பண், அச்சு, காவடி
பண், அச்சு, காவடி பண், அச்சு, காவடி இந்த மூன்றையும் வள்ளுவர் தம் மூன்று குறட்பாக்களில் எவ்வாறு உபயோகிக்கிறார் என்பது தான் இச் சிறு கட்டுரையின் நோக்கம். முதலில் பண் என்ற பொருளைப் பார்ப்போம். பண் என்றால் இசையோடு அதாவது ராகத்தோடு பாடுவதாகும். அந்த இசைக்கு அழகூட்ட இசைக் கருவிகளும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பாடப்படும் பாடல்கள் காதுக்கு இனிமையாக சிறந்த சங்கீதமாக அமையும். அபபடி இல்லாமல் பண்ணானது பாடலுக்குப் பொருத்தமாக இருக்காவிட்டால், அதனால் சங்கீதமே கெட்டுவிடும். இந்த அவல நிலையை எடுத்துக் காட்ட 'கண்ணோட்டம் இல்லாத கண்' போல் அந்தச் சங்கீதம் இருக்கும் என்கிறார் வள்ளுவர். கண்களுக்கு அழகு கனிவு. அதாவது அன்பாக அருளுடன் கருணை உள்ளத்துடன் நோக்குதல். அதுதான் கண்ணோட்டம் என்று வள்ளுவர் குறிக்கிறார். பண் கண்ணோட்டத்திற்கும், கண்களை பாட்டிற்கும் உபமானமாக வள்ளுவர் தருகிறார். கோபத்தோடு ஒருவன் பார்ப்பானாகில், அது கண்களின் அழகையே கெடுத்து, அந்த மனிதனை கொடியவனாகத் தான் சிந்திரிக்கும். அவனை அண்டுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். கோபப்படும் பொழுது கண்கள் சிவப்பாகிவிடுவதை நாம் பார்க...