மோடியும் – ராஹுலும் – ஒரு கற்பனைக் கதை


மோடியும் – ராஹுலும் – ஒரு கற்பனைக் கதை






மோடி ஒரு ஹோட்டலுக்குள் நிழைந்தார். அங்கு ராஹுல் இருப்பதைப் பார்த்து அவர் பக்கத்தில் அமர்ந்தார். அப்போது அங்கு டி.வி. ஓடிக்கொண்டிருந்தது.

அந்த டி.வி.யில் ஒருவன் வீட்டு மாடியிலிருந்து கீழே குதிப்பதைப் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ராஹுல் மோடியிடம் கேட்டார்: ‘அந்த நபர் கீழே குதிப்பார் என்று கருதிகிறீர்களா?

மோடி: பந்தயம் கட்டுகிறேன். அவன் நிச்சயமாகக் குதிப்பான்.

ராஹுல்: அதற்கு நான் சம்மதம். அவன் நிச்சயமாகக் குதிக்க மாட்டான்.

இருவரும் பந்தயப் பணத்தை மேஜையில் வைத்தனர்.

ஆனால், அந்த நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான். 

இதைப் பார்த்து, ராஹுல் மிகவும் வருந்திய படி, பந்தியப் பணத்தை மோடியிடம் கொடுத்தார்.

மோடி: இந்தப் பந்தியப் பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரி இல்லை. ஏனென்றால், இந்தச் செய்தி முன்பே ஒளிபரப்பப்படும் போது கீழே குதிப்பதைப் பார்த்து விட்டேன்.

ராஹுல்: ஏன், நானும் தான் முன்பே பார்த்து விட்டேன். ஆனால், அந்த நபர் மீண்டும் கீழே குதித்துத் தற்கொலை செய்வார் என்று நான் நினைக்க வில்லை.

மோடி இதைக் கேட்டதும், ராஹுலின் பந்தயப் பணத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017