மோடி இந்தியாவின் தந்தை – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்
மோடி இந்தியாவின் தந்தை – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்
இந்தியாவின் தந்தை மோடி :
டிரம்ப் புகழாரம்.
இந்தியாவின்
தந்தை மோடி என புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தானை மோடி
பார்த்து கொள்வார் எனவும் கூறினார்.
74-வது ஐ.நா. பொதுசபை
கூட்டத்தின் பருவ நிலை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு நாட்டு
தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
இதன்பின்னர் ஜெர்மனி, நெதர்லாந்து,
கதார், பூடான், இத்தாலி, மாலத்தீவு, உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை மோடி
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர
மோடி இந்திய நேரப்படி செவ்வாய் இரவு 9.45 மணி அளவில் நியூயார்க் நகரில் ஐநா
தலைமையகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது பொருளாதாரம்
மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு
தலைவர்களும் பேசினார்கள்.
இது குறித்து நமது பிரதமர்
கூறுகையில் ஹூஸ்டன் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. அதிபர்
டிரம்ப் எனது நண்பர் மட்டுமல்ல இந்தியாவின் சிறந்த நண்பர் எனவும் கூறினார்.
தொடர்ந்த பேசிய அதிபர் டிரம்ப்,
அமெரிக்காவின் கொள்கையின் மீது மோடிக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கும் மோடிக்கும்
இடையேயான கெமிஸ்டிரி ஒத்து போகிறது. மோடி ஒரு சிறந்தஜெண்டில்மேன். சிறந்த தலைவர்.
அவருக்கு முன்பாக இந்தியா ஒரு மோசமான நிலையில் இருந்தது.ஒரு தந்தையைப் போல்
இந்தியாவை மோடி ஒருங்கிணைத்து கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தக ரீதியிலான
ஒப்பந்தங்கள் விரைவில் துவங்க உள்ளது. பிரதமர் மோடியும், பாக்., பிரதமர் இம்ரான்
கானும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என நம்புகிறேன். சந்திப்பின் மூலம் நல்ல
விசயங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும்
அல்குவைதாவிற்கு பயிற்சி அளித்ததாக ஒப்புக்கொண்ட பாக்., பிரதமர் இம்ரான்கானின்
அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு
பாகிஸ்தானை மோடி பார்த்து கொள்வார் என்றார்.
அதிபர் டிரம்ப் அமெரிக்க அரசு மோடிக்கு மேலும் ஒரு
சிறப்பு அங்கீகாரம் ஹீஸ்டன் அரங்கில் அளித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பொதுவாக அமெரிக்க அதிபர் பங்குகொள்ளும் கூட்டங்களில் அமெரிக்க அரசின் சின்னம் தான்
பேசுவதற்கு அமைக்கப்பட்டிருக்கும் பேச்சாளரின் சாய்வு பீடத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், மோடிக்கு சிறப்புச் செய்யும் விதமாக இரு நாட்டுக் கொடிகளின் சின்னம் வட்டவடிவைப்பில்
பீடத்தின் முகப்பில் பொருத்தி இருந்ததைப் பார்த்த உலக மக்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
இது யு.எஸ். அதிபர் டிரம்ப் மோடிக்குத் செலுத்தும் தனி மரியாதை என்றால் மிகையாகாது.
Comments