ராஹுலின் குற்றச் சாட்டுகளுக்கு அனில் அம்பானியின் ஆணித்தரமான பதிலடியும்
ராஹுலின்
குற்றச் சாட்டுகளுக்கு அனில் அம்பானியின் ஆணித்தரமான பதிலடியும்
அனில்
அம்பானி இப்போது நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளார். அதைச் சமாளித்து வெளிவரவே மிகவும்
தவிக்கிறார். ஏனென்றால், மோடி அரசு எந்தவிதமான சலுகைகளையும் தனிப்பட்ட எந்த நிறுவனங்களுக்கும்
அளிப்பதில்லை. எல்லாம் சட்டம், விதி முறைகள், வெளிப்படைத் தன்மை ஆகியவைகளின் அடிப்படையில்
தான் செயல்படவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த இக்கெட்டான நிலையில் ராஹுல் அனில் அம்பானியை
ஒவ்வொரு கூட்டத்திலும் ‘மோடி 30000 கோடி உதவி செய்துள்ளார்’ என்று பொய்யாக எந்தவிதமான
ஆதரமும் இல்லாமல் சொல்லி வருகிறார். இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என்று கேட்டால்,
‘இல்லை. ஆனால், இது உண்மை’ என்று தன் சொற்களை மக்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
இந்த நிலையில் இப்போது அனில் அம்பானி ராஹுலின் குற்றச் சாட்டு அப்பட்டமான பொய் என்று
விளக்கி உள்ளார்.
சார்ந்த
ஒரு மனிதன் என்னை ஒவ்வொரு கூட்டத்திலும் குறைகூறுகிறார்.
நான்
சில கேள்விகளை அவரிடம் கேட்கப் போகிறேன். இவைகளை மீடியாக்கள் அவரிடம் கேட்பார்கள் என்று
எதிர்பார்க்கிறேன்.
1. எனது குடும்பம் இந்த நாட்டிற்கு ஒவ்வொரு
ஆண்டும் £ 50,000 கோடி அளவில் வரிசெலுத்துகிறது. மில்லியன் பேர்களுக்கு வேலை கொடுக்கிறது.
அதனால் மில்லியன் குடும்பங்கள் பிழைப்பு நடத்துகிறார்கள்.
உங்களது காந்திக் குடும்பம் இந்த தேசத்திற்கு
எவ்வளவு பணம் கொடுக்கிறது?
உங்கள் குடும்பத்தினர் பலர் வரி ஏய்ப்புச்
செய்த காரணங்களினால் பெயிலில் வெளியே உள்ளனர் என்று நான் கேள்விப்படுகிறேன். உங்களது
அம்மா இந்தியாவில் கொள்ளை அடித்த கோடிக்கணக்கான பணத்தினால், உலகத்தின் நான்காவது பணக்கார
பெண்மணியாகப் போய்விட்டார். அவர் செய்யும் தொழில் என்ன? என்பதைப் பற்றி நீங்கள் மக்களுக்குத்
தெரியப்படுத்தவும். இவ்வளவு பணத்தை உங்கள் அம்மா எப்படிச் சம்பாதித்தார் என்பதைச் சொல்லவும்.
இந்தப் பணம் எப்படி உங்கள் அம்மாவிடம் வந்தது? என்பதைச் சொல்லவும். எனக்கும் இதைச்
சொல்லவும்.
2. நாங்கள் 40 வருடங்களாக வங்கிகளிடம் கடன்
வாங்குகிறோம். கோடிக்கணக்கில் வரவு-செலவு செய்கிறோம். இதைப் போல் தான் ஒவ்வொரு தொழில்
அதிபர்களும், வியாபாரம் செய்யும் முதலாளிகளும் எங்களைப் போல் கடன் வாங்குகிறார்கள்.
உத்திரவாதப் பத்திரங்களில் கையெழுத்தும் போடுகிறார்கள்.
நாங்கள் கொடுக்கும் வட்டியினால் தான் வங்கிகள்
டெபாசிட்காரர்களுக்கு வட்டியினைக் கொடுக்க முடியும்.
ஆனால், அரசியல் தலைவர்களான நீங்கள், உங்கள்
தங்கையின் கணவர் எப்படி வட்டி இல்லாக் கடன்களை வங்கிகளிலிருந்து வாங்க முடிகிறது? அவர்கள்
செய்யும் தொழில்கள் என்ன? எந்த தேசத்தில் தொழில் செய்கிறார்கள்? எந்த தேசத்தில் கடன்
பெற்றனர்?
3. உங்கள் தங்கையின் கணவர் 15 வருடத்திற்கு
முன் ஒரு லட்சம் முதலீட்டில் தொழில் ஆரம்பித்தார். 10 வருடத்திற்குள் பல சொத்துக்களுக்கு
அதிபராக எப்படி முடிந்தது? இதற்கு எங்கிருந்து பணம் வந்தது? நீங்கள் லண்டனில் 2 பங்களா
மற்றும் 6 குடியிருப்பு வீடுகள் ஆகியவைகளை வாங்க பணம் எப்படி உங்களுக்குக் கிடைத்தது?
இந்த மூன்று கேள்விகளுக்குப் பிறகு இந்திய மக்களுக்கு
ஒரு செய்தியையும் பதிவு செய்கிறார் அனில் அம்பானி.
அதன்
விபரம் கீழே:
அன்புள்ள
இந்திய மக்களே!
இந்த
காந்திக் குடும்பம் ‘ஒரு அன்னிய ஏஜெண்ட் என்றும், இந்தக் குடும்பம் சார்ந்த அரசியல்
கட்சி ஒரு தேசிய சிந்தனை இல்லாத தேசத் துரோகமானவர்களை ஆதரிக்கும் ஒன்று’ என்று எனக்குத்
தெரியவந்ததும், நான் காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டேன்.
அதன்
பிறகு அவர்கள் என்னைக் குறை கூறுவதிலும், என்னைப் பழி வாங்குவதிலும் ஈடுபட்டார்கள்.
மன்மோஹன்
சிங்கின் அரசு டெல்லி ஏர்போர்ட் காண்ட்ராட் ரூபாய் 5000 கோடி மற்றும் மும்பை மெட்ரோ
காண்ட்ராக்ட் ரூபாய் 3900 கோடி ஆகியவைகளை ஏன் அரசாங்க பொது நிறுவனங்களுக்குக் கொடுக்க
வில்லை?
டெல்லியில்
மின்சார காண்ட்ராட் ரூபாய் 1200 கோடியை NTPC என்ற அரசாங்க பொதுத் துறைக்குக் கொடுக்காமல்
ஷீலா தீக்ஷித், என்னை சோனியா காந்தியை இதற்காகப் பார்க்கச் சொன்னது எதற்காக?
2004-லிருந்து
2014 வரை, காங்கிரஸ் அரசு என்னுடைய கம்பனிக்கு 8 தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை ரூபாய்
25,350/- கோடி அளவில் கொடுத்துள்ளது.
ஏன்
இவைகளை பொது அரசாங்க நிறுவனங்களுக்குக் கொடுக்க வில்லை?
அந்த
அரசாங்க நிறுவனங்களின் மேல் நம்பிக்கை இல்லாததனால் எனக்கு அளித்தார்களா?
இந்த
சில உண்மைகள் மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆகையால் தான் நான் இவைகளை மக்கள் முன்
வைக்கிறேன்.
இதை
அனைத்து மக்களுக்கும் தெரிய நீங்கள் பரப்புங்கள்.
நன்றி.
அனில்
அம்பானி.
ராஹுல்! இதற்கு
நீங்கள் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளீர்கள். “ராஹுல் சோர். ராஹுல் பொய்யர்” என்று
உங்களை மக்கள் ஒதுக்குவதற்கு முன் மக்கள் மன்றத்தில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
செய்வீர்களா?
செய்யாவிடில்,
மக்கள் ‘பொறுத்தது போதும், பொங்கி எழு’ என்ற நிலை வந்தால், அது சுனாமியாக மாறி, நீங்கள்
அதல பாதளத்திற்குத் தள்ளப்படுவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.
யாஹாவா ராயினும்
நா காக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல்
இழுக்குப் பட்டு – என்பது திருக்குறள்.
மேலும், பொய்
சொன்ன வாய்க்குப் போஜன் கிடையாது என்பது வேத வாக்கு.
உங்களுக்கு நா
காப்பதும், பொய் சொல்லாமல் இருப்பதும் இயலாதவைகளாகவே படுகிறது.
அவைகள் இரண்டும்
உங்கள் கூடப்பிறந்த பிறவிக் குணங்களாக இருக்கின்றன.
அரசியலில் இவைகள்
எப்போதும் உங்களைக் காப்பாற்றாது. முதலில் அவைகள் பதவிக்கு உதவினாலும், அவைகளே பதவியை
இழக்கவும் செய்து விடும்.
சுயப் பரிசோதனை
செய்து நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ளவும். அது தான் உங்களுக்கு நல்லது.
Comments