சரத் பவாரின் நிஜ முகம்

சரத் பவாரின் நிஜ முகம்




சரத் பவார் மோடியைக் குற்றம் சொல்வதில் நிபுணர். முதலில் பாலகோட் சர்ஜிகல் ஸ்ரைக்கைக் குறை சொன்னார். ஆனால் இப்போது திடீரென்று, மோடிக்கு ‘புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, நான் தான் பாலகோட்டில் சர்ஜிகல் ஸ்ரைக் நடத்தச் சொன்னேன்’ என்று ஒரே போடாகப் போட்டார். தேர்தலுக்காக – தன் குடும்பத்தினர் அதிலும் குறிப்பாக தமது அருமை மகள் மக்களவைத் தேர்தலில் ஜெயிப்பதற்காக அபாண்டமான பொய் சொல்கிறார் என்று சொன்னால் சிலர் இதை நம்ப மறுக்கலாம்.

ஆனால் சரத்பவார் பொய் சொல்வதில் நிபுணர் என்பதை அவரது முந்தைய செயல்பாடுகளின் மூலம் மிகவும் சுலபமாக நிரூபிக்க முடியும். மக்கள் பழையதை மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார். அந்த அவரது கணக்கு தப்பாகிவிடும் என்பது திண்ணம்.

பவார் காங்கிரஸ்காரராக இருந்தும் சோனியா பிரதமந்திரி ஆகக் கூடாது என்பதற்காகவே தேசிய முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் ஆரம்பித்தார். ஆனால், இதே பவார் சோனியாவைப் பிறகு ஏற்றுக் கொண்டு துதிபாடினார். அது ஒரு புறம் இருக்கட்டும்.

12-03-1993 அன்று பம்பாயில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் 12 இடங்களில் பாகிஸ்தான் முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரியாக இருந்தவர் இந்த பவாராகும். அந்தத் தாக்குதலில் 300 பேர்களுக்கு மேல் மடிந்தார்கள், 1400 பேர்களுக்கு மேல் காயமடைந்தார்கள்.

பவார் தூர்தர்ஷனுக்கு உடனே விரைந்தார். ’12 தீவிரவாதத் தாக்குதல் இல்லை. இன்னொன்றும் 13-வதாக நடந்துள்ளது. அது மஜ்ஜித் பந்தர் என்ற இடத்தில் நடந்துள்ளது’ என்று ஒரு பெரிய பொய்யைச் சொன்னார் அப்போதைய மதிப்பிற்குரிய முதல் மந்திரி.

எப்படி இதைப் பொய் என்று சொல்லலாம் என்று வாசகர்கள் கேட்கலாம். ஆனால், ‘நான் இந்தப் பொய்யை அப்போது சொல்ல வேண்டிய நிலையில் இருந்தேன். 12 தாக்குதலும் ஹிந்துக்கள் கூடும் இடங்களில் நடந்துள்ளதால், இனக் கலவரத்தைத் தவிர்ப்பதற்காக முஸ்லீம்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைப் பொய் சொல்லிப் பரப்பினேன்’ என்று 22 வருடங்களுக்குப் பிறகு பூனாவில் நடந்த 89-வது மராத்தி இலக்கிய கூட்டத்தில் ஒப்புக் கொண்டார்,

‘நான் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் முஸ்லீம் பகுதியில் நடந்ததாகப் பொய் சொன்னேன். ஏனென்றால், இந்துக்கள் தாக்குதால் இறந்த காரணத்தால், அவர்களின் கோபத்தைத் தணிக்கவும், மதக் கலவரத்தைத் தவிர்க்கவும் இந்தப் பொய்யைத் துணிந்து பரப்பினேன்’ என்று ஒப்புக் கொண்டார் இந்த பொய் சொல்லும் நிபுணர். இந்த அவரது பொய்யை ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் தன் செய்கையைப் பாராட்டியதாகப் பெருமையும் கொள்கிறார். இது தான் செகுலரிசம – இந்து விரோத – முஸ்லீம் ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் – அரசியல் தலைவர்கள்.

இந்தப் பொய்யரை நம்பி பம்பாய் மக்கள் இன்னமும் இருப்பது தான் ஜனநாயத்திற்கே இழுக்காகும்.

மக்களே! விழித்தெழுங்கள்! தூசி என இப்படிப்பட்ட பொய்யர்களையும், ஊழல் வாதிகளையும் தூக்கி எறியுங்கள். தேசம் அப்போது தான் தூய்மையாகும். பாரத மாதாவுக்குச் செய்யும் ஆராதனையாகவே இதை துணிந்து செய்யவும்.

பொறுத்தது போதும். பொங்கி எழவேண்டாம். தர்மத்தின் தலைவனாக நமக்குக் கிடைத்த மாணிக்கமான மோடியை நம்பி – எந்தவிதமான மாறுபட்ட சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்காமல் – ஆசீர்வதித்து தேசிய முற்போர்க்குக் கூட்டணிக்கு ஓட்டுப் போடுவோமாக. 

மீண்டும் மோடி வரவேண்டும். பாரத தேசம் இன்னும் வளம் பெற வேண்டும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017