புட்டபர்த்தி சாய் பாபாவை நினைவு கூறும் மோடிஜி
புட்டபர்த்தி சாய் பாபாவை
நினைவு கூறும் மோடிஜி – அனுப்பு: வத்ஸலா சங்கரன்
மோடி பாபாவைப் பற்றி முன்பு ஒரு பேட்டியில் சொன்னதின் தமிழாக்கம்.:
நான் பாபாவை 30 வருடங்களுக்கு முன் தரிசித்தேன். அப்போது ஒரு
சதாரணக் குடிமகன் தான். அப்போது பாபா அவர்கள் என்னிடம் அபரிதமான அன்புடனும்,
பாசத்துடனும் அருள் பாளித்தார். அந்த பொன்னான தருணங்களை என்னால் இன்று கூட மீண்டும்
அனுபவித்துப் பார்க்க முடியும். அந்த சுக அனுபவம் தான் என்னை அவரிடம் ஈர்க்கும்
சக்தியாகத் திகழ்கிறது. என் அந்த முதல் சந்திப்பிற்குப் பிறகு, பாபாவை நான்
கணக்கற்ற முறை தரிசித்திருக்கிறேன்.
நான் பாபாவைச் சந்திக்கும் போதெல்லாம் எதையும் கேட்டதும் இல்லை –
எதையும் பேசியது கூட இல்லை. பாபாவை தரிசிக்கவும், அவர் கூட இருக்கவுமே நான்
சென்றேன். தரிசனம் செய்த பலருக்கும் பாபா சில பரிசுகளைக் தனது அன்பின் அடையாளமாகக்
கொடுத்துள்ளார். என்னுடன் வந்த பல பிரமுகர்களும் அவரது பரிசுகளை பெற்ற
அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள். ஆனால், எனக்கு பாபா பரிசு கொடுக்க வில்லை. சுவாமி
என்னைப் பார்த்து புன்முறுவல் செய்து சொல்வார்: “உனக்கு நான் ஒன்றும் கொடுக்க
மாட்டேன். அது ஏன் என்று உனக்குத் தெரியுமா?”
நான் பதில் சொல்லாமல் மவுனமாக அவர் சொல்வதையே கேட்க விரும்பினேன்.
ஸ்வாமிஜி தன் இருதயத்தைத் தொட்டுச் சொன்னார்: “நீ இங்கு
இருக்கிறாய். ஆகையால் இந்த பரிசுகள் அனைத்தும் உனக்கு அர்த்தமில்லாதது!”
ஆழ்ந்த
அன்னையின் அன்பையும், எல்லையில்லா கருணையையும் பாபாவின் சன்னிதானத்தில் நான் அனுபவிக்கும்
பேரு பெற்றவன் நான்.
இந்த
உலகம் பாபாவை எப்போதும் அவரது தன்னலமற்ற சேவைகளையும், தியாகங்களையும் நினைவில் வைத்திருக்கும்.
பாபா மனித குலத்தின் நன்மைக்கு தம்மை அர்ப்பணித்தார்.
Comments