கழகம் கரையும், தேசியம் கமழும், தெய்வீகம் கரைசேர்க்கும்
(ஆதாரம்: துக்ளக்
7-7-201 பத்திரிகையின் ‘மறைமுகமான பிரிவினை வாதம்’
என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மற்ற பல
கருத்துக்கள் ஆசிரியருடையது.)
ஆங்கில மூல அரசியல் சாசனம்:
https://legislative.gov.in/sites/default/files/COI_1.pdf
தமிழ் மொழிபெயர்ப்பு அரசியல் சாசனம் – தமிழக அரசு வெளியீடு – 2009:
https://legislative.gov.in/sites/default/files/part1.pdf
திமுக வெற்றி
பெற்றதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘மக்கள்
நலனில் மாநில அரசுகள் இணைந்து நிற்கும் என்று நம்புகிறேன்’ என்ற வாழ்த்திற்கு
முதல் அமைச்சர் ஸ்டாலின் ‘கூட்டாட்சித் தத்துவத்தின்
அடிப்படையில் ஒன்றிய அரசுடன் தமிழக அரசு இணைந்து செயல்படும்’ என்று பதில்
அளித்தார்.
ஜூன் 23-ல் கூடிய சட்டசபையில் பிஜேபி உறுப்பினர் நாயினார் நாகேந்திரன்,
‘எந்த நோக்கத்தில் ஒன்றியம் என்ற சொல்
பயன்படுத்தப்படுகிறது’ என்ற கேள்விக்கு ஸ்டாலின் விளக்கம்:
“மத்திய அரசு
ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு எனக் கூறுவது சமூகக் குற்றமல்ல. அரசியல் சட்டத்தில் என்ன
சொல்லி இருக்கிறதோ, அதைத் தான் சொல்கிறோம். மாநிலங்கள்
ஒன்று சேர்ந்தது தான் ஒன்றியம். இது தவறானது அல்ல. ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட
கூட்டாட்சி அடங்கியுள்ளது. எனவே ஒன்றியம் என்ற வார்த்தையப் பயன்படுத்தினோம்.
பயன்படுத்துவோம். பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.”
மாநிலத்தில்
சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி – என்பது இதனால்
அடிபட்டுப் போகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
ஃபெடரல் என்றால்
கூட்டாட்சி – இந்தச் சொல்லே அரசியல் சாசனத்தில் எங்கும் பயன்படுத்தப் படவில்லை.
அரசியல் அமைப்பு
என்பது முதலில் பாராளுமன்றம், குடியாசு தலைவர், மத்திய அரசு, பிரதம மந்திரி நியமனம் ஆகியவகைகளைத்
தொடர்ந்து, மத்திய அரசின் கீழ் உள்ள நிர்வாக
பகுதிகளாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
அரசியல் அமைப்பு
பகுதி 1, ஷரத்து 3 –ல்
மாநில எல்லை, மாநிலைப் பெயர் ஆகியவைகளை குறித்த
அதிகாரம் பாராளுமன்றத்திற்குத்தான் உண்டு என்கிறது. .
பகுதி 22,
ஷரத்து 394 (A) (2) –ன் படி ‘அதிகாரபூர்வ அரசியலமைப்பு
சட்டத்தில் உள்ள சொற்களின் அர்த்தங்கள், மூல
அரசியலமைப்புச் சட்ட்த்தில் உள்ள அர்த்தங்களைப் போலவே இருக்க வேண்டும்.
வித்தியாசம் வரும் பட்சத்தில் குடியரசுத் தலைவர், அதைப்
பொருத்தமாகத் திருத்தி அமைப்பார்’
என்கிறது.
ஆகையால் அதிகார
மூல அரசியலைப்புச் சட்டம் என்பது ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஹிந்தி
மொழிபெயர்ப்பு ஆகிய இரண்டு தான்.
மத்திய அரசை
எல்லா மாநிலங்களிலும், எல்லா மொழிகளிலும் ‘மத்திய அரசு
(கேந்திரிய சர்க்கார்) என்று தான் சொல்லப்பட்டுள்ளன.
ஸ்டாலினின்
ஒற்றிய அரசு என்ற சொல்லாடல் காங்கிரசுக்கோ, அதிமுகவுக்கோ
ஏற்புடையதாக இல்லை.
தமிழக அரசு 2009-ம் ஆண்டு, தமிழ் வடிவ அரசியல் சாசனத்தில் ‘யூனியன்’ என்ற சொல் ‘ஒன்றியம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
( https://legislative.gov.in/sites/default/files/part1.pdf
)
இந்த மொழி
பெயர்ப்பு 2009 ஆண்டு கருணாநிதி அரசு ஆட்சியில்
இருந்த போது வெளியிடப்பட்டது.
யூனியனை
ஒன்றியம் என்பதால் இந்திய அரசையும் ஒன்றிய அரசு என்று திமுக சொல்கிறது. இதன் மூலம்
மாநிலங்களால் உருவான அரசு தான் மத்திய அரசு என்பது திமுகவின் கருத்தாகப் படுகிறது. ஆகையால் தான் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று திமுக வாதம் செய்கிறது. .
India that is Bharat shall be a
union of states – என்ற அரசியல் சாசன ஆங்கில வாசகம்
‘இந்தியா எனும் பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம்’ என்று தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மாநிலங்களை ஒருங்கிணைத்து
– மாநிலங்களின் உத்தரவுக்கோ, கருத்துக்கோ, ஒப்புதலுக்கோ
வழிவகுக்காமல் உருவானது இந்தியா என்பதால் மாநிலங்கள் ஒன்று சேர்ந்து – அதாவது
ஒன்றி – உருவானது என்று பொருள்படும் சொல்லான ஒன்றியம் தவறான மொழிபெயர்ப்பு என்பதை
முதலில் சுட்டிக் காட்ட வேண்டும்.
சுதந்திரமடைந்த
பாரதம் மூன்று பகுதிகளாக இருந்தது.
1. மதராஸ் உட்பட 17 மாகாணங்கள் கொண்ட பிரிட்டிஷ் இந்தியா.
2. 565
சமஸ்தானங்கள்.
3. போர்ச்சுகல்
கோவா, பிரான்ஸ் புதுச்சேரி என்ற பிரிட்டிஷ் அல்லாத
அந்நியர் ஆளும் பிரதேசங்கள்,
மாகாணங்கள் –
சமஸ்தானகள் ஒருங்கிணைத்து இந்தியா உருவெடுத்தது. போர்ச்சுகல் கோவா, பிரான்ஸ் புதுச்சேரி பிறகு இந்தியாவுடன் இணைந்தது. ஆகையால்
மாநிலங்களை ஒன்று சேர்த்து இந்தியா உருவானது – மாநிலங்கள் இந்தியாவை
உருவாக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகையால் மேலே
உள்ள ஆங்கில வாக்கியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘பாரதம் என்று அழைக்கப்படும்
இந்தியா பல மாநிலங்களைக் கொண்டு உருவானது.’ என்று இருக்க வேண்டும். இங்கு மாநிலம்
என்றால் அது பூகோள ரீதியில் இடப்பரப்பைக் குறிக்குமே அல்லாது மாநில அரசைக்
குறிக்காது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி என்றால்
இந்திய யூனியன் என்றால் என்ன?
அதற்கான பதில்
அரசியல் சாசனம் பகுதி V – ஷரத்துக்கள் 52 –லிருந்து
151 வரை – 100-க்கும்
அதிகமான வெகு நீண்ட ஷரத்துக்கள் – ஆகியவைகளில் காணலாம். அதாவது இந்திய யூனியன்
என்பது ஒரு குறிப்பிட்ட தனி அமைப்பல்ல. அது பல அதிகார வர்க்கங்கங்களையும் உள்ளடைக்கிய இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் அதிகார
மையமாகும். அதாவது ஜனாதிபதியிலிருந்து நாடாளுமன்றம், மந்திரிசபை,
நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ராணுவம்
போன்ற அதிகார கேந்திரங்களையும் உள்ளடைக்கிய பாரத இறையாண்மையின் பாதுகாவலர்களைக்
கொண்டதாகும் இந்திய யூனியன். ஆகையால் அரசியல் சாசனப்படி இந்திய யூனியன் என்பது
இந்திய அரசோ அல்லது மத்திய அரசோ அல்ல.
யூனியன் தான்
மாநிலங்களை உருவாக்கின. மாநிலங்கள் யூனியனை உருவாக்கவில்லை என்பது தெளிவு.
இந்திய அரசும்,
இந்திய யூனியனும் ஒன்றல்ல. அரசியல் சாசனம் மத்திய அரசை, இந்திய அரசு (Government of India) என்று இந்திய யூனியனில் இருந்து பிரித்து, தனித்துக்
கூறுகிறது.
இந்திய அரசு
என்ற பதம் அரசியல் சாசனத்தில் 52 முறை இடம்பெறுகிறது.
யூனியன்
அமைச்சருக்கு மாநில அரசிடம் ஆதிக்கம் செய்யும் அதிகாரமும் அரசியல் சாசனத்தில்
உண்டு.
இறுதியாக
யூனியன் என்பது இந்திய தேசத்தின் தேசிய சிந்தனையான தேசியத்தை – இறையாண்மையையே
வலியுறுத்துகிறது. ஆனால் ஒன்றியம் என்பது இறையாண்மையையே தாக்கும் சொல்லாடலாகவே –
அதாவது குறுகிய பிரிவினைவாத தேசத் துரோக விஷ வித்துக்களை விதைக்கும் எண்ணம் கொண்டு
இப்போதையை திமுக திட்டமிட்டே ஒன்றியம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதாக அஞ்சவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
மொழியாக்கம்
செய்த ஸ்டாலினின் தந்தை கருணாநிதி கூட மத்தியஅரசை ஊராட்சி ஒன்றியம் என்று
கொச்சைப்படுத்தவில்லை. மத்தியில் கூட்டாட்சி, மாநில
சுயாட்சி – என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கவே கருணாநிதி விரும்பி அதில்
வெற்றியும் கண்டார். ஆகையால் இந்த தவிர்க்கப்பட வேண்டிய பிரச்சனையை ஸ்டானின் ஒரு
முடிவுக்கு அதி சீக்கிரம் கொண்டு வந்தால் அது தமிழ் நாட்டுக்கும், அவரது அரசுக்கும் நலம்.
சென்னை மாகாணமாக
இருந்ததை மொழியின் அடிப்படையில் மாகாணத்தைப் பிரிக்கும் போது சென்னை மாகாணத்தை
தமிழ் மாநிலம் அல்லது தமிழ் மண்டலம் என்று பெயர் சூட்டி இருக்க வேண்டும். நாடு
என்ற சொல் பாரத தேச தேசிய இறையாண்மைச் சிந்தனைக்கு ஏற்புடையது அல்ல. ஆனால்
அப்போதையை நிலைப்பாட்டில், சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என்று
பெயரிட்டு தேசிய சிந்தனையை பிறகு ஆட்சி செய்த திராவிடக் கழகத்தினர் சிதைத்து
விட்டார்கள் என்று தான் இப்போது கணிக்கத் தோன்றுகிறது.
ஆந்திரா, தெலிங்கானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் என்று பலவற்றில் நாடு
என்ற சொல்பிரயோகம் இல்லை. அவைகள் மாநிலங்கள் என்று தான் அழைக்கப்படுகின்றன. பெரிய நிலப்பரப்பு என்பது தான் அதன் அர்த்தம் – அது தான் சரியான பெயரும் கூட – தேசியத்தை உணர்த்தும் சொல்லாடல். ஆனால் அதற்கு நேர்மாறாக சென்னை மாகாணத்தை ஏன் தமிழ் நாடு என்று பெயரிட்டார்கள் என்று புரியவில்லை. அரசியல் ஆதிக்க அதிகாரத்திற்கு அடிபணிந்து செயல்பட்ட மத்திய அரசைத் தான் இத் தருணத்தில் குற்றம் சொல்ல வேண்டும்.
இந்தியா
சுதந்திரம் கிடைப்பதை எதிர்த்து பிரிட்டிஷாரை ஆதரித்த ஜட்டிஸ் கட்சி தான் பிறகு
திராவிடக் கட்சியாக பெரியார் தலைமையில் உருமாறி தமிழ்நாட்டின் அரசியலை ஒரு
சாக்கடையாக மாற்றி விட்ட்து. அதன் தாக்கத்தால் தமிழ் நாட்டில் அரசியல் நாகரீகம்
செத்து, ஆபாசப் பேச்சுக்கள், அர்த்தமற்ற அடுக்கு மொழிகள், இரட்டை அர்த்தங்கள் கொண்ட சொற்றொடர்கள், அருவருக்கத் தக்க நாடகங்கள், அநாகரிகமான அரசியல் பத்திரிகைகள் என்று தமிழையும், தமிழ் இலக்கியத்தையும், பக்தி
மார்க்கத்தையும், ஆன்மீக சிந்தனைகளையும் மக்கள் மனத்தில்
நச்சு விதைகளாக விதைத்து, அதில் விளைந்த விளைச்சல்களை அறுவடை
செய்து, தமிழ் நாட்டையே விஷக் கிருமிகளாக ஊடுருவி தமிழ்
நாட்டை பாழ் செய்து விட்டனர்.
காமராஜர்
தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நல் ஆட்சியை ‘ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி’
என்று பொய்ப்பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்து, அதே
பாணியில் ஊழல் ஆட்சியை மக்கள் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
நாத்திகம்
பேசியும், ஆஸ்திகத்தையும் – ஆன்மீகத்தையும்
அவமதித்தும், தூஷித்தும், தேசியத்தை
சிதறடித்தும் ஆண்ட திராவிடக் கட்சிகளின் நச்சு விதைகளால் விளைந்தவைகள் அனைத்தையும்
வேரோடும், வேரொடு மண்ணோடும் களைய வேண்டிய தருணம்
இது.
ஒன்றியம் சொல்
பிரயோகப் பிரச்சனையால் கொங்கு நாடு பிரிவினைக் கோஷம் எழும் நிலையை ஜெய் ஹிந்த்
என்ற சொல் கவர்னர் உரையிலிருந்து நீக்கியதால் உக்கிரம் அடையச் செய்துள்ளது.
அதற்கு மூல
காரணம் திமுகவின் தோழமைக் கட்சியான தேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித்
தலைவரான எம்.எல்.ஏ. ஈஸ்வரன் சட்டசபையில்
பேசிய பேச்சால் எழுந்துள்ளது.
மக்களுடைய அரசு
எல்லோருக்கும் எல்லாமும்.. என்ற வார்த்தை என்பது ஒரு சின்ன வார்த்தை அல்ல.
இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளை போட்டிருக்கிறார்கள்.
"என்னுடைய அரசு என்னுடைய அரசு" என்று இந்த மன்றத்தில்
உரையாற்றியதையெல்லாம் பார்த்து இருக்கின்றோம். ஆனால், இந்த
அரசு மக்களுக்கான அரசு என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
பாராட்டுக்குரியது.
ஜெய் ஹிந்த்
வார்த்தை இல்லை ஆளுநர் உரையை படித்தவுடனேயே தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என்பதை
புரிந்து கொண்டேன். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், சென்ற ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே, நன்றி, வணக்கம், ஜெய்
ஹிந்த் என்று போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை
என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று முதலமைச்சர் டெல்லியில் சொன்னதை
இந்த அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என்ற அந்த நம்பிக்கை இன்று
வந்திருக்கிறது.”
இதற்கு ஸ்டாலின்
இது வரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. பிஜேபி, காங்கிரஸ்,
அதிமுக கட்சிகள் இந்த ஜெய்ஹிந்த இல்லாததற்கு எதிர்ப்புத்
தெரிவித்துள்ளனர்.
இந்த ஜெய்ஹிந்த்
வார்த்தையை எடுத்தது, நிதி அமைச்சர் தியாகராஜன் என்று
சொல்லப்படுகிறது.
ஒரு நல்ல
அரசுக்கு இவைகள் எல்லாம் அவசியமற்றவைகள். இவைகளால் அரசுக்கு இழுக்குத் தான் வரும்.
ஒன்றியம் சொல்லாடல், ஜெய்ஹிந்த் சொல்லை புறக்கணித்தல் – ஆகியவைகளால் கழக நச்சுக் கருத்துக்களை கைவிடாமல், தேசியத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டு, தெய்வீகத்தையும் மதிக்காமல் இகழ்ந்து ஆட்சி செய்ய நினைத்தால், தேசியம் – தெய்வீகம் – ஆன்மீகம் அத்தனையையும் பாரத பூமியின் கீழ் இயங்கும் தமிழ் மாநிலத்தில் தழைக்கச் செய்வோம், செய்கிறோம், செய்து கொண்டே இருப்போம் என்று சபதம் ஏற்ப்போமாக.
வேல் எடுத்து
ஓட்டு வாங்கி தேசியத்தையும், ஆன்மீகத்தையும் மதிக்காமல், நாஸ்திகவாதியாகவும், பிரிவினை வாதியாகவும் ஸ்டாலின் ஆட்சி
நடத்த விழைந்தால், அதனால் வரும் ஆபத்து, ஆட்சிக்கே என்பதை உணர்ந்து செயல்பட்டால் அவருக்கும், அவரது கட்சிக்கும் நலம். இல்லாவிடில் சிக்கலில் மாட்டி அரசியலில்
தோற்றவர் என்ற இழுக்கைச் சுமந்து கொண்டு வாழ்நாள் பூராவும் அழவேண்டிய அவல
நிலைக்குத் தள்ளப்படுவார்.
தொல்லை வினைதரு
தொல்லையகன்று
சுடர்க தமிழ்
நாடே
– என்று பாடிச்
சென்ற மஹா கவி பாரதியின்
கவின்பெரும் சொற்றொடரை நம்பி ஸ்டாலின் ஆட்சி
செய்ய வேண்டும் என்று வாய்மை விரும்புகிறது.
ஜெய்ஹிந்த் விரோதி கொங்கு ஈஸ்வரனின் சுயரூபம்
– அனுப்பு: எஸ். ஷங்கர்
E.R.ஈஸ்வரன்
சொந்த ஊர் கொக்கரையான்பேட்டை கிராமம் ( நாமக்கல் மாவட்டம் )
E.R.ஈஸ்வரனின்
தாயாரான முத்தாயிக்கும் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.ஆனால் ஒரு சில
நாட்களிலேயே முத்தாயியை விட்டு பிரிந்து போய் வேறு ஒரு கல்யாணம் செய்து கொண்டு
விட்டார் ராமசாமி
அதே ஊரைச்
சேர்ந்த தஸ்தஹீர் என்கிற முஸ்லிமோடு வாழ்க்கையை அமைத்து கொண்டார் முத்தாயி
அவர்களுக்கு பிறந்தவர் தான் E.R.ஈஸ்வரன் E.R.ஈஸ்வரனை
அப்பா ஸ்தானத்திலிருந்து படிக்க வைத்து ஆளாக்கியது எல்லாமே தஸ்தஹீர் தான்.அந்த
வகையில் E.R.ஈஸ்வரனை ஒரு முஸ்லிம்மாக தான்
பார்க்கின்றனர் அந்த கிராமத்து மக்கள் இது E.R.ஈஸ்வரனுக்கும்
நன்றாகவே தெரியும்.அதனால் தான் சில வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்து போன போது E.R.ஈஸ்வரனோ அவரது தாயாரோ எந்த சடங்கிலும் ஈடுபட்டுக் கொள்ளவில்லை அதே
சமயம் சில வருடங்களுக்கு முன்பு தஸ்தஹீர் இறந்து போக முஸ்லிம் வழக்கப்படி சில
சடங்குகளை செய்திருக்கிறார் E.R.ஈஸ்வரன் தாயார்
மேலும் தனது
பெயருக்கு முன்னால் அப்பா பெயரை இன்ஸியலாக போடாமல் தான் படித்த படிப்பான
இன்ஜினியரிங் பட்டத்தையே இன்ஸியலாக போட்டு கொண்டார் E.R.ஈஸ்வரன்
அதாவது ER-ஈஸ்வரன் ( இன்ஜினியர் ஈஸ்வரன் ) என்று தான் போடுவார்
E.R.ஈஸ்வரனின்
சொந்த ஊரில் உள்ள அவரது வீடு தஸ்தஹீர் பெயரிலும் முத்தாயி பெயரிலும் தான்
பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது 1971-ல் இந்த பதிவு
நடந்துள்ளது
(ஆதாரம் : நக்கீரன்
30-12-2009)
Comments