மனக் கவலை ஆக்கம்: ஜயந்திநாதன் – நவம்பர் 2008 எழுதியது


உருவகக் கதை





ஒரு பெரிய தனவந்தருக்கு மனத்தில் எப்போதும் மனக் கவலை.
“எவ்வளவு பணம் என்னிடம் இருந்தும், மன நிம்மதியே இல்லையே!” என்று ஏங்கினார்.

அந்தச் சமயத்தில் ஒரு மஹான் அவரது ஊருக்கு வருகை தந்தார். அவரிடம் சென்று தம் மனக் கவலை தீர வழி கேட்க முனைந்தார்.

“ஸ்வாமி, என் மனம் கவலையால் மூழ்கி, என் வாழ்வே பாழாகி விட்டது. அதைப் போக்க ஒரு வழி சொல்லுங்கமள்” என்று தனவந்தர் மஹானை வேண்டினார்.

மஹான் தமது சிஷ்யர்கள் ஒருவரை அழைத்து, ஒரு பாத்திரம், ஒரு சிறிய மரக் கட்டை, சிறிது மணல், சிறிது தண்ணீர் கொண்டு வரும்படிப் பணித்தார்.

“பாத்திரம் தான் உமது மனது. மரக்கட்டை தான் உமது கவலை. மணல் தான் உமது அஞ்ஞானம் அதாவது அறியாமை. அறியாமை அதிகமாக, அதிகமாக மரக்கட்டை அமுக்கப் பட்டு, மனத்தின் ஆழத்தில் சென்று விடுகின்றது. மரக்கட்டை வெளியே வர இதில் வழியே இல்லை’ என்று மஹான் விளக்கினார்.

பாத்திரத்தில் உள்ள மண்ணை விலக்கி விட்டு, அந்த சிறிய கட்டையை மீண்டும் அப்பாத்திரத்தில் வைத்தார். இப்போது மணலுக்குப் பதில் தண்ணீரை விட்டார்.

கட்டை தண்ணீருக்கு மேலே வந்து மிதக்க ஆரம்பித்தது.

“தண்ணீரான ஞானத்தை அதாவது தூய அறிவை பாத்திரமான மனத்தில் விட்டவுடன், கவலையான கட்டை மேலே வந்து விட்டது. பார்த்தாயா? 

ஞானமான அறிவைக் கொண்டு தான் உனது மனக் கவலையைப் போக்க வேண்டும். கவலையை முற்றிலும் நீக்க வேண்டுமானால், உனது மனதில் ஒரு ஞானப்புயலே உருவாக வேண்டும். 

அப்படி உருவானால், பாத்திரத்தில் உள்ள கட்டை தண்ணீர் அலைகளால் வெளியே தள்ளப்படும். 

உனது மனமும் கவலையிலிருந்து முழுவதும் விடுபட்டு விடும்.”


Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017