ஹிந்து மஹா சமுத்திரம் – சோ - துக்ளக்
பாரத யுத்தம் முடிந்தது. பூமியின் பாரத்தைக் குறைக்க அவதரித்த கிருஷ்ணன் தம் கடமை முடிந்ததால் வைகுண்டம் திரும்பினார். கிருஷ்ணர் பூமியிலிருந்து புறப்பட்டதால் பூமியில் கலியுகம் தொடங்கியது.
பிறகு பாண்டவர்களும் ராஜ்யத்தை பரீக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு, ஸ்வர்கத்தை நோக்கிப் பயணித்தனர்.
ராஜ்ய பாரம் ஏற்ற பரீக்ஷித் ஒரு நாள் சரஸ்வதி நதிக் கரையில் ஒரே கால் கொண்ட எருதைப் பார்த்தான். ‘ஏன் எனக்கு இந்தத் துன்பம்?’ என்று கேட்ட வுடன் பரிக்ஷித் அந்த எருதைப் பார்த்துச் சொன்னான்: ‘நீ தர்ம சொரூபி. தவம், தூய்மை, தயை, ஸத்தியம் என்பது தான் தர்மமான உன் நான்கு கால்களாக இருக்கின்றன. அந்த நான்கு கால்களில், முதல் மூன்று கால்களான தவம், தூய்மை, தயை ஆகியவைகள் சந்தேகம், ஆசை, கர்வம் ஆகியவைகளினால் முறிக்கப்பட்டு, இப்போது ஸத்யம் என்ற ஒரே காலில் மட்டும் நீ நிற்கிறாய். அந்த உன் ஸத்தியம் என்ற காலையும் முறிக்க கலி புருஷன் அஸத்தியத்தின் துணை கொண்டு முயல்கிறான். அரசனாகிய நான் எனது கடமையை நிறைவேற்ற அந்தக் கலியை அழிக்கப்போகிறேன் என்று பரிக்ஷித் விளக்கினான்.
தனது வாளால் கலியை வெட்ட முனைந்த போது, கலி பரிக்ஷித்தின் காலடியில் சரணாகதி அடைந்து, தன்னையும் ரக்ஷிக்கும் கடமை அரசனுக்கு உண்டு என்று பிரார்த்தித்தான். கலியாகிய தனக்கு தங்க சில இடங்களை ஒதுக்க வேண்டினான்.
அதை ஏற்று, பரிஷித் கலிக்கு சில இடங்களை ஒதிக்கினான். அதன் படி, சூதாட்டம், குடி, பெண்களை தவறாக நடத்துவது, பிராணிகளை ஹிம்சிப்பது ஆகிய இடங்களில் கலி குடிகொண்டிருப்பான் என்று பரிக்ஷித் கலிக்கு ஒதிக்கினான். மேலும் சில இடங்களைக் கலி கேட்க, தங்கம், பொய், கர்வம், காம்ம், பொறாமை, துவேஷம் – ஆகியவைகளிலும் கலி வாசம் செய்ய அனுமதி வழங்கினான் பரிஷித் ராஜா.
நாம் வாழும் இந்தக் கலியுகத்தில் இந்தமாதிரியான கலி குடியிருக்கும் அதர்மமான இடங்களையும், பொருட்களையும், கெட்ட குணங்களையும் தவிர்க்க வேண்டும்.
Comments