புதிதாகத் தேர்வான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்குளுக்கு அறிவுரை




புதிதாகத் தேர்வான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்குளுக்கு மோடியின் மணியான அறிவுரை
எந்தக் காரணம் கொண்டும் எந்த உதவியையும் யாரிடமும் எக்காலத்திலும் பெற்றுக் கொள்ளாதீர்கள்.
சாதாரண காரில், டாக்ஸியில் அழைத்துச் செல்வதாக இருந்தாலும், இலவச காலை உணவாக இருந்தாலும், அட ஒரு கப் டீ யாக இருந்தாலும் கூட வேண்டாம் என்று சொல்லுங்கள். ஏனென்றால்.. இந்த உலகில் எதுவுமே இலவசமாகக் கிடைக்காது. இப்படி உதவ முன் வரும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு ஹிட்டன் அஜெண்டா இருக்கும்.
எப்போதும் விமானநிலையங்களில்.. வரிசையில் நிற்காமலோ, செக்யூரிடி செக் கை புறந்தள்ளியோ போகாதீர்கள். நீங்களும் மற்றவர்களைப் போல ஒரு இந்தியக் குடிமகன் என்பதை மறக்காதீர்கள். இந்த வைரல் சோஷியல் வீடியோ காலங்களில் உங்களை யார் எந்த கோணத்தில் படம் பிடித்துக் கொண்டி ருக்கிறார்கள் என்பதை உங்களால் கணிக்கவே முடியாது. உங்களுடைய ஒரே ஒரு கர்வமான நடத்தை உங்களுக்கும் கட்சிக்கும் தீராத பிரச்னையை உண்டாக்கிவிடும்.
எனக்கு நன்றாகத் தெரியும் இப்படி நான் பேசுவது உங்களுக்கு விருப்பமில்லாமல் சந்தோஷத்தைக் கொடுக்காமல் எரிச்சலைக் கொடுக்கும் என்று. ஆனால் ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த கட்சிக்காரர் என்கிற முறையில் இதனை உங்களுக்குச் சொல்வது என் கடமை. உங்களை வழி நடத்துவது என் பொறுப்பு. நாளை நீங்கள் வருத்தப்படாமல் இருக்கலாம்..!
எந்த காரணத்தைக் கொண்டும் தேவையில்லாமல் மீடியாக்களுக்கு அனாவசிய தீனி போடாதீர்கள். இதனால் ஏதோ கவரேஜும் பாபுலாரிடியும் கிடைக்கும் என்று தவறாக கணக்குப் போடாதீர்கள். மீடியாவில் இருப்பவர்கள் நன்றாக உங்கள் வாயைப் பிடுங்கி வார்த்தைகளை வரவழைப்பார்கள். பின்னர் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பிரைம் டைமில் அவைகள் ஒளிபரப்பாகும்.
ஆகவே எப்போது உங்களை மீடியாக்கள் அணுகினாலும்.. குறிப்பாக முதன் முதலில் MP யாக வருபவர்களுக்குச் சொல்கிறேன்.. தனிப்பட்ட முறையில் கண்டிப்பாக அவர்களிடம் பேசாதீர்கள். ஏனென்றால் அவர்கள் தங்களிடம் வேவு பார்க்கும் காமெராக்களையும் ரெகார்டர்களையும் வைத்திருப்பார்கள்.

மீடியாக்களைப் பொறுத்தவரை எந்த பேச்சுமே பதிவாகாத பேச்சு என்று கிடையாது. அதோடு அவைகள் சிலருக்கு 70 வருடங்கள் வாலாட்டிக் கொண்டிருந்தவை. நரேந்திர மோதிஜி NDA அணியில் ஜெயித்த 353 MP க்களுக்கு நேற்று பாராளுமன்ற சென்ட்ரல் ஹாலில் கூறிய சில அறிவுரைகள்..!



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017