111-வது பிறந்த நாள் காணும் அரசியலில் தூய்மை காத்த உத்தமர் கக்கன் – 18-06-2019




கக்கன் (பிறப்பு: 18-06-2019 – இறப்பு: 23-12-1981 – 73 ஆண்டுகள் வாழ்ந்தவர்) ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் என்று பல பொறுப்புகளையும், 1957 முதல் 1967 வரை காமராஜ் அமைச்சரவையில் அமைச்சராகவும் பணி ஆற்றியவர். 

அன்றைய கால கட்டத்தில் பறையர்கள் மற்றும் சாணர்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி ‘அரசு கோயில் உள் நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்ட, 1939’ என்ற சட்டத்தினை அமல் படுத்தும் விதமாக மதுரையில் கக்கன் பறையர்கள் மற்றும் சாணர்களைத் தலைமை தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்து, சாதி வேறுபாட்டினைக் களைந்தார். 

ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கக்கன் தபால் தலை 1999 ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

எளிமையும், நேர்மையும், ஊழலற்ற அரசியல் வாதியாகவும் வாழ்ந்த உத்தமர் கக்கன்.



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017