ஹோலி பண்டிகை – 21-03-2019 - வியாழக்கிழமை
ஹோலி பண்டிகை – 21-03-2019 - வியாழக்கிழமை
இந்த ஹோலி பண்டிகை
இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் நாள் அன்று (20-03-2019) ஹோலிகா என்ற
பெயரில் பொது இடத்தில் நெருப்பு மூட்டி வழிபடுவார்கள். பிரஹலாதனை ஹோலிகா என்ற
அவனது தீய குணமுள்ள அத்தை நெருப்பில் இட்டுக் கொல்லப்பார்த்தும், விஷ்ணுவின்
அருளால் காப்பாற்றப்பட்டான். அதை நினைவு கொள்ளும் விதமாகத்தான் நெருப்பு மூட்டி
ஆடிப்பாடி பிரார்த்தனை செய்வார்கள். அதற்கு அடுத்த நாளில் பலவிதமான நிறப்
பொடிகளைத் தூவியும், அந்தப் பொடிகள் கலந்த கலர் நீரைப் பீச்சி அடித்தும்
மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
வாய்மை வாசகர்கள்
வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்க பகவான் மஹா விஷ்ணுவை வேண்டுகிறோம்.
Comments