மணியாட்சி ரயில் நிலையத்தில் வீர வாஞ்சியின் வீர மரணம் – 17-06-1911




பிறப்பு: 1886 – இறப்பு: 17-06-1911
வாழ்ந்த வருடங்கள்: 25

சுதந்திரப் போராட்ட போராளி வாஞ்சியின் 108-வது நினைவு தினம்.  

108 வருடங்களுக்கு முன்பு வாஞ்சி என்ற 25 வயதே ஆன கல்யாணமான பிராமண இளைஞன் ரோபர்ட் வில்லியம் எஸ்கவுர்ட் ஆஷ் என்ற ஆட்சியாளரை பெல்ஜியம் தானியங்கிய துப்பாக்கியால் சுட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொன்று சுதந்திரக் கனலை கொழுந்து விட்டு எரியச் செய்த தீயாகி வாஞ்சி. 

பொன்னம்மாள் என்ற இளம் வயது மனைவியையும் நினைத்துப் பார்க்காமல் தியாகம் செய்த வாஞ்சியின் தீரம் இந்திய சுதந்திர ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகள்.


ஆங்கிலேய அதிகாரியை சுட்டு வீழ்த்திய வீரன் வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் இருந்ததாக கூறப்படும் கடிதத்தின் வரிகள் இவை:

“ஆங்கிலேய சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்து அவமானப்படுத்திவருகிறார்கள். 

நாம் ஆங்கிலேயரை துரத்தி தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.


அவன் எங்கள் தேசத்தில் காலைவைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராஸிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். 


அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.”

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017