முருகன் ஜன்ம நட்சத்திரம் – வைகாசி விசாகம் – 25 – 05 – 2021 – செவ்வாய் கிழமை
முருகன் அழகன், அருளன், வீரன் என்பதுடன் ஞானச் சொரூபன். தந்தைக்கு ஞான உபதேசம் செய்து தகப்பன் சாமியாகியாகியவர் முருகன்.
ௐ என்ற பிரணவம் ஒரெழுத்து. வேதம் நான்கினும் மெய்ப் பொருளாகிய சிவன் நாமப் பிராத்தனை மந்திரமான நமசிவாய ஐந்தெழுத்து. முருகனைத் துகிக்கும் சரவணபவ ஆறெழுத்து. ஆகையால் ஆறு என்ற எண் முருகனுக்கு உகந்தது. அந்த எண் முருகன் அருள் பெற்றது.
சிவனின் நெற்றிக் கண்களிலிருந்து ஜனித்த ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாகி, ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றவர் முருகன். பார்வதி தேவியின் அன்பான அணைப்பால் ஓருடல் – ஆறுதிருமுகங்களாகி ஆறுமுகனாரானவர் முருகன். ஆறுபடைவீடுகளில் பக்தர்களுக்கு காட்சி தரும் முருகன் சரணார விந்தங்களில் சப்திக்கும் அணி வகைகள் – தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு – ஆகியவைகள் ஆறு. முருகனைக் கொண்டாடும் பண்டிகைகளான வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவைகள்
பராசுர முனிவரின் ஆறு புத்திரர்கள் குளத்தில் குளிக்கும் போது அங்குள்ள மீன்கள் அவதிப்படுவதைப் பார்த்ததும் அவரது புத்திரர்களைக் கரையேறச் சொல்லியும் கேட்காததால் தன் பிள்ளை என்றும் பாராது அவர்களை மீன்களாகப் பிறக்கச் சபிக்கவும், அதற்கு விமோசனம் பார்வதி தேவியினால் உண்டாகும் என்றும் கூறினார். பல காலம் கழிந்த பிறகு சிவலோகத்தில் பார்வதி தேவி முருகனுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும் போது முருகன் திருவாயிலிருந்து ஒரு சொட்டுப் பால் பாரசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழ, அதனைப் பருகிய அந்த ஆறு மீன்களும் பாபம் நீங்க ஆறு முனிவர்களாக மாறினார்கள். அப்போது ‘திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள். அங்கு முருகன் அருள் புரிவார்’ என்று அசரீரி ஒலிக்க, அவர்களுக்கு வைகாசி விசாகம் அன்று திருச்செந்தூரில் முருகன் அருள் கிட்டியது. பராசரரின் மகன்களுக்கு
திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம் நாளில்
திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர்
நிற்கும்படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். . இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை
நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
ஆறெழுத்து சரவணபவ என்ற முருகனின் மந்திரத்தை மனமுருகி ஓதி முருகன் அருளைப் பெற்று நலமுடன் வாழ்வோமாக. ஸகல செளபாக்கியங்களும் பெருவோமாக.
ௐ சரவணபவ ௐ
Comments