தீரர் சத்திய மூர்த்தியின் தன்னடக்கம்
அந்த அன்பர் படிக்கப்படிக்க அந்த ஸ்லோகங்களைக் கேட்டு அதற்கு விளக்கமும் கொடுத்துக் கொண்டிருந்தார் சத்தியமூர்த்தி.
அப்படி படித்திருக்கும் போது ஒரு ஸ்லோகத்தை வாசிக்கும் போது இடைமறித்து ‘வேண்டாம்டா அப்பா அதை மாற்று விடு .. எனக்குப் பொருந்தாது’ என்று கலக்கத்தோடு சொன்னார்.
அப்போது அந்த ஸ்லோகத்திற்கு கரிச்சான் குஞ்சு விளக்கம் கேட்டார். அப்போது அந்த இளைஞன் சொன்னான்: “காந்திஜியின் துணைவர் ஒவ்வொருவரும் அவருடைய ஒவ்வொரு உத்தம குணத்தின் வடிவம். நேரு காந்திஜியின் வீரம், சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய தைரியம், படேல் அவரின் அமைதி – அழுத்தம், ராஜாஜி அவரின் புத்திக் கூர்மை, அவரின் சத்தியத்தின் சத்தியமே சத்தியமூர்த்தி.”
சத்திய மூர்த்தி சொன்னார்: ‘அப்பா அந்த அணி உயர்ந்தது. அதில் என்னை வைக்காதே. நான் தேச விடுதலையை மோட்சத்தை விடப் பெரிதாக்க் கருதுகிறேன். அதற்காகத் தபஸ் செய்யக்கூட ஆசையுண்டு. ஆனால், நான் ஏழை, பணத் தேவையும் பற்றாக்குறையும் என் தபஸுக்குப் பகை. மேலே என்ன சொல்ல முடியாது. அதை மாற்றிவிடு.’
(ஆதாரம்: ‘அவர் தலைமை’ என்ற கரிசான் குஞ்சு கட்டுரை – 1970-ம் ஆண்டு ஆகஸ்ட் மாஹா சிவாஜி இதழின் சுதந்திர தின மலரில் எழுதியது.)
Comments