ஹிந்துப் பத்திரிகையின் பாரபக்ஷ் - அதர்ம வெளியீடுகள்
ஹிந்துப்
பத்திரிகையின் பாரபக்ஷ் - அதர்ம வெளியீடுகள்
ஆக்கம்: எஸ். சங்கரன், ஆசிரியர்
இது
ஒரு பெரிய குற்றச் சாட்டு என்பதை உணரும் போது அதற்கான ஆதாரங்கள் – ஆணித்தரமான ஆதாரங்கள்
உங்களிடம் இருக்கிறதா? – என்று வாசகர்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது. நானும்
நிதானம் தவறாமல் அதி ஜாக்கிரதையாகத் தான் இந்தக் குற்றப்பத்திரிகையை உங்கள் முன் சமர்ப்பித்து
அதற்கான விளக்கத்தையும் உங்கள் முன் படைக்கிறேன். நீங்களும் என் ஆதாரத்தின் சக்தியை
உணர்ந்து ‘ஆமாம், ஹிந்து அதர்மமாக செய்திகளை வெளியிட்டுள்ளது’ என்று ஒப்புக் கொள்வீர்கள்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சமீபத்தில்
ஆங்கில ஹிந்து தினசரி வெளியிட்ட மூன்று செய்திகளை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
1. 07-06-2019 – முஸ்லீம் ஈத் கொண்டாட்டத்தின்
போது 700-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கூட்டத்தில் ‘ரெயின்போ டான்ஸ் குருப்’ பெண்களை
ஆடைகளைக் கலைந்து நிர்வாணமாக ஆடச் சொன்ன செய்தியைப் பற்றி ஹிந்துவின் மூத்த நிருபர்
நீனா வியாஸ் வெளியிட்ட கருத்துக்கள்.
2. அக்ஷய பாத்திராவின் கர்நாடகாவின் பள்ளிப்
பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் பற்றிய கட்டுரையைப் பற்றி மாலினி – என்.ராம் கருத்துக்களில்
மாலினியின் கருத்துக்கள் மறைக்கப்பட்டன.
3. 12-06-2019 அன்று வெளியான ஹிந்து தினசரியில்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் பற்றி ட்வீட் செய்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜா
கைதாகி ஜாமீனில் விடுதலை ஆன செய்தியை முதல் பக்கத்தில் பிரசுரித்து, தலையங்கம் தீட்டி,
கார்டூன் போட்டு முக்கியத்துவம் கொடுத்தது நேர்மையா?
1. ஈத் கொண்டாட்டத்தில் முஸ்லீம்கள் நடத்திய
கொடுமை:
42
பெண்கள் கொண்ட அஸ்ஸாம் நாட்டின் ரெயின்போ நடனக் குழுவினரை ஈத் பண்டிகை கலை விழா என்ற
பெயரில் அசோல்பாரா கிராமத்தில் கலந்து கொள்ள ரூபாய் 37,000/- கொடுத்து குட்டூஸ் அலி,
சயத் கான், அடிகுல் இஸ்லாம், சம்ஜுடீன், ஜெஹருல் இஸ்லாம், அப்பாஸ் அலி என்ற முஸ்லீம்கள்
ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் ‘மேற்கு வங்காளம் குச் பீஹாரிலிருந்து ஆடைகளைந்து ஆடும்
நடனமாதுகள் ஆட வருவார்கள்’ என்று சொல்லி முஸ்லீம்கள் சுமார் 700 பேர்களுக்கு மேல் அதிக
தொகைக்கு டிக்கட் விற்றுள்ளார்கள். அங்கு சென்ற இந்த அஸ்ஸாம் நடனமாடும் குழுவினர் தாங்கள்
ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்து, கல்லெரி மற்றும் மானபங்கம் படுத்தப்பட்டு, எப்படியோ
தப்பி உள்ளார்கள். அவர்கள் தப்பியோட உபயோகித்த வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன.
இந்தச்
செய்தி ஹிந்துவிலும் சரியாகவே பிரசுரமாகி உள்ளன. அதன் தொடர்பு இதோ:
ஆனால்,
ஹிந்து பத்திரிகையின் மூத்த நிருபர் நீனா வியாஸ் இதை எப்படிப் பார்க்கிறார் என்பது
தான் இங்கு முக்கியம். ஏனென்றால் ஹிந்துவின் செய்திகளில் அவரது பங்கும் – முக்கியமாக
பல சிறப்புக் கட்டுரைகளில் – அதிகமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
கொண்டாட்டத்தில்
அஸ்ஸாம் நடனக் கலைஞர்கள் வற்புறுத்தப்பட்டார்கள் என்ற செய்தியும் வெளி வந்துள்ளது.
ஆனால், இந்த நீனா 12-ம் தேதி ட்விட்டரில் ஹிந்து வெளியிட்ட செய்தியை விட்டு, இந்தியன்
எக்ஸ்பிரஸ் பத்திரிகையை மேற்கோள் காட்டி, ‘இன்னொரு பயங்கரமான நிகழ்வு. ஹிந்துத்வா கலாச்சாரத்திற்கு
ஒரு உதாரணம். கலவரக் கூட்டம் நடனப் பெண்களை ஒரு கலாச்சார நிகழ்வில் நிர்வாணப் படுத்த
முயன்றனர். இந்தியன் எக்பிரஸ்’ என்று எழுதி உள்ளார்.
இப்படிப்பட்ட நடுநிலைமை – நேர்மை தவறும் பத்திரிகையாளர்களிடம் தர்மத்தை எதிர்பார்க்க
முடியாதது தான்! ஆனால், இப்படிப்பட்டவர்களின் கைகளில் தான் ஹிந்து செய்திகள் வெளியிடும்
உரிமை உள்ளது என்பதை நாம் உணரும் போது நமது இதயம் மிகுந்த வேதனை அடைகிறது. இதற்கு விமோசனம்
எப்போது? – என்ற ஏக்கமும் எழுவது இயல்புதான்.
கூத்து
இத்துடன் முடியவில்லை.
இந்தியன்
எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி இது தான்:
“The two men,
Shahrukh Khan and Subahan Khan, were arrested on Sunday after a case was filed
on basis of a complaint registered by the cultural troupe against the
organisers of the programme, which was held at a village under Chaygaon Police
Station limits”.
ஆகையால்
இந்த நீனா இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியையும் திரித்து
தமது ஹிந்துத்வா எதிர்ப்பு மனநிலைக்கு
ஏற்ப உண்மையை மறைத்து
ட்வீட் செய்துள்ளார். இது மிக மிக தண்டிக்கத் தக்கது. இந்த சம்பவம்
முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டது என்று தெரிந்திருந்தும் இதில் ஹிந்துத்வா எங்கிருந்து
முளைத்தது? நீனாவின் கீழ்த்தரமான – தர்மமற்ற மனத்தின் வெளிப்பாடுதான் அவரது கருத்துக்களின்
பிண்ணனி என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். இப்படிப்பட்டவர்களை நம்பும்
ஹிந்துப் பத்திரிகையை நாம் எப்படி மதிக்க முடியும்? என்பது விடைகாண முடியாத கேள்வியாகும்.
2. அக்ஷய பாத்திர ஹிந்துவின் ஆய்வு அறிக்கை பிரசுரத்தில்
என்.ராம் – மாலினி ட்விட்டர் லடாய்.
அக்ஷய
பாத்ரா பவுண்டேஷன் என்பது ஹரே கிருஷ்ணா கோஷத்தை முக்கிய ஆதார ஸ்ருதியாக வைத்து இஸ்கான்
தலைமையில் இந்தியாவில் உள்ள 15 மாகாணங்களில் செயல்படும் சுமார் 12000 பள்ளிகளில் மதிய
உணவுத் திட்டத்தை எந்தவிதமான லாப நோக்கும் இல்லாமல் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அது தயாரிக்கும் எந்தப் பொருளிலும் வெங்காயம், பூண்டு போன்றவைகள் தவிர்க்கப்படுவது
அந்த இந்து மத நிருவனத்தின் ஆதாரக் கொள்கையாகும். ஆகையால் இந்த கொள்கைக்கு முழுவதும்
ஒப்புக்கொண்ட மாநில அரசுகளிடமிருந்து தான்
ஒப்பந்தம் செய்து இந்த மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆகையால் இந்தக்
கொள்கையின் அடிப்படையில் ‘கொடுக்கப்படும் குழந்தைகளின் உணவில் ஊட்டச் சத்து பூண்டு
இல்லாததால் குறைபாடு உள்ளது’ என்றால், அதை அந்தந்த அரசாங்கள் தங்கள் ஒப்பந்தத்தை ரத்து
செய்து விட்டு, வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். ஆனால், குறைந்த செலவில் மிகவும்
சுத்தமான உணவை அக்ஷய பாத்திராவினர் பள்ளிக் குழந்தைகளுக்கு நேரம் தவறாமல் அளிப்பதால்,
இதை மறுபரிசீலனை செய்து ரத்து செய்யவும் பல மாநில அரசுகள் முன்வரவில்லை. ஆகையால் ‘உணவில்
வேண்டிய அளவு புரோட்டின் சத்து இல்லை. முட்டை, பூண்டு, வெங்காயம் ஆகியவைகள் உணவில்
சேர்க்காதது தான் இதற்குக் காரணம்’ என்று குற்றம் சாட்டுக்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது.
தேசிய
சத்துணவுக் கழகம் (National Institute of Nutrition – NIN) சமீபத்தில் ஒரு பகிரங்கக்
கடிதம் எழுதி, அதில் ‘நாங்கள் எங்களது ஆய்வின் அடிப்படையில், அக்ஷய பாத்திராவிற்கு
வழங்கிய சத்துமிகுந்த உணவு வழங்குகிறது என்ற நற்சான்றிதழை திரும்பப் பெருகிறோம்’ என்று
கர்நாடக அரசுக்குத் தெரியப்படுத்தியது.
இந்தப்
பிண்ணனியில் ஹிந்து தினசரிப் பத்திரிகையின் அர்சனா நாதன் என்ற ரிப்போர்ட்டர் தமது ஆய்வின்
அறிக்கையை வெளியிட்டார். அதில் ‘குழந்தைகள் அக்ஷயா கொடுக்கும் உணவை விரும்பிச் சாப்பிடுவதில்லை.
அதில் சத்தோ ருசியோ இல்லை’ என்று தாம் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டு தாம் கர்நாடகா ஸ்டேட்
உணவு கமிஷனின் குற்றச் சாட்டை ஆமோதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த
அர்சனா நாதன் அறிக்கையை என்.ராம் முற்றிலும் சரி என்று ஆதரிக்கும் போது, மாலினி பார்த்தசாரதியோ
‘அக்ஷயா பாத்திராவின் மேல் சொல்லப்படும் ஹிந்துப் பத்திரிகையின் அர்சனா நாதனின் குற்றச்
சாட்டுக்கள் தேவை இல்லாத ஒன்று என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஹிந்துவின் தினசரிக்
கட்டுரைகளை ஹிந்துவின் எடிட்டர் சுரேஷ் நாம்பாத் அவர்கள் தான் கவனிக்கிறார். நான் தலையங்கம்
மற்றும் வெளியிடப்படும் செய்திகளின் போக்கை மட்டும் தான் மேற்பார்வை இடுகிறேன். இருப்பினும்,
இனி நான் நிச்சயமாக ஹிந்துவின் வெளியிடப்படும் கட்டுரைகளின் தரத்தை உயர்த்தும் முயற்சியில்
ஈடுபடுவேன்’ என்று ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் கீழே உள்ளது.
Professional journalists worth
the name must not be swayed by such moronic attacks from what they do with
diligence & care, and commitment to the public interest. Why are
Karnataka’s schoolchildren unhappy with the mid-day meal? - The Hindu https://www.thehindu.com/news/national/karnataka/why-are-karnatakas-schoolchildren-unhappy-with-the-mid-day-meal/article27378176.ece …
And let me point out that in
direct opposition to what the bigots & fanatics are braying for, The
Hindu’s “Code of Editorial Values” guarantees guarantees “professionalism in
the editorial functioning” freedom from external or internal interference:https://www.thehindu.com/news/national/living-our-values-code-of-editorial-values/article1715043.ece?homepage=true …
மாலினிக்கு
என்.ராம் சுரேஷ் நாம் பாத் வழியாக சூடாக மேலே உள்ள இரண்டு ட்வீட்கள் மூலம்
பதில் அடி கொடுத்துள்ளார்.
‘பொது நன்மையின்
அடிப்படையில் எழுதிய கட்டுரையில் குற்றம் காண்பது முட்டாள் தனமானது’ என்ற அளவில் மாலினியைச்
சாடி உள்ளார். ‘ஹிந்துவின் ‘Code of Editorial Values’ என்றும் கடைப்பிடிக்கப்படும்.
ஹிந்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள வெறிகொண்டவர்களிடமிருந்து காப்பது அவசியம்’
என்ற அளவில் இரண்டு பேர்களின் மாறுபட்ட கருத்துக்களின் உக்கிரத்தை வாசகர்கள் உணர வேண்டுகிறேன்.
இதற்கு மாலினி கீழ்க்கண்ட ட்வீட்டின் மூலமாக பதில் சொல்லி இருக்கிறார்:
I reiterate my commitment as
Director, Editorial Strategy @the_hindu , to
promote journalism that is fact based, values-driven and agenda-free. And
sadly, the Akshaya Patra story was an example of shoddy one-sided journalism.
என். ராமின் மிகவும்
உக்கிரமான ட்வீட்டிற்கு மாலினி ‘பத்திரிகையின் தலையங்கத்தை முடிவு செய்யும் டைரக்டர்
என்ற நிலையில் ‘உண்மை, நேர்மை, எந்தச் சார்பும் இல்லா கொள்கையுடன் நடத்தும் ஜர்னலிசத்தையே
நான் கடைப்பிடிப்பதை உறுதி செய்கிறேன். துரிதிருஷ்ட வசமாக அக்ஷய பாத்திரா கட்டுரை ஒரு
தலைப்பட்சமாக அலங்கோலமாக எழுதப்பட்டதிற்கு ஒரு உதாரணம்.
தெருச்
சண்டை குழாச் சண்டை அளவிற்கு என்.ராம் – மாலினி இறங்கி, ஹிந்து தினசரியின் தரத்தைக்
குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.
இந்த சமயத்தில் ஹிந்துவின்
வாசகர் எடிட்டரான ஏ.எஸ். பன்னீர்செல்வம் “A Debate That Divides” என்ற அவரது விளக்கக் கட்டுரையில் எந்தவிதமான தெளிவும் இல்லை.
அவர் இறுதியாகச்
சொல்வது இது தான்:
Partisanship
and polarisation should not come in the way of our understanding a complex
reality. A few years ago, a story dealing with the nutrient content of a
noon-meal scheme meant for underprivileged children would not have drawn the
ire of anyone. An ideological prism should not be used to malign a journalistic
inquiry.
வாசகர்களின்
நிலையை பன்னீர் செல்வம் கவனித்ததாகவே தெரிய வில்லை.
ஹிந்துவின் ‘Journalistic inquiry’ என்பதை கறைபடிந்த குறுகிய கொள்கை வழியைப் பயன்படுத்தக் கூடாது
என்ற அறிவுரையை அவர் யாருக்குச் சொல்கிறார்?
இதில் என்.ராம் சரியா? அல்லது மாலினி சரியா?
ஏனென்றால் ஹிந்துவின் அக்ஷய பாத்திரா கட்டுரை அபத்தம் என்று மாலினி சொல்ல, என்.ராம்
அந்தக் கட்டுரை அற்புதம் என்று ஓங்கி உரக்கச் சொல்கிறார்.
வாசகர் எடிட்டர் “ஏன் வாசகர்களுக்கு
இப்படி இரு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டஆய்வு அறிக்கையை வெளியிட்டுக்
குழப்ப வேண்டும்?’ என்ற கேள்விக்கு பதில் சொல்ல வில்லை. அவரது கட்டுரையும் வழ வழா கொழ
கொழா ரகமாகவே போய் விட்டது.
இதன்
மூலம் ஹிந்துவின் செய்திகளிலும், கட்டுரைகளிலும் நேர்மையும், நம்பகத்தன்மையும் அதல
பாதாளத்திற்குச் சென்று விட்டது.
பன்னீர்
செல்வமும் இந்த இரு பெரும் தலைகளின் கருத்து மோதல்களைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதாதது
எந்த விதத்தில் ஞாயம்?
மேலும்
சுரேஷ் நாம்பாத் மவுனம் காப்பது எந்த வகையில் ஜர்னலிஸ தர்மம் என்பதையும் பன்னீர் செல்வம்
விளக்கத் தவறி விட்டார்.
மொத்தத்தில் ஹிந்து தினசரி தன் நேர்மையை இழந்து விட்டதையே
இந்தச் சண்டை நிரூபிக்கிறது.
ஆகையால்
ஹிந்து பத்திரிகையின் வாசகர் என்ற நிலையில் என்.ராம், மாலினி பார்த்தசாரதி, பன்னீர்
செல்வம் ஆகிய மூன்று பேர்களுக்கும் பத்திரிகை தர்மத்தைச் சரியாக கடைப்பிடிக்கத் தவறியதற்குத்
தண்டனை கொடுக்கும் விதமாக முள் கீரிடம் அணிவித்து எச்சரிக்கை விடுக்கிறோம்.
3. உ.பி. யோகி ஆதித்தியநாத் குறித்த ட்வீட்டினால் கைது செய்யப்பட்ட
செய்தியை ஹிந்து பிரசுரித்த விதம்:
மேலே
உள்ள படத்தில் இருப்பவர் தான் பிரசாந்த் கனோஜ் – முன்பு The Wire Hindi போர்டலில்
வேலை செய்தவர். அவர் ஹெமா செக்சேனா என்ற கான்பூரில் வசிக்கும் பெண் பத்திரிகை நிருபர்களிடம்
பேசும் வீடியோயை தமது முகநூல் – ட்விட்டர் ஆகியவைகளில் பதிவு செய்து – அதற்கு அவர்
ஹிந்தியில் “யோகி அவர்களே! நீங்கள் எவ்வளவு தான் தீவிரமாக முயன்றாலும் காதலை உங்களால்
மறைக்க முடியாது’ – என்ற கருத்தில் ஹிந்தியில் தலைப்புக் கொடுத்து – வெளியுட்டுள்ளார்.
அந்தக்
கான்பூர் பெண் அந்த வீடியோவில் உத்திரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்னாரின்
அலுவலகம் முன் சொன்னது: “ஆதித்தியனாருக்கு நான் பல முறை என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும்
படி வேண்டி உள்ளேன். அவரிடம் நான் வீடியோ மூலம் பல முறை இதைப் பற்றிப் பேசி உள்ளேன்”
இந்த
வீடியோவை ஒளிபரப்புச் செய்த வீடியோ சேனல் தலைவர் இஷிகா சிங் மற்றும் அதன் எடிட்டர்
அனுஜ் சுக்லா ஆகியவர்களும் உ.பி. போலீசால் கைது செய்யப்பட்டார்கள்.
கைது
செய்யப்பட்ட ப்ரஷாண்ட் கனோஜுக்கு சுப்ரீம் கோர்ட் பெயில் அளித்து விடுதலை செய்தது.
சுப்ரீம் கோர்ட் இந்திரா பானர்ஜீ இது குறித்து வெளியிட்ட கருத்து: “கனோஜியாவின் ட்வீட்
எங்களுக்கு உடன்பாடில்லை தான். ஆனால், நாங்கள் அவனைக் கைது செய்தைப் பற்றித் தான் கவலை
கொள்கிறோம். நாம் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இந்த தேசத்தில் வாழ்கிறோம். சட்டப்படி
வழக்குத் தொடரவும். ஆனால், அதற்காக ஏன் அவன் ஜெயில் கம்பிகளுக்குப் பின் தள்ளப்படவேண்டும்?”
இந்தச்
செய்தியை ஹிந்து தினசரி தனது 12-06-2019 தேதியிட்ட பத்திரிகையில் முதல் பக்கத்தில்
வெளியிட்டு, அதற்கான தலையங்கமும் தீட்டி, ஒரு கார்டூன் படத்தையும் பிரசுரித்து இதன்
முக்கியத்துவத்தை வாசகர்களுக்கும் வெளி உலகத்திற்கும் எடுத்துக் காட்டி உள்ளதை நாம்
பாராட்டலாம்.
எப்பொழுது
என்றால் ஹிந்து பரபட்சம் காட்டாமல் இருந்தால்? என்று சொல்லத் தோன்றுகிறது.
இந்த
மாதிரியான வீடியோ – ட்வீட்கள் முதன் மந்திரிகளைப் பற்றி வருவது இது தான் முதன் முறை
போல் ஹிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதே
போல் அவதூறு வீடியோ கர்நாடகாவின் முதன் மந்திரி அவரது மகன் நிகில் – அப்பா தேவகவுடா
ஆகியோர்களைப் பற்றி வந்தவுடன் கர்நாடகா போலீஸ் உ.பி. போலீஸ் போல் தான் செயல்பட்டது.
வங்காளத்தில் மம்தா ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியவர்களை ஜெயிலில் தள்ளினார். மேலும்
பலரை பெயிலில் வரமுடியாத கேஸ்களால் ஜெயிலில் தள்ளினார். போலீஸ் பல படுகொலைகள் நடந்தும்
அதற்கான முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யாமல் இருந்த அவலமும் நடந்தேறியது.
கேரளாவில்
முதன் மந்திரி பினாராயி விஜயன் சட்டசபையிலேயே தன்னைப் பற்றி அவதூறாக சோஷியல் மீடியாவில்
செய்திகளைப் பிரசுரித்த 119 பேர்களின் மேல் வழக்குப் பதவாகி ஜெயிலிலும் தள்ளப்பட்டுள்ளார்கள்
என்று ஒப்புக் கொண்டவர், 150 அரசாங்க ஊழியர்கள் முக நூல் போஸ்ட்டுக்காக வேலை இழந்துள்ளார்கள்
என்றும் தெரிவிக்கிறார்.
ஆனால் இந்தச் செய்திகளை ஹிந்துவும் இரட்டடிப்புச் செய்துள்ளது
எதைக் காட்டுகிறது. ஹிந்துப் பத்திரிகைக்கு உண்மையிலேயே தனிநபர் சுதந்திரத்தைக் காப்பதில்
நம்பிக்கை இருக்குமானால், பல மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கும் பல
கைதுகளைப் பற்றியும் செய்திகளை
வெளியிடவேண்டும்.
மேலே
குறிப்பிட்ட மூன்று பதிவுகளைப் படித்த பிறகு வாசகர்கள் ஹிந்து தினசரி முன்பு கடைப்பிடித்த
பத்திரிகை தர்மம் மீறப்பட்டு, அரசியல் சார்புப் பத்திரிகையாக மாறி விட்டது என்பதை நீங்கள்
உணர்வீர்கள் என்பது திண்ணம்.
செய்திகளை மறைப்பதைக் கூட ஓரளவு பொறுத்துக்கொள்ளலாம்.
ஆனால் பொய்யான செய்திகளை உண்மைச் செய்திகள் போல் திரித்துப் பிரசுரிப்பது ‘மஞ்சள்’
பத்திரிகைகளுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் ஹிந்து போன்ற பத்திரிகை அந்தப் பள்ளத்தில்
விழக்கூடாது.
இது நாட்டிற்கோ, ஜனநாயகத்திற்கோ நல்லதில்லை.
ஆகையால் ஹிந்து திருந்தி
‘சத்தியமேவ ஜெயதே’ என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க ஆண்டவனை வேண்டுகிறோம்.
இருப்பினும்
ஹிந்துவின் தவறான போக்கிற்கு தண்டனையை வாய்மை சாட்டைக் கேடயம் வழங்கி எச்சரிக்கை விடுக்கிறது.
Comments