திருப்பூர் கிர்ஷ்ணன் சாவைப் பற்றிய சிந்தனை
30 வயதே நிரம்பிய தமது செல்ல மகனை கொரோனாவுக்குப் பலி கொடுத்து இழந்து தவிக்கும் திருப்பூர் கிருஷ்ணன் தமது கவலையைத் தாண்டி சாவைப் பற்றிய தத்துவம் இதோ:
நா. பா. 54-ல் காலமானார். அப்போது சி.சு. செல்லப்பாவுக்கு 80-க்கும் மேற்பட்ட வயது. ‘பழுத்த சருகிருக்க பச்சை இலை உதிர்கிறதே. இறைவன் என்னை அல்லவா கொண்டு போயிருக்க வேண்டும்’ என செல்லப்பா வல்லிக்கண்ணனிடம் வருந்திக் கதறினார்.
பற்றற்ற போலான மனநிலை உடையவர் வல்லிக்கண்ணன். ‘எது பழுத்த இலை, எது பச்சை இலை என்பதை இறைவன் வயதை வைத்தா முடிவு செய்வான்? ஒருவர் பூமியில் செய்த பணி போதும் என்று அவன் நினைத்தால் அவரை அவன் எடுத்துக் கொள்வான். நீங்கள் செய்ய வேண்டிய பணி என்ன மீதமிருக்கிறது என்று யோசித்து அதைச் செய்யுங்கள். நா. பா. அவர் செய்ய வேண்டிய பணிகளை முடித்து விட்டதாக இறைவன் கருதியிருக்கிறான்’ என்றார்.
சிந்தனையில் ஆழ்ந்த செல்லப்பா அதன் பிறகு தான் தன் இறுதிக் காலத்தில் மூன்று பாக பிரமாண்டமான நாவலான சுதந்திர தாகம் என்ற மாபெரும் படைப்பை எழுதினார்.
யாரை எப்போது அழைத்துச் கொள்வது என்ற இறைவன் தீர்மானத்தில் குறுக்கிடவோ விமர்சிக்கவோ நமக்கு ஏது உரிமை? இப்பிறவி பற்றி மட்டுமே நாம் அறிவோம். நம் அனைத்துப் பிறவிகளையும் அறிந்தவன் இறைவன்.
Comments