கடல் நீரில் எரியும் விளக்கு
இலங்கையில் உள்ள முல்லைத் தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை எனும் கிராமத்தில் உள்ள பத்தினித் தெய்வம் கண்ணகியின் கோயிலில் கடல் நீரில் விளக்கெரியும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் வைகாசி பெளர்ணமி அன்று இவ்விளக்குகளை எரிக்க தேவைப்படும் கடல் நீரை எடுக்கும் சடங்கை பாக்குத்தண்டம் என்று அழைக்கின்றனர்.
கடல் நீர் நிறம்பிய குடத்திற்குப் பூஜை செய்ய முள்ளிவலை கட்டா விநாயகர் கோயிலில் குடத்தின் வாய்ப்பகுதியை வெள்ளைத் துணியால் கட்டி நடுவில் துளையிட்டு திரி போட்டு விளக்கேற்றுவர்.
கடல் நீரில் விளக்கேற்றி எரிய வைப்பது என்பது ஒரு ஆச்சரியமான நிகழ்வு.
Comments