ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள்
இந்தியாவின்
கோரிக்கையான ‘மசூத் ஆசாத்தை தீவிரவாதியாக பிரகடணப்படுத்தும் பிரஞ்சு கோரிக்கையை சீனா
நிராகரித்தது’ என்பது மோடி அரசிற்கு அயல்நாட்டுக் கொள்கைக்குக் கிடைத்த தோல்வி என்று
ராஹுல் கேலிசெய்கிறார்.
மேலும்,
இதற்கு, ‘முந்தைய வாஜ்பாய் அரசு இதே தீவிர வாதியை காந்தகார் விமானக் கடத்தலின் பயணிகளையும்,
சிப்பந்திகளையும் விடுவிக்க விடுதலை செய்தது தான் காரணம்’ என்றும் ராஹுல் குற்றச் சாட்டுகிறார்.
‘இது
உங்களுடைய தாத்தா நேரு இந்தியாவை ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக
யு.எஸ். முன் வந்த போது, அதை சீனாவுக்கு தாரை வார்த்ததின் விளைவு’ என்று பி.ஜே.பி.
பதிலுக்குக் குற்றம் சாட்டியது.
இதை
காங்கிரசின் சசி தரூர் தனது ‘நேரு – இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு’ என்ற தனது புத்தகத்தில்
‘இது நேருவின் நேர்மைக்கு ஒரு எடுத்துக் காட்டு’ என்ற அளவில் புகழ்ந்துள்ளார்.
நேரு
சமாதானத்தை விரும்பும் மனம் படைத்தவர். சீனாவை நம்பி, ‘சீனா இந்தியா பாய் பாய்’ என்றெல்லாம்
கோஷித்தாலும், சீனா இந்தியாவின் மீது படை எடுத்து, நேருவின் சமாதானப் புறாவை ஒரே அடியாகக்
கொன்று விட்டது.
அவரது
கொள்கையில் ‘ராணுவம் அவசிய மற்றது. இந்தியாவின் கொள்கை அஹிம்சை. ஆகையால் நம் நாட்டிற்கு
எந்தவிதமான ராணுவ பயமும் ஏற்பட வாய்ப்பில்லை’ என்பது முக்கிய அம்சமாக இருந்துள்ளது.
இந்தியா
சுதந்திரம் அடைந்த உடன் ‘இந்திய ராணுவத்தைப் பலப்படுத்தும் பாதுகாப்புக் கொள்கை என்ன?’
என்று கேட்ட ராணுவ தளபதியைப் பார்த்து ‘நீங்கள் இப்படிக் கேட்பது முழுமையான குப்பை!
ராணுவமே நாட்டிற்குத் தேவை இல்லை. போலீஸ் படையின் பாதுகாப்பே போதும்’ என்று எரிந்து
விழுந்துள்ளார் நேரு.
இந்த
மன நிலையில் இருக்கும் ராஹுல் பாகிஸ்தான் தீவிர வாதிகளை ஏவிவிட்டு நம் நாட்டின் மீது
எத்தனை முறை தாக்குதல் நடத்தினாலும், சமாதானப் பேச்சு நடத்தி, கையேந்தி நிற்க வேண்டும்
என்று நினைக்கிறார்.
தாத்தாவின்
மன நிலையில் மூழ்கி உள்ளார்.
பாகிஸ்தானை
மோடியைத் தேர்தலில் தோற்கடிக்க உதவ வேண்டிய காங்கிரசிடம் எந்தவிதமான தேசபக்தியையும்
காண முடியாது.
பாரத
தேச மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இனியும் ராஹுலின் பொய் பித்தலாட்டம் பலிக்காது.
Comments