 மம்தா பானர்ஜியும், பப்பு ராகுலும்




மம்தா பானர்ஜியும், பப்பு ராகுலும்



மம்தா பானர்ஜி மோடியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளப் பகுதிகளைப் பார்வையிடச் சென்ற போது காக்கவைத்து, அவரிடம் சில கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையைக் கொடுத்து விட்டுஎனக்கு வேறு அவசரப் பணிகள் காத்திருக்கின்றனஎன்று மோடி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்புச் செய்து பாரதப் பிரதமரை அவமதித்து விட்டார். நந்திக்கிராமத்தில் தன்னைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரி பிஜேபியின் எதிர்க் கட்சித் தலைவர் என்ற நிலையில் பங்கேற்றது மம்தாவைக் கோபமடைய வைத்துள்ளது. ‘ஒடிசாவில் கூடிய கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பங்கேற்க வில்லை. இது திட்டமிட்டு என்னைப் பழிவாங்கவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தால் மோடி செய்த திட்டம்என்று சாடி இருக்கிறார். அவருடன் வந்த தனது தலைமைச் செயலாளர் அல்பன் பந்தோபாத்யாய - வையும் பங்கேற்க அனுமதிக்காமல் அவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இது தலைமைச் செயலாளரின் பதவி விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி உள் துறை அமைச்சகம் அவரை மத்திய பணிக்கு திரும்ப அழைத்துள்ளது. ஒய்வு பெறும் நிலையில் உள்ள அவரை கொரோனா கால கட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்ததுடன், அவரை முதல்வரின் தலைமை ஆலோசகராகவும் ஒரு புதிய பதவி நியமனம் செய்துள்ளார் மம்தா, இது மத்திய அரசிடம் மம்தா கொரானாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 3 மாதங்கள் பணி நீடிப்பு கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதால் மம்தா இந்த எதிர் நடவடிக்கையில் இறங்கினார்.

அல்பன் பந்தோபாத்யாய முதல்வரின் கீழ் பணியாற்றும் போது அவரை மீறி செயல்படுவது மாநில சுயாட்சிக்கு ஹானியாகும் என்ற கருத்தால், மோடி அரசு மம்தாவின் மேல் நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரியை குறிவைத்து நடவடிக்கை எடுப்பது தர்மம் அல்ல என்ற வாதம் ஏற்புடையதாகத் தான் தெரிகிறது. என்றாலும் தலைமைச் செயலாளரின் நடவடிக்கைகள் அரசு அதிகாரி என்ற நிலையிலிருந்து கட்சி சார்ந்ததாக உள்ளது என்ற நிலைக்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் அல்பன் அதிகாரியின் நிலை அறிந்து மத்திய அரசு மத்திய அரசில் சேரும் உத்தரவைத் தவிர்த்திருக்கலாம் என்பது தான் வாய்மையின் கருத்து.

ஆனால் மம்தா இது குறித்து மீடியாவில் அடிபட்ட வங்காளப் புலிபோல் சீரி உள்ளார். அதைக் கேட்டால், மம்தாவை உடனே பதவி நீக்கம் செய்தாலும் அது ஒரு சரியான சட்ட ரீதியான தார்மீக நடவடிக்கை என்று தான் கொள்ள வேண்டும். ஆனால் ஏனோ, மத்திய அரசு மவுனம் காக்கிறது. அந்த வீடியோ: https://www.facebook.com/karansank/posts/10220638443012824

மேற்கு வங்காளத்தில் மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஐந்து வருடங்களாக எதிர்கட்சி நபர்களைக் குறிவைத்து நடத்திய பல கொலைகள், கொள்ளைகள், தீயிட்டுக் கொளுத்துதல், கற்பழிப்பு, பலர் கிராமங்களை விட்டு உயிருக்குப் பயந்து அண்டை மாநிலமான அஸ்ஸாமில் தஞ்சம்என்று பல அக்கிரமங்கள் நடந்தாலும் அதை எல்லாம் தடுக்காமல்ஏன், நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆதரித்துஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மம்தாவை ஜனநாயத்தின் ஒரு கரும்புள்ளித் தலைவி என்று தான் மதிப்பிட வேண்டும். பெரும்பாலான மேற்கு வங்க ஓட்டர்களின் ஆதரவு இருப்பதால் அவரது உக்கிரம் தீவிரமாகி அதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்பாதிக்கப்படவும் உள்ளனர்.

அது சரி. அந்த வீடியோவில் அப்படி என்ன மம்தா பேசி உள்ளார்? என்று கேட்பவர்களுக்கு இதோ பதில்:

அந்த வீடியோவில் மம்தாவின் கர்ஜனை:

மிஸ்டர் பிரதம மந்திரியாரே! மிஸ்டர் பிசி பிரதம மந்திரியாரே! மிஸ்டர் மன் கி பாத் பிரதம மந்திரியாரே ! உங்களுக்கு என்ன வேண்டும்என்னை தீர்த்துக்கட்ட நினைக்கிறீரா ?

மம்தா லட்சுமண ரேகாவைக் கடந்து தவறு இழைத்து விட்டார். இதைப் போல் மம்தா லட்சுமண் கோட்டைப் பல முறை கடந்திருந்தாலும், இந்த வீடியோ அதற்கெல்லாம் கீரிடம் வைத்தது போல் மம்தாவை ஒரு கீழ்த்தரமான முதல் மந்திரியாகவே மதிப்பிடத் தோன்றுகிறது.

அவரின் அரசியல் வாழ்க்கையில் பல அடாவடிகளால் தான் முன்னேறி உள்ளார்.

மம்தா முன்பு உதிர்த்தபொன்மொழிகள்:

Ø  கொரோனாவைக் கட்டுப் படுத்துவது என் கைகளில் இல்லை. நீங்கள் இனி கொரோனா வைரசுடன் தூங்குங்கள்கொரோனா வைரஸ் உங்களுக்குத் தலைகாணியாகப் பயன்படட்டும்.

Ø  சாரதா சிட் பண்டில் பணம் இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணம் கொடுக்க, வங்காளிகள் கொஞ்சம் அதிகமாக புகைத்து கஜானாவுக்கு பணம் கிடைக்க வழிசெய்யுங்கள்.

இந்த சமயத்தில் ஒரு ஜோக் சொல்லப்படுகிறது. TRI - NAMO – OL என்ற மம்தா பானர்ஜியின் கட்சியின் பெயரில் நடுவில் நமோமோடி இருக்கிறார். ஆகையால் எப்படியும் மம்தா நமோவிடமிருந்து தப்பிக்க முடியாது.

 

மோடி மம்தாவை ஐந்து வருடத்திற்கு முன்பே அரசியல் சாசனத்தின் சரத்துக்களின் படி நடக்க வற்புறுத்த வேண்டும். அவசியமானால் அந்த மம்தாவின் அராஜக அரசை டிஸ்மிஸ் செய்யவும் தயங்கக் கூடாது.

 Ø  பப்பு ராகுலின் வெறிகொண்ட கீழ்த்தரமான ஆவேசப் பேச்சு:









ராகுலின் இந்த வீடியோ பேச்சு 07 – 02 -2019 அன்று லோக் சபா தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முஸ்லீம் சிறுபான்மை பிரிவினர் குழுக் கூட்டத்தில் பேசியது. அதில் ஆர் எஸ் எஸ், சாவர்கர் ஆகிவர்களுடன் குறிப்பாக மோடியை மிகவும் கேவலமாக ராஹுல் விமர்சித்துள்ளார். அந்தப் பேச்சு ராஹுலுக்கோ, அவரது காங்கிரஸ் கட்சிக்கோ எந்த விதத்திலும் நன்மை தரப்போவதில்லை.

அந்த வீடியோவின் தொடர்பு:

https://fb.watch/6cu9CCnDqe/

அந்த வீடியோவில் ராஹுல் பேசிய பேச்சு இதோ உங்கள் பார்வைக்கு. இந்த உரையைப் படிப்பதற்குப் பதில் மேலே உள்ள வீடியோவை கிளிக் செய்து கேட்கவும். அப்போது தான் ராஹுலில் விஷமான உள்ளமும், கீழ்த்தரமான கருத்துக்களும், பொய்ப் பேச்சும், சரித்திர உண்மைகளை அரசியல் ஆதாயத்திற்கு ஓட்டு வங்கியின் தாக்கத்தால் திரித்தும் பேசும் தந்திரம் உங்களுக்குத் தெரிவரும். சொப்பனத்தில் கூட சோனியாராஹுல்பிரயங்கா என்ற வம்சத்தினர் ஒரு போதும் பாரத தேசத்தில் பதவியில் அமரக் கூடாது. ஆனால் சரத்பவார் போன்ற பதவி சுகம் காண விழையும் பதர்கள் இருக்கும் வரை பாரத தேச பக்தர்கள் அனைவரும் விழிப்புடன் தங்கள் ஒட்டுக்களை பிஜேபி கட்சிக்கு அளித்து மோடி மீண்டும் மூன்றாவது முறையும் பிரதமராக வர ஆதரிக்க வேண்டும்.

ராஹுலின் ஆவேச அலோங்கோலப் பேச்சு:

o   சாவர்க்கர் பிரிட்டிஷ் கைக் கூலி.

o   மோடி 56 இஞ்ச் நெஞ்சுள்ள பிரதம மந்திரியா? அவருக்கு 4 இஞ்ச் கூட கிடையாது.

o   மோடி 12 லட்ச ரூபாய் கோர்ட் போட்டுள்ளார். அதில் நரேந்திர மோடி, நரேந்திர மோடிஎன்று பொறித்துள்ளது. ஏழை ஜன்ங்கள் இதைப் பார்த்து வெறுத்துப் போய் உள்ளனர்.

o   நரேந்திர மோடியிடம் நான் இரண்டே கேள்விகள் கேட்க வேண்டும்.

o   நரேந்திர மோடி என்னுடன் இந்த மேடையில் 10 நிமிடம் நிற்கட்டும். விவாதிப்போம்.

o தேசிய பாதுகாப்பு, ரபேல் பிரச்சனை ஆகியவைகளைப் பற்றி விவாதிப்போம்.

o   மோடி இதைக் கேட்டு பயந்து ஒரே ஓட்டமாக ஓடி விடுவார். அவர் ஒரு பேடி மனிதர். நான் சொல்கிறேன் அவர் ஒரு பேடி மனிதர். எனக்கு நன்றாகாத் தெரியும் அவரைப் பற்றி.

o   இந்தியா விடுதலைப் போரில் காந்திஜி 15 வருடங்கள் ஜெயிலில் இருந்தார். ஆசாத், படேல், நேரு என்று வரிசையாக தனிமைச் சிறைவாசம் அனுபவித்தார்கள்.

o   ஆனால் சாவர்க்கர் என்ன செய்தார்?

o   சகோதரர்களே! நான் என்ன எழுத வேண்டும்? (ராஹுல் ஒரு பேப்பரை எடுத்துக் கொள்கிறார். தன் அருகே இருந்த பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து ஒரு பேனாவைப் பெறுகிறார்,)

o   நீங்கள் பிரிட்டிஷார். ‘நான் உங்களுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன்என்று மன்னிப்புக் கடிதம் எழுதவா? மேலும் என்ன எழுத வேண்டும்? பிரிட்டிஷாரின் கால்களை வணங்குகிறேன். சரியா? இது தான் சாவர்க்கர் போன்றோர்களின் மரபணுவாகும். அவர்கள் அனைவரும் பயந்தாங்கொள்ளிகள், பயந்தாங்கொள்ளிகள், பேடிகள்.

o   ஆனால் இங்கு கூடி இருக்கும் நீங்கள் சிங்கத்திற்குப் பிறந்த குழந்தைகள். நீங்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள்.

அனவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்த இரண்டு வீடியோக்களையும் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்களுக்கு அனுப்பி உணரச் செய்வீர்களாக.

பாரத மாதாவுக்கு ஜே ! வந்தே மாதரம் ! சத்தியமேவ ஜெயதே !

 









 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017