Posts

Showing posts from February, 2016

ஸ்ரீ சீர்டி சாய்பாபா திவ்ய சரித்திரம்

Image
ஸ்ரீசீரடி சாய்பாபாவின் சரித்திரம் - முழுப் புத்தகம் இந்த இணைப்பில்  உள்ளது. மூல புத்தகத்தின் pdf வடிவத்தை word வடிவத்தில் மாற்றி பிறகு  அதை pdf ஆக மாற்றி உள்ளேன். Font மிகவும் நேர்த்தியாகவும், பல  சாய்பாபாவின் படங்களுடன் படிப்பதற்கு அனுசரைணையாக இந்தப்  புத்தகம் அமைந்துள்ளதை சாய் பக்தர்கள் உணர்வார்கள். இதைப்  படித்தும் பகிர்ந்தும் பயன் அடையப் பிரார்த்திக்கிறோம். 1. Link for word format:  https://docs.google.com/…/11uszsvQOOqKpuUyshjrQkB215O8…/edit 2. Link for pdf format:  https://drive.google.com/drive/my-drive

ஆற்றல் மிக்க ஆலோசனையால் பலியான ஆட்டின் சோகக் கதை

Image
ஆற்றல் மிக்க ஆலோசனையால் பலியான ஆட்டின் சோகக் கதை ஒரு பண்ணையில் குகுதிரையும் ஆடும் நண்பர்களாக இருந்தன , ஒருநாள் குதிரைக்கு உடல்நிலை சரியில்லாமல் கிடையில் விழுந்தது , அதன் உரிமையாளர் மருத்துவரை அழைத்து வந்து பார்த்தார் , மருத்துவர் விஷக்கிருமி பரவியுள்ளது மூன்று நாட்கள் மருந்து குடுக்கலாம் சரியாகவில்லைஎன்றால் குதிரையை கொன்று விடலாம் , இல்லை என்றால் இதே நோய் மற்ற குதிரைகளுக்கும்பரவி விடும் என்றார் , உரிமையாளரும் சரி என்றார் , இதை கேட்டிக் கொண்டிருந்த ஆடு குதிரையிடம் சென்று நண்பா நீ எழுந்து நிக்க முயற்சி செய் இல்லையென்றால் நீ   நிரந்தரமாக முடக்கப்படுவாய்என்றது , குதிரை எதற்கும் அசைந்தபாடில்லை , மறுநாள் மருத்துவர் மருந்து கொடுத்தார் , அப்போதும் ஆடு நண்பா ஏன் இப்படியே இருக்கிறாய் எழுந்து நடக்க முயற்சி செய்து பார் என்றது குதிரையிடம் எந்த மாறுதலும் இல்லை , மூன்றாவது நாளும் மருத்துவர் மருந்து கொடுத்தார் , அப்போதும் எந்த முன்னேற்றமும் இல்லை , மருத்துவர் இனிபயனில்லை குதிரையை கொன்று விடலாம் என்றார் , உரிமையாளரும் சரி என்றார்.அப்போது ஆடு நண்பா இப்போது நீ எழுந்திருக்கவில்லை என்றால் நீ ...

‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தைப் பற்றி ‘ஒரு வரி’ யில் பேசி அசத்திய நரேந்திர மோடி

Image
‘ டிஜிட்டல் ’ தொழில்நுட்பத்தைப் பற்றி ‘ ஒரு வரி ’ யில் பேசி அசத்திய நரேந்திர   மோடி கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையுடன் கைகுலுக்கும் பிரதமர் மோடி சிலிகான் வேலியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் , ஒரு வரியில் எல்லோரும் கவரும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி பல கருத்துகளை தெரிவித்தார். அதைக் கேட்டு பிரபல நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் (சிஇஓ) ஆச்சரியம் அடைந்தனர். * நீங்கள் விழித்திருக்கிறீர்களா , தூங்குகிறீர்களா என்பது இப்போது முக்கியமில்லை. * நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா ஆப் லைனில் இருக்கிறீர்களா என்பது முக்கியம். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான் வேலியில் நேற்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசினார். கூகுள் , மைக்ரோசாப்ட் , சிஸ்கோ உட்பட பல முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் மோடி பேசுகையில் , டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் பல கருத்துகளை ஒரு ஒரு வரியாக எல்லோரையும் கவரும் வகையில் குறிப்பிட்ட...

தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் முஹமத் இக்லாக் கோடூரக் கொலை

Image
தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் முஹமத் இக்லாக் கோடூரக் கொலை உ . பி . யின் சரித்திரத்தில் 28- ம் தேதி செப்டம்பர் மாதம் ஒரு பெரும் கருப்பு நாளாகும் . அன்று 50 வயது முஹமத் இக்லாக் என்ற முஸ்லீம் இந்து மத வெறியர்களால் ஈத் பண்டிகையில் மாட்டுக் கறி சாப்பிட்டார் என்பதற்காகவும் , மிச்ச முள்ள மாட்டுக் கறியை தன் வீட்டில் பிறகு சாப்பிடுவதற்கு பாதுகாத்து வைத்தார் என்பதற்காகவும் அடித்துக் கொல்லப்பட்டார் . அவரது 22 வயது பையன் டானேஷ் பலமான அடியுடன் மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைத்துள்ளார் . இது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியையும் , மோடியின் மேல் வெறுப்பையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது . என்றாலும் , இதை மீடியாவும் , அறிஜீவிகளும் பெரிய அளவில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து போராடி வருகின்றனர் . இந்தியாவில் இந்துக்கள் பலர் மிகவும் கொடூரமாக முஸ்லீம்களால் கொல்லப்பட்டுள்ளனர் . ஏன் , இந்த தாத்ரி சம்பவத்திற்குப் பிறகு இந்துக்களின் கொலைகள் இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்றாலும் , அந்த சம்பவங்கள் பத்திரிகைகள் - மீடியாக்களில் எந்தவித மனச் சஞ்சலமின்றி இயந்திரத்தனமாக வெளியிடப்படுகின்றன ....

சஞ்சீவ் பட்டின் நேர்மையின்மை

Image
சஞ்சீவ் பட்டின் நேர்மையின்மை 2002 குஜராத் கலவரத்தை பெரிசு படுத்தி , இங்குள்ள பெரிய புள்ளிகள் , அரசியல்வாதிகள் , அரசு சாரா அமைப்புகள் , பல முஸ்லீம் கட்சிகள் , காங்கிரஸ் - இடது சாரி கட்சிகள் , பல உலக அமைப்புகள் ஆகியவைகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மோடியை ஒரே அடியாக வீழ்த்த திட்டம் தீட்டி - உள் நாட்டிலும் - வெளிநாட்டிலும் பணப் பிரயோகம் - பதவி அதிகாரம் - துஷ்பிரசாரம் - போலீஸ் வழக்குள் - நீதி மன்ற வழக்குள் - அயல் நாட்டில் அவதூறுப் பிரசாரங்கள் , யு . எஸ் . விசா மறுப்பு - என்று பல முனைகளிலும் தாக்கி அவர்கள் அனைவரும் தரம் தாழ்ந்து , வீழ்ந்து , தோற்றனர் . அதற்குக் காரணம் மோடி தமது நேர்மை , தைர்யம் , தன்னம்பிக்கை ஆகியவைகளுடன் போலியான மதச் சார்பின்மையைப் புறம் தள்ளி மக்களின் நன்மதிப்பைப் பெற்றதாகும் . 2002 குஜராத் கலவரத்திற்கு மூல காரணமான கோத்ரா ரயில் பெட்டியை சுமார் 2000 பேர்கள் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டு கற்களை எரிந்து தீயிட்டதினால்   ரயில் பெட்டிகள் இரண்டு எரிந்து , அதில் இருந்த 59 இந்து கரசேவகர்கள் - அதில்...

கரும்புள்ளி

Image
ஒரு நாள் கல்லூரி ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார் . ‘ இன்று நான் உங்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிட்சையை வைக்கப்போகிறேன் ’ என்றார் . பிறகு ஒவ்வொரு மாணவர்களிடமும் எழுத்துள்ள பக்கம் கீழே இருக்கும் படி கவிழ்த்து ஒரு காகிதத்தை அவர்களின் டெஸ்க்கில் வைத்தார் . ‘ மாணவர்களே ! இப்போது உங்கள் எதிரே உள்ள காகிதத்தைத் திருப்பிப் பார்க்கவும் ’ என்றார் . எல்லா மாணவர்களும் அப்படியே செய்தார்கள் . ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் . அதில் எந்தக் கேள்வியும் இல்லை . நடுவில் ஒரு கரும்புள்ளிதான் இருந்தது . மாணவர்களின் குழப்பத்தை அறிந்த ஆசிரியர் , ‘ மாணவர்களே ! நீங்கள் காகிதத்தில் காண்பதைப் பற்றி எழுதவும் ’ என்று சொன்னார் .    மாணவர்களுக்கு குழப்பமாகப் போய் விட்டது . இருப்பினும் தங்களுக்குத் தோன்றியதை எழுதினார்கள் . பிறகு ஆசிரியர் மாணவர்களின் காகிதங்களை வாங்கி , அவர்கள் அதில் எழுதி இருந்தவைகளை ஒவ்வொன்றாக உரக்கப்படித்தார் . அத்தனை மாணவர்களும் அந்தக் கரும்புள்ளையைப் பற்றியும் , அது காகிதத்தில் இருக்கும் இடம் பற்றியும் தான் எழுதி இருந்தனர் . பிறகு ஆசிரியர் பேச ஆரம்பித்தார் . ‘ மாணவர...

அப்துல் கலாம் என்ற மா மனிதர்

Image
அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது அவரது செகரட்டிரியாகப் பணி ஆற்றிய பி . எம் . நாயர் , ஓய்வு பெற்ற ஐ . ஏ . எஸ் . அதிகாரி , கலாமுடம் பழகி அந்த அற்புத நாட்களைப் பற்றி சமீபத்தில் பொதிகை தொலைக் காட்சியில் ஒளிபரப்பட்ட பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் . ‘ கலாம் எஃபக் ’ என்ற தலைப்பில் புத்தகமும் எழுதி உள்ளார் . அதன் தழுவலான பேட்டியின் கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்கு : Ø   கலாம் வெளிநாட்டிற்குச் சென்ற போது அவருக்குக் கொடுக்கப்படும் பரிசுகளை வாங்காமல் இருந்தால் அது அந்த நாட்டினரை அவமானப்படுத்துவதுடன் , இந்தியாவிற்கும் தர்ம சங்கடமான நிலையை உருவாக்கும் என்பதால் , அவைகளை வாங்கி , பிறகு அவைகளை போட்டோ எடுத்து பட்டியல் இட்டு , பிறகு அவைகளை அரசாங்கக் கருவூலத்தில் சேர்த்து விடுவது கலாமின் பாணி .  ராஷ்ரபதி பவனிலிருந்து செல்லும் போது , கலாம் ஒரு பென்சில் கூட எடுத்துச் செல்ல வில்லை என்பதை நான் தெரிவிக்க வேண்டும் . Ø   2002 வருட ரம்தான் நோன்பு ஜூலை - ஆகஸ்ட் மாதம் வந்தது . ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி இஃப்தார் விருந்தை ராஷ்ரபவதி பவனில் நடத்துவது மரபு . ஆனால் , கல...

வகுப்புக் கலவரத் தீயில் கொழுந்து விட்டு எரியும் மால்டா

Image
முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய பிரமுகரான அஸாம் கான் நவம்பர் 2015 அன்று ‘ ஆர் . எஸ் . எஸ் . தலைவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் . ஆகையால் தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் ’ என்று சொன்னார் . அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஹிந்து மஹா சபாவின் தலைவர் காம்லேஷ் திவாரி , ‘ உலகத்தின் முதல் ஓரினச் சேர்க்கையின் முதல் நபர் தீர்க்கதரிசி முஹமத் ’ என்று சொல்லி அது இந்தியாவின் முஸ்லீம் மக்களைக் கொதிப்படைய வைத்தது . ஒரு லட்சம் முஸ்லீம்களுக்கும் மேல் முசாபர்நகர் வீதிகளில் குவிந்து திவாரிக்கு மரண தண்டனை விதிக்கும்படி போராடினர் . திவாரியை 1- ம் தேதி டிசம்பர் மாதம் உத்திரப்பிரதேச மாநிலம் கைது செய்து சிறையில் அடைத்தது .  3- ம் தேதி ஜனவரி 2016 அன்று மால்டாவில் முஸ்லீம் மதத்தினர் ‘ ஷாரியா சட்டத்தின் படி திவாரியைத் தூக்கில் போட வேண்டும் ’ என்று மதக் கலவரத்தில் ஈடுபட்டனர் . அந்தக் கூட்டத்திற்கு நோட்டீஸ் , சுவரொட்டிகள் ஆகியவைகளை அச்சடித்து வழங்கியவர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பீஹார் மாநில ராஜ்ய சபா எம் . பி . யான குலாம் ராசூல் பால்யாவி என்பவராகும் . ...