குரு பூர்ணிமா – 13 – 07 – 2022 – புதன் கிழமை

வேத வியாசர் ஆஷாட என்ற ஆடி மாதத்தின் பெளர்ணமி நாளில் அவதரித்தார். இந்த வருடம் அந்த புனித நாள் 13-ம் தேதி ஜூலை அன்று வருகிறது. 

வேதங்களை நான்காகப் பிரித்து, அந்த நான்கு வேதங்களை – தமது நான்கு சீடர்களுக்கு போதித்தார். ருக் வேதத்தை வைசாம்பாயனர், எஜுர் வேதத்தை சுமந்துமுனி, சாம வேதத்தை பையல், அதர்வன வேதத்தை ஜைமின் ஆகிய தமது சீடர்களுக்கு முறையே போதித்து ஆசி வழங்கினார். 

அதன் பிறகு 18 புராணங்களை இயற்றி அவைகளை ஐந்தாவது வேதமாக வியாசர் ஆக்கினார். அந்த ஐந்தாவது வேதமான புராணங்களை தமது சீடர் ரோமா ஹர்ஷனுக்கு போதித்து அருள் வழங்கினார். 

அத்துடன் பிரம்ம சூத்திரம், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் என்று சனாதன தர்மத்தைப் போதிக்கும் புனித நூல்களை இயற்றி உலக குருவாக உருவானார். 

இதனால் தான் வேத வியாசர் பிறந்த தினம் குரு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாத பெளர்ணமியில் வியாசர் பிறந்ததால் அந்த நாள் குரு பூர்ணிமாவாக ஹிந்துக்களால் கொண்டாடப்படுகிறது. 

அந்த நாளில் கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர், ஆதி சங்கரர், ராமாநுஜர், மத்வார்சாரியார் என்று குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும் பூஜித்து அவர்கள் அருளைப் பெறுவர். அத்துடன் கல்வி அளித்த ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து, வணங்கி அவர்கள் ஆசிகளைப் பெறுவதும் இந்த நன் நாளில் நிகழும். 

குரு எனும் வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "இருளை அகற்றுபவர்" என்று பொருள். 

குரு வந்தனம் நமது பல வகையான இருளைப் போக்கி, ஞானம், பக்தி, புத்தி, சக்தி, மனத்தூய்மை ஆகிய ஒளி காப்பாக வாழ்நாள் முழுவதும் வழிகாட்டித் துணைவனாக உதவும்.  

குரு வந்தனம் கோடிப் புண்ணியம்.


 

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017