மோடி மீண்டும் பிரதமர் – 2019 தேர்தலில் ஹிமாலய வெற்றி
NDA – BJP – 303 +
Others – 51 – Total 354
UPA – Con – 52 +
Others – 38 – Total 90
Magabhandan – BSP – 10
+ SP – 5 – Total 15
Other Important
Information:
DMK
– 23 YSR – 22 Tiranamool Congress – 22 Shiv Sena – 18
Janata
Dal United – 16 BJD – 12
TRS – 9 Lok
Jan Shakti – 6 NCP – 5
|
குறிப்பு: பி.ஜேபி. 303 முதல் இடம், காங்கிரஸ்
– 52 இரண்டாம் இடம் (55 இடம் பெற்றால் தான் எதிர்க்கட்சி தலைமை கிடைக்கும். ஆகையால்
சென்ற முறை 44 பெற்ற காங்கிரஸ் இந்த முறையும் அந்த அந்தஸ்தை இழக்கிறது.), மூன்றாம்
இடம் – தி.மு.க. 23, ஒய்.எஸ்.ஆர் மற்றும் திருமூல் காங்கிரஸ் ஒவ்வொன்றும் 22 இடங்கள்
பெற்று நான்காம் இடத்திலும், சிவ் சேனா 18
இடம் பெற்று ஐந்தாம் இடத்திலும், ஐக்கிய ஜனதா
தளம் 16 இடம் பெற்று ஆறாம் இடத்திலும், பிஜு ஜனதா தளம் 12 இடங்கள் பெற்று ஏழாம் இடத்திலும்,
மிகவும் எதிர்பார்த்த மாயாவதி கட்சியோ 10 இடங்கள் பெற்று எட்டாம் இடம் பெற்றும் அதன்
தோழமைக் கட்சியான அகிலேஷ் கட்சி 5 இடங்கள் பெற்று பதினொன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டு
விட்டது.
2019 லோக் சபா
தேர்தலில் பி.ஜே.பி. + 354 இடங்கள் பெற்ற இந்த வெற்றி இந்திரா காந்தியின் இரண்டாவது
முறையாக பிரதம மந்திரியாக 1971-ல் நடை பெற்ற லோக் சபா தேர்தலில் பெற்ற 352 இடத்திற்கு
2 இடங்கள் அதிகமாகும்.
மோடியின்
2014 லோக் சபா வெற்றி மோடி புயல் என்றால், 2019 லோக் சபா வெற்றி மோடி சுனாமியாக இந்தியாவில்
உள்ள அனேக இடங்களில் பலமாகத் தாக்கி உள்ளது. அதில் எந்தவிதமான உயர்வு நவிர்ச்சியும்
இல்லை. அதிலும் மோடி, சென்ற லோக் சபா தேர்தலில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ்,
உத்திரப்பிரதேஷ், டெல்லி போன்ற மாநிலங்களில் அனேகமாக அனைத்து இடங்களையும் கைப்பற்றிய
நிலையில் இது 2019-ல் அதுவும் ‘மோடியின் மத்திய அரசாங்க ஆட்சியின் தாக்கம்’ இந்த உச்ச
கட்ட வெற்றியை மோடிக்குத் தராது’ என்று தான் கடந்த பல வருடங்களாக – குறிப்பாக கர்நாடகா,
ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், சதீஸ்கர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து
– ‘மோடி ஹடோதான் பி.ஜே.பி.க்கு 2019 தேர்தலில்’ என்று டெல்லி லுத்தான்ஸ் மேதாவிகள்,
இடது சாரி மீடியா – பத்திரிகைகள், கான் மார்க்கட் குழுக்கள், துக்கடே துக்கடே என்னும்
நாட்டைத் துண்டு போடத் துடிக்கும் பாகிஸ்தானுக்கு ஜால்ரா போடும் தேசத் துரோகிகள் கணித்து
ஆனந்த சாகரத்தில் திளைத்தார்கள். ஆனால், 2019 லோக் சபா தேர்தல் முடிவோ 303 இடங்கள்
(2014-ல் 282) காங்கிரஸ் 52 இடங்கள் (2014-ல் 44) என்று பி.ஜே.பி. மட்டுமே 2014 தேர்தலை
விட 21 இடங்கள் அதிகம் பெற்று அபார சாதனையை நிகழ்த்தி உள்ளது. உண்மையிலேயே இந்த இன்ப
அதிர்ச்சியிலிருந்து மீள முடிய வில்லை. ஏதோ கனவு காண்கிறோமா என்ற அளவில் மோடியின் வெற்றி
அமைந்துள்ளது.
354 இடங்களில்
வென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓட்டு சதவிகிதம் 44% - 90 இடங்களில் வென்ற ஐக்கிய
முற்போக்குக் கூட்டணியின் ஓட்டு சதவிகிதம் 26% மட்டுமே.
மோடியின் இந்த
2019 வெற்றி எப்படி மோடி அலையிலிருந்து மோடி சுனாமியாக உருவெடுத்து இந்தியாவின் அனைத்து
பாகத்திலும் (ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா தவிர்த்து – அங்கு பி.ஜே.பி.க்கு பூஜ்யம்
இடம் தான்) சுழட்டி அடித்து, காங்கிரஸ் + (90 இடங்கள்), மாஹாத்பந்தன் என்ற மாயாவதி,
அகிலேஷ், லல்லு கூட்டணி (இதில் லல்லு பெரிய பூஜ்யம் – மற்றவர்கள் 10+5=15), சந்திரபாபு
நாயுடுவின் குப்பைக் கூட்டணி (மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் முதல் மந்திரி பதவியையும்
துறக்கும் துர்பாக்கியம் – திருப்பதி வெங்கடாஜலபதி ஊழல் தான் இந்த படுதோல்விக்குக்
காரணம் என்று பாலாஜி பக்தர்கள் சொல்கிறார்கள்) மற்றும் சந்திரசேகர ராவின் மாநிலக் கூட்டணி
என்று அனைவரையும் சுழட்டி திக்குமுக்காட வைத்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்
லல்லுவும், சந்திரபாபு நாயுடுவும் (லோக் சபாவில் தெலுங்கு தேசம் பெற்ற இடங்கள் வெறும்
3), மூத்த ஜேடி.எஸ். தலைவர் தேவ கவுடாவும் (தேவு கவுடா தோல்வி – பெற்ற இடம் – 1), பேயாட்டம்
போட்ட மம்தாவும் (22 இடங்கள் மட்டுமே), டெல்லி கெஜ்ரிவாலும் (பஞ்சாபில் 1 இடம் மட்டும்
– டெல்லியில் 7 இடங்களிலும் தோல்வி) என்ற நிலையில் மொத்த எதிர்கட்சிகளே முக்காட்டில்
உலாவ வேண்டிய கட்டாயத்தில் ஓட்டர்கள் தள்ளி விட்டார்கள். இது இந்திய ஜனநாயகத்தில் நடந்த
ஒரு மாபெரும் தேர்தல் புரட்சியாகும். மேலும் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட்டவர்களின்
சதவிகிதம் அதிகரித்ததும் – அதுவும் முதன் முதலாக ஓட்டுரிமை பெற்றவர்கள் உற்சாகமாக ஓட்டளித்ததும்
மோடியின் தாக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.
முக்கியமாக ராஹுல்
ஸ்மிருதி இரானியால் அமேதி தொகுதியில் 55,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி
உள்ளார். இது ஸ்மிருதி பெற்ற அசாதாரணமான வெற்றியாகும்.
சென்ற 2014-ல்
தேர்தலில் 31% ஓட்டு சதவிகிதத்தில் தான் பி.ஜே.பி. அதிக இடங்களைப் பெற்றது. இது ஒன்றும்
பெரிய வெற்றி அல்ல என்று ஆங்கிலப் புலவர்களான பத்திரிகை – மீடியா அதிமேதாவிகள் கேலி
செய்து, எதிர்கட்சிகளின் ஓட்டு சதவிதங்களைக் கூட்டி மனச் சாந்தி பெற்றனர். ஆனால் இந்தத்
தேர்தலில் ஓட்டர்கள் அவர்களின் வாய்களை பெரிய திண்டுக்கல் பூட்டுக்களால் பூட்டி, மவுன
சாமியார்களாக மாற்றி விட்டதும் மோடி சுனாமிதான்.
பெற்ற 200 இடங்களில்
பி.ஜே.பி. 50% மேலாக ஓட்டு சதவிகிதம் பெற்றுள்ளது. குஜராத் 26 தொகுதிகள், ராஜஸ்தான்
மாநிலத்தின் மொத்த தொகுதிகள் 25-ல் பெற்ற வெற்றியில் 23 தொகுதிகள், மத்தியபிரதேசத்தின்
மொத்த 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற 28 தொகுதிகளில் 25 தொகுதிகள், குறிப்பாக உ.பி.யின்
மொத்த தொகுதியான 80-ல் வெற்றி பெற்ற 62-ல் 40 தொகுதிகள், கர்நாடகாவின் 28 மொத்த தொகுதிகளில்
வெற்றி பெற்ற 25-ல் 20 தொகுதிகள், பீகாரில் வென்ற தொகுதிகளில் 14, 9 ஹரியானாவில், டெல்லியில்
அனைத்து 7 தொகுதிகள் ஆகியவைகளில் 50% மேலான ஓட்டு சதவிகிதைப் பெற்று பி.ஜே.பி. சரித்திரம்
படைத்துள்ளது. மேலும் மேற்கு வங்காளம், ஒடிசா, இமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம்,
ஜார்கண்ட், திரிபுரா ஆகியவைகளிலும் ஓட்டு சதவிகிதம் சென்ற தேர்தலை விட அதிகமாக பி.ஜே.பி.
+ பெற்றுள்ளது.
அத்துடன் தெலுங்கானாவிலும்
4 லோக் சபாவில் வெற்றி பெற்று 19% ஓட்டு விதத்தைப் பெற்றுள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
சென்ற தேர்தலில் 1 இடம் தான் பி.ஜே.பி. பெற்றது.
அருணாசலப் பிரதேசம்
(2), திரிபுரா (2), உத்திரகாண்ட் (5), சண்டிகர் (1) ஆகிய மாநிலங்களில் அனைத்து லோக்
சபா தொகுதிகளிலும் பி.ஜே.பி.தான்.
இவைகளை எல்லாம்
விட இந்தத் தேர்தலில் இரண்டு முக்கிய செய்திகளை ஓட்டர்கள் பொதுவாக அரசியல் தாதாக்களுக்குச்
சொல்லி உள்ளார்கள் என்று தான் கணிக்கத் தோன்றுகிறது.
1. சாதி ஓட்டு
வங்கி இனி எடுபடாது. வளர்ச்சித் திட்டங்களும், தொலை நோக்குத் திட்டங்களும் தான் தேர்தலில்
ஓட்டுக்களை அளிக்கும்.
2. குடும்ப அரசியல்
மூலம் இனி மக்களிடம் ஓட்டுக்களைப் பெற்று ஜெயிக்க முடியாது.
3. இலவசங்கள்
இல்லா நிரந்தரமாக நன்மை பயக்கும் திட்டங்கள் மட்டும் தான் தேர்தலில் எடுபடும்.
ராஹுல் மட்டும்
அல்ல தேர்தலில் தோற்றது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா, இந்து தீவிரவாதப் புகழ்
திக்விஜய் சிங், பெரும் தலைவர் தேவகவுடா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் வீரப்ப மெளளி,
மோடியைத் தூக்கில் தொங்கச்சொன்ன மூத்த காங்கிரஸ் தலைவர் கார்கே, மஹாராஸ்ரா காங்கிரஸ்
மூத்த தலைவர் ஹிந்து தீவிர வாத பிரசாரத்தின் சூத்திரதாரி சுசில் ஷிண்டே, கார்நாடக முதல்வர்
மகன் நிகில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், பா.ஜ.க. ஐஸ்வந்த்
சிங்கின் மகன் மன்வேந்திர சிங்க ராஜஸ்தானில் காங்கிரஸ் வேட்பாளர், தேசியவாத காங்கிரஸ்
தலைவர் அஜித் பவரின் மகன் பர்த் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன்
மலிந்த் தியோரா, அசோக் சவானின் மகன் சங்கர்ராவ் சவான் ஆகியோர் தேர்தலில் மண்ணைக் கவ்விய
தலைவர்களும், அவர்களின் வாரிசுகளும் உள்ள பட்டியல் தான் இது.
மேலும் இந்தப்பட்டியலில்
சந்திரபாபுவின் மகன், சந்திரசேகர ராவின் மகள் ஆகியோர்களும் உண்டு. அகிலேஷ் மனைவி டிம்பிளும்
தோல்வியைத் தழுவி உள்ளார்.
ஆனால் இந்தச்
சுனாமியில் தப்ப்பியவர்கள் தேசிய வாத காங்கிர்ஸ் தலைவர் – சந்திரபாபுவின் ‘மோடி ஹடோ’விற்குத்
துணை நின்ற சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின்
மகள் கனிமொழி ஆகியவர்கள் மட்டும் தான். இவர்கள் இந்த சுனாமியில் சிக்காமலும், வாரிசு
அரசியலிருந்தும் தப்பித்து கரையேறியவர்கள். வரும் காலத்தில் இவர்களும் சிக்குவார்கள்
என்று தான் தோன்றுகிறது.
மேலும் காங்கிரசுக்கு
ஒரு சோக கீதம். இந்தத் தேர்தலில் நின்ற 9 முந்தைய காங்கிரஸ் முதல் அமைச்சர்களும் படு
தோல்வியைத் தழுவி உள்ளனர் என்பதும் ராஹுல் தலைமைக்குக் கிடைத்த பரிசு! இதுவும் ஒரு
வரலாறு காணாத தோல்வி என்பதை காங்கிரஸ் உணரவேண்டும்.
ஆர்யபட்டாவின்
பூஜ்யத்தை காங்கிரஸ் 20 இடங்களில் பெற்று சாதனை படைத்துள்ளது. உண்மையிலேயே காங்கிரஸ்
பஞ்சாப், கேரளா, தமிழ் நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் தான் அதன் 52 இடங்களில் முக்கியமான
பங்கு வகிக்கிறது. அதிலும் பஞ்சாப் – கேரளா மட்டும் தான் அதன் சுய பலத்தில் வெற்றி
பெற்றதாகும். தி.மு.க.வின் தயவில் 10 தொகுதிகளில் தமிழ் நாட்டில் வென்றுள்ளது காங்கிரஸ்.
அகிலேஷ் – மாயாவதி
கட்சிகள் உ.பி.யில் ஆதரித்தாலும் ராஹுல் அமேதியில் 55,000 ஓட்டு வித்தியாசத்தில் ஸ்மிருதி
இரானியிடம் தோற்றது அதுவும் காங்கிரசின் தலைவராக இருக்கும் நிலையில் தோற்றது – கேவலத்திலும்
கேவலமாகும். இந்த அதிர்ச்சி அவரது அரசியல் வாழ்வில் நிழலாகத் தொடர்ந்து, அவரது பிரதம
மந்திரிக் கனவுக்கு சமாதி கட்டியதற்குச் சமமாகும். இந்த தருணத்தில் ராஹுலின் தங்கை
பிரியங்கா ஆபத்பாந்தவளாக காப்பாற்றுவாள் என்று காங்கிரஸ் விசுவாசிகளும், சுற்றியுள்ள
ஜால்ராக்களும் ‘ஆஹா! பிரியங்கா இந்திரா காந்தி சாயல். அதுவே ராஹுலுக்கு ஓட்டை அள்ளும்.
மக்களுடன் எப்படி அன்பாகப் பழகுகிறார்’ என்று துதிபாடினர். பிரியங்கா ‘உ.பி.யில் காங்கிரஸ்
நிற்பது ஜெயிப்பதற்கு இல்லை. ஓட்டைப் பிரித்து, மோடியை மீண்டும் பிரதமராக ஆட்சி பீடத்தில்
அமரத் தடுப்பதற்குத் தான்’ என்று மீடியாவிற்குப் பேட்டி கொடுத்தவுடன் ‘ஆஹா! என்ன சாதுர்யம்?
என்ன சாணிக்கிய தந்திரம்?’ என்று பிரியங்காவைப் புகழ்ந்து தள்ளினர். பிறகு இல்லை இல்லை;
காங்கிரஸ் ஜெயிப்பதற்குத் தான் தேர்தலில் போட்டி இடுகிறது என்று உடனேயே மறுப்புத் தெரிவித்து,
எந்தவிதமான முதிர்ச்சியும் இல்லாமல் காங்கிரஸ் தேர்தல் போட்டியில் இறங்கி உள்ளது. இது
அரசியல் தற்கொலைக்குச் சமம் என்பதை அறியாமல் இப்படி வாரிசு அரசியலின் அடியார்களாகத்
துதிபாடிகளாக இருப்பது காங்கிரசுக்கு அவர்களே மூடுவிழா நடத்திவிடுவார்கள் போல் தோன்றுகிறது.
பஞ்சாப் காங்கிரசின்
நவ்ஜோத் சிங் சித்து ‘ராஹுல் அமேதியில் தேற்றால், நான் அரசியலிருந்தே விலகிவிடுவேன்’
என்று சபதம் இட்டார். பஞ்சாப் முதல்வரும் ‘நானா? அல்லது இந்த பாகிஸ்தான் ராணுவ தளபதியைக்
கட்டி அணைத்த சித்துவா? உடனே முடிவு எடுக்கவும்’ என்று ராஹுலுக்கு அறிக்கை விடுகிறார்.
இது போதாதென்று கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி ‘ஐயா, ஆளை விடுங்க. நான் முதல்வர்
பதவியை ராஜிநாமா செய்கிறேன்’ என்று ரஹுலிடம் சொல்கிறார். ஆனால் நானே ராஜினாமா செய்ய
வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறேன் என்று ராஹுலே புலம்பித் தள்ளும்
நிலையில் உள்ளார்.
எல்லாம் மோடி
சுனாமியில் சிக்கிய திசை தெரியாமல் தவிக்கும் பதவி ஆசை மற்றும் ஊழல் அரசியல் வாதிகளின்
நிலையை நினைத்தால் கேவலமாக இருக்கிறது.
2019 லோக் சபா
தேர்தல் முடிவுகள் முக்கியமாக காங்கிரஸுக்கு மரண அடியாகும். மேலும் சந்திரபாபுவின்
மோடி ஹடோ கூட்டத்தில் இடம் பெற்ற அனைத்து எதிர்கட்சி தலைவர்களுக்கும் மம்தா – தேவகவுடா
– சரத்பவார் கெஜ்ரிவால் உட்பட அனைவரும் அரசியல் சூன்யங்களாகத் தான் இனி வலம் வரவேண்டிய
துர்பாக்கியத்தையும் இந்த லோக் சபா தேர்தல் நிரூபித்துள்ளது. இனி எந்தவிதமான கூட்டணியும்
– பெடரல் – மாஹாத்பந்தன் என்ற எதுவும் அடுத்த பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு மக்களிடம்
எடுபடாது. மீண்டும் மீண்டும் மோடி வேண்டும் என்ற மக்கள் குரல் ஒலிக்கத் தொடங்கி விடும்.
மக்கள் பணம் இனி ஒழுங்காக மக்கள் நலத் திண்டங்களுக்குச் செலவிட வேண்டிய நிர்ப்பந்தம்
உண்டாகி, வாரிசு அரசியலுக்கும் சமாதி கட்டும் காலம் வந்து விட்டது.
லோக் சபா ஆரவாரத்தில்
பி.ஜே.பி. அருணாசலப் பிரதேச சட்டசபையின் 60 தொகுதிகளில் 41 தொகுதிகளில் வென்று முதன்
முதலாக ஆட்சி அமைக்க இருக்கிறது. இது மோடி சுனாமியின் வெற்றியாகும். இந்த வெற்றிக்கும்
அமித் ஷாதான் காரண கர்த்தா.
இந்த அபார தீர்க்கமான
வெற்றிக்குப் பின்னால் இருவருடைய உழைப்பு இருக்கிறது. அமித் ஷாவின் சாணக்கியம் சரித்திரம்
படைத்து விட்டது. அவர் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எந்தவிதமான பதவியையும் பெறாமல்
கடந்த ஐந்தாண்டுகளாக கட்சிப் பணி ஆற்றிய ஒரு தலைவரை இந்தியா இதுவரை கண்டதில்லை. இனியும்
காணுமா? என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. அமித் ஷா எந்த ஒரு நேரத்திலும் தன்னை முன்னிலைப்
படுத்தாமல் ‘மோடி மோடி மோடி’ என்றே தாரக மந்திரம் போல் உச்சரித்து வெற்றி கண்ட தானைத்
தலைவன். தன்னிகரில்லாத, சுயநலமற்ற உத்தமன்.
உண்மையில் மோடியை
விட இந்த வெற்றியில் அமித் ஷாவிற்குத் தான் முக்கிய பங்கு உண்டு. அவரது வேட்பாளர்களைத்
தேர்வு செய்யும் திறன், தைரியத்தை இழக்காமல் துணிந்து செயல்படும் விதம், சிவ்சேனா
– நிதிஷ் குமார் – ராம்விலாஸ் பாஸ்வான் என்று பல கொள்கை முரண்பாடுகளுடன் அரசியல் ஆதாயம்
தேடும் எண்ண முள்ள பல தலைவர்களை ஒருங்கிணைத்து தொகுதிப் பங்கீட்டில் உள்ள பிரச்சனைகளைச்
சுமூகமாகத் தீர்த்து வைத்து தேர்தலில் களம் இறங்கி காரிய கர்த்தாக்களை உழைக்க உற்சாகப்படுத்தி
வெற்றி கண்டுள்ளார்.
பல கூட்டங்களில்
அமித் ஷா மோடியை விட பேசி உள்ளார். வீதி வலப் பிரசாரங்களும் அமித் ஷா மோடியை விட அதிக
அளவில் செய்துள்ளார். அமித் ஷான்வின் பிரசாரக் கூட்டங்கள் ஒன்று கூட விடுபடவில்லை.
அதே போல் தான் மோடியின் பிரசாரக் கூட்டங்களும் ஒன்று கூட விடுபடவில்லை. மேலும் அந்தக்
கூட்டங்கள் குறித்த நேரத்தில் நடத்தப்பட்டுள்ளன. அமித் ஷா பல இடங்களில் இரவு தங்கி
அலோசனை நடத்தி வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். அதிலும் வங்காளத்தில் டிடி. மம்தாவின்
அராஜகத்தை எதிர்கொண்டு வெற்றி கண்ட மாவீரன் அமித் ஷாவாகும்.
அமித் ஷா – மோடி
இருவர்களும் டி.வி. பேட்டிகள், பத்திரிகைப் பேட்டிகள் என்று கடந்த ஐந்து வருடங்களாக
ஓயாமல் உழைத்தவர்கள். அந்த இருவரின் பேட்டிகளில் தெளிவும், தீர்க்கமான தீர்வும், எதிர்க்கட்சிகளின்
அபாண்டமான குற்றச் சாட்டுக்களை தைரியமாக எதிர்கொள்ளும் திறன் ஆகியவைகள் வரும் அரசியல்
தலைவர்களுக்கு உதவும் இலக்கியமாகவே இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த இரு ஒப்பற்ற தலைவர்களின்
ஞாபக சக்தியைக் கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. இந்தத் திறமைகள் ஏதோ படிப்பினாலோ அல்லது
பழக்கத்தாலோ வருவதில்லை. அது கடவுள் கொடுத்த வரமாகும். பாரதமாதாவின் அருளால் தான் அந்த
இரு தலைவர்களும் நமக்குக் கிடைத்துள்ளார்கள். இது எதுவும் உயர்வு நவிர்ச்சி இல்லை என்பதை
நான் அணித்தரமாக உரைக்க விழைகிறேன்.
மோடி – அமித்
ஷா இருவரும் பி.ஜே.பி.யின் இரு கண்களாகும். இருவரும் கட்சியின் ஒளிவிடும் மாணிக்கங்கள்.
பாரத தேசத்தை காங்கிரசின் அராஜகக் கொள்கை – ஊழல்கள் ஆகிய மிகப் பெரிய ஆபத்திலிருந்து
காத்த பாரதமாதாவின் கண்மணிகள்.
இந்த சமயத்தில்
ஆர்.எஸ்.எஸ். மன்மோஹன் சிங்கின் ஆட்சி முடிவுரும் தருவாயில் 2013-ம் ஆண்டில் பி.ஜே.பி.யின்
அப்போதைய தலைவர்களிடம் முறையிட்டது:’அடுத்து வரும் லோக் சபாவில் பி.ஜே.பி. ஜெயிக்க
வில்லை என்றால், அடுத்த 25 வருடங்களுக்கு பி.ஜே.பி.யால் டெல்லி ஆட்சி பீடத்தில் அமர
முடியாது. ஜெயித்தால் பி.ஜே.பியை அடுத்த 25 வருடங்களுக்கு எந்த சக்தியாலும் வெற்றி
கொள்ள முடியாது’.
அதன் பிறகு தான்
அப்போதைய பி.ஜே.பி. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அத்வானி, முரளி மனோகர் ஜோசி, சுஷ்மா
சுவராஜ் ஆகியோர்களுடன் ஆலோசித்து பலரது எதிர்ப்புக் கிடையில் மோடியைத் தொடர்பு கொண்டு
தேர்தலை எதிர்கொள்ள வேண்டினர். அப்போது ராஜஸ்தான், எம்.பி., சதிஸ்கர் என்று லோக் சபா
தேர்தலுக்கு முன் பி.ஜே.பி. சந்திக்க வேண்டிய நிலை.
குஜாராத் முதல்வராக
இருந்த மோடி டெல்லி வந்து பி.ஜே.பி. தலைவர்களைச் சந்தித்து தான் தேர்தலில் பிரசாரம்
செய்ய வேண்டு மென்றால், இரண்டு நிபந்தனைகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தார்.
1. தேர்தல் அங்கத்தினர்களைத்
தேர்வு செய்வதில் தனக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும்.
2. லோக் சபா தேர்தலில்
தன்னை பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
இதற்கு அத்வானி,
சுஷ்மா சுவாஜ், வெங்கைய நாயுடு போன்றோர்கள் மோடியை பிரதம மந்திரி வேட்பாளராக முன்னிருத்த
எதிர்ப்புத் தெரிவித்தனர். துணை பிரதம மந்திரி பதவியை ஏற்க வேண்டினர். ஆனால், மோடி
அதற்கு ஒத்துக் கொள்ளாமல் குஜராத் சென்று விட்டார். பிறகு தான் பல கட்ட ஆலோசனைகளுக்குப்
பிறகு மோடியின் வேண்டுகோள்கள் ஏற்கப்பட்டு, மோடி தேர்தல் களத்தில் குதித்து பல மாநிலத்
தேர்தல்களில் அமோக வெற்றி, லோக் சபாவில் பி.ஜே.பி.க்கு பெரும்பான்மை கிடைத்து மோடி
பிரதமராக முதன் முறையாக பாராளுமன்றத்தின் படிகளை வணங்கிச் சென்றது வெற்றிச் சரித்திரம்.
இப்போது அதே அமித்
ஷா – மோடி ஜோடிகள் மீண்டும் பி.ஜே.பி.க்கு வெற்றி தேடித் தந்து இரண்டாவது முறையாக
17-வது லோக் சபாவில் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் கரைபடியா கர்ம வீரர் மோடி.
மோடியும் அமித்ஷாவும்
இந்த சரித்திரம் படைத்த இரண்டாவது முறையாக பி.ஜே.பி. தனிப்பெரும்பான்மை பெற்ற
வெற்றியைச் சாதாரணமாக மதிப்பிட முடியாது. அவ்விருவரும் இந்த வெற்றியை கோடானு கோடி
கட்சியின் காரியகர்த்தாக்களுக்கு ஆத்மார்த்தமாகக் காணிக்கை ஆக்கிய பவ்வியத்தையும்
பாராட்ட வேண்டும். இது ஏதோ வாய் வார்த்தைகள் இல்லை. அவைகள் அவர்கள் இருவரின்
இதங்களின் ஒலிகளாகும். ஏனென்றால் அவர்கள் இருவரும் கீழ்மட்டத் தொண்டர்களாக இருந்து
கட்சியில் தங்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். குடும்ப உறவினாலோ, வாரிசு அரசியலாலோ
பி.ஜே.பி.யில் உயரவில்லை. உழைப்பு, உழைப்பு, உழைப்பு – என்று உழைத்தார்கள். அந்த
சக்தியால் தான் உயர்ந்துள்ளார்கள்.
75-வயதுக்கு மேல்
ஒருவருக்கும் பதவி கிடையாது என்பதை பி.ஜே.பி. கட்சியில் அமுல் படுத்துவதில் எழுந்த
சிக்கலை மிகவும் கண்ணியமாகவும் சாமர்த்தியமாகவும் கையாண்டு வெற்றி கண்டுள்ளனர்
அவ்விருவரும். இதனால் மோடியும் பாதிக்கப்படுவார் என்பதையும் நீங்கள் கவனித்தால்
அவர்களின் நேர்மையும், தியாக மனப்பான்மையும், தன்னலமற்ற குணமும், கட்சியை
காங்கிரஸ்கம்யூனிஸ்ட்கள் போல் வயதான கட்சியாக்கி சக்தியற்றதாக்க அவர்கள் விரும்பாத
உன்னத கட்சியின் மேம்பாட்டில் உள்ள அவர்களது குணமும் விளங்கும். இந்த தியாக
மனப்பான்மையை எந்தக் கட்சியிலும் பார்க்க முடியாது. மூத்த அரசியல் வாதியான முலாம்
சிங் – தோற்றாலும் பேரன் ஜெயித்த தொகுதியில் நின்று மீண்டும் தேர்தலில் நிற்கும்
வாரிசு அரசியல் குணம் கொண்ட தேவ கவுடா – இவர்கள் தான் மதச் சார்மின்மையைக் கட்டிக்
காக்கும் உத்தமர்களாக வேஷம் போடுகிறார்கள். ஆனால், மோடி – அமித்ஷா கூட்டணையால்
அவர்களின் வேஷம் கலைந்து விட்டது.
‘ஒன்றாக நாம் வளர்வோம்
ஒன்றாக நாம்
முன்னேருவோம்
ஒன்றாக நாம்
சக்திவாய்ந்த, அனைவரையும் அரவணைக்கும்
இந்தியாவை
உருவாக்குவோம்.
இந்தியா மீண்டும்
வென்றது – விஜய் பாரத்
- என்பது தான் மோடி தம் வெற்றியைக் கொண்டாடும் வாழ்த்துச் செய்தி.
சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற அனைவரின்
ஒத்துழைப்பில், அனைவருக்கும் உயர்வு என்ற மோடியின் தாரக மந்திரம் தான் தர்மத்தின்
குரலாகும்.
‘இப்போது பாரத தேசம்
இரண்டு சாதிகளை மட்டும் தான் கொண்டுள்ளது: ஏழைகள், ஏழைகளின் ஏழ்மையைப் போக்க
உழைக்கும் மக்கள். புதிய இந்தியாவை உருவாக்க இந்திய மக்கள் இந்த தேர்தலில் கட்டளை
இட்டுள்ளனர். அதை நிறைவேற்ற என் நேரத்தின் ஒவ்வொரு தருணத்தையும், என் உடம்பின்
ஒவ்வொரு நரம்பையும் பாரத தேச மக்களுக்காகவே உழைக்க உறுதி பூணுகிறேன்.’ என்று மோடி
உருக்கமாக கட்சிக் கூட்டத்தில் பேசு உள்ளார்.
பாரத
மக்கள் மோடி – அமித் ஷா மேல் கொண்டுள்ள நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும். பாரதம் ஒளி
மிகுந்து, மிகவும் வளர்ந்த வளமான நாடாக மோடி அரசில் மிளிரும் என்பது திண்ணம்.
மீண்டும்
மோடி என்ற மனநிலையில் பாரத தேச மக்கள் – மொழி, இனம், சாதி, மதம் – ஆகியவைகளைக்
கடந்து ஓட்டளித்துள்ளனர்.
இந்தத்
தருணத்தில் பாரத மாதாவை வணங்கி, வாய்மை மோடி – அமித்ஷா இருவருக்கும் பூச்செண்டு
கொடுத்து வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கிறது.
தனிக் குறிப்பு: மோடி பிரதமராக பதவி வகித்து இரண்டு வருடங்கள்
கழித்து அவரது ஆட்சியைப் பார்த்து பல முறை மகிந்து ‘இனி இந்தியாவிற்கு விமோசனம்
தான்’ என்று வியந்ததுண்டு. அதே சமயத்தில் மோடி மீண்டும் ஆட்சி செய்ய மக்கள்
ஓட்டளிக்க வேண்டுமே என்ற கவலையும் கூடவே வந்துவிடும்.
மோடியை
நான் ஒரு கர்ம யோகியாகவும், ஒரு அவதார புருஷராகவும் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
நான் ஒரு மோடி பக்தன் என்பதை பல முறை பகிரங்கப் படுத்தி உள்ளேன். அந்த நிலையில்
நான் பேரானந்தம் பெறுகிறேன்.
கர்நாடகாவில்
பி.ஜே.பி. தோற்ற போது மனம் கலங்கினேன். அந்த கலக்கம் ராஜஸ்தான், மத்தியப்
பிரதேசம், சதீஸ்கர் என்று பி.ஜே.பி. ஆட்சியை இழந்த போது அந்தக் கலக்கம் கவலையாக
மனத்தில் கனத்தது.
என்றாலும்
அங்குள்ள மக்கள் மோடி மேல் எங்களுக்குக் கோவம் இல்லை; மாநிலத் தலைவர்களின்
செயல்பாடுகளில் குறை உள்ளது என்று தெரிவித்துள்ளதை அறியும் போது மனச் சஞ்சலம்
குறைந்தது. என்றாலும், இந்த மாநிலங்களில் முந்தைய தேர்தல் போல் மோடியால் ஜெயிக்க
முடியுமா? என்று பயந்தேன். மக்கள் மோடியின் பல நலத் திட்டங்களால் பயன் பெற்றும்
நன்றி கெட்டவர்களாக மாறுவார்களா? என்ற சந்தேகமும் மனத்தில் உண்டாயிற்று.
இதற்குத்
தீர்வு பகவானைப் பிரார்த்திப்பது தான் என்று முடிவெடுத்து, நான் தினமும்
பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்யும் போது கடந்த ஒராண்டாக ‘மோடி மீண்டும்
பிரதமராக வேண்டும். பி.ஜே.பி. மட்டும் 300 இடங்களுக்கு மேலும், அதன் தோழமைக்
கட்சிகள் 60 இடங்களுக்கு மேலும் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய
ஆரம்பித்தேன்.
என்ன
ஆச்சரியம்? அது பலித்து விட்டது. பிரார்த்தனையின் பலன் என்றே நான் இதை
நினைக்கிறேன்.
நானும்
கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடியின் சாதனைகளை உங்களுடன் வாய்மை – இ-டைச் பத்திரிகைகள்
மூலமும், சத்தியமேவ ஜெயதே என்ற தலைப்பில் பல தனி மெயில்கள் மூலமும் ஒரு தவம் போல்
செய்து வந்துள்ளேன்.
பலனை
எதிர் பார்க்காமல் கர்மம் செய் என்பார்கள். செய்தேன். பலனும் மிகவும்
திருப்திகரமாக ஆண்டவன் அருளால் அடையப் பெற்றேன். பாரத நாடு மோடியின் ஆட்சியில்
சிறக்க ஆண்டாவனை மீண்டும் மீண்டும் பிரார்த்திக்கிறேன்.
சத்தியமேவ
ஜெயதே! வந்தே மாதரம்! பாரத மாதாவுக்கு ஜே!
Comments