ஹவ்டி மோடி! கோடி புகழ் மழையில் நனைந்த பாரதம்!


ஹவ்டி மோடி! கோடி புகழ் மழையில் நனைந்த பாரதம்!




அமெரிக்காவின் ஹீஸ்டனில் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வாழ் இந்தியர்கள் என்.ஆர்.ஜி. கால்பந்து மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் – சுமார் 50,000 பேர்களுக்கு மேல் கூடிய இருந்த அந்த பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியது ஒரு சரித்திர நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது.
மோடி – டிரம்ப் உரைக்கு முன், இரண்டு மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 400 கலைஞர்கள் 27 குழுக்களாக கலை நிகழ்ச்சியினை நடத்தி உள்ளனர். மேலும் ‘நமோ சிற்றுண்டி’ – முழு சைவ உணவுப் பொட்டலம் – அந்த அரங்கில் வழங்கப்பட்டது.

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணம் மற்றும் தென் மேற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என நலம் விசாரிப்பதற்கு, ‘ஹவ்டி’ என்பர். அதாவது ‘ஹலோ .. ஹவ் டூ யு டூ’ என்ற ஆங்கில வாக்கியத்தின் சுருக்கமே, ‘ஹவ்டி’ என்ற வார்த்தை. இதன் படி, ஹீஸ்டன் வரும் மோடியை, நலமா என விசாரிக்கும் விதமாகவே, நிகழ்ச்சிக்கு ‘ஹவ்டி மோடி’ எனபெயர் வைத்திருந்தார்கள்.

‘கனவுகளை பகிருங்கள்; ஒளி மயமான எதிர்காலம்’ என்ற தலைப்பில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில், பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த முந்தைய நியூயார்க் மாடிசன் ஸ்கொயர் மைதானத்தில் 28-09-2014 அன்றைய நிகழ்ச்சி, கலிபோர்னியா – சான் பிரான்சிஸ்கோ எனப்படும் சிலிகான் வேலியில் 26-09-2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சி – ஆகியவைகளில் 20,000 பேர்கள் தான் குழுமி இருந்தனர். ஆனால், இந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் 50,000 பேர்களுக்கு மேல் குழுமி இருந்தனர். அத்துடன் பல அமெரிக்க மாகாண கவர்னர்கள், 60-க்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்கள், குடியரசு கட்சி அங்கத்தினர்களும், டிரம்ப்பும் கலந்து சிறப்பித்தது இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்துள்ளது.
‘மோடி மோடி’ என்ற கோஷங்களுடன், ‘பாரத மாதா கீ ஜே’ – என்ற கோஷங்கள் பாரதத்தின் மேன்மையையும், புராதன கலாச்சாரத்தையும் பறைசாற்றுபவைகளாகத் திகழ்ந்தன.

மோடி டிரம்பை அறிமுகம் செய்யும் விதமாக பேசியது:

டிரம்பை 2017-ல் முதலில் சந்தித்தேன். அப்போது, ‘வெள்ளை மாளிகைக்கு ஒரு உண்மையான நண்பர் கிடைத்துள்ளார்’ என, டிரம்ப் என்னிடம் தெரிவித்தார். இன்று மூன்று ஆண்டுகளுக்கு பின், டிரம்பை, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் நண்பனாக அறிமுகம் செய்து வைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, கோடிக்கணக்கான இந்தியர்களை கவுரவித்துள்ள அதிபர் டிரம்புக்கு, என் நன்றி. அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் சர்க்கார் அமைய வேண்டும் என, ஹூஸ்டன் மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

டிரம்ப் பேசியது: ‘இந்தியாவின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர் மோடி. அவரது எண்ணம், சிந்தனை, இந்தியா மற்றும் இந்தியர்களின் நலன் மீது தான் உள்ளது. மோடியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அமெரிக்கா ‘Radical Islamic Terrorism’ என்ற பயங்கர வாதத் தாக்குதலிருந்து அப்பாவி இந்திய-அமெரிக்கர்களை காப்பதில் உறுதி பூண்டுள்ளது. அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டப் பிரச்சனை முன் எப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ளது. அதிலும், அமெரிக்க வாழ் இந்தியர்களின் வேலை இல்லா பிரச்சனை 33% குறைந்துள்ளது.’

மோடி அந்தக் கூட்டத்தில் பேசியது: ‘மோடி ஒரு சாதாரண மனிதன். 130 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பணியாற்றுபவன். ஹவ்டி மோடி என கேட்கிறீர்கள். இது, இந்தியர்கள் எப்படி உள்ளனர் என கேட்பதாகவே கருதுகிறேன். இந்தியர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.’

மோடியின் பேச்சை பலமுறை கைகளைத் தட்டி ஆரவாரத்துடன் கேட்டனர். மோடி இரண்டு நிகழ்வுகளுக்கு அங்கு கூடி இருந்த மக்களை எழுந்து நின்று கைகளைத் தட்டி தங்கள் நன்றியினையும், பாராட்டுதல்களைத் தெரிவிக்க வேண்டினார்.

ஒன்று: ஆர்டிகிள் 370 2/3 பெரும்பான்மை பலத்தில் இரண்டு இந்திய சபைகளிலும் நிறைவேற உதவிய அனைத்து இரு சபை அங்கத்தினருக்கும் நன்றி தெரிவிக்க எழுந்து நின்று கைகளைத் தட்டினார்கள்.

இரண்டு: தீவிரவாத நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கையாளும் டிரம்பிற்கு பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டினார்கள்.


அடுத்து வந்த சந்திப்பில் டிரம்ப் ‘மோடி இந்தியாவின் தந்தை. மோடி பாகிஸ்தான் பிரச்சனையை முன்னின்று தீர்த்து வைப்பார். அவருக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை.’ என்ற அளவில் மோடியை வானளாவப் புகழ்ந்து விட்டார். கோடி புகழ் மழையில் இதுவரை எந்த பிரதமருக்கும் கிடைக்காத அளவில் கிட்டியதை ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள வைக்கும்.  

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017