தான் என்ற வணிகர் வெங்கடாஜலப் பெருமானுக்கு 1984-ம் ஆண்டு காணிக்கையாகச் செலுத்தினார். அப்போதிலிருந்தே இந்த 108 தங்க புஷ்ப அர்ச்சனை என்பது அஷ்ட தள பாத பத்ம ஆராதனை சேவை எனப்படும் ஆர்ஜித சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் செய்யப்படுகிறது. அப்போது அதில் கலந்து கொள்ளும் சேவார்த்திகள் பங்காரு வாசலுக்கும், குலசேகரப்படிக்கும் இடையே உள்ள சிறிய மண்டபத்தில் உட்கார்ந்து இந்த தங்க புஷ்ப அர்ச்சனையைக் கண்குளிரப்பார்த்து வெங்கடமலையானின் அருளுக்குப் பாத்திரமாகும் புண்ணியத்தை அடைவார்கள்.

இதைப் பற்றி குண்டூரைச் சேர்ந்த வணிகர் ஷேக் மஸ்தான் தெரிவித்த விவரம்:

எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாக ஏழுமலையானின் பக்தர்கள். காலையில் எங்கள் வீட்டில் இருக்கும் ஏழுமலையானின் படத்தின் முன் கூடி சுப்ரபாதம், வெங்கடேஸ்வார ஸ்தோத்திரம், ஸ்ரீநிவாச பிரபக்தி, மங்களாசாசனம், ஸ்ரீநிவாச அஷ்டோத்திரம் ஆகியவைகளை சொல்வது எங்கள் குடும்பவழக்கமாகும். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த பூக்களை ஸ்தோத்திரம் சொல்லும் போது சுவாமிக்கு அர்ப்பணிப்போம். இதே போன்று ஏழுமலையானுக்கு 108 தங்க புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய விழைந்த எங்கள் முன்னோர்கள் இந்த தங்க புஷ்பங்களை எங்கள் கொள்ளுத் தாத்தா, என் தாத்தா, என் அப்பா என்று ஆரம்பித்து, 108 தங்கக் காசு மலர்கள் என்னால் பூர்த்தியாகி உள்ளது. அதை எங்கள் குடும்பத்தின் சார்பாக அன்புக் காணிக்கையாக ஏழுமலையானுக்கு அளித்து, அந்த தங்க மலர்களை அஷ்டோத்திரம் சொல்லும் சேவையில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவைகளை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைத்து விட்டேன்.”

இன்றும் இந்த 108 சொர்ண புஷ்ப அர்ச்சனை தொடர்ந்து திருமலையில் ஏழுமலையானுக்கு அஷ்டோத்திர அர்ச்சனையின் போது பயன்படுத்தப்படுகிறது. ஜாதி பேதங்களைத் தாண்டி ஏழுமலையான் எல்லோரையும் ரக்ஷிக்கிறான் என்பதற்கு இது ஒரு சான்று



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017