ஜேஷ்ட அஷ்டமி – மேலா கீர் பவானி - 10-06-2019
ஜேஷ்ட
அஷ்டமி திருநாள் காஷ்மீர் பண்டிட்களால் கீர் பவானி தேவியை ஆராதித்து உலக சமாதானம்,
லோகச் க்ஷேமம், சுபிக்ஷம், பலம் ஆகியவைகளை அருள காஷ்மீரில் உள்ள கந்தர்பால் ஜில்லாவில்
இருக்கும் துல்முலா என்ற கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப்படும்.
துல்
முலா கிராமம் ஸ்ரீநகருக்கு கிழக்கே சுமார் 14 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது. கீர்
என்பது அரிசியால் செய்யப்பட்ட நிவேத்தியமாகும். அது தான் அம்பாளுக்குப் படைக்கப்படுகிறது.
ஆகையால் படைக்கப்படும் அந்த அன்னமே அம்பாளுக்குப் பெயராக அமைந்து விட்டது. இது காஷ்மீர்
பண்டிட்களின் குல தெய்வமாகும்.
ஏழு
பக்கங்களும் ஏழு கோணங்களும் கொண்டு அமைந்த ஒரு அபூர்வமான நீர் ஊற்று கோயிலைச் சுற்றி
ஓடுகிறது. அந்த நீர் ஊற்று தேவி கீர்பவானிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. அந்தப் புனித
ஊற்றின் நீர் சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, பச்சை, நீலம், வெள்ளை, கருப்பு என்று பல நிறங்களில்
மாறும் அதிசயம் அபுல் பாசல், ஸ்வாமி விவேகானந்தர் ஆகியவர்களால் காணப்பட்டுள்ளது. மேலும்
அந்த ஊற்று நீர் கருப்பு நிறமாக மாறி ஓடும் போது அது நாட்டிற்குக் கெடுதல் விளைவிக்கும்
என்றும் நம்பப்படுகிறது.
காஷ்மீர்
பள்ளத்தாக்கில் முன்பு வாழ்ந்த முஸ்லீம் ஆண்களும் பெண்களும் அழகாக உடை உடுத்திக் கொண்டு,
காஷ்மீரத்தின் சுற்றுலா உலகிலேயே மிகவும் சிறந்ததாகக் கருதப்பட்ட காலம் முஸ்லீம்களின்
தீவிரவாதத்தின் கோரத் தாக்குதலால் இன்னும் மீளமுடியாமல் பாரத தேசத்தின் ஒரு கரும்புள்ளியாகவே
மாறி விட்டது. காஷ்மீரத்தின் அழகிற்கு ஒளி கூட்டிய காஷ்மீர் பண்டிட்களும் முஸ்லீம்
தீவிரவாதத்திற்குப் பலியாகி அகதிகளாக இந்தியாவின் பல இடங்களில் தஞ்சம் புகும் அவலமும்
நடந்தேறியது.
தேவி
கீர்பவானி கோயிலைச் சுற்றி ஓடும் நீர் ஊற்றின் நிறம் கருப்பு நிறமாகவே மாறியதாக நினைக்கத்
தோன்றும் அளவில் கலர் கலரான அணிகலங்கள், ஆடை ஆபரணங்கள் என்று கண்கவரும் வண்ணம் வலம்
வந்த காஷீமிரத்து முஸ்லீம்களும் இந்துக்களும் ஒளி இழந்து, காஷ்மீரமே கருப்புப் பர்தாவில்
மூடிய அளவில் தீவிரவாதத்தில் மூழ்கி
மீளமுடியாமல் தவிக்கிற பரிதாபம் பாரதத்தையே கண்கலங்க
வைக்கிறது.
காஷ்மீரத்தின்
தேவியான கீர்பவானி தான் தன் அருட்பார்வையால் மீண்டும் காஷ்மீரம் முன்பு போல் ஒளி பெற்றுத்
திகழ அருள்பாளிக்க வேண்டும்.
அந்த
அற்புதமான காஷ்மீர் மீண்டும் வர வாய்மை கீர்பவானியை மனமுருகிப் பிரார்த்திக்கிறது.
Comments