பாரதி நினைவுகள்

மஹாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்தது 1882- ம் வருடம் டிசம்பர் மாதம் 11- ம் தேதி அன்று எட்டயபுரத்தில். அவர் தம் பூத உ டலை நீத்தது சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப்பெருமாள் கோயில் வீட்டில் 1921- ம் வருடம் செப்டம்பர் மாதம் 12- ம் தேதி அதிகாலை 1 மணிக்கு. ஆகையால் அந்த உ ன்னதப் புனிதரை நினைவு கூறும் விதத்தான் சில நினைவுச் சிதறல்கள் உ ங்கள் பார்வைக்குச் சமர்ப்பித்து , வாய்மை தன் அஞ்சலியைத் செலுத்துகிறது. v காந்திமதி நாத பிள்ளையும் , பாரதியும் ஒரே பாடசாலையில் படிப்பவர்கள். ஆனால் பாரதியை எப்படியாவது மட்டம் தட்டவேண்டும் என்பது பிள்ளையின் அபிலாஷை. பாரதி எதேச்சை ¨ யாக பிள்ளையின் வீட்டிற்கு வந்த பொழுது பலர் பிள்ளையுடன் இருந்தனர். பாரதியை பலர் முன்னிலையில் மடக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த பிள்ளை , ' பாரதி சின்னப் பயல் ' என்ற அடியைக் கொடுத்து , அதை வைத்து ஒரு வெண்பா ஒன்றைப் பாடும்படிச் சொன்னார். ' ஆண்டில் இளையவனென் றந்தோ , அகந்தையினால் ஈண்டிங் கிகழ்ந்தென்ன ஏளனஞ்செய் - மாண்பற்ற காரிருள் போலுள்ளத்தான் காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல் ' என்ற வெண்பாவைப் பாரதி...