ராஹுல் ஆங்கிலமும் – தங்கபாலுவின் தமிழ் மொழி பெயர்ப்பும்
ராஹுல் ஆங்கிலமும் – தங்கபாலுவின் தமிழ் மொழி பெயர்ப்பும்
பல
வருடங்களுக்கு முன்பு சென்னை மெரீனா கடற்கரையில் ராஹுலின் தாத்தா நேரு ஆங்கிலத்தில்
பேசியதை, செங்கல்வராயன் என்ற காங்கிரஸ் தலைவர் மொழி பெயர்த்தார். அதில் நேரு பேசியதை
மொழிபெயர்க்காமல் தன் இஷ்டத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தார். அதை ஹிந்து பத்திரிக்கை
மிகவும் கடுமையாக விமரிசனம் செய்தது. நேருவை மொழிபெயர்ப்பால் கொன்று விட்டார் என்ற
அளவில் கடுமை இருந்ததாக ஞாபகம்.
நாட்டின்
பிரதம மந்திரிக்குச் செய்யும் அவமரியாதை என்ற பாணியில் ஹிந்து விமரிசித்தது. நானும்
அந்தக் கூட்டத்திற்குச் சென்று, இந்த மொழி பெயர்ப்புக் கூத்தைப் பார்த்து வெட்கித்
தலை குனிந்தேன்.
இப்போது
தங்கபாலு ஒரு படி மேலே சென்று தன் மனதிற்குத் தோன்றியதை எல்லாம் மொழி பெயர்ப்பு – விழி
பெயர்ப்பு என்று அவர் ராஹுலை அப்படி முறைத்துப் பார்ப்பதை வைத்து ஊடக வாசிகள் பட்டம்
கொடுத்துள்ளனர் – என்ற வகையில் கேலிக்கூத்தாக ஆக்கி விட்டார்.
ஆனால், தங்கபாலுவோ ‘வார்த்தைக்கு
வார்த்தை மொழி பெயர்க்க வேண்டாம். என் மொழிபெயர்ப்பை தமிழ் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
பாராட்டி உள்ளார். மக்களும் இதை ஆரவாரித்து ஆதரித்துள்ளனர்’ என்று மார்தட்டுகிறார்.
இது
தான் காங்கிர்ஸ் கலாச்சாரம் என்று ஒதுக்கித் தள்ள வேண்டியது தான். ஆனால் இந்த தங்கபாலு
தமிழ் மொழிபெயர்ப்பு – நெடிசன்களை உசிப்பி விட்டு, பல மீம்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அதைப் படித்து, வயிறு குலுங்க சிரித்தவர்கள் பலர். அந்த நிகழ்ச்சியின் எதிரொலியில்
உதித்த சில வேடிக்கை வாசகங்கள் கீழே உங்கள் பார்வைக்கு.
உண்மையில்
தங்கபாலு மிகவும் அபத்தமாகவும், தவறாகவும், மொழிபெயர்ப்பை அறிந்து, தங்கபாலு இப்படித்தான்
மொழி பெயர்த்திருக்கக் கூடும் என்ற அதீதக் கற்பனையால் விளைந்த பதிவுகள். படித்து வயிறு
குலுங்கச் சிரித்து மகிழவும்.
ராஹுலின்
ஆங்கில வாசமும், தங்கபாலுவின் மொழிபெயர்ப்பும்
|
ராகுல் காந்தி: I respect
the people of tamil nadu.
தங்கபாலு: நரேந்திர மோடி தமிழக மக்களின் எதிரி. |
ராகுல்: Anil Ambani never made an aircraft
in his life.
தங்கபாலு: அனில் அம்பானி உண்மையைப் பேசுகிறவர் அல்ல.. |
ராஹுல்:
நான் தமிழக மக்களுக்கு மரியாதை தருகிறேன்.
தங்கபாலு: 'நரேந்திரமோடி தமிழகத்தின் எதிரி
|
ராஹுல்: உண்மை ஜெல்லும்
தங்கபாலு: 'உண்மை வெல்லும்
ஆனால் ராகுல்காந்தி மீண்டும் 'உண்மை ஜெல்லும்'
என்று கூற திருதிருவென முழித்த தங்கபாலு, 'உண்மை...நரேந்திரமோடி சிறையிலே இருப்பார்'
என்று மொழி பெயர்க்க இந்த பேச்சைக் கேட்டவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.
|
ராஹுல்: காஷ்மீர் மக்களுக்கான காப்பீட்டு திட்டம் முழுவதும் அனில் அம்பானியிடம் மோடி ஒப்படைத்து விட்டார்.
தங்கபாலு: , நம்முடைய இந்திய நாட்டுடைய முக்கியமான பகுதியாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் அனில் அம்பானி கையிலே ஒப்படைக்கப்பட்டு விட்டது
|
ராகுல்: அனில் அம்பானி விமானத்தை வாழ்நாளில் ஒருபோதும் தயாரித்தது இல்லை.
தங்கபாலு: அனில் அம்பானி எப்போது உண்மையை பேசுபவர் அல்ல
|
கே.எஸ். அழகிரி: மொழிபெயர்ப்பு என்பது வரிக்கு வரி அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒருவர் மற்ற மொழியில் சொல்கிற கருத்தை மக்களுக்கு புரியும்படி கூறினால் போதுமானது. அந்த வகையில் தங்கபாலுவின் மொழிபெயர்ப்பு மிகவும் உணர்ச்சிகராக இருந்தது.
Comments