நவராத்திரி உற்சவம் – 29-ம் தேதி செப்டம்பர் முதல் 7-ம் தேதி அக்டோபர் வரை
நவராத்திரி உற்சவம் – 29-ம் தேதி செப்டம்பர் முதல் 7-ம் தேதி
அக்டோபர் வரை
சிவனை வழிபட ஒரு ராத்திரி சிவராத்திரி இது மாசி மாதம் மகா சிவராத்திரியாக
கொண்டாடுகின்றோம். சக்தியை வழிபட ஒன்பது ராத்திரி நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
நவம் என்பது ஒன்பது.
அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது
புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாதான். இது அம்மனுக்கு
9 நாட்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம். இந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நவராத்திரி
பண்டிகை தொடங்குகிறது அக்டோபர் 8-ஆம் விஜயதசமியுடன் பண்டிகை முடிகிறது.
நவராத்திரி பண்டிகை நான்கு காலங்களில் கொண்டாடப்படுகிறது.
ஆனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள்
வாராஹி நவராத்திரி.
புரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது
நாட்கள் சாரதா நவராத்திரி.
தை மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள்
சியாமளா நவராத்திரி.
பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள்
வசந்த நவராத்திரி.
இந்த நான்கு நவராத்திரிகளில் சாரதா நவராத்திரி இந்தியாவில் எல்லா
மாநிலங்களிலும் கொண்டடப்படுகிறது.
வசந்த நவராத்திரி மேற்கு வங்காளம் குஜராத் போன்ற சில மாநிலங்களிலும்
வாராஹி நவராத்திரியும் சியாமளா நவராத்திரியும் சில ஊர்களிலும் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி பண்டிகை கொண்டாடுவதால் முப்பெரும் தேவியர்களின் அருள் கிடைக்கும். புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்களும் பண்டிகைக்காலம்தான்.
நவராத்திரி பண்டிகை கொண்டாடுவதால் முப்பெரும் தேவியர்களின் அருள் கிடைக்கும். புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்களும் பண்டிகைக்காலம்தான்.
நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் ஏன் தெரியுமா?
ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக
துர்க்கை முதலில் வருகிறாள். துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல்
மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள்.
அடுத்த மூன்று நாட்கள் மலைமகளான செல்வத்திற்கு அதிபதியும் கடைசி
மூன்று நாட்கள் கலைமகள் கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவியையும் வணங்குகின்றோம்.
நவராத்திரி கொண்டாடப்படும் நாட்களில் தினமும் பூஜை முடிந்ததும்
வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்குவார்கள். எந்தப்
பொருட்களைத் தானமாக வழங்குகிறார்களோ, அந்தப் பொருட்களுக்கு எந்தக் காலத்திலும் எப்போதும்
எவரிடமும் கையேந்தத் தேவையில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எந்தந்த நாளில் என்ன மங்கலப்
பொருட்களைத் தானமாக வழங்கலாம் என்றும் தாத்பரியம் தெரிவிக்கிறது.
வீரம், செல்வம், கல்வி ஆகிய குணங்களின் மூல புப்பெரும் தேவியர்களான
பார்வதி – லக்ஷ்மி – சரஸ்வதி ஆகிய தேவிகளை வணங்கி அவர்கள் அருள் பெற்று நம் வாழ்வு
சிறக்க பிரார்திக்கும் புனிதப் பண்டிகையாகும் நவராத்திரி.
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணு மாருயி ரும்மென நின்றாள்
காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே.’
– என்ற அமரர் மஹா கவி பாரதியின் தெய்வ வாக்குப்படி, வாய்மை வாசகர்கள் அனைவருக்கும்
முப்பெரும் தேவையர்களின் அருள் கிட்டப் பிரார்த்திக்கிறோம்.
வீரம், செல்வம், கல்வி – அனைத்தும் வாய்மை வாசகர்களுக்கு வேண்டிய மட்டும்
கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
Comments