தி வீக் வாரப்பத்திரிகை வியாபார (விபசார) பத்திரிகையானதிற்கான சான்று இதோ:
v தி வீக் வாரப்பத்திரிகை வியாபார (விபசார) பத்திரிகையானதிற்கான சான்று இதோ:
ஜார்னலிசம் என்பது பத்திரிகைத் தர்மத்தை அதன் மூலக் கொள்கையாக கடைப்பிடிக்க வேண்டும். பதவிக்கோ, பணத்திற்கோ பத்திரிகை அடிபணியாமல் தேசப்பற்றை காக்கும் கடமையையும் மறக்காமல் செயல்பட வேண்டும். அதில் இப்போது பல பத்திரிகைகளும், ஊடகங்களும் தவறிழைத்து தங்களை ‘விபசார பத்திரிகை’ என்ற குற்றச் சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக நடந்து கொண்டு பத்திரிகை விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு தரம் தாழ்ந்து காறிஉமிழும் நிலைக்குத் தங்களை தாங்களே தள்ளி, கொள்கைகளையே கொள்ளி வைத்து வாழும் நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது, நெஞ்சு பொறுக்குதிலையே என்று மனம் குமுறி விமரிசிக்க வைக்கிறது.
அப்படி என்ன தான் தி வீக் பத்திரிகை செய்துள்ளது? – என்று நீங்கள் கேட்கலாம். தி வீக் பத்திரிகையின் ஜூன் 21, 2021 பத்திரிகையைப் பார்த்தாலே உங்களுக்கு நான் சொல்வதின் உண்மை புரியும்.
தி வீக் என்பது மலையாள மாநிலத்திருந்து வெளிவரும் மலையாள மனோரமா குழுமத்தின் வெளியீடு. அதன் உரிமையாளர்கள் கிருஸ்துவ மத்தினர்கள். அந்த ஜூன் இதழினின் முதல் பக்க அட்டைப் படம், உள்பக்கங்களான இரண்டு, வெளிப்பக்க அட்டைப் படம் ஆகியவைகளில் ராஹுல் புகைப்படங்களுடன் அவரைப் புகழ்ந்து கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. வெளி அட்டைப்படத்தின் கீழ் சிறிய எழுத்துக்களில் இந்த வாசங்கள் அச்சிடப்பட்டுள்ளன:
பத்திரிகையின் உண்மையான அட்டைப் படத்திற்கு மேல் உள்ள அட்டைப்படம், அதில் உள்ள வாசகங்கள் அனைத்திற்கும் நாங்கள் பொறுப்பில்லை – என்பது பத்திரிகை தர்மமாகாது. மேலும் முதல் பக்க அட்டையிலேயே இது ஒரு விளம்பர அட்டை என்றாவது குறித்திருக்க வேண்டும். தி வீக்கின் கொள்கையான – “Journalism with a Human Touch” என்பது இந்த அவர்களின் பொருள் ஈட்டும் யுத்திக்கு முரணாகும். “Journalism with a Money Touch” என்ற வாசகம் தான் இதற்குப் பொருந்தும்.
ஏன் வாய்மை இவ்வளவு கோபம் கொள்கிறது? – என்ற உங்கள் நீயமான கேள்விக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். பதிலைப் படித்தவுடன் ‘ஆஹா, விளப்பர பண மோகத்தால் இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதே இந்த தி வீக்’ என்று உங்கள் மனத்தில் பட்டால் அதுவே வாய்மையின் நேர்மையாகும்.
முதல் முகப்பு அட்டையில் ராஹுலின் முழுமையான படம் போட்டு ஆங்கிலத்தில் உள்ள வாசகம்: YOU CAN
ALWAYS COUNT ON RAHUL GANDHI TO SAY THE RIGHT THING.
இரண்டாவது உள் அட்டையில் ராஹுலின் அரைப் பக்க அளவிலான படத்தைப் போட்டு அதில் உள்ள ஆங்கில வாசகம்: A leader who has finger on the pulse of the Nation.
இதைப் பார்த்த வாசகர்கள் இது தி லீக் பத்திரிகையின் விளம்பரம் என்று கருதாமல், அவர்களின் கருத்து என்று நினைப்பதற்குத் தான் சாத்தியக் கூறுகள் உண்டு. இந்த காங்கிரஸ் விளப்பரத்திற்கு மாற்றாக தி லீக் தன் நிலையைக் கட்டுரையாக எழுதும் துணிவு – ஜர்னலிசத்தை ஒரு மனிதாபிமானமாகவே நடத்துகிறோம் – என்று கொள்கையாகப் பிரஹடனப்படுத்தும் பத்திரிகைக்கு இருக்காது என்பது தான் வாய்மையின் கருத்து.
Comments