கள்ளக்குறிச்சி கலவரத்தில் சக்தி பள்ளி சூரையாடல்

அரசாங்கப் பள்ளியைத் தவிர்த்துப் பலரும் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுவது ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதால் தான். ஆனால் தமிழ் நாடு அரசாங்கம்இரணடு திராவிடக் கட்சிகளில் எந்த கட்சி ஆரசாண்டாலும்அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியைத் தான் ஆதரிக்கிறது. இந்த முரண்பாடுபெற்றோர்கள் ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதும், ஆட்சியாளர்கள் தமிழ் வழிக்கல்வியை ஆதரிப்பதும்தமிழ் நாட்டின் கல்வியை ஒரு வியாபாரமாக உருவாக்கி விட்டது.

அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள்சீருடைகள்மதிய சத்துணவுத் திட்டம்எந்த பள்ளிக் கட்டணமும் இல்லாத நிலைஎன்று இப்படி பல சலுகைகள் இருப்பினும் பல பெற்றோர்கள் அப் பள்ளிகளை நாடுவதில்லை. தமிழ் வழிக் கல்வியால் வேலை வாய்ப்பு குறைவு என்று நினைப்பதால்அந்த நினைப்பு தவறு என்று சொல்ல முடியாதுதனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் சக்திக்கு மீறியும் சேர்த்து ‘’எங்கள் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு நாங்கள் எந்த தியாகத்திற்கும் தயார்என்ற மனநிலையில் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் வேலை செய்யும்  வேலைக்காரி தன் மகளைஇங்கிலீஷ் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதாகப் பெருமையுடன் சொல்வாள். ‘ஏன், அரசுப் பள்ளியில் படிக்க வைக்கக் கூடாதா?’ என்று கேட்டால், ‘ஐயே, அங்க படிச்சால் யார் வேலை கொடுப்பா?’ என்று எதிர்கேள்வி கேட்டு எங்களையே மடக்குவாள்.

அது மட்டுமா ? தமிழ் நாட்டில் அரசுப் பள்ளியில் அரசு பாடத்திட்டங்கள்ஆனால் தனியார் பள்ளிகளில் மெட்ரிக்சிபிஎஸ்இஐசிஎஸ்இபாடத்திட்டங்கள். தமிழ் நாடு அரசு பாடத் திட்டங்கள் மெட்ரிக் போன்ற பாடத்திட்டங்களைப் போல் இல்லாமல் சுலபமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவைகள் அகில இந்திய அளவில் வேலை நிமித்தம் நடத்தபடும் பல தேர்வு பரிட்சைகள் மெட்ரிக் போன்ற கல்வித் திடங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுவதால் அரசுப் பள்ளி மாணவர்களால் தேர்வாக முடிவதில்லை என்றும் சொல்லப்படுவதால் பெற்றோர்கள் தனியார் கல்வியை தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்த கள்ளக் குறிச்சி கலவரத்திற்கு ஏன் இந்த முன்னுரை?’ என்ற சந்தேகம் வாசகர் பலர் மனத்தில் எழக்கூடும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பில் படிப்பவரான 17 வயது மாணவி ஸ்ரீமதி ஜூலை 1-ம் தேதிதான் அந்த சக்தி ஸ்கூல் ஹாஸ்டலில் சேர்ந்துள்ளார். ஆனால் அந்த 12 நாட்களுக்குள்ளேயே பள்ளியின் ஆசிரியர்கள் ஸ்ரீமதியை படிபடி என்று மன அழுத்தம் தரும் அளவில் திட்டியதால் அந்த மாணவி ஹாஸ்டலின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவருகிறது.

தனியார் பள்ளிகளில் அதுவும் 12 வகுப்பு மாணவமாணவிகள் அனைவரும் தேர்வாக வேண்டும் என்ற பள்ளி நிர்வாகத்தின் நிர்பந்தத்தால் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் வகுப்பு குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்பாக இருக்க பல நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில் உள்ளார்கள் என்பது உண்மை.

மாணவி ஸ்ரீமதி தான் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதிவைத்திருந்தது அவரது பள்ளிப் பையைச் சோதனை செய்த போது கிடைத்துள்ளது

அந்த கடிதம் இதோ











'' நா நல்லாத்தான் படிப்பேன்... வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடு (equation) இருக்கு.. என்னால அந்த equation படிக்கவே வரல...அதனால் வேதியியல் டீச்சர் ரொம்ப ப்ரெஷர் பண்றாங்க... நா படிக்க மாற்றேனு கணக்கு டீச்சர் கிட்டயும் சொல்லிட்டாங்க... அவங்களும் என்ன ப்ரெஷர் பண்றாங்க...

 

''ஹாஸ்டல்ல படிக்காம என்ன பண்றேன்னு கேட்டு ரொம்ப திட்டிட்டாங்க... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... நா படிக்க மாற்றேனு இவங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தவங்க எல்லா staff கிட்டயும் சொல்லிருக்காங்க... இன்னக்கி காலைல வகுப்புக்கு வந்த staff என்ன பாத்து நீ படிக்கவே மாற்றியாமே, விளையாட்டு தனமா இருக்கியாமேனு கேக்குறாங்க... கணக்கு டீச்சரும், கெமிஸ்ட்ரி டீச்சரும் என்ன ரொம்ப ப்ரெஷர் பண்றாங்க... என்னால முடியல...''


''
கணக்கு டீச்சர் என்ன மட்டுமல்ல இங்க இருக்க எல்லாரையுமே டார்ச்சர் பண்றாங்க... சாந்தி மேடம் நான் உங்ககிட்ட ஒரே ஒரு உதவி கேக்குற.. நான் இந்த வருஷம் கட்டுன ஸ்கூல் பீஸ் எங்க அம்மாகிட்ட திருப்பி கொடுத்துடுங்க.... புக் பீஸ், ஹாஸ்டல் பீஸையும் கொடுத்துடுங்க... ஏன்னா, நான் இனி இருக்கறது கொஞ்ச நாள்தான்... ப்ளீஸ் மேடம்...


சாரி அம்மா.. சாரி அப்பா மற்றும் தம்பியிடம் சாரி''

இந்த ஸ்ரீமதியின் கடித்த்திலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன:



1. ஸ்ரீமதியை அவள் விருப்பத்திற்கு மாறாக ஹாஸ்டலில் அவரின் பெற்றோர்கள் சேர்த்து விட்டிருக்கிறார்கள்

2. மெட்ரிக் சிலபஸ் ஸ்ரீமதிக்கு மிகவும் கடினமாகத் தெரிகிறது. அதை அவர் தமது கடிதத்தில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

3. ஸ்ரீமதியை ஹாஸ்டலில் இருந்தும் ஏன், நன்றாகப் படிக்க மாட்டேன் என்கிறாய்?’ என்று ஆசிரியர்கள் குறிப்பாக கணக்கு கெமிஸ்ரி ஆசிரியர்கள் மன அழுத்தம் வரும்படி சொல்லி இருக்கிறார்கள். (ஸ்ரீமதி ஹாஸ்டலில் 12 நாட்களே தங்கி இருந்த்துள்ளார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்) அதற்கு ஆசிரியர்களைக் குறை சொல்லும் அதே நேரத்தில், ஸ்ரீமதியின் விருப்பத்திற்கு மாறாக அவளை ஹாஸ்டலில் வலுக்கட்டாயமாக சேர்த்த அவளது பெற்றோர்களும் குற்றவாளிகளே என்று சொல்லத் தோன்றுகிறது. ஏன், ஸ்ரீமதியின் அறிவுக்கு மீறிய மெட்ரிக் சிலபஸில் படிக்க வைத்ததும் மஹா தவறு என்பதை அவளது பெற்றோர்கள் கணிக்கத் தவறி விட்டதும் ஒரு பெரும் குற்றம் தான் என்பது இதிலிருந்து ஊர்ஜிதம் ஆகிறது.  

இவைகள் ஒருபுறம் இருக்க அங்கு நடந்த வன்முறை மிகவும் கண்டிக்கத் தக்கது.

தூத்துக்குடியில் நடந்த வன்முறை ஸ்ரெல்லைட் ஆலை மூடல் போராட்டம் அதிமுக ஆட்சியில் நடந்த ஒன்று. அதில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆனால் இந்த வன்முறையை திமுக கண்டிக்காமல் அரசைத் தான் குற்றம் சொன்னது.

அது மட்டுமல்ல. வன்முறையைக் கண்டித்த சூப்பர் ஸ்டார் ரஜிகாந்தைக் கேலியும், கிண்டலும் செய்தது திமுக இளவல் உதயநிதி ஸ்டாலின் மூலமாக.





ஆனால் இப்போது விடியல் அரசுவன்முறை பிரச்சனைக்குத் தீர்வாகாதுஎன்று எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்கும் உபதேசம் செய்கிறது.

மாணவியின் இறப்புக்கு நீதி வேண்டும் என கோரி மாணவியின் பெயர், புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. ட்விட்டர் வலைதளத்தில் மாணவியின் பெயரில் ஹேஷ்டேக் பரப்பப்பட்டன. அதேவேளையில், வாட்ஸ் அப் வழியாக உள்ளூர் அளவில் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாபெரும் போரட்டம் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைய தொடங்கியது.  மாணவி படித்த பள்ளி தொடர்பாக ஏற்கனவே சில விரும்பதகாத கருத்துகள் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

இந்நிலையில், ஜூலை 17ம் தேதி வழக்கம்போல் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஏராளமானோர் பள்ளி இருக்கும் பகுதியில் குவியத் தொடங்கினர். காலை 9 மணிக்கெல்லாம் பல நூறு பேர் அப்பகுதியில் குவியத் தொடங்கினர். திடீரென சிலர் பள்ளியின் நுழைவு வாயிலில் இருந்த சுவற்றில் ஏறினார்கள். அவர்களைபோலீசார் கட்டுப்படுத்த முயன்றபோது, தடுப்புகளை மீறி பள்ளிக்குள் நுழைந்தனர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.

இதனிடையே பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்களில் சிலர் தங்கள் கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்த கலவரக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த மேசை, ஃபேன் போன்றவற்றை  சேதப்படுத்தியதோடு எடுத்து சென்றனர். சான்றிதழ்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்ததாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் டிராக்டர் வைத்து பஸ்கள் துவம்சம் செய்யப்பட்டதும் நடந்தேறி உள்ளது.

இந்த அளவு மக்கள் கூடுவார்கள் என்பதை போலீசாரும், உளவுத்துறையும் கணிக்க தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் தீவிரமடைந்து அதிகளவில் மக்கள் குவிந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்த சில மணி நேரங்களில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 330 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் மேற்பார்வையில் இந்த வன்முறைச் சம்பவம் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன் முறையில் போராட்டக்கார்ர்கள் போலீஸ்காரர்களின் மீது கற்களை வீசிக் காயப்படுத்தி உள்ளனர். அப்படி காயம் அடைந்தவர்கள் சுமார் 50-க்கும் மேல் என்று சொல்கிறார்கள். இதிலிருந்தே சட்டம் ஒழுங்கு விடியல் அரசில் கெட்டு விட்ட்து என்று கணிக்கலாம். விடியல் அரசு என்று அரசு கட்டிலில் அமர்ந்தவர்கள்இருள் அரசுஏற்படுத்தத் தான் விழைகிறார்கள் என்று தெரிகிறது.

தமிழ் நாடு கலவர பூமி என்ற அவப்பெயரை திமுகஅதிமுக அரசுகள் ஏற்படுத்தியதை அவர்கள் ஆட்சியில் நடந்த பல வன் முறைச் சம்பவங்கள் சுட்டிக் காட்டும்.

ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கில் தண்டிக்கப்பட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் தர்மபுரிஇலகியம்பட்டியில் 2-02-200 அன்று பஸ் எரிக்கப்பட்டு தமிழ்நாடு கோயம்புத்தூரில் வேளாண் யுனிவர்சிடி படிக்கும் மூன்று மாணவிகள் உயிரோடு இறந்தார்கள். அதே மாதிரி ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் வன்முறையாக திமுக மாற்றியது. அதே போல் திமுக தூத்துக்குடி ஸ்ரெல்ரைட் ஆலை போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியது.

இந்த வகையில் தமிழ் நாடு காமராஜ் ஆட்சிக்குப் பிறகு திராவிட இயக்கக் கட்சிகளால் தமிழும் பாழ்தமிழ் நாடும் பாழ் என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. அன்றே பக்தவத்ஸலம்திராவிட விஷக்கிருமிகள் தமிழ் நாட்டில் ஆட்சி செய்யப் போகிறதுஎன்று வேத வாக்கான கூற்று  நிதர்சனமாகி விட்டது. பக்தவஸ்தலத்தைபத்து லட்சம்என்று வீண் பழி சுமத்திஅடுக்கு மொழிப் பழிஅப்பட்டமான பொய்மக்களை நம்ப வைத்து, பத்து லட்சம் கோடி அளவில் ஊழல் ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகளால் தமிழ் நாட்டில் ஊழலற்றசட்டம் ஒழுங்குள்ளஅமைதியானஆன்மீகமானஅருளானஆட்சியினைக் அளிக்க முடியாது.

அதை அண்ணாமலையார் அருள் பெற்ற கே. அண்ணாமலை தான் அளிக்க வேண்டும்.

அதுதான் விடியல்மக்கள் விழித்து விட்டார்கள்இனி தமிழ் நாடும் எழிச்சிபெற்று தூயமையான ஆட்சிக்கு வழி வகுக்கும் நேரம் நெருங்கி விட்டது.

ஓரணியில் ஒன்று படுவோம். இனி வன்முறை தலைதூக்காமல் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட ஓட்டுப் போடுவோம்.

இலவசம் இனி வேண்டாம். இல்லம் சிறக்க உழைப்பை நம்பி உயர்வோம்.

சீனப் பழமொழி ஒன்று உண்டு: “ஓருவனுக்கு மீனைக் கொடுத்தால், அடுத்த நாள் அவன் பசிக்கு வழியில்லை. ஆனால், அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால், வாழ்நாள் பூராவும் பசி இன்றி வாழ்வான்

பசி இன்றிபண்போடுசுய கெளரவத்தோடு வாழஒரே வழி தீய திராவிடத்தைத் தவிர்த்து, பரந்த பாரத சிந்தனையை தமிழ் நாட்டில் வேரூன்றச் செய்வது தான் ஒரே வழி.

கள்ளக் குறிச்சி போன்ற வன்முறைக்கு தமிழ் நாட்டில் சமாதி கட்டும் நாள் திராவிடக் கட்சிகளை ஓட்டால் ஓட விரட்டும் நாளாகும்.

பாரதியின் கனவான – “வேதம் நிறைந்த தமிழ் நாடுஉயர் வீரம் செறிந்த தமிழ் நாடு” – என்ற வீரம் தர்மத்துடன் இணைந்து செயல்படும் போது, சட்டம் ஒழுங்கு தானாகவே செயல்படும் நிலை உண்டாகும்.

ஜெய் ! பாரதம் ! ஜெய் ! தமிழ் நாடு



 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017