ஸ்ரீ என்ற லட்சுமி தேவி குடியிருக்கும் இடங்கள்
மஹாபாரதத்தில் 13-வது பர்வா - அனுசாசன பர்வாவாகும். இதில் யுதிஷ்டிரரின் பலவிதமான கேள்விகளுக்கு பீஷ்மர் தமது அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டே உபதேசம் செய்கிறார்.
இந்தப் பதிவு கும்பகோணம் காலேஜ் சம்ஸ்கிருத பண்டிதர் திரு. தி. ஈ. ஸ்ரீநிவாஸாசாரியா என்பவரால் சம்கிருதமூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது. அதன் மின் வலைத் தொடார்பு இணைப்பு:
படித்து பலன் பெறவும்.
எஸ். சங்கரன்.
யுதிஸ்டிரர் : ஸ்ரீ என்ற லட்சுமி தேவி எப்படிப்பட்ட புருஷ்டர்கள், ஸ்த்ரீகளிடம் குடியிருப்பாள்?
பீஷ்மர்: தாமரை மலர் போன்ற முகமுள்ள ஸ்ரீ தேவி நாராயணருடைய மடியில் அமர்ந்திருந்தாள். அப்போது கிருஷ்ணனுடன் இருந்த ருக்மிணி தேவி ஸ்ரீ தேவியைப் பார்த்துக் கேட்டாள்: மூன்று லோகத்தையும் ரக்ஷிக்கும் நாதரின் காதலியே! பிருகு மஹரிஷியின் பெண்ணே! நீ யாரிடம் எல்லாம் குடி கொண்டிருக்கிறாய்? யாரிடம் நீ குடி கொண்டிருப்பதில்லை?' என்ற கேள்விகளுக்கு ஸ்ரீ தேவியின் பதில்:
அழகும், தைர்யமும், வேலைத் திறமையும், வேலை செய்து கொண்டிருப்பவனும், கோபமில்லாதவனும், தெய்வ பக்தியுள்ளவனும், நன்றி மறவாதனும், ஐம்புலங்களையும் அடக்கினவனும், சத் குணத்தை ஒரு போதும் விடாதவனும் ஆகிய குணங்கள் கொண்ட மனிதர்களிடம் நான் நித்திய வாசம் செய்கிறேன்.
தொழில் செய்யாதன், நாஸ்திகன், நன்றி கெட்டவன், ஒழுக்க மில்லாதவன், கொடுஞ்செய்கையுள்ளவன், அடக்க மில்லாதவன், பெரியோரிட த்தில் பொறாமைப் படுவன் ஆகிய மனிதர்களிடம் நான் வசிப்பதில்லை.
பராக்கிரமும், தேக வன்மையும், மன உத்சாகமும் கெளரவமும் குறைந்து எல்லாவற்றிற்கும் துயரப்பட்டும், கோப ப் பட்டும் நினைத் த தை செயல்படுத்தாமல் இருக்கும் மனிதர்களிடம் நான் இருக்க மாட்டேன்.
இயற்கையிலேயே மனச் சோர்வு அடைபவரக்ளும், அல்பத்தில் திருப்தி அடையும் தன்மை உள்ளவர்களும் ஆகிய மனிதர்களிடம் நான் ஒரு போதும் இருப்பதில்லை.
தர்மத்தை அனுஷ்டிப்பவரும், தர்ம ம் தெரிந்தவரும், பெரியோரை மதிப்போரும், அடக்க முடையவரும், பிறர் மனத்தை அறிந்து உதவுபவர்களும், காலத்தை சிறிதும் வீணாக்காதவரும், தானத் திலும், சு த் த த்திலும் ஊக்கமுள்ளவரும் தேவதைகளி ட த்திலும் பிராமணர்களி ட த்திலும் அன்பு பாராட்டுபவர்களும், மஹாத்மாக்களிடமும் நான் எப்போதும் வசிக்கிறேன்.
வீடுகளையும் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்துக் கொண்டு பசுக்களையும் தான்யங்களையும் ஊக்கத்துடன் பராமரிக்கும் பெண்களிட த்தில் நான் எப்போது வசிக்கிறேன்.
தர் மத்தை அறிந்து அனுஷ்டிப்பவளும், அடக்கத்துடன் பெரியோர்களுக்கு பணிவிடை செய்வதில் ஊக்கமுள்ளவளும், புருஷர்களி ட த்தில் பொறுமையு, அடக்கமும், சத்தியமும், தேவர்கள் - பிராமணர்கள் ஆகியவர்களை பூஜிப்பவளும் ஆகிய பெண்களிடத்தில் நான் வசிக்கிறேன்.
பண்டங்களைக் காப்பாற்றாதவளும், கணவனுக்கு விரோதமாகப் பேசுகிறவளும், நாண மற்றவளுமான பெண்களிடம் நான் ஒரு போது குடி கொள்வதில்லை.
ஆசையுள்ளவளும், கார்யத்தில் திறமை அற்றவளும், கர்வமுள்ளவளும், சுத்தமில்லாதவளும், கலகத்தில் நாட்ட முள்ளவளும், அதிகமாக தூக்குபவளும் ஆகிய குணங்கள் கொண்டவளிடம் நான் குடி இருக்க மாட்டேன்.
எப்போதும் உண்மை பேசுபவளிடமும், அழகும் குணமும் உள்ளவளிடமும், கற்புள்ளவளிடமும், மங்களகரமாக அலங்கரித்துக் கொள்பவளிடமும் நான் வசிக்கிறேன்.
வாகனம், கன்னிகை, ஆபரணங்கள், யாகங்கள், மழை பொழியும் மேகங்கள், புஷ்பிக்கும் தாமரைக் கொடிகள், நக்ஷத்திர வரிசைகள், யானைகள், மாட்டுக் கொட்டில்கள், அரச சிம்மாச ன ங்கள், விளை நிலங்கள், தாமரைத் தடாகங்கள், அன் னப் பறவைகள், மரங்கள், நதிகள் ஆகிய அனைத்திலும் நான் வாசம் செய்கிறேன்.
அக்னி ஹோத்திரம் செய்யும் கிரஹங்கள், கோ சம்ரக்ஷணை செய்யும் வீடுகள், வேத பாராயணம் செய்யும் பிராமண வீடுகள் ஆகியவைகளும் நான் வசிக்கும் இடங்களாகும்.
என் பதி நாராயணரிடம் முழு அன்புடனும், முழு மனத்துடனும் சரீர மெடுத்து நான் வசிக்கிறேன். மற்ற இடங்களில் நான் இவ்வாறு சரீரத்தோடு இருப்பதில்லை.
நான் வாசம் செய்பனிடம் அவனது புண்யம், புகழ், பொருள், இன்பம் எல்லாம் பெற்று மேன்மை அடைகிறான்.
Comments