இறங்கல் செய்தி - கிரிஷ் கர்னாட் மறைவு – 10-06-2019
கிரிஷ்
கர்னாட் (பிறப்பு: 19-05-1938 இறப்பு: 10-06-2019 – 81-வதில் இறப்பு) பன்முகம் கொண்ட
கலைஞர் என்றால் மிகையாகாது. ஆங்கிலம் – கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளில் பாண்டித்தியம்
பெற்றவர். தார்வார் கர்நாடகா யுனிவர்சிட்டியில் பி.ஏ. பட்டம் பெற்று பிறகு இங்கிலாந்தில்
ரோட்ஸ் ஸ்காலராக மேக்டலென் ஆக்ஸ்போர்டில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.
“என்ன
படித்தாலும் என் இதயம் கன்னடத்தில் தான் இயங்குகிறது” என்று கர்னாட் பெருமையாகச் சொல்வார்.
அதன் படி அவர் கன்னட இலக்கியத்தில் தமது மேதாவிலாசத்தைப் பதிவு செய்துள்ளார். அதன்
காரணமாக 1998-ம் ஆண்டு கார்னாட் ஞானபீடம் பட்டம் பெற்றார்.
இலக்கியத்தில்
கார்னாட் கொண்ட ஈடுபாட்டுடன் வலது சாரிக் கொள்கையினை மூர்க்கமாக எதிர்த்துப் போராடியவர்.
அதன் காரணமாக கார்னாட்டை ஆதரித்தவர்களும், எதிர்த்தவர்களும் பலர் உண்டு. 2012-ம் ஆண்டு
டாட்டா இலக்கிய விழாவில் பம்பாயில் அவரை ‘அவரது நாடக வாழ்க்கை’ என்பதைப் பற்றிப் பேச
அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அதை விடுத்து, வி.எஸ்.நைபால் என்ற இலக்கிய ஆசிரியரை அவரது
இந்திய முஸ்லீம்களை எதிர்க்கும் குணத்தைப் பற்றிப் பேசியதுடன், அவருக்கு டாட்டா இலக்கிய
விழாவில் நைபாலுக்கு வாழ்நாள் விருது வழங்கியதையும் கண்டித்துள்ளார். இது சபை நாகரீகம்
இல்லை என்பதுடன் அவரது முஸ்லீம் ஆதரவு நிலைப்பாட்டையே இவை காட்டுகிறது.
மேலும்
ரவீந்திர நாத் டாகூரின் தேசிய கீதம் ‘இரண்டாம் தரப் பாடல்’ என்ற குற்றச் சாட்டு இந்திய
மக்களிடையே பெரும் கொந்தளிப்பை எழுப்பியது.
பெங்களூர் சர்வ தேச விமான நிலையத்திற்கு
கெம்ப கவுடா பெயருக்குப் பதில் திப்பு சுல்தான் பெயர் வைக்க பரித்துரைத்தவர்.
மோடி
2014 பார்லிமெண்ட் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்று வெளிப்படையாக மேடைகளில் தமது
எதிர்ப்பைப் பதிவு செய்தவர்.
‘Me
Too Urban Naxal’ & ‘Not In My Name’ (Against Cow Vigilante) என்பது கார்னாட்டின்
இலக்கிய மேதை என்ற தமது திறமைகளைத் தாண்டி, சமூக விழிப்புணர்வையும், இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்.
& பி.ஜே.பி. போன்ற மதவாத சக்திகளை எதிர்கொள்ளும் போராளியாகவும் தம்மை காட்டிக்
கொள்வதில் பெருமை கொண்டவர்.
ஹிந்துப்
பத்திரிகை தனது 11-06-2019 தேதிப் பத்திரிகையில் 3 முழுப்பக்கங்கள், முதல் பக்கக் கட்டுரை
தனது Magazine-ல் பல பக்கங்கள் என்று கிரீஷ் கார்னாட் பற்றி பல படங்களுடன் வெளியிட்டு
தனது அஞ்சலியைத் செலுத்தி உள்ளது.
ஆனால், அதில் மேலே குறிப்பிட்ட கார்னாட் மிகவும்
விரும்பிப் போராடிய எந்த சம்பவங்களும் வாசகர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இதை கார்னாட்டே
விரும்பமாட்டார் என்பதால் நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
நான்
சென்னை ஆக்ஸ்போர்ட் பிரஸில் கார்னாட் வேலை செய்யும் நாட்களில் ஹிந்து உயர் நிலைப் பள்ளியில்
சந்தித்துள்ளேன். அப்போது அவர் அவ்வளவு பிரபலமாக வில்லை. அப்போது கோபாலி, என் நண்பர்
ஆங்கிலப் பேராசிரியர் பிச்சுமணி, நான் ஆகியவர்களுடன் கார்னாட் நாடகத்தைப் பற்றி உரையாடியதாக
ஞாபகம். அப்போதே கார்னாட்டின் உத்வேகம் வெளிப்பட்டதை நான் உணர முடிந்தது.
கிரிஷ்
கர்னாட்டின் உடல் அவரது விருப்பப்படியே எந்தவித அரசு மரியாதையோ, சடங்குகளோ இன்றி மிகவும்
எளிதான முறையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயலே அவர் தாம் கொண்ட கருத்துக்களில்
மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் தனிச்சையாக தனி மனிதனாகக் கூட நிற்கும் திறமையை
வெளிக்காட்டுகிறது.
கிருஷ்
கார்னாட் ஆத்மா சாந்தி அடைய வாய்மை ஆண்டவனைப் பிரார்த்திக்கிறது. அதன் நிமித்தமாக உங்கள்
அனைவரின் சார்பில் மலர் வளையம் வைத்து நமது அஞ்சலியைத் செலுத்துகிறது.
Comments