மோடிக்கு பில் கேட்ஸ் அறக்கட்டளை ‘கோல் கீப்பர்’ விருது
மோடிக்கு பில் கேட்ஸ் அறக்கட்டளை
‘கோல் கீப்பர்’ விருது
‘கடந்த 2014-ல் துவங்கப்பட்ட, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை வெற்றிகரமாக
செயல்படுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘கோல் கீப்பர்’ விருது பில்
கேட்ஸ்
மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கி
கவுரவித்துள்ளது.
‘கோல் கீப்பர்’ என்றால்
‘இலக்கை நிறைவேற்றியவர்’ என்று பொருள்.
மோடி பேசியது:
இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இதுவரை ஐந்து ஆண்டுகளில்
11 கோடி
கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
போதிய கழிப்பறைகள் இல்லாமல், ஏழைகளும், பெண்களும்
கடுமையாகப்
பாதிக்கப்பட்டனர்.
படிக்க ஆசை இருந்தும், படிக்க முடியாமல் பெண்கள் தவித்தனர்.
இந்த
‘தூய்மை இந்தியா’ திட்டத்தால், லட்சக்கணக்கானோர் நோய்களால்
உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, 2022-க்குள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்
ஒழிப்பில்,
மக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
Comments