வாழ்த்துவோம் பூச்செண்டால், சாத்துவோம் சாட்டையால்




வாய்மைப் பத்திரிகையில் முன்பு ‘போற்றுவோம் – தூற்றுவோம்’ பகுதியில் பலரை பூச்செண்டு கொடுத்துப் போற்றியும், சிலரை கைத்தடி கொண்டு சாத்தியும் நமது ஆதங்கத்தை வெளிபடுத்தி உள்ளோம். அதே பாணியில்  முடிந்த 2019-ம் லோக் சபா தேர்தல் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியவர்களையும், வென்றவர்களையும் பாராட்டியும், அதே சமயத்தில் இந்தத் தேர்தலில் தவிர்க்கக் கூடிய பல முயற்சிகளில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களை சாடியும், சாத்தியும் பதிவு செய்துள்ளோம்.
– வாய்மை.


சாத்துவோம் சாட்டையால்










 










ஆடிய ஆட்டமென்ன – கூடிய கூட்ட மென்ன என்ற அளவில் பி.ஜே.பி. கர்நாடகா – மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் – சதிஸ்கர் ஆகிய இடங்களில் பிஜேபி தோற்றவுடன் இதர கட்சிகள் ‘மோடியின் இரண்டாவது முறை பிரதம மந்திரிக் கனவு தவிடுபொடி’ என்று கைகள் வலிக்க கடந்த ஒன்றரை வருடங்களாக ஆனந்தக் கூத்தாடினார்கள்.

சேர்ந்தவர்கள் பிறகு சோர்ந்து, பெடரல் பிரண்ட், மஹாகட்பந்தன், காங்கிரஸ் – பி.ஜே.பி அல்லாத கூட்டணி என்று மக்களையும் இந்திய ஓட்டர்களையும் குழப்பினார்கள்.

உங்கள் கொள்கை என்ன? என்றால் மோடி ஹடோ என்று ஒரே குரலாக கூக்கிரலிட்டார்கள். அதில் ராஹுல், நாயுடு காரு, மம்தா ஆகியவர்களின் குரல்கள் உரக்கவே கேட்டன. உங்களில் யார் பிரதமர் வேட்பாளர் என்றால், அது தேர்தல் முடிந்து எம்.பி.க்களால் தேர்வு செய்யப்பட வேண்டிய ஒன்று என்று ஒரு சாராரும், மாயவதி தான் பிரதம மந்திரி என்று அகிலேஷ் சொல்ல, ராஹுல் என்று ஸ்டாலின் மறுக்க, அதே ஸ்டாலின் கல்கத்தாவில் மம்தா தான் என்று குழப்ப – ஓட்டர்கள் விழித்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் ஓட்டுக்கள் மூலம் அவர்கள் அனைவருக்கும் ‘சாத்துவோம் சாட்டையால்’ என்று மரண அடிக்குச் சமமான பெரும் தண்டனையை கொடுத்து சரித்திரம் படைத்து விட்டார்கள். ஜன்தா சக்தி சாதிக்கும் சக்தியாக விசுவரூபம் எடுத்து சாத்து சாத்து என்று சவுக்குக் கைகள் ஒய ‘சிக்குலர் கட்சியின்’ தலைவர்களைத் தேடித் தேடி சவுக்கடிகள் கொடுத்து ஓட்டர்கள் தங்கள் தீராத பழியை ஒருவழியாகத் தீர்த்த நிம்மதியுடன் சாட்டையைச் சுழற்றிய படி ஒடி ஓடி தேடித் தேடி தண்டனை கொடுத்துள்ளது உலக அரங்கில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டுள்ளது.
சாத்துவோம் சாட்டையால்








லோக் சபா தேர்தலில் மம்தா – நாயுடு இரட்டையர்கள் ஒன்று சேர்ந்து ஆடிய ஆட்டம் சரித்திர ஏடுகளில் கருப்புப் பக்கங்களாக என்னென்றும் நிரந்தர இடம் பெறும்.

இதற்கு மூல காரணம் இந்த இரண்டு அரசியல் தலைவர்களின் அரசியல் வாழ்க்கை மோடியால் முடிவுக்கு வரும் என்று அஞ்சியதால் அதன் காரணமாக பல தவறான போராட்டங்களை நடத்தி அதில் ஹிமாலயத் தோல்வி கண்டு இப்போது திக்குத் தெரியாமல் திணறு கின்றனர் இருவரும்.

இருவரும் மோடியை கடுமையான தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்கள்.

மம்தாவின் கோட்டையில் பிஜேபி 18 இடங்களைப் பெற்று அதிர்ச்சி சர்ஜரி வைத்தியம் செய்துள்ளது. நாயுடு காருவை ஜெகன் ஒரே அடியாக படு தோல்வி அடையச் செய்து நயுடுவின் அரசியல் வாழ்வையே சூன்யமாகச் செய்துவிட்டார். இது அவரது மாமனார் என்.டி.ராமராவின் சாபம் என்றால் மிகை இல்லை.
சாத்துவோம் சாட்டையால்

மல்லிகார்ஜுன கார்க்கே



                    


கார்கேயை தோற்கடித்த வெற்றி வீரர் உமேஷ் ஜாதவ்




மல்லிகார்ஜுன கார்க்கேக்கு குல்பர்க்கா தொகுதியில் வெற்றி வாகை சூடிய பிஜேபி உமேஷ் ஜாதவ் சாட்டையடி கொடுத்து ஸ்மிரிதி இராணி போல் சரித்திரம் படைத்துள்ளார்.

தன் வாழ்நாளிலேயே தேர்தலில் தோற்காத – சொல்லிலாத சரதாரா (தோல்வியே அடையாத தலைவர்) என்ற பட்டப்பெயருடன் திகழும் அந்த காங்கிரஸ் மூத்த தலைவர் 95,000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.  நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப மோடி ‘காங்கிரஸ் முந்தைய இடத்தைத் தாண்டாது என்று சொன்னதற்கு, காங்கிரஸ் அதிக இடம் பெற்றால் மோடி டெல்லியில் பொது இடத்தில் தூக்கிட்டுக் கொள்வாரா? என்று கொக்கரித்தார்.

கொதித்த மக்கள் இவரைத் தோற்கடித்தது மட்டும் அல்ல – காங்கிரசையும் 52 இடங்கள் – முந்தைய இடங்களுக்கு 8 இடங்களே அதிகமாகப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் முன்பு மாதிரியே இழந்துள்ளது.

இப்போது மக்கள் கார்கேயை ‘நீங்கள் எப்போது எங்கே தூக்கிட்டுக் கொள்ளப்போகிறீர்கள்?’ என்று மீம்ஸில் கேள்வி கேட்கும் அளவுக்கு முன்னால் காங்கிரசின் எதிர்க்கட்சித் தலைவராக கடந்த 5 ஆண்டுகள் மோடியின் தலைமை லோக் சபாவில் பணியாற்றியவர் என்ற மதிப்பையும் இழந்து தவிக்கிறார்.

ஆணவம் அறிவிவை அழிக்கும் என்பதற்கு கார்க்கே ஒரு சிறந்த உதாரணம்.


சாத்துவோம் சாட்டையால்



ஜி. எஸ். பவசராஜு  



        



பழுத்த ஜேடிஎஸ் – தன்னை தன்னிகரில்லாத ‘செக்குலர் வாதி’ என்று கூட்டத்திற்குக் கூட்டம் சொல்லி தான் மட்டும் தான் ‘முஸ்லீம்களின் நண்பன்’ என்பதை ஊர்ஜிதம் செய்து அவர்களின் ஓட்டுக்களைப் பெற்று இவ்வளவு நாட்கள் அரசியல் செய்தவர் – Farmer and Former பிர்தம மந்திரி என்று மார்தட்டி தான் ஒருவர் தான் விவசாயிகளுக்குத் துணை நின்றவர் என்று மக்களை நம்பவைத்து தமது தள்ளாத இந்த 86 வயதிலும் பதவி ஆசை – அதிலும் பிரதமந்திரி பதவி ஆசை- காரணமாக ‘இது தான் எனது கடைசித் தேர்தல்’ என்று எப்போதும் போல் இப்போதும் சொல்லி நின்றார். அது மட்டும் அல்ல ‘மோடி ஹடோ’ கும்பலுக்கு இவர் தான் ஹீரோ – வழிகாட்டி – ராஹுல் தான் பிரதமர் என்று உள்ளொன்று வைத்துப் புறம் பேசி டெல்லி – கல்கத்தா என்று பறந்து தன் முழுச் சக்தியையும் தமது வாரிசு அரசியலை நிலை நாட்டப் படாது பாடு பட்டார். கூட்டத்தில் அந்த மொத்த குடும்ப நபர்களே விக்கி விக்கி அழுது தோள் துண்டால் கண்ணீரைத் துடைத்து கர்நாடக மக்களிடம் ஓட்டுப் பிட்சைக்கு கையேந்தினர்.

வாரிசு அரசியல் – குடும்ப அரசியலுக்கு காங்கிர்ஸ் கட்சி தவிர்த்து, இரண்டு கட்சிகளுக்கு கேடயம் வழங்கலாம்.

ஒன்று -கர்நாடகாவின் ஜேடிஎஸ் – தேவகவுடா தலைமை.
இரண்டு – லல்லுவின் ஆர்ஜேடி.

ஆர்ஜேடிக்கு பூஜ்யம் – ஜேடிஎஸ்.க்கு ஒன்று – அதுவும் தேவகவுடா வாரிசான பேரன் ப்ரஜ்வால் ரேவண்ணாதான் மட்டும் தான் ஜெயித்தார்.

அப்பா, இரண்டு மகன்கள், இரண்டு பேரன்கள், மகன்களின் மனைவிகள் என்று முழுக்குடும்பமே ஏதோ கர்நாடகாவே குத்தகைக்கு எடுத்த மாதிரி தேர்தல் களத்தில் இறங்கினர்.

கட்சியும் குடும்பக் கட்சி – அரசாங்கப் பதவிகளும் குடும்பத்தினர்களுக்கே என்பது கடவுளுக்கே பொறுக்காமல் மொத்த குடும்பத்தையே ஏதோ இழவு வீடு மாதிரி ஆக்கி விட்டார்கள்.

கர்நாடகா ஓட்டர்களே! சாதிக்க வில்லை; சரித்திரம் படைத்து விட்டீர்கள். இந்தப் பணி தொடரட்டும். அரசியலில் வாரிசுக்கு சமாதி கட்டி விட்டீர்கள். உங்களை மற்ற மாநிலங்களும் பின் பற்றும் என்பது திண்ணம். 
சாத்துவோம் சாட்டையால்







தேசஸ்வி யாதவ், டெச் பிரதாப் யாதவ், மிசா பார்தி

காங்கிரசின் பதவி ஆசையாலும், மதவாதக் கட்சி என்று பேர்சூட்டிய பிஜேபியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே வெறியிலும் – தாங்களும் குடும்ப அரசியல் செய்வதாலும், ஜேடிஎஸ். லல்லுவின் குடும்பக் கட்சியாகவும், ஆட்சியிலும் குடும்ப நபர்களே பதவி வகிக்கும் அளவில் வாரிசு அரசியலில் லல்லு எந்தவிதமான கூச்சமும் இன்றி வலம் வந்ததை காங்கிரஸ் ஆதரித்து வந்தது.  

லல்லு எழுத்தறிவில்லாத தமது மனைவியை – கை நாட்டுப் பேர்வழி என்று கூடச் சொல்வார்கள் – பீஹாரின் முதல்வராக்கி முழுமையாக ஆட்சி செய்யச் செய்து, சாதித்து, சரித்திரம் படைத்த ஊழல் ஊற்றுக் கட்சி. அந்தச் சமயத்தில் நான் கொதித்துப் போனேன். ஆனால் அறிவு ஜீவிகள், காம்ரேட்கள் (அவர்கள் லல்லுவின் பரம நண்பர்க்ள்), லுட்யான்ஸ் – கான் மார்கட் கொள்ளைக் கூட்டங்கள், இடது சாரிகள், பல பத்திரிகைகள் ஆகியவைகள் ஒன்று கூட (ஹிந்து பத்திரிகை உட்பட) ‘இது என்ன அநியாயம்? இது ஜனநாயகமா? குடும்பநாயகமா?’ என்று உரக்க குரலோ – எதிர்ப்போ தெரிவிக்க வில்லை. ஏனென்றால் லல்லுவை விட்டால், மதவாதக் கட்சியாகச் சித்தரிக்கப்பட்ட பிஜேபி வந்துவிடுமே என்ற கடமை மறந்த தீய எண்ணங்கள் கொண்ட கூட்டத்தின் அநியாயமான செயல்களாகும். லல்லு அத்வானி ரத ராத்திரையைத் தடுத்த தலைவன் என்று மார்தட்டுவதை கைகளைத் தட்டி வாழ்த்தியவர்கள் தான் இந்த அதி மேதாவிகள். அதர்மம் தான் அவர்களுக்கு தர்மம். தம் மகன்கள் இருவர், மகள் என்று வாரிசு அரசியலில் பரிசுக் கோப்பையை வாங்கத் தகுந்தவர். ஆனால், கடவுள் சித்தம் ஜெயிலில் களி திண்ணும் லல்லுவாகக் கண்ணீர் சிந்துகிறார். சோனியா தான் நான் ஆதரிக்கும் தலைவர் என்று தம்மைப் போன்று குடும்ப அரசியல் – வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் தலைவரைக் கொண்டாடும் இதயம் கொண்டவர்.

இப்போது ஊழல் செய்த லல்லுவின் அனைத்து குடும்பப் பேர்வழிகளும் கோர்ட் படிகளை மிதித்து வருகின்றனர்.  பீஹார் மக்கள் இப்போது விழித்துக் கொண்டு விட்டதினால், தேர்தலில் நின்ற மூன்று வாரிசுகளையும், மற்ற வேட்பாளர்களையும் படுதோல்வி அடையச் செய்து உலகத்தையே நிமிர்ந்து பார்க்கும் படி பீஹார் மக்கள் தங்கள் ஓட்டை போட்டுவிட்டார்கள்.

புத்தன் பிறந்த பூமி பீஹார். லல்லு குடும்பத்தின் கட்சி இனி ஒருபோதும் தலையெடுக்க முடியாது.

பிஹார் ஓட்டர்களுக்கு பல கோடி பாராட்டுக்கள். சரித்திரம் உங்களை என்றும் மறக்காது. நல்லகாலம் பிறந்து விட்டது.

பீஹார் மக்களே! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!


பூச்செண்டு பெறுபவர்



ராஹுலை எதிர்த்து அமேதியில் போட்டி இட்டு 55,000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற சரித்திர வீராங்கணை ஸ்மிரிதி இராணி. இப்போது இவர் ‘அமேதி ஆன்டி’ (Amethi Aunty) என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
பூச்செண்டு பெறுபவர்


  

டெல்லியில் ‘கிங்க்’ அல்லது ‘கிங்க் மேக்கர்’ ஆக வேண்டும் என்ற ஆசையில் திளைத்த முந்தைய ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஜெகன் மோகன் ரெட்டி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகள் – 25 லோக் சபா தொகுதிகள் ஆகிவைகளில் ஜெகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, 151 சட்ட மன்றத் தொகுதி – 22 லோக் சபா தொகுதிகளில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளார். ஜெகன் பி.ஜே.பி. மற்றும் காங்கிரசுக்கு பூஜ்யத்தைப் பரிசாக அளித்துள்ளார். நாயுடு காருவின் அரசியலையே பூஜ்யம் ஆக்கி விட்டாரோ என்று தான் ஆந்திர மக்கள் கருதுகிறார்கள்.
பூச்செண்டு பெறுபவர்




ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக பதவி ஏற்கிறார். மொத்தம் உள்ள 146 சட்டமன்றத் தொகுதிகள் – 21 லோக் சபா தொதிகள் ஆகியவைகளில் பட்நாயக் 112 சட்ட மன்றத் தொகுதிகள் – 12 லோக் சபா தொகுதிகள் என்று வெற்றி வாகை சூடி ‘ப்ரோ இன்கம்பென்சி” புகழ் முதல்வாராகவும் சரித்திரம் படைத்துள்ளார். பாஜக – 23, காங்கிரஸ் 9 சட்டமன்ற தொகுதிகளிலும், லோக் சபாவில் பாஜக 8 – காங்கிரஸ் 1 என்ற அளவில் பட்நாயக் வென்றுள்ளார்.

பட்நாயக் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் போது இவர் இரண்டு சட்டசபைத் தொகுதியில் நின்று இரண்டிலும் ஜெயித்தாலும், மோடியின் பிஜேபியின் தாக்கத்தால் பயந்து இரண்டு தொகுதிகளில் நின்றது இவரது பயத்தின் வெளிப்பாடாகத் தான் பார்க்கப்படுகிறது. அடுத்த தேர்தலில் ஆறாவது முறையாக வென்றால் அது அவருக்கு மிகப் பெரும் கீர்த்தியைக் கொடுக்கும். அதை ஒடிசா மக்கள் அவருக்கு அளிப்பார்களா என்பது 2024 ஆண்டு தேர்தலில் தான் தெரியும். அப்போது பிஜெபியுடன் கூட்டு வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படப் போவதில்லை. 

இந்த கோமாளிக் கூட்ட மாநிலக் கட்சிகளின் ‘மோடி ஹடோ’ கொள்கைக்கு எந்தவிதத்திலும் இடம் கொடுக்காத தன் பலம் – பலவீனம் அறிந்து அதே சமயத்தில் நாட்டின் நலம் கருதும் ஜெண்டில் மேன் அரசியல் வாதிதான் பட்நாயக் அதனால் தான் ஒரிசா ஓட்டர்கள் அவருக்கு ஐந்தாவது முறையாக ஆட்சியை அளித்து அதே சமயத்தில் ‘வளர்ச்சிக்கு மோடி’ என்ற அளவில் பிஜேபிக்கு லோக் சபாவில் வெற்றியையும் அளித்துள்ளனர். இதையும் ‘மோடி ஹடோ’ கும்பல் பட்நாயக் பிஜேபியின் பி-டீம் என்று கேலிபேசியதையும் புறந்தள்ளிய உத்தம அரசியல் வித்தகர். இதற்காகவே ஒரிசா ஓட்டர்களுக்கு ஒரு ஓ போடவேண்டும். ஜெய் ஹோ ஒரிசா.

பூச்செண்டு பெறுபவர்கள்

பிஜேபியின் கூட்டணிக் கட்சிகள் பலர் இருப்பினும் குறிப்பாக நான்கு தலைவர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு அளிக்கும் பூச்செண்டு மொத்த குழுவையும் சேரும் என்பதை அறியவும்.


நிதிஷ் குமார் & ராம் விலாஸ் பாஸ்வான்





உத்தவ் தாக்கரே











சுஷில் குமார் மோடி




தேவேந்திர பட்னாவிஸ்

அமித்ஷாவிற்கு பிஜேபி கூட்டணியில் சேர்வதற்கு அதிகமான தலைவலியைக் கொடுத்தவர் சிவ் சேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே. அவரது கட்சிப் பத்திரிகையில் பல முறை மோடி திட்டங்களையும், செயல்பாடுகளையும் 2014-ல் மோடி ஆட்சி முடியும் வரை திட்டித்தீர்த்தார். மோடியும் தனிப்பட்ட முறையில் தாக்கரேயின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. அதற்கு மோடி எந்த பதிலும் அளிக்க வில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். ஆனால் அமித்ஷா – பட்னாவிஸ் ஆகிய இருவர்களின் முயற்சியால் 50 – 50 சீட் ஒதிக்கீடு முறையால் கூட்டணியில் சிவ் சேனா சேர்ந்தது. வெற்றியும் பெற்றது. அதற்கு பட்னாவிஸிற்கு ஒரு ஜே போடவேண்டும். ஏனென்றால், தாக்கரேயின் எந்த தாக்குதலுக்கும் பதில் சொல்லாமல், சிவ் சேனா எங்கள் கூட்டணையில் தான் இருக்கிறது; இருக்கும் – என்று ஏக் தாளம், ஏக் ராகம் என்ற அளவில் செயல்பட்டார்.

நிதிஷ் குமார் முஸ்லீம் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற பயம் ஒருபுறம். அதிக சீட்டுக்கள் கிடைக்கப் போராட வேண்டும் என்ற கருத்து மறுபுறம் என்ற கருத்துக் குழப்பத்தினால், ஜேடியு கட்சியின் கூட்டணி ஒரு முடிவுக்கும் வராமல் இழுபறி நிலையை அமித் ஷா – 50 – 50 என்ற சீட் ஒதிக்கீட்டால் நிதிஷ் குமாரைக் வழிக்குக் கொண்டு வந்தார்.

பாஸ்வானும் சிறிது முரண்டு பிடித்தாலும் அதிக இடம் கிடைத்ததால் திருப்தியுடன் கூட்டணியில் சேர்ந்தார்.

இதனால் லல்லுவின் கட்சியான ராஷ்ரிய ஜனதா கட்சி லோக் சபா தேர்தலில் ‘பூஜ்யம்’ பெற்று ஒட்டு மொத்த வாரிசு அரசியலே ஒரம் கட்டப்பட்டுள்ளது.

பிஹார் ஓட்டர்களுக்கு எத்தனை ஜே போட்டாலும் தகும்.
பூச்செண்டு பெறும் நிறுவனம்




அசோக் லாவாசா, சுனில் அரோரா, சுஷில் சந்திரா – தலைமைத் தேர்தல் அதிகாரி சுனிலுடன் சக தேர்தல் அதிகாரிகள்.




தலைமைத் தேர்தல் அதிகாரிகள் – அவருக்கு உறுதுணையாக உள்ள இரண்டு தேர்தல் அதிகரிகள், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், சுமார் 300 தேர்தல் பணியாளர்கள் மற்றும் தேர்தல் நடக்க உதவிய போலீஸ் மற்றும் ரிசர்வ் படையினர்கள் என்று அனைத்து ஊழியர்களுக்கும் இந்த மாபெரும் தேர்தல் திருவிழாவினை மிகவும் வெற்றிகரமாக நடத்தியதற்கு இந்திய மக்கள் அனைவரும் தலை வணங்க வேண்டும்.

பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பாக சந்திரபாபு நாயுடு, சரத்பவார், காங்கிரஸ் தலைவர் ராஹுல், மாயவதி – அகிலேஷ் – லாலு கட்சி, கெஜ்ரிவால், ஸ்டாலின் கட்சி, காம்ரேட் கட்சிகள் என்று அவர்கள் அனைவரும் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் சரி இல்லை, 100% அளவில் யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பதை ப்ரிண்ட் செய்யும் சீட்டுக்களை இ.வி.எம். ஓட்டுடன் ஒப்பிடவேண்டும் என்றுடெல்லி தலைமை எலக்ஷன் கமிஷன் அலுவலகம் முன்பு போராடினர். இது ஏழு கட்ட தேர்தலில், பல கட்டத் தேர்வு முடிந்த தருணத்தில் உச்ச மன்றத்தையும் நாடினார்கள். இந்த அவர்களது செயல்கள் எலெக்ஷன் கமிஷனின் தேர்தல் வேலைகளைப் பாதிக்கும் என்ற குறைந்த பட்ச எண்ணம் கூட இல்லாததையே பிரதிபலிக்கிறது. இந்த அவர்களின் செய்கை ஜனநாயகத் தேர்தல் நடப்பதைத் தடுக்கும் முயற்சி என்பதிலும் அவர்களுக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் குறிக்கோள் மோடியை அவமானப்படுத்தி அவரை மீண்டும் பிரதமராக வரவிடாமல் செய்ய வேண்டும் என்பது தான். எலக்ஷன் கமிஷனை எலக்ஷன் ஒமிஷன் என்று கூட அவதூறு பரப்பினார்கள். தேர்தல் கமிஷன் என்பது தனிச்சுதந்ரம் பெற்று இயங்கும் நிர்வாகம் என்பது தெரிந்தும், மோடி இதில் குறிக்கிட்டு தனக்குச் சாதகமாக ஓட்டைப் பெற முயல்கிறார் என்ற பிரச்சாரத்தை முன்னிருத்து மோடிக்கு இந்தியாவிலும், உலக அளவிலும் அவப்பெயரை ஏற்படுத்த பல வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர் இந்த மதச்சார்பற்ற மேதாவிகள். ஆனால் உச்ச நீதி மன்றமோ ‘தேர்தல் கமிஷன் சொன்ன ஒரு ப்ரின்ட் மஷினுக்குப் பதில், VVPATs ஐந்தை ஒவ்வொரு தேர்தல் அசம்பளித் தொகுதியிலும் சரிபார்த்து எண்ணவும்’ என்று உத்திரவிட்டபடி நடந்ததில் 100% அவைகள் சரியாக இருந்ததை தேர்தல் ஆணையம் இப்போது தெரிவித்துள்ளது.

இ.வி.எம். சரியில்லை வாகுச் சீட்டு முறையை மீண்டும் அமல் படுத்தப் போராட்டம் நடத்திய அரசியல் தலைவர்கள் முகத்தில் கரியைப் பூசிய நிலையை இப்போது மக்களிடம் செல்ல வேண்டிய நிலையைப் பார்த்தால் இந்த பெடரல் – மாஹாகட்பந்தன் – காங்கிரஸ்/பி.ஜே.பி இல்லா கூட்டணி என்ற இந்த கோமாளி தேர்தல் கட்சிகளின் கூத்து இனி ஒருபொழுதும் எடுபடாது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கபில் தலைமையில் இ.வி.எம். சரி இல்லை என்பதை ஏதோ ஒரு மிஷினை வைத்து யு.கே.யில் பத்திரிகைகளுக்காக போட்டுக் காட்டியது இந்திய தேர்தல் ஆணையத்தையும், தேர்தலையும் கேவலப்படுத்தியதிற்குச் சமம். இதற்கு யு.கே.யைத் தேர்ந்தெடுத்தது தேசவிரோத நடவடிக்கை என்ற குற்றச் சாட்டை காங்கிரஸ் சுமக்க வேண்டிய நிலையை உண்டாக்கி விட்டது.  

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017