மாணிக்க வாசகரின் குருபூஜை – ஜூலை 13, 2021


 

சைவச் சமயக்குரவர்களில் முதன்மையானவர்கள் நால்வர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர். அதில் மாணிக்க வாசகர் சிறப்புப் பெற்றவர்.

மாணிக்க வாசகருக்குக் காலைக் கொடுத்தார், திருநாவுக்கரசுக்கு சூலை கொடுத்தார், திருஞான சம்பந்தருக்கு. பாலைக் கொடுத்தார், சுந்தரருக்கு ஓலை கொடுத்தார் என்பார் வாரியார் சுவாமிகள்.

இதில் சிவன் திருப்பெருந்துறையில் பரிவாங்க வந்த திருவாதவூரரான அமைச்சரை ஆட்கொண்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்து, தம் திருவடிகளை அவர் திருமுடிமேல் வைத்து திருவடி தீட்சை அருளினதால், காலைக் கொடுத்த ஈசன், திருவாதவூராரை திருவாசகப் பதிகம் பாட அருளி, மாணிக்கவாசகன் என்று நாமம் சூட்டி ஆசிவழங்கினார்.

நமச்சிவாய வாழ்க .. நாதன் தாள் வாழ்கஎன்று தொடங்கும் திருவாசகத்தை ஏட்டில் எழுதி, ‘மாணிக்க வாசகன் சொல்லப் பொன்னம்பலவன் எழுதியதுஎன்று தில்லை நடராஜரே வேதியராக வந்து திருவாசகத்தை அங்கீரத்த பெருமை மாணிக்க வாசகரைச் சேரும்.

திருவாசகத்தின் பொருள் என்ன? என்று வினாவிய தில்லை வாழ் அந்தணர்களை, தில்லை அம்பலத்துக்கு மாணிக்க வாசகர் அழைத்துச் சென்றார்.

தில்லை நடராஜர் சன்னதியை அடைந்தவுடன் மாணிக்க வாசகர்என் பாடல்களின் பொருள் அம்பலவானரேஎன்று கூறியபடியே அம்பலத்தில் ஐக்கியமாகி விட்டார்.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்என்பர் தமிழறிஞ்ஞர்கள்.

மாணிக்க வாசகரின் தாள் வணங்கி சிவனடியாரில் சிறந்தவரான மாணிக்கவாசகரின் அருள் வேண்டிப் பெறுவோமாக.

தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017