கிரேஸி மோஹன் – மறைவு – 10-06-2019
கிரேஸி
மோஹன் (பிறப்பு: 16-10-1952 – இறப்பு: 10-06-2019) தமது 67-வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
பலரையும் தமது பேச்சாலும், நாடகத்தாலும், எழுத்தாலும் சிரிக்கச் சிரிக்கச் செய்தவர்.
அதிலும் இவரது ஹாஸ்யம் யாரையும் காயப்படுத்தாமல் அனைவரும் மனம் மகிழ்ந்து சிரிக்கச்
செய்யும் அற்புதம் இவரது தனித் திறமை.
கிரேஸி
மோஹன் தமது ஹாஸ்யத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் காஞ்சி மஹா பெரியவர் என்று சொல்லி
அதற்கான விளக்கமும் கொடுக்கிறார்.
‘பிள்ளையாருக்கு
முதன் முதலில் தோப்புக் கரணம் போட்டவர் மஹா விஷ்ணுவாம். ஏன் போட்டார் என்பதற்கு ஒரு
கதை உண்டு. அதை காஞ்சிப் பெரியவா சொல்லி இருக்கிறார்.
ஒரு
சமயம் மஹா விஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக்
கொண்டு தம் வாயில் போட்டுக் கொண்டு விட்டாராம். பிள்ளையாரைச் சிரிக்க வைத்து சக்கரத்தை
அவரது வாயிலிருந்து விழ வைக்க, மஹா விஷ்ணு தமது நான்கு கைகளாலும், காதுகளைப் பிடித்துக்
கொண்டு ஆடினாராம். பிள்ளையார் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க, சக்கரம் கீழே
விழ, விஷ்ணுவும் அதை எடுத்துக் கொண்டாராம். இது தான் எனது ஹாஸ்யத்திற்கு மூல வித்து.’
இதனால்
தானோ கிரேஸி மோஹனின் ஹாஸ்யத்தில் விரசமோ, குத்தலான வாசகமோ இருக்காது. எல்லாம் உயர்ந்த
ரக ஹாஸ்யங்கள்.
வாய்மை
கிரேஸி மோஹனுக்கு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறது.
Comments