திண்ணைக் கச்சேரி
திண்ணைக் கச்சேரி
பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்
விமரிசகர்:
மம்தா ஆடிய ஆட்டம் இந்திய அரசியலில் ஒரு இருண்ட பக்கமாக சரித்திரம் படைத்து விட்டது.
சாரதா சிட் பண்டின் ஊழலை சி.பி.யை விசாரிக்க விடாமல் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தர்ணா
செய்தது மேற்கு வங்க ஓட்டர்களை கதி கலங்க வைத்து விட்டது.
நிருபர்:
தர்ணா மட்டுமா நடத்தினார் மம்தா? மிகவும் கீழ்த்தரமாக வார்த்தைகளை வெறி பிடித்த பேயாக
கத்தித் தீர்த்தார். பிரதம மந்திரி என்றும் பார்க்காமல் மோடியை – ‘மோடி என்னைப் பொருத்த
வரையில் பிரதமரே இல்லை – தேர்தலுக்குப் பிறகு தேர்வாகும் பிரதமருடன் தான் என் உறவு
– Expiry PM – மோடியின் 56 இஞ்ச் மார்பால் இந்த லோக் சபா தேர்தலில் அது இரட்டிப்பாக
112 ஆக கிடைப்பதே அதிகம். – அடிக்கடி சுட வைத்த டீ உடம்புக்கு நல்லதல்ல – மோடியின்
டீயும் அந்த வைகைதான். ஆகையால் தான் சாய்வாலா மோடி இப்போது சவுக்கிதார் மோடியாக வலம்
வருகிறார். – காந்தியைக் கொன்ற கோட்சே கட்சியைத் சேர்ந்தவர் மோடி – இவைகள் எல்லாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசத்தின் பிரதம மந்திரியைக் குறித்த மிகவும் கொடூரனமான
தூஷணைகள். ‘எனக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் வேண்டாம். எனக்கு ஜெய் ஹிந்த் போதும்’ என்று
மம்தா கொக்கரிக்கிறார். யாகாவாராயினும் நா காக்க என்பது மம்தாவின் அகராதியில் கிடையாது.
பொதுஜனம்: ராஹுல் மம்தாவின் பாதையில் பயணிக்கும் பப்பு அரசியல் வாதி என்றால்
மிகையாகாது. ரபேல் விமானத்தில் மோடி ஊழல் செய்துள்ளார் என்றும், நான் பிரதமராக பதவி
ஏற்றதும் செய்யப்போகும் முதல் காரியம் மோடிமேல் ஊழல் குற்றச் சாட்டை விசாரிப்பது தான்
என்றும் சொன்னது மட்டுமின்றி, ஒவ்வொரு தேர்தல் பிரசார கூட்டங்கள் – பேட்டிகள் அனைத்திலும்
மோடி சோக்கிதார் சோர் என்று முழங்கியதுடன் கூட்டத்திலுள்ளவர்களையும் சோர் என்று குரல்
எழுப்பச் செய்து ஆனந்தம் கொண்ட மேதாவி. ஆனால் உச்ச நீதி மன்றத்தில் சோக்கிதார் சோர்
என்பதற்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து கோர்ட் வாசப்படியில் மண்டி இட்டு ‘ஐயா சாமி!
காப்பாற்றுங்கள்! முன்பு ஏதோ தெரியாமல் ‘Apology” “Regret’ – இரண்டும் ஒன்று தான் என்று
உங்களுக்கே சிறுபிள்ளைத்தனமாகப் பாடம் எடுத்துவிட்டேன். தப்புத் தான். மன்னிக்கவும்
செய்கிறேன் – வருந்தவும் செய்கிறேன் என்று கதரிய ராஹுல் எழுத்துப் பூர்வமான பிரமாணப்பத்திரம்
ஆயிரம் கதைகள் சொல்லும்.
நிருபர்:
ராஹுல் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்கட்சி
அந்தஸ்தையும் முந்திய தேர்தலைப் போல் இந்த தேர்தலிலும் பெற முடியாமல் இமாலயத் தோல்வியை
– மரண அடித் தோல்வியை – ஓட்டர்கள் காங்கிரசை பலமாகத் தண்டித்துள்ளனர். மேலும் ராஹுலும்
அமேதி தொகுதியில் 55,000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுள்ளார். அவர் தான் தற்போதைய தலைவர்
என்பதையும் ஞாபகம் வைத்துக்கொண்டால், காங்கிரசின் தோல்வியின் உச்சம் தெரியும்.
வாசகர்:
தோல்விக்கு ராஹுல் சொல்லும் காரணம் தான் வேடிக்கையாக இருக்கிறது. ‘காங்கிரசின் இந்தத்
தோல்விக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்கள் மகன் – மகள் என்று வாரிசுகளுக்கு
தேர்தலில் நிற்கத்தான் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், பி. சிதம்பரம் ஆகியோர்கள் கட்சியைக் கவனிக்காமல்
தங்கள் மகன்களுக்கு சீட்டுக்களை வாங்குவதிலும், அவர்களைச் ஜெயிக்க வைப்பதிலுமே கண்ணாக
இருந்துள்ளனர். மேலும் ரவேல் ஊழல் – நியாய் திட்டம் ஆகியவைகளை மக்களிடம் என்னைப் போல்
எடுத்து பிரசாரம் செய்வதிலும் தவறி காங்கிரசுக்கு படு தோல்வியை அளித்துள்ளனர் என்று
ராஹுல் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
விமரிசகர்:
ராஹுல் காந்தி ‘வாரிசு அரசியல் காங்கிரசில் கூடாது’ என்று சொல்வது தான் வேடிக்கை. ராஹுலின்
திறமை – ஆளுமை எதையும் ஆராய்ந்து அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. நியமன அப்பட்ட
வாரிசு அரசியல் காரணமாக சோனியா போல் காங்கிரசின் தலைவரானவர் என்பது ஒரு மறுக்க முடியாத
உண்மை. மேலும் மோடியை எதிர்க்க ராஹுல் பிரியங்காவை களம் இறக்க முடிவாகி பிறகு கைவிடப்பட்டது.
இந்த முடிவும் ஒரு வாரிசு அரசியல் தான். அதைவிட இரண்டு முக்கியமான சம்பவத்தையும் நினைவு
கூற வேண்டும்.
ஒன்று:
பிரியங்காவின் கணவர் வாத்ராவையும் இந்தத் தேர்தலில் நிற்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஆனால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு:
வயநாட்டில் பிரியங்காவின் மகன் – மகள் இருவர்களையும் அரசியல் மேடையில் தோன்றச் செய்து,
மக்களைப் பார்த்து கைகளை அசைத்து, இவர்களும் நாளை காங்கிரஸ் தலைவர்கள் என்பதை சொல்லாமல்
சொல்லும் இந்தச் செயல் அப்பட்ட வாரிசு அரசியல் இல்லையா?
அதைச்
சுட்டிக் காட்டும் தைரியம் ‘கிராண்ட் ஓல்ட் பாரம்பரியம் மிக்க கட்சி’ என்ற புகழைக்
கொண்ட காங்கிரசில் ஒருவருக்குமா இல்லாமல் போயிற்று? காந்தி வளர்த்த காங்கிரசுக்கு இந்த
நிலை வரலாமா? காந்தி பெயரை மட்டும் வைத்துக் கொண்டு, வியாபரம் – ஊழல் வாதிகளாக வலம்
வரும் இப்போதையை காங்கிரஸ் தலைவர்களிடம் தைரியத்தை எதிர்பார்ப்பது என்பது பயித்தியக்காரத்தனம்.
விமரிசகர்:
ராஹுல் காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை பி.ஜே.பி.க்கு தோல்வியே கிடையாது.
இனி மாயாவதி – அகிலேஷ் – மம்தா – நாயுடு – ராவ் – கவுடா – ஸ்டாலின் – லல்லு வாரிசுகள்
– பவார் – கெஜ்ரிவால் என்ற இந்த பெரிய அரசியல் பட்டாளத்தால் மோடியை ஒருபோதும் வீழ்த்த
முடியாது.
நிருபர்: பாரத தேசம் விழித்து விட்டது. அதற்கு அடித்தளம் அமைத்த மோடியை
பாரதம் நம்பத் தயாராகி விட்டது. சென்ற ஐந்து ஆண்டுகளாக அறிவு ஜீவிகளான லிபரல் இடது
சாரிகள், மேலை நாட்டுப் பத்திரிகைகள், உள்ளாட்டு செக்குலர் மேதாவிகள், உள்ளூர் ஊடகங்கள்
அனைத்தும் 2014 மோடி அலை ஓய்ந்தது. மோடி மீண்டும் பிரதமராக வரவே முடியாது என்று 24
x 7 ஓலமிட்டவர்கள் – வந்தாலும் தொங்கு பாராளுமன்றம் தான் – என்று ஓநாய்கள் போல் ரத்தப்பசியோடு
திரிந்தவர்கள் இனி அடுத்த தேர்தலில் அடக்கி வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

கொசுறு
வேடிக்கை மீம்ஸ்:
இடது பக்கத்து கற்பனைக் கருத்து
வாசகங்கள் மிகவும் அருமையாக உள்ளது:
ராஹுல்: அம்மா! நான் பி.ஜே.பி.யில்
சேருகிறேன். இப்போதைய நிலையில் அது ஒன்று தான் அவர்களை தடுக்கும் வழியாகும்.
Comments