ஒரு கைப்பிடி அரிசி
ஆதி சங்கரர் சந்நியாசி. சுகம், துக்கம் ஆகியவைகளை கடந்த ஞானி. ஆனால் அப்படிப்பட்ட அத்வைத போதகர் தன் தாயாரின் அந்திம நேரத்தில் -"என்னைப் பெற்ற தாயே! தாயாகிய உனக்கு மகனாக நான் செய்ய வேண்டிய கடமைகளை ஆற்ற வில்லையே! தாயே! என்னை மன்னித்து அருள வேண்டும். உனக்கு இந்த அந்திம நேரத்தில் உயிர் போனபின் நான் இடும் இந்த ஒரு கைப்பிடி அரிசி ஒன்று தான் எனது கைமாறு' - என்று கதறி அழுகிறார்.
தாயாரின் உயரிய ஸ்தானத்தை இதை விட அழுத்தமாகவும், ஆத்மார்த்தமாகவும் சொல்ல முடியாது. இதைப் படிக்கும் போதெல்லாம் என் கண்கள் பனிப்பதை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது.
ஜெய ஜெய சங்கர ! ஹர ஹர சங்கர.
Comments