அக்னிபாத்
அக்னிபாத்தின் முக்கிய நோக்கம் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதில்லை. வேலை வாய்ப்பு ஏற்படுகிறது என்பதும் உண்மை தான். தேச பக்திக்கு ஒரு வாய்ப்பாக இளஞர்களை தயார் செய்வது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
வெறும் நவீன இயந்திர சக்தியால் மட்டும் ஒரு தேசத்தைக் காப்பாற்ற முடியாது. அந்த நவீன சாதனகளை போர்க்களத்திலே இயக்கும் திறமையான் தீரமான இளைஞர் படை நாட்டைப் பாதுகாக்க அவசியம் தேவை. அவைகளை திட்ட மிட்டுத்தான் உருவாக்க முடியும்.
தேசிய உணர்வோ அல்லது தேசியப்பற்றோ இல்லாத பல அரசியல் சத்துருக்கள் – காங்கிரஸ், இடது சாரி திராவிடம்
ஆம் ஆத்மி திருணமூல காங்கிரஸ் ஆகிய இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் புல்லுருவிகள் – இளைஞர்களை திசை திருப்பி, போராடத் தூண்டி விட்டு அவர்களின் எதிர்காலத்தை இருளாக்க முயல்கிறார்கள்.
மோடி எதிர்ப்பு, முஸ்லீம்களைத் தூண்டி குளிர்காய்வது என்பதில் அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால் இது வரை அவர்களால் மோடி என்ற தெய்வீக – தேசிய – ஆன்மீக – அறிவு – ஆக்க பூர்வமான தியாக புருஷரை எதிர்த்து வெற்றி காண முடியவில்லை.
சமீபத்தில் மூன்று வேளாண் திட்டத்தை எதிர்த்துப் போராடியது விவசாயிகளுக்கு நன்மையில்லை என்பதை விவசாயிகள் உணர்ந்து விட்டார்கள். அதே போல், உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவும் ஒருமித்த கருத்தாக – 3 வேளாண் திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்திருக்கக் கூடாது. ஏனென்றால், அது விவசாயிகளுக்குப் பயன் தரும் திட்டங்களாகும் – என்று தீர்க்கமாகத் தங்கள் அறிக்கையில் தெரிவித்து விட்டார்கள்.
‘எனக்கு 100 இளைஞர்களை தாருங்கள். உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்” என்று முழங்கிய வீரத் துறவி விவேகானந்தர் பாணியில், மோடி அரசு இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தில் 45 பேர்கள் தேர்வு செய்து பயிற்சி அளிப்பதாக இருக்கிறது. இதில் சேர பல இளைஞர்கள் முன் வந்திருப்பதால், இதற்கு எழுந்த எதிர்ப்பு அலை ‘புஸ்’வானமாகப் போய் விட்டது என்பது ஒரு நற் செய்தி.
மோடியை முழுமையாக நம்பும் கூட்டம் இப்போது பன் மடங்கு அதிகரித்து விட்டது. சமீபத்தில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் மோடி ஒரு பழங்குடி பெண்ணை நிறுத்தி எதிர்க்கட்சிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டார். ஒடிஸா பட்னாயிக் கட்சி அந்த வேட்பாளர் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தானே முதல் முதலாக முன் வந்து தமது ஆதரவை அளிக்க அறிக்கையே வெளியிட்டு விட்டார். அது மட்டுமா? ‘பிஜேபி எனக்கு எதிரிதான். ஆனால் அவர்களின் ஜனாதிபதி வேட்பாளருக்குத் தான் எங்கள் கட்சியின் ஓட்டு’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டார் மாயாவதி. மம்தாவின் கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்காதான் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளர். ஆனால் மம்தாவோ ‘எங்கள் கட்சியின் ஓட்டு அவருக்கு நஹி’ என்று சொல்லி விட்டார்.
மோடியை எதிர்த்தவர்கள் அனைவரும் தங்கள் மதிப்பையும், விலாசத்தையும் இழந்து வீட்டில் முடங்கும் நிலைதான் இன்றும் தொடர்ந்து நிகழ்கிறது. அதற்குக் காரணம் – அனைத்து மக்களுக்கும் நன்மை - அனைத்து மக்களுக்கும் முன்னேற்றம் – அனைத்து மக்களுக்கும் நீதி – என்ற உத்தமமான – போலி மதச் சார்பின்மையை புறம்தள்ளி பாரத தேசத்தை உலக அரங்கில் ஒளி மயமாக்கும் திட்டங்களை ஓட்டு வங்கியை ஓரங்கட்டி ஆட்சி செய்யும் மோடியை ஆதரிக்க முன் வந்திருக்கும் இந்திய மக்களைத்தான் நாம் பாராட்ட வேண்டும்.
வந்தே மாதரம் ! பாரத மாதாவுக்கு ஜே ! ஜெய் ஹிந்த் !
1. அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு
காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை
சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத
காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும்.
3. அக்னிபாத்
திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது
4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம்
சம்பளமும் வழங்கப்படும். ஆனால் இந்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாது.
4. இந்த சம்பளத்தில் 30%
பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய
அரசின் பங்களிப்புடன் (அதே 30% அளவிலான தொகை) பணி நிறைவின்
போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம்
வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.
5. மொத்தம் 45
ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில்
சேர்க்கப்படவுள்ளனர். பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25
சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
மீதமுள்ள 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து
வெளியேற்றப்படுவார்கள்.
6. பணிக்காலத்தில் வீர
மரணம் அடையும் அக்னிபாத் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய
காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும்.
7. பணியின் போது
அக்னிபாத் வீரர்கள் உடல் ஊனமுற்றால் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய முழு சேவை
நிதியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான
ஊதியமும் வழங்கப்படும். இதுதவிர, ஊனத்தின் தீவிரத்தை
பொறுத்து அவருக்கு ரூ.46 லட்சம் வரை வழங்கப்படும்.
8. இத்திட்டத்தில்
இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் அக்னி
வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை, உள்துறையில் 10
சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9. மேலும், இரு துணை ராணுவப் படைகளில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு வயது வரம்பு
சலுகையும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில்
அக்னிபத் வீரர்கள் துணை ராணுவப் படைகளில் சேர 3 ஆண்டுகள்
வயது வரம்பில் சலுகையும், முதன்முறையாக அக்னிபத் திட்டத்தில்
சேருவோருக்கு 5 ஆண்டுகள் சலுகையும் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
10. இத்திட்டத்தில்
இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் திறமை மிக்க
அக்னி வீரர்களுக்கு விமான போக்குவரத்து துறையிலும் பணி முன்னுரிமை வழங்கப்படும் என
விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் சேரும் வகையில் இத்திட்டம்
வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள் ‘அக்னி வீரர்கள்’
என்றழைக்கப்படுவர்.
Comments