1231-வது ஆண்டு ஜகத் குரு ஆதி சங்கரரின் ஜன்ம ஜெயந்தி – 09-05-2019
கடவுளின் தேசம்
என்று போற்றப்படும் திவ்விய கேரளாவில் உள்ள காலடியில் கி.பி. 788-வது வருடத்தில் பிறந்த
சங்கரர் சன்னியாசம் பெற்று பாரத தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, ஹிந்து
மதத்தின் ஆணி வேரான அத்வைத வேதாந்தத்தை இந்தியாவில் நிலையாட்டினார்.
32-வயதே வாழ்ந்த
ஆதி சங்கரர் கி.பி. 820-வது வருடத்தில் மறைந்தார். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில்
ஆதி சங்கரர் ஆற்றிய பணி அபரிமிதம். அவரை சிவபிரானின் அவதாரமாகவே ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனர்.
புத்தரின் புனிதமான
அஹிம்சைத் தத்துவம் ஹிந்து மதத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், புத்தரின் கடவுள்
கொள்கையால் புராதன மதமான ஹிந்து மதம் பாதிக்கப்பட்டதை ஆதி சங்கரர் தடுத்து அத்வைத சிந்தாந்தத்தைப்
பரப்பி ஹிந்து மதத்தைக் காப்பாற்றினார்.
புத்தர் பிறப்பால்
ஒரு ஹிந்து அரசர். ஆனால், ஹிந்து மதத்தின் சடங்குகளில் உயிர்பலி இடுவதை அவர் மனது ஏற்கவில்லை.
ஆகையால், ஒரு புது மதத்தை – அஹிம்சையை முக்கிய கொள்கையாகவும்,
உயிர்கொலைக்குக் காரணமான
கடவுளையும், கடவுள் சிலை வழிபாட்டினையும் எதிர்த்தார். ஆனால் புத்த மதத்தைப் பரப்பிய
அசோகர் காலத்தில் உயிர்கொலைகள் உணவுக்கோ அல்லது மதத்தின்பேரில் பலியிட்டாலோ தண்டனைக்குரிய
குற்றமாக ஆக்கப்பட்டது. இதனால் புத்தமதம் தோன்றிய இந்தியாவில் வேரூண்றவில்லை.
ஹிந்து மதம் ஜீவ
ஹிம்சையை எதிர்த்தாலும், அதை நடை முறைப்படுத்துவதில் மக்களின் முடிவிற்கே விட்டு விட்டது.
இதில் என்ன முரண்பாடு
என்றால், தற்போது உள்ள புத்தபிட்சுக்கள் புலால் உணவை முற்றிலும் தவிர்ப்பதில்லை – தடை
செய்வதும் இல்லை. இந்த நடைமுறை புத்தரின் மூலக் கொள்கையான அஹிம்சா கொள்கைக்கு முரணாக
இருப்பதையும் யாரும் கேள்வி கேட்பதில்லை.
புத்த மத்தின்
அஹிம்சை மார்க்கம் – இந்து மதத்தின் ஆதி சங்கரரின் அத்வைத ஞானமார்க்கம் இரண்டும் இணந்தால்
இந்தியாவும் – இந்துமதமும் ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக உலக மதமாக உருவாகும் என்று சுவாமி
விவேகானந்தர் அருளி உள்ளார்.
ஆதி சங்கரரின்
அருள் அனைவருக்கும் கிட்ட, வாய்மை சங்கரரின் தாள் பணிந்து பிரார்த்திக்கிறது.
Comments