விதுர நீதி



உபயம்: AI GOOGLE CHATGPT

1. விதுரர் பற்றிய முன்னுரை:


மகாபாரதம் ஆதி பர்வா, அத்தியாயம் 107 இல் ஒரு கதை உள்ளது. இது விதுரர் தர்மதேவர் பெற்ற சாபத்தால் பிறந்ததாக விவரிக்கிறது. ஆகையால் அவர் சப விமோசனம் பெற பூமியில் யம தர்ம ராஜாவின் அம்சமாகப் பிறந்தவர் என்பதை அறியவேண்டும்.   

அந்தக் கதையின் விபரம் இதோ: 

விதுரரின் பிறப்பு மாண்டவ்யர் என்ற ரிஷியின் சாபத்தால் நிகழ்ந்தது. அரசன் ஒருவன் மாண்டவ்யரை திருடர்களுக்கு உதவியதாக தவறாகக் திருடர்களுடன் மாண்டவ்ய ரிஷியையும் கழுவில் ஏற்றிக் கொல்ல முயன்றான். ஆனால் அவரது உயிர் போகாமல் கழுவில் இருப்பதை அறிந்த அரசன் ரிஷியின் ஆசிரமத்திற்கு வந்து அவரை கழுவிலிருந்து இறக்கி மன்னிப்புக் கேட்டான். 

உயிர் பிழைத்த ரிஷி யமனைச் சந்தித்தார். அப்போது யமனிடம் 'ஒருவருக்கும் தீங்கு செய்யாத எனக்கு ஏன் இந்த தண்டனை?' என்று வினவ, அதற்கு யம தர்ம ராஜன் 'நீ சிறுவயதில் பூச்சிகளின் கண்களை ஒரு புல்லால் குத்தி துன்பம் விளைவித்தாய். அதன் கர்ம வினையால் வந்தது தான் கழுவில் ஏற்றப்பட்டு அடைந்த துன்பம்' என்று விளக்கினார். அதற்கு மாண்டவ்ய ரிஷி 'யமனே! சிறு வயதில் அறியாமல் செய்த பிழைக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது நீ செய்த பெரும் பிழை. ஆகையால் நீ பூலோகத்தில் அரச வம்சத்தில் பிறப்பாய். அப்படிப் பிறந்தாலும் அரியணை ஏறி அரச பதவி கிடைக்காமல் வாழ்வாய்' என்று சாபம் கொடுத்தார். 

அந்த சாபத்தினால் அஸ்தினாபுரத்தின் அரசிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோரின் பணிப்பெண்ணான பராஷ்ரமிக்கும், வியாசருக்கும் விதுரர் மகனாகப் பிறந்தார். 

அம்பிகா - அம்பாலிகா இருவரும் காசி ராஜாவின் மகள்களாவர்அவர்கள் இருவரும் ஹஸ்தானாபுரியின் ராஜாவான விசித்திரவீர்யாவை மணம் செய்து கொண்டு, மனைவிகளாகினர். . அவர்களுக்கு குழந்தைகள் பிறக்க வில்லை. ராஜா விசித்திரவீர்யனும் இறந்து விட்டான். விசித்திரவீர்யனின் அம்மா சத்தியவதிக்கு 'ஆண் வாரிசு இல்லாமல் ராஜ்ய பரிபலனம் செய்ய முடியாது' என்று கருதி தன் மற்றொரு மகனான வியாச ரிஷியை அரண்மனைக்கு வர வழைத்து அவரை அம்பிகா - அம்பாலிகா இருவருக்கும் கர்பதானம் அளிக்க வேண்டினார். வியாசரின் அழுக்கு உடலைப் பார்த்து அம்பிகா தனது கண்களை மூடினார். அம்பாலிகாவோ வியாசரின் அழுக்கு உடலைக் கண்டு பயந்தார். ஆகையால் அம்பிகாவிற்கு குருடரான திருதரஷ்டிரனும், வீரம் இல்லா பாண்டு அம்பாலிகாவுக்கும் பிறந்தனர்


திருதராஷ்டிரர்

குறைகளோடு பிறந்தவர்கள் அரியாசனத்தில் அமரும் அருகதை இல்லை என்பதை அறிந்த சத்தியவதி மீண்டும் வியாசரை அம்பிகாவிற்கு கர்ப தானம் செய்ய வேண்டவும், அம்பிகா தன் உடையில் தனது பராஷ்டமி என்ற தாதியை அனுப்பி வைக்கவும், அதனால் பிறந்தவர் தான் விதுரர். 

இப்படித்தான் விதுரர் திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். பாண்டு சீக்கிரமாகவே ஆகால மரணமடைய திருதராஷ்டரர் அரசராக அரியனை ஏற, அவருக்கு பிரதம மந்திரி, நிதி ஆலோசகர், நீதி ஆலோசகர் என்று பல பதவிகளை வகித்தார். திருதராஷ்டிரருக்கு உறுதுணையாகவும், அவருக்கு பல நீதிகளைப் போதித்தவராகவும் விதுரர் வலம் வருகிறார் மஹாபாரதத்தில்

திருதராஷ்டிரர், பாண்டு மற்றும் விதுரர் ஆகியோர் தங்கள் இளமை நாட்களை ஹஸ்தினாபுரத்தில் இணை பிரியா சகோதரர்களாகக் கழித்தனர். அவர்களின் ஆசிரியர் பீஷ்மர். 

வில்வித்தை, வாள் சண்டை, மல் யுத்தம், யானைகளைக் கட்டுப் படுத்துதல் போன்ற யுத்தப் பயிற்சியுடன் வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் , இதிஹாஸங்கள் போன்றவற்றையும் விதுரர் மற்றும் அவரது சகோதரர்களும் கற்றுக்கொண்டார். 

இதன் மூலம் விதுரர் நீதியையும் போர் வித்தையினையும், கல்வியையும் ஒரே நேரத்தில் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. 

விதுரர் ஒரு பிராமணருக்கும் ஒரு தாதி சூத்திரப் பெண்ணிற்கும்  பிறந்ததால், அவருக்கு அரசராகும் உரிமையை இழந்தார். இருப்பினும்   தேவக மன்னனின் அரண்மனையில் ஒரு பிராமணனுக்கு சூத்திரப் பெண்ணால் பிறந்த பெண் ஒருத்தி வளர்க்கப்பட்டு வந்தாள். அவள் பெயர் சுலபா. ராஜா தேவகாவின் அனுமதியுடன், பீஷ்மர் அந்த பெண்ணை விதுரருக்கு திருமணம் செய்து வைத்தார். 

விதுரர் எப்போதும் நீதியை விரும்பியவர். நீதியையே எந்த நிலையிலும் தைரியமாக வெளியிடும் தீரம் கொண்டவர். அவர் கௌரவர்களையும் பாண்டவர்களையும் சமமாகப் பார்த்தாலும், அவர் நீதி வழியைப் பின்பற்றும் பாண்டவர்களை கெளரவர்களை விட நேசித்தார். 

துரியோதனன் பிறந்த நேரத்தில் பல தீய சகுனங்கள் காணப்பட்டன. அந்தக் குழந்தை வளர்ந்தால் சந்திர வம்சத்திற்கு வால் நட்சத்திரமாக இருக்கும் என்பதை விதுரர் புரிந்து கொண்டார். விதுரர் திருதராஷ்டிரருக்கு அந்தக் குழந்தையை தூக்கி எறிவது நல்லது என்று அறிவுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நாட்டின் நலனை நேசிப்பவர் விதுரர்

துரியோதனனின் பல தீய செயல்களைலிருந்து பாண்டவர்களைக் காப்பாற்றியவர் விதுரர்

அது மட்டுமல்ல. சூதில் அனைத்தையும் இழந்து வனவாசம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட பாண்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று திருதராஷ்டிரரிடம் வாதிட்டார் விதுரர்


திருதராஷ்டிரர் விதுரரை சபையிலிருந்து வெளியேற்றுதல்


பொறுமையிழந்த விதுரர், திருதராஷ்டிரரின் மகன்களின் அக்கிரமத்தை எதிர்த்துப் பேசினார். சொந்த மகன்களை விட்டு விட்டு, பாண்டவர்களை மீண்டும் அழைத்து வந்து அவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கும்படி திருதராஷ்டிரரிடம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தினார். திருதராஷ்டிரருக்கு இந்த அணுகுமுறை பிடிக்கவில்லை. விதுரர் பாண்டவர்களின் மேல் பாசம் கொண்டவர் என்றும், அவர் பாரபட்சமாக பாண்டவர்களை ஆதரிப்பவர் என்றும் கூறி, அவரை அரண்மனையை விட்டு வெளியேறச் சொன்னார். இதனால் விதுரர் வருத்தமடைந்து,  பாண்டவர்களை வெகுதூரம் நடந்து கம்யகா வனத்தை அடைந்து  சந்தித்தார்.




ஆனால் விதுரர் சென்றதும் திருதராஷ்டிரர் மனம் வருந்தி, மீண்டும்  விதுரரை வரவழைத்து, ஆலோசகர் - நிதிமந்திரி ஆகிய பதவிகளை மீண்டும் அளித்தார்.

அந்தக் காலத்திலேயே பதவிப் பறிப்பு - மீண்டும் பதவி அளிப்பு என்ற அரசியல் ஏற்பட்டதாக அறியலாம். 

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர் நிகழாமல் இருக்க எடுத்த விதுரரின் முயற்சிகள் வெற்றி அடையவில்லை. ஆகையால் போரில் விதுரர் பங்கு கொள்ளாமல் யமுனை நதிக்கரையை அடைந்தார். 

பாரதப் போர் முடிவுக்கு வந்தது. கௌரவர்கள் அழிந்தனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயற்சிகள் தொடங்கப்பட்டன. இந்த முயற்சிகள் அனைத்திலும் விதுரர் பாண்டவர்களுக்கு உதவியாக இருந்தார். 

அவர் தமது பெரும்பாலான நேரத்தை திருதராஷ்டிரருடன் கழித்தார். 

விதுரர் யுதிஷ்டிரருக்கு புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தை எவ்வாறு மேற்கொள்வது என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு தனது கடைசி நாட்களைக் கழிக்க காட்டுக்குச் செல்ல முடிவு செய்தார். 

சதாயுப சன்னிதிக்கு அருகில் கங்கைக் கரையில் ஒரு துறவு இல்லம் அமைக்கப்பட்டு விதுரர் அங்கு வசித்து வந்தார்.   

திடீரென்று விதுரர் ஞாபகம் வந்து யுதிஸ்டிரர் அவரைச் சந்திக்க அந்த கங்கைக் கரையில் உள்ள துறவு இல்லத்திற்குச் சென்றார். அங்கு விதுரர் இல்லை 

'விதுரர் தீவிரமாக தபம் செய்கிறார். காற்றைத் தான் உணவாக உண்கிறார். காட்டில் வசிக்கிறார்' என்ற செய்தி கேட்டு தர்மர் விதுரரைக் காட்டில் தேடி அலைந்தார். அவர் யாரையும் பார்க்க விரும்பாமல் ஓடி அலைகிறார் என்ற செய்தியையும் தர்மர் கேட்டார்.

 



காட்டில் தேடி அலைந்த பிறகு விதுரர் எலும்பும் தோலுமாக உருத்தெரியாமல் இருப்பதைப் பார்த்துக் கண்ணீர் விட்டார். 

விதுரரின் தலைமுடி எல்லாம் ஜடா முடியாகி, நிர்வாண கோலத்தில், சேறுகளாலும், காட்டுப் பூக்களாலும் உடம்பிலெல்லாம் ஒட்டிக் கொண்டு இருக்க, அவர் வாயில் ஒரு மரக் கட்டையை கடித்துக் கொண்டு இருந்த கோலத்தை தர்மர் பார்த்து மனம் கலங்கி கண்ணீர் விட்டார். 

தர்மரைப் பார்த்தும் விதுரர் ஓட ஆரம்பித்தார். தர்மரோ விதுரரைப் பார்த்துச் சத்தம் போட்டு 'நான் தர்மபுத்திரர்..' என்று சொன்னவுடன் விதுரர் ஓடுவதை விடுத்து, ஒரு மரத்தின் அடியில் நின்றார் 

யுதிஷ்டிரைப் பார்த்த விதுரர் "பார், தர்மபுத்திரன் என் முன் தலை வணங்குகிறார்" என்றார். 

சிறிது நேரத்தில் விதுரனின் உடலில் இருந்து ஒரு தெய்வீகப் பிரகாசம் வெளிப்பட்டு யுதிஷ்டரின் உடலுக்குச் சென்ற பிறகு, விதுரனின் உடல் உயிரற்ற நிலையில் தரையில் விழுந்து விட்டது. விதுரரும், யுதிஷ்டிரும் தர்மதேவரின் பகுதிகளாக இருந்ததால் இந்த சங்கமம் ஏற்பட்டது. 

அவரது உடலை எரிக்க வேண்டாம் என்ற அசிரீரி வாக்குக்கு ஏற்ப அவரது உடல் காட்டிலேயே விடப்பட்டது.

 

2. விதுர நீதி நூல் பற்றிய முன்னுரை:

 

விதுர நீதி மஹாபாரதம் உத்யோக பர்வாவில் 8 அத்தியாயங்களாக (உத்யோக பர்வா மூல நூலில் 33 முதல் 40 அத்தியாயங்கள் வரை) 593 மொத்த ஸ்லோகங்கள் கொண்ட அற்புதமான உரையாடல்கள் மூலம் நீதி போதனை செய்யும் நூலாகும். ஹஸ்தினாபுர அரசர் திருதராஷ்டிரருக்கும் அவரது ஒன்று விட்ட சகோதரர் விதுரருக்கும் நடந்த உரையாடலாகும் இது. இது ஒரு நாள் இரவு முழுவதும் நிகழ்ந்த உரையாடலாகும்

அத்தியாயம் 1 - மொத்த ஸ்லோகங்கள் 128

அத்தியாயம் 2 - மொத்த ஸ்லோகங்கள் 86

அத்தியாயம் 3 - மொத்த ஸ்லோகங்கள் 77

அத்தியாயம் 4 - மொத்த ஸ்லோகங்கள் 74

அத்தியாயம் 5 - மொத்த ஸ்லோகங்கள் 64

அத்தியாயம் 6 - மொத்த ஸ்லோகங்கள் 47

அத்தியாயம் 7 - மொத்த ஸ்லோகங்கள் 85

அத்தியாயம் 8 - மொத்த ஸ்லோகங்கள் 32

ஆக மொத்த ஸ்லோகங்கள் - 593. 

அநேக ஸ்லோகங்கள் திருக்குறள் போல் இரண்டு வரிகளிலும், சில ஸ்லோகங்கள் நாலடியார் போன்று நான்கு வரிகளாகவும் இருக்கின்றன

அர்த்த ராத்திரியில் திருதராஷ்டிரர் விதுரரை அழைத்து உரையாடக் காரணம் என்ன? என்ற கேள்வி எழலாம்

அதற்கு திருதராஷ்டிரரே நேடியாகவே பதில் சொல்கிறார்

'விதுரா! சற்று முன் தான் பாண்டவர்களிடம் என் நிமித்தமாகத் தூது சென்ற சஞ்சயன் என்னைத் திட்டிவிட்டு 'தூதின் விவரங்களை நாளை சபையில் தெரிவிப்பேன் .. அஜாத சத்திரு யுதிஸ்டிரர் சொன்ன பதிலை அப்போது சொல்வேன்' என்று கோபமாகச் சென்று விட்டான். அதன் விவரம் தெரியாமல் என் மனம் அல்லாடுகிறது. என்னால் தூங்க முடியவில்லை. தர்மம் - அர்த்தம் அனைத்தும் அறிந்த நீ தான் எனக்கு அறிவுரை வழங்க வேண்டும்.' 

இதைச் செவிமடுத்த விதுரர் பதில் சொல்கிறார்: 'ராஜன்! தன்னை விடப் பலசாலியை எதிர்ப்பவன் அல்லது மிகவும் பலஹீனமான உதவி இன்றித் தவிக்கும் அனாதையானவன் ஆகியவர்கள் தான் தூக்கமின்றி சங்கடப்படுவார்கள். திருடர்கள் மற்றும் காமவெறி பித்தவர்கள் ஆகியவர்களும் இரவில் தூக்கமின்றி அவதிப்படுவார்கள். 

நரேந்திரா! இந்தக் குறைகள் ஒன்றும் உங்களிடம் இல்லை. மேலும் மற்றவர்களின் செல்வத்தைக் கவரும் எண்ணமும் உங்களிடம் இல்லை என்றும் நான் நம்புகிறேன்.' 

திருதராஷ்டிரர் பதில் சொல்கிறார்:  'உன்னுடைய நேர்மையான வார்த்தைகளையும், தீர்க்கமான நன்மை பயக்கும் ஆலோசனைகளையும் நான் கேட்க ஆசைப்படுகிறேன். இந்த ராஜ்ய சபையில் நீ ஒருவன் தான் படித்த பண்டிதர்கள் அனைவராலும் மதிக்கப்படுபவன்.' 

விதுரர் அதன் பிறகு தமது நீதி போதனைகளை மிகவும் விஸ்தாரமாக விளக்கிச் சொல்கிறார். 

அதைப் பற்றி இங்கு எழுதுவதற்கு முன் சில கருத்துக்களை வாசகர்கள் முன் வைக்க நினைக்கிறேன். 

விதுரர் பலரது கடமைகள், குணங்கள், குற்றங்கள், நியாயங்கள், தர்மங்கள், தீயவைகள், தீண்டத்தகாதவைகள் என்று பலவற்றைப் பற்றிப் போதிக்கும் பொழுது பல மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை நான் காண்கிறேன். பல இடங்களில் பட்டியல் இடப்பட்டு குறிப்பிட்டுள்ளன. ஆகையால் வாசகர்களுக்குச் சலிப்பு ஏற்படாமலும், அதே நேரத்தில் விதுர நீதியின் ஆதார ஸ்ருதி எந்த விதத்திலும் பாதிக்காமலும் இருக்கும் அளவில் எழுத வேண்டிய பணியை நான் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன். 

சுவை குன்றாமல் கருத்து குறையாமல் படிப்பவர்களின் மனம் கவரும் வண்ணம் இந்த விதுர நீதியை உங்களுக்குப் படைக்க விழைந்துள்ளேன். 

எவ்வளவு தான் கவனமாக இருப்பினும், சில கருத்துக்களை திரும்பத் திரும்ப எழுத வேண்டிய நிலையும் தவிர்க்க முடியாததாக இருப்பதையும் வாசகர்கள்  உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். 

ஆகையால் அந்த எட்டு அத்தியாயங்களில் உள்ளவைகளை உள் வாங்கி, உணர்ந்து, முக்கிய கருத்துக்களை முன்னிருத்தி முக்கியத்துவம் கொடுத்து எளிய நடையில் எழுத உத்தேசம். 

3. விதுர நீதி

 

அத்தியாயம் 1:

 முன்னுரை:  

தமது நீண்ட நீதியை திருதராஷ்ட்ரருக்கு விளக்குவதற்கு முன் விதுரர் திருதராஷ்ரரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறார். 

விதுரிரன் கண்டிப்பான சொற்கள்: 'யுதிஸ்டிரர் நீங்கள் மூத்தவர் என்ற நிலையில் உங்களிடம் மிகவும் மரியாதை கொண்டுள்ளார். அவர் ஒரு வீரர். இருப்பினும் அவர்  மென்மையானவர். கருணை, நேர்மை, உண்மை ஆகிய உயர்ந்த குணக் குன்று. இதனால் தான் அவர் மவுனமாக ஒன்று மாற்றி ஒன்று என்று துரதிர்ஷ்டம் தொடர மிகவும் கஷ்டங்களை அனுபவித்தார். ஆனால், நீங்கள் செய்தது என்ன? நேர்மையான யுதிஸ்டிரரிடம் ராஜ்யத்தை ஒப்படைக்காமல் மிகவும் திறமையற்ற துரியோதனன், சகுனி, கர்ணன், துத்சாதனன் ஆகியவர்களிடம் ஒப்படைத்தீர்கள். இந்த உங்கள் செய்கையால் எப்படி ஒரு ராஜ்யத்தை ஆளும் ராஜா என்ற உங்கள் பதவிக்குப் புகழ் சேர்க்கும்?

 ஒரே மரத்திலிருந்து யாகம் செய்யப் பயன்படும் ஹோமக் கரண்டிகள் போன்ற தர்ம காரியங்களுக்கு உதவும் நல்ல பாத்திரங்களும், உலக்கை போன்ற தண்டனை அளிக்க உதவும் கெட்ட கருவிகளும் உருவாகின்றன. ஒரே குலத்தில் பிறந்தாலும் பாண்டவர்கள் அறிவாளிகளாகவும், உன் மைந்தர்களான கெளரவர்கள் அறிவிலிகளாகவும் பிறந்துள்ளனர். ஆகையால் ராஜயத்தை அறிவாளிகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும்.'  

இதைச் சொல்லி விட்டுத் தான் பலவிதமான நீதிகளை திருதராஷ்டரிடம் சொல்கிறார். 

முதலில் பண்டிதனின் குணங்களை 16 ஸ்லோகங்களில் விளக்கிச் சொல்கிறார். ராஜ்ய பரிபாலனம் செய்ய பண்டிதர்களின் ஆலோசனைகள் அவசியம் என்பது இதிலிருந்து தெரிகிறது

பிறகு அறிவிலிகளைப் பற்றி 9 ஸ்லோகங்களில் விளக்குகிறார்

இதன் பிறகு பொதுவான தனி மனிதர்களின் தர்மத்தை 7 ஸ்லோகங்களில் சொல்கிறார்

மன்னிக்கும் பண்பைப் பற்றி 5 ஸ்லோகங்களில் சொல்லப்படுகிறது

பிறகு பல பொதுவான நீதி 18 ஸ்லோகங்களில் போதிக்கப்படுகிறது

நற்குணங்கள் பல பட்டியல் இட்டு போதிக்கப்படுகின்றன. அவைகள்  31

ஸ்லோகங்களாக உள்ளன

பிறகு உள்ள 19 ஸ்லோகங்கள் குறிப்பாக ராஜாவுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள், கடமைகள், ராஜ தர்மம் ஆகியவைகள் போதிக்கப்படுகின்றன. 

கடைசி இரண்டு ஸ்லோகங்களில் விதுரர் திருதராஷ்டிரனை வேண்டுவதாக அமைந்துள்ளது

அது தான் இது: 'அம்பிகானந்தனா! உன்னால் சபிக்கப்பட்ட ஐந்து பாண்டவராஜாக்களும் ஐந்து இந்திரர்களுக்குச் சமான வீர்ர்கள். அவர்களை நீங்கள் தான் அன்போடு பேணிக்காத்தீர்கள். அவர்களுக்குக் கல்வியைக் கற்பிக்க ஏற்பாடு செய்ததும் தாங்களே! அவர்கள் எப்போதும் உங்களுக்கு அடிபணிந்து, அன்பு பாராட்டுபவர்கள்

அண்ணா! பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய ராஜ்யத்தின் பங்கைக் கொடுத்து விடுங்கள். இப்படிச் செய்தால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழலாம். நரேந்திரா! நான் சொன்ன படி நீங்கள் நடந்தால் தேவர்களோ, மக்களோ யாரும் உங்களிடம் குறைகண்டு தூற்ற மாட்டார்கள்.' 

இப்போது விதுரர் கூறிய நீதிகளைப் பற்றிச் சுருக்கமாக அறிவோம்

பண்டிதர்களின் பண்புகள்

உயர்ந்தவைகளில் நாட்டம், குறையுள்ளவைகளைத் தவிர்த்தல், கடவுள் நம்பிக்கை ஆகிய குணங்கள் கொண்டவன் யாரோ அவனே பண்டிதன்

கோபம் - ஆனந்தம், புகழ் - இகழ், ஆகியவைகளால் பாதிக்கப்படாமல் இருப்பவன் எவனோ அவனே பண்டிதன். 

தனது செயல், தனது கொள்கை ஆகியவைகளை பிறர் முன்பே அறியாமலும் அவைகள் செயல்பாட்டிற்கு வந்த பிறகே அறியச் செய்பவன் எவனோ அவனே பண்டிதன். 

வெப்பம் அல்லது குளிர், பயம் அல்லது நட்பு, செழுமை அல்லது ஏழ்மை ஆகியவைகளால் யார் பாதிக்கப்படாமல் இருக்கிறானோ அவனே பண்டிதன். 

எந்த வேலையையும் முழுமனதுடன் ஏற்று செயல்படுபவனே பண்டிதன். ஒருவர் கேட்காமல் தனது அபிப்பிராயத்தை வெளியிடும் இயல்பு இல்லாதவன் பண்டிதன். ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசித்து ஆரம்பித்து முடிப்பவன் பண்டிதன். செய்யும் வேலையை பாதியில் நிறுத்தி அவதிப்படுவன் இல்லை பண்டிதன்

மனத்தை எப்போதும் கட்டுப் படுத்தி வைப்பவன் பண்டிதன். கங்கா நதியில் பல சுழல்கள் உண்டானாலும், அவைகளால் கங்கை நதி பாதிக்கப்படாமல் இருப்பதைப் போல் பண்டிதன் ஒரு பொழுதும் மனம் கலங்க மாட்டான்

பிறரின் தூற்றுதல்களினாலோ அல்லது புகழுரைகளினாலோ பாதிக்கப்படாதவன் எவனோ அவனே பண்டிதன்

பேச்சுத் திறமை, உரையாடுவதில் நேர்மை, இலக்கியத்தில் பாண்டித்தியம், கல்வியில் நிபுணத்துவம், நடத்தையில் கண்ணியம் - இவைகள் தான் பண்டிதனை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் திறமைகளாகும்

ஒரு வில் வீரனின் அம்பு ஒருவனைக் கொல்லாமல் இருக்கலாம். ஆனால் பண்டிதனின் அறிவுரையைக் கேட்காத அரசனின் ராஜ்யம் அழிவது திண்ணம்

அறிவிலி

படிக்காத முட்டாளாக இருந்தும் அகம்பாவம் கொண்டு தவறான வழிகளில் சொத்துச் சேர்ப்பவன் தான் அறிவிலி. நண்பர்களை அவர்களின் நடவடிக்கைகளில் தலையிட்டு, நம்பிக்கை துரோகம் செய்து அவர்களுக்கு தவறான வழிகாட்டி துன்பப்பட வைப்பவன் எவனோ அவனே அறிவிலி

தன்னை விரும்பாத பெண்ணை காதலிப்பதும், தன்னை விரும்பும் பெண்ணை விரும்பாது தவிர்ப்பதும், தன்னை விட வலுவானவனைப் பகைப்பதும் ஆகிய குணவானே அறிவிலி

நண்பனைப் பகைவனாகவும், பகைவனை நண்பனாகவும் பாவித்து, பலவிதமான தீய செயல்களை இதன் மூலம் செய்பவன் எவனோ அவனே அறிவிலி

எதையும் நம்பாமல் செய்யும் காரியங்களில் தயக்கம் காட்டி அவைகளைச் சீக்கிரம் செய்து முடிக்காமல் இருப்பவனே அறிவிலி

மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்யாதவன், கடவுளை நம்பாதவன், நம்பிக்கைக்குறிய நண்பர்கள் இல்லாதவன், கெட்டவர்களின் நட்பை நாடுபவன், வேண்டாத கோபம் கொண்டு சிக்கலில் மாட்டுபவன், சூன்யத்தை நம்புவன், கருமியிடம் கையேந்தும் மூடன் - இவைகள் எல்லாம் அறிவிலியின் அம்சங்களாகும்

தன் தவறான செயல்களுக்குத் தானே குற்றவாளியாக இருப்பினும், மற்றவர்களைக் குறை சொல்லி, கோபம் கொண்டு செயல்படுவன் எவனோ அவனே அறிவிலி

கொடுமையானவன்

தன்னை அண்டியவர்களைப் புறக்கணித்து தான் மட்டும் வயிறு நிறையச் சாப்பிட்டு, உயர்ந்த உடைகளை உடுத்தி வாழ்பவனை விடக் கொடியன் உலகத்தில் ஒருவரும் இல்லை

அரசின் கடமைகள்

இன்பம் அடையும் வழிக்குச் செய்ய வேண்டியது இது தான்: இரண்டிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து, மூன்றை நான்கால் கட்டுக்குள் அடக்கி, ஆறை அறிந்து, ஐந்தை வெற்றி கொள்ள வேண்டும். ஏழைத் தவிர்க்க வேண்டும்

(இதற்கு விளக்கம்

ஆறு குணாதிசயங்களைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் ஒருவன் இன்பமாக வாழலாம் என்பது தான் இதில் விதுரர்  நீதியாகச் சொல்கிறார்

ஒன்று என்றால் அறிவு; இரண்டு என்றால் சரியானது - தவறானது; மூன்று என்றால் நண்பர், எதிரி, பொதுவானவர்; நான்கு என்றால் சமரசம், லஞ்சம், விரோதத்தை விதைத்தல், தண்டனை; ஐந்து என்றால் ஐந்து உடலின் பொறிகள்; ஆறு என்றால் சமாதான ஒப்பந்தம், யுத்தம், படை திரட்டல், தாக்கும் நேரத்திற்கு காத்திருத்தல், ஏமாற்றும் யுக்தியைக் கடைப்பிடித்தல், அடைக்கலம் கோரல்; ஏழு என்றால் பெண் மோகம், சூது, வேட்டையாடல், குடி, கடிமையாகப் பேசுதல், கொடுமையாக தண்டித்தல், செல்வத்தை விரையம் செய்தல்.)

விஷம் குடித்தால் தான் ஒருவன் சாவான்; ஆயுதம் தாக்கினால் தான் ஒருவன் காயப்படுவான். ஆனால் அரசியல் ரகஸ்யம் வெளியே தெரிந்தால், அதனால் ஒரு முழு ராஜ்யமே - அரசன் அவனது பிரஜைகள் அனைவரும் - அழிவார்கள். 

ருசியான பதார்த்தத்தை தனியாக ஒருவனே உண்ணுதல் கூடாது. ஒரு யாத்திரிகன் தனியாகப் பயணிக்கக்  கூடாது. அனைவரும் தூங்கும் பொழுது ஒருவன் மட்டும் விழித்திருக்கக் கூடாது. எந்தக் காரியத்தையும் பிறரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படக் கூடாது

, ராஜன்! மேல் உலகமான சொர்க்கம் செல்ல ஒரு ஏணி தான் உண்டு; அது தான் உண்மை. அந்த உண்மை தான் சமுத்திரத்தைக் கடக்க உதவும் படகு போல் ஒருவன் சொர்க்கம் செல்ல உதவும்

பொறுமையின் பெருமை; 

உலகில் பொறுமையோடு இருக்கும் மனிதனை குறையுள்ளவனாக கணிக்கிறார்கள். பொறுமையான மனிதன் மிகவும் பலஹீனமானவன் என்று தான் மக்கள் கருதுகிறர்கள். ஆனால் யதார்த்த நிலை அது இல்லை. பொறுமை மனிதனின்  குறையாகக் கொள்ளக் கூடாதுபலஹீனமானவனுக்கு பொறுமை ஒரு நற்குணமாகும் என்றால் பலசாலிக்கோ அந்தப் பொறுமை ஒரு ஆபரணமாகும்

பொறுமை தான் உலகத்தை வெல்லும் சக்தி படைத்தது. அந்த பொறுமையால் உலகத்தில் அடையமுடியாதது ஒன்றுமில்லை. மூர்க்கன் பொறுமை என்ற வாளைக் கையில் கொண்டவனிடம் ஒன்றும் செய்ய முடியாது தோற்பது நிச்சயம்

உலர்ந்த சருகுகள் இல்லாத இடத்தில் உள்ள நெருப்பு எரிய முடியாமல் தானாகவே அணைந்துவிடும். அது போல் தான் பொறுமையுடன்   பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். 

நேர்மை என்பது ஒரு பெரிய நன்மை தரும் குணமாகும். அடுத்து பொறுமை சமாதானத்தின் தூண். ஜீவ அஹிம்சை என்பது சந்தோஷத்தின் மூலமாகும். 

 நற்குணங்களின் பட்டியல்

குறிப்பு: நற்குணங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்று பத்து குணங்களாகப் பட்டியல் இடப்பட்டு விதுரர் தமது தனி மனித, சமூக, அரச நீதிகளை உபதேசிக்கிறார்

ஒன்று

v  நேர்மை என்பது மிக உயர்ந்த நன்மையைக் கொடுக்கும்.

v  பொறுமை என்பது மிக உயர்ந்த அமைதியைக் கொடுக்கும்.

v  கல்வி என்பது மிக உயர்ந்த திருப்தியைக் கொடுக்கும்.

v  அஹிம்சை என்பது உயர்ந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். 

இரண்டு

v  தன் ராஜ்யத்தின் மேல் படை எடுக்கும் எதிரியை எதிர்த்து சண்டையிடாத அரசன், வெளியே சென்று கோயில்கள் - புண்ணிய நதிகளுக்குச் செல்லாமல் கிணற்றுத் தவளையாக காலம் கழிக்கும் அந்தணன் ஆகிய இந்த இரண்டு பேர்களும் வளைகளில் ஒளிந்திருக்கும் பறவைகள் பாம்புகளால் கொல்லப்படுவதைப் போல் இந்த பூமியில் அல்லல் படுவாரகள்.

v  உலகில் ஒருவன் ஜொலிக்க வேண்டும் என்றால் கடும்சொல் பேசாமலும், தீயோனைப் போற்றாமலும் இருக்க வேண்டும்.

v  சுய புத்தியை மதிக்காமல் பேராசை கொண்ட பெண்களின் அசைகளை பூர்த்தி செய்ய விழைபவன், மூட பக்தி கொண்ட அறிவிலிகளின் செயல்களை மதிப்பவன் - இருவரும் இகழப்படுவார்கள்.

v  ஏழையின் ஆசைகள் - யஜமானனாக இல்லாதவனின் கோபம் ஆகிய இரண்டும் முட்கள் போன்று உடலை காயப்படுத்தும்.  

v  கடமை தவறிய கிரஹஸ்தன் - உலக ஆசைகள் நீங்காத சந்நியாசி ஆகிய இருவரும் வாழ்வில் தோற்றவர்களே.

v  பொறுமைசாலியான செல்வந்தர், கருணை உள்ளம் கொண்ட ஏழை ஆகிய இருவருக்கும் சொர்க்கம் நிச்சயம்.

v  செல்வத்தை நியாயமாகச் சம்பாதிக்க வேண்டியதுடன், அதை  தகுதியுள்ளவர்களுக்கு அளித்தும், தகுதி இல்லாதவர்களைத் தவிர்த்தும் செயல்பட வேண்டும். .

v  கல்லைக் கட்டி நீரில் மூழ்கடிக்கப்பட வேண்டியவரகள்: தர்மம் செய்யாத பணக்காரன்; தூயமையற்ற ஏழை.

v  யோகம் பயின்றவன், போரில் மாண்ட வீரன் இருவர்களும் சொர்க்கம் அடைவது நிச்சயம்..

மூன்று

v  வேதங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் உலகத்தோருக்கு உரைத்த நீதி இது தான்: மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய  கொள்கைகள் மூன்று வகைப்படும்: கீழானது, நடுத்தரமானது, மேலானது.

v  மூன்று பேர்களுக்களிடம் செல்வம் இருக்கக் கூடாது: மனைவி, அடிமை, மகன். அவர்களிடம் செல்வம் சேர்ந்தால், அதை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

v  ஒருவன் அழிவிற்குக் காரணம்: பிறர் சொத்தை அபகரித்தல், பிறர் மனைவியை நாடல், நட்பினை இழத்தல்.

v  ஒருவனை அழிக்கும் நரகத்தின் மூன்று வாசல்கள்: காமம், கோபம், பேராசை. இந்த மூன்றையும் ஒருவன் தவிர்க்க வேண்டும்.

v  பரிசளித்தல், வெற்றி பெறல், மகன் பெறல் ஆகிய மூன்றும் பகையாளியின் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்குச் சமம்.

v  ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்கள்: நம்பிக்கையான வேலையாள், ஒரு பொழுதும் கைவிடாது பின்பற்றும் நபர், உற்ற நண்பன் 

நான்கு

v  ஒரு அரசன் பெரும் வீரனாக இருப்பதற்கு இந்த நான்கு பேர்களின் உறவுகளையும் தவிர்க்க வேண்டும்: குறைந்த அறிவுள்ளவன், திட சித்தம் இல்லாதவன், சோம்பேறி, துதிபாடுபவன்.

v  எந்த கிரஹஸ்தன் திட சித்தத்துடன் வயதான பெற்றோர்கள், உயர்ந்த நிலையிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு அவதியுறுபவன், ஏழை நண்பன், குழந்தைச் செல்வம் இல்லாத சகோதரி ஆகிய நான்கு பேர்களையும் காப்பாற்றுகிறானோ அவனுடைய வீட்டில் செல்வம் கொழிக்கும்.  

v  பிரஹஸ்பதியே கீழ்க்கண்ட நான்கு வகையானவர்களின் செயல்களும் உடனேயே நன்மை பயக்கும் என்று அருள் பாலித்துள்ளார்தெய்வீக லோக சஞ்சாரிகளின் சக்தி, அறிஞர்களின் புகழ், அறிஞர்களின் விநயம், தீயவர்களை அழிப்பவர்கள்.  

v  நான்கு கர்மாக்களையும் ஒழுங்காகச் செய்தால் ஒருவன் பாதுகாக்கப்படுகிறான். அவைகளைத் தவறாகச் செய்யின் பிரளயமான துன்பங்கள் வந்தடையும்: அக்னிஹோத்ர யாகம், மௌனம், படிப்பு, பொதுவான மற்ற யாகங்கள்

ஐந்து

v  எந்தக் காரணத்திற்காகவும், ஒவ்வொரு மனிதனும் இந்த ஐந்தை வணங்குவதை கைவிடக்கூடாது: தகப்பனார், தாயார், தீ, ஆத்மா, குரு.

v  பூமியில் ஒருவன் புகழ் அடைய இந்த ஐந்து பேர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்: கடவுள்கள், பித்துருக்கள், சந்நியாசிகள், விருந்தாளிகள்.

v  ஒருவன் எங்கு பயணித்தாலும் தொடர்ந்து கூட வருபவர்கள் இந்த ஐந்து பேர்கள்:   நண்பர்கள், பகைவர்கள், நடுநிலையாளர்கள், அண்டி இருப்பவர்கள், அண்டி இருப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள்.

v  ஒரு தோல் பையில் ஓட்டை விழுந்து விட்டால் அதில் தண்ணீர் ஒழுகி காலியாகிவிடும். அதைப் போல் தான் மனிதனின் ஐந்து புலன்களில் ஒரு புலன் பழுதானாலும், அதனால் அறிவு மழுங்கி அவன் அவதிப்படுவான்

ஆறு

v  இந்த உலகில் சொத்து சுகம் பெற விழையும் ஒருவன் கீழ்க்கண்ட ஆறு செயல்களைத் தவிர்க்க வேண்டும்: தூக்கம், சோர்வு, பயம், சோம்பல், முடிவெடுக்காமல் குழம்பித் தவிப்பது.

v  சமுத்திரத்தில் பயணிக்கும் போது உடைந்த கப்பலை எவ்வாறு விட்டு விடுவோமோ அதே போல் இந்த ஆறு பேர்களையும் தவிர்க்க வேண்டும்: உணமையை மறைக்கும் ஆசான், வேத மந்திரங்களைச் சரியாக ஓதாத புரோகிதர், மக்களைக் காக்கத் தவறிய அரசன், அன்பாகப் பேசாத மனைவி, ஆடு மேய்ப்பவன் ஆடுகளை மேச்சலுக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலே இருக்க விழைபவன், நாவிதன் கிராமத்தை விட்டு காட்டிற்குச் சென்று வாழப் பிரியப்படுபவன்.

v  ஒரு மனிதன் ஒரு பொழுதும் இந்த ஆறு குணங்களைக் கைவிடக்கூடாது: உண்மை, தானம், விடா முயற்சி, பொறாமைப் படாமை, பொறுமை, மன உறுதி.

v  ஒரு மனிதனுக்கு சந்தோஷம் கொடுப்பது இந்த ஆறாகும்: செல்வம் சேர்ப்பது, நோயற்ற உடல், இனிய சொற்கள் பேசும் மனைவி, கீழ்ப்படியும் மகன், பணம் சம்பாதிக்க உதவும் கல்வி.

v  அடி மனதில் ஆழமாக பதிந்து இருக்கும் ஆறுவகையான தீயவைகளை முழுமையாக வெற்றி கொண்டவனை பாபங்கள் ஒருபொழுதும் தீண்டாது. அதனால் உண்டாகும் சோகங்கள் அவர்களைச் சூழாது. அந்த ஆறு வகையான தீயவகைகள்: காமம், கோபம், பேராசை, பற்று, செருக்கு, பொறாமை.

v  ஒவ்வொருவரும் பலவிதமான செயல்கள் மூலம் தங்கள் வாழ்வைக் கழிக்கிறார்கள். ஒரு திருடன் கவனக் குறைவானிடம் திருடியும், வைத்தியன் வியாதியஸ்தனை நம்பியும், வேசி காமம் கொண்டவர்களாலும், யாகத்தை நம்பி புரோகிதனும், சண்டை சச்சரவுகளால் வரும் வருமானத்தில் அரசனும், முட்டாள்களால் கல்வி கற்பிக்கும் ஆசிரியரும் தங்கள் வாழ் நாட்களை கழிக்கிறார்கள்.

v  கீழ்க்கண்ட ஆறையும் ஒரு சில நிமிடங்கள் கவனிக்காமல் இருந்தாலும் அவைகள் அழிந்து விடும்.: பசு, சேவை, விவசாயம், மனைவி, கல்வி, நீசனுடன் சகவாசம்.

v  கல்வி கற்ற பின் ஆசானை மறக்கும் மாணவன், கல்யாணத்திற்குப் பின் தாயை மறக்கும் மகன், தன் காமம் உடலுறவுக்குப் பிறகு தீர்ந்ததால் அந்தப் பெண்ணைக் கைவிடும் காமுகன், வெற்றி அடைந்த  மனிதன் தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களை மறப்பவன், கடல் பயணத்தில்  கரையைக் கடக்க உதவிய  படகை மறக்கும் பயணிநோயைக் குணப்படுத்திய வைத்தியனை மறக்கும் நோயாளி - இவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவியர்களை மறக்கும் நன்றி கெட்ட ஜென்மங்கள்.

v  ஒருவனின் சந்தோஷத்திற்குக் காரணமான ஆறுவை யானவைகளை கீழே பட்டியல் இட்டு காட்டப்பட்டுள்ளது: ஆரோக்கிய உடம்பு, கடன் இல்லா நிலை, வெளி நாடு செல்லாமல் உள்நாட்டிலேயே தங்குபவர்கள், நற்குணமுள்ளவர்களின் நட்பு, மனத்திற்குப் பிடித்த வேலை கிடைத்தல், பயமில்லா வாழ்வு

v  ஒருவனின் துக்கத்திற்குக் காரணமான ஆறுவகையானவைகள்: பொறாமை, இரக்க குணம், குறைகாணும் மனம், கோபம், சந்தேக மனம், அடுத்தவனை அண்டிப் பிழைத்தல்

ஏழு

பெரும் சீரழிவுகளை ஏற்படுத்தும் தீமைகள் ஏழாகும். இந்த ஏழு தீமைகளையும் ஒரு அரசன் தவிர்க்க வேண்டும். அவைகள்: பெண்ணாசை, சூதாட்டம், வேட்டையாடுதல், மது அருந்துதல், கடுஞ்சொல், மிகவும் அதீத தண்டனை, செல்வத்தை தவறாகப் பயன்படுத்தல்

எட்டு

v  ஒருமனிதனின் அழிவிற்கு பிராமணனை எட்டுவிதமாக தவறாக நடத்துவது காரணமாகும். பிராமணனை வெறுப்பது, பிராமணனை எதிர்ப்பது, பிராமணனின் சொத்தை அபகரிப்பது, பிராமணனைக் கொல்வது, பிராமணனை அவதூறாகப் பேசுவதில் சந்தோஷம் கொள்வது, பிராமணனை புகழ்வதைக் கேட்பதில் துக்கம் கொள்வது, சடங்குகளைச் செய்வதற்கு பிராமணர்களை அழைக்காமல் மறப்பது, பிராமணன் யாசகம் கேட்கும் போது கோபம் கொள்வது ஆகிய எட்டாகும். அறிவாளி இந்த எட்டுவகையான தீமைகளை அறிந்து, அவைகளை தவிர்க்க வேண்டும்.

v  கீழ்க்கண்ட எட்டுவகையானவைகள் ஒருவனுக்கு சந்தோஷம் கொடுக்கும் முக்கியவானவைகளாகும். அவைகள்: நண்பர்களுடன் ஒன்றாக கூடி இருப்பது, அதிகமான சொத்து சேர்ப்பது, மகனைத் தழுவுதல், அன்புள்ள மனைவியுடன் கூடி மகிழ்தல், இனிமையான உரையாடல்கள், சமூகத்தில் பெரிய அந்தஸ்தைப் பெறுதல்,  விரும்பியது அனைத்தையும் அடைதல், கூடி இருக்கும் மக்களின் அன்பைப் பெறுதல்.

v   ஒரு மனிதனுக்கு பெருமை சேர்க்கும் எட்டுவகையான குணாதிசயங்கள்: அறிவு, உயர்குலப் பிறப்பு, சுய கட்டுப்பாடு, கற்றல், வீரம், பேச்சில் நிதானம், தன் தகுதிக்குத் தகுந்த அளவில் தர்மம் செய்தல்

ஒன்பது

v  ஒரு மனிதனின் உண்மையான வீடு அவனது உடம்பாகும்இந்த உடம்பான வீட்டிற்கு ஒன்பது கதவுகள், மூன்று தூண்கள், ஐந்து காப்பாளர்கள் ஆகியவைகள் உண்டு. அந்த வீட்டில் குடிகொண்டிருக்கும் சொந்தக்காரர் மனிதனின் ஆத்மாவாகும்இதை அறிந்தவன் ஒரு பெரிய உண்மையான தத்துவ ஞானியாவான்

 (குறிப்பு

  • உடம்பின் ஒன்பது கதவுகள்: இரு காதுகள், இரு கண்கள், இரு மூக்கு துவாரங்கள், வாய், மலவழி, சிறுநீர் வழி.
  • உடலின் மூன்று தூண்கள்: வாயு, பித்தம், கபம்.
  • உடலின் ஐந்து காப்பாளர்கள்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம்.
  • உடலின் சொந்தக்காரர்: உயிர் அல்லது ஆத்மா. ) 

பத்து

கீழ்க்கண்ட பத்துப் பேர்களுக்கும் நல்லொழுக்கம் என்றால் என்ன என்பது தெரியாது. குடிகாரர்கள், கவனமில்லாதவர்கள், பித்தன், களைத்தவன், கோபிப்பவன், பசித்தவன், அவசரக்காரன், பேராசைக்காரன், பயந்தவன், காமாந்தகன். இந்த பத்துவிதமான கெட்ட  பழக்க வழக்கங்களை புத்திசாலியானவன் தவிர்த்து வாழவேண்டும்

இதை விளக்க விதுரர் ஒரு பழமையான கதையைச் சொல்கிறார். பிரஹலாதனின் மகன் விரோசனா. பிரஹலாதன் சுதன்வன் என்ற பிராமணனுடன் தன் மகன் பற்றி உரையாடியது அந்தக் கதையாகும்

(குறிப்பு: இந்த உரையாடல் மூன்றாவது அத்தியாயம் முதல் ஸ்லோகத்திலிருந்து ஆரம்பமாகிறது.) 

சிறந்த அரசனின் குணாதிசயங்கள்

(அத்தியாயம் 1 - ஸ்லோகம் எண்கள் 109 - 128 - மொத்தம் 20 ஸ்லோகங்கள்

குறிப்பு: இதில் பல குணாதிசயங்கள் மீண்டும் மீண்டும் விவரிக்கப்பட்டுள்ளன. ஆகையால் அவைகளைத் தவிர்த்து மிகவும் முக்கியமான புதிய தகவல்களை மட்டும் இங்கு எடுத்து எழுத உத்தேசம். மூல உரையினை படிக்க விழையும் வாசகர்கள் கீழ்க்கண்ட மின் வலைத் தொடர்பை கிளிக் செய்து படிக்கவும்

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.knowingourroots.com/wp-content/uploads/2021/08/Vidura-Needhi.pdf

- ஆசிரியர்}

 

அரசன் பிறருக்கு தனது செய்கையால் உதாரண புருஷனாய் விளங்குதல் வேண்டும்

நேர்மையாக ஆட்சி செய்யும் அரசனின் கஜானா எப்போதும் நிரம்பி வழியும். குற்றவாளிகள் தான் அவனது ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள். தண்டனையும் நியாயமாக வழங்கப்படும். மேலும் தண்டனையிலிருந்து கைதிகளுக்கு மன்னிப்பும் வழங்கப்படும். எப்பொழுது, யாருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்பதில் அரசன் நேர்மையாகச் செயல்படுவான்

ஏழைகளையும், மிகவும் பலஹீனமானவர்களையும் உரிய மரியாதையுடன் நடப்பதில் கவனம் செலுத்தும் அரசனாக இருப்பான்

எதிரி அரசனின் பலம், பலவீனம் அறிந்து சமாதானம் அல்லது யுத்தம் ஆகியவைகளை அந்தந்த சமயத்திற்குத் தகுந்தபடி செயல்படுவான் அரசன். தோல்வி கண்டு மனம் கலங்காமல், மீண்டும் வீருகொண்டு எழுந்து, தோல்வியை வெற்றியாக மாற்றிவிடுவது சிறந்த அரச இயல்பு

பழைய விரோதத்தை மீண்டும் நினைவு கொண்டு செயல்படாமல் இருப்பது நற்குணம் என்று நீதிமான்கள் புகழ்வார்கள். ஒருவருக்கு பரிசு கொடுத்துவிட்டு, அதைப் பற்றி மனம் குமுறி வருந்தும் மனம் படைத்தவனாக இருப்பது தவறு என்பதை உணர்ந்து செயல் படுவோன் சிறந்த அரசன்.   

ஒரு இடத்திற்குச் செல்லும் போது அந்த இடத்தில் வாழும் சிறந்தவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துவது ஒரு சிறந்த அரசனின் லட்சணம்

தனக்கு சரிசமமானவர்களுடன் கல்யாண சம்பந்தம் கொள்வதை ஒரு கொள்கையாகக் கடைப்பிடிப்பது அரசனின் கடமை. கீழ் மட்டத்து ஆட்களுடன் சம்பந்தம் செய்வதை தவிர்ப்பது அரச நீதியாகும்

அளவோடு சாப்பிடுதல், தன்னைச் சேர்ந்தோருடன் ஒன்றாக உணவு உண்டல், அதிக உடல் உழைப்பில் ஈடுபட்டாலும் அதிகமாக தூங்காமை, எதிரி உதவி கேட்கும் போதும் அவனுக்கும் உதவுதல் - இவைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு பேராபத்து வராது

அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டல், உண்மையைக் கடைப்பிடித்தல், கருணை காட்டல், தூய உள்ளம் கொண்டு அனைத்தையும் அணுகுதல் ஆகிய குணங்கள் ஒருவனை உயர்ந்த ஒளிவிடும் தன்மை கொண்ட ஆபரணக் கல்லாக திகழச் செய்யும்.  

பிறருக்குத் தெரியாமல் இருந்தாலும் தான் செய்த தவறான செயலுக்கு மிகவும் மனம் வருந்தி வெட்கப்படுபவன் உலகத்திற்கே குருவாக வழிகாட்டும் தகுதி பெற்றவனாகிறான். அவன் சுடர் விடும் சூரியனுக்கு ஒப்பானவன்.

 

அத்தியாயம் 2

 

இதில் உள்ள 86 ஸ்லோகங்களில் ஒரே கருத்துக்களைத் திரும்பச் சொல்லும் ஸ்லோகங்கள் பல உள்ளன. இதன் ஆரம்ப ஸ்லோகங்களே முதல் அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்கள் போல் தான் - திருதராஷ்டிரர் - விதுரர் ஆகிய இருவரின் ஸ்லோகங்கள் - ஸ்லோகங்கள் 1 -லிருந்து 5 வரை அமைந்துள்ளன

இது போல் பல ஸ்லோகங்கள் திரும்ப மீண்டும் சொல்லப்படுகின்றன. அவைகளைத் தவிர்த்து புதிதான கருத்துக்களை மட்டும் இங்கு எழுத உள்ளேன். 

மேலும் இந்த அத்தியாயத்தில் பல அணிகள், பல உதாரணங்கள்  விதுரர் பயன்படுத்தி தான் சொல்ல வந்த நீதி உரைக்கு உரம் சேர்க்கிறார். அவைகளையும் வாசகர்கள் படித்து தெளிவடைய உதவும்

விதுரர் உரைகள்

  1. குருவம்சத்திற்கு நன்மை தருபவைகள் எவைகளோ அவைகளை ஒ, அரசே! நான் உங்களுக்குச் சொல்ல விழைகிறேன்சந்தோஷத்தையும், நியாயத்தையும் தரும் சொற்களையே நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.
  2. மிகவும் தவறான நோக்கம் கொண்டு செய்யும் காரியங்கள் ஒரு தற்காலிகமான நன்மைகளை அளித்தாலும், அவைகள் இறுதியில் தீர்க்க முடியாத பிரச்சனையில் தான் முடியும். அதே போல் நியாயமான செயல்கள் உடனேயே நன்மைகளை அளிக்காத போதிலும், அறிவாளி அதனால் மனம் தளர்ந்து சோர்வடைய மாட்டான். ஒரு காரியம் செய்யத் தொடங்குவதற்கு முன்னால் அதனால் உண்டாகும் நன்மை தீமைகளை ஆராய்ந்து செயல்பட வேண்டும்மனத்தில் ஏற்படும் திடீர் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு எந்த ஒரு காரியத்திலும் இறங்கப்படாது.
  3. ஒரு ராஜ்யத்தை வென்ற பிறகு அதனால் திருப்தி அடைந்து தற்பெருமை கொண்டு செயலற்று வாளாது இருந்தால், வயதான காரணத்தால் உடல் தன் அழகை இழப்பதைப் போல் வெற்றியே தோல்வியாக மாறிவிடும். தூண்டிலில் உள்ள மாமிசத்தை விரும்பும் மீன் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்தை உணராமல் துயர்படுவது போல் இந்த அரசன் துயர்படுவான்.
  4. முற்றிலும் பழுக்காத பழங்களை மரத்திலிருந்து பறித்து சாப்பிடுபவன் பழத்தின் சாறை இழக்கிறான். அத்துடன், பழத்தில் இருக்கும் விதைகளும் அவைகள் முற்றாத நிலையில்  பயனற்றதாகிவிடும். ஆகையால் பழுத்த பழங்களை மரங்களிலிருந்து பறித்து, அவைகளின் சாற்றை அருந்தி, அவைகளின் முற்றிய விதைகளை விதைத்து நல்ல மரங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
  5. ஒரு தேனி எப்படி பூக்களிலிருந்து பூக்களுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படாமல் தேனைச் சேகரிக்கிறதோ அதே போல் அரசன் தன் பிரஜைகளிடம் வரி வசூல் செய்ய வேண்டும். இதே போல் தான் தோட்டக்காரனும் செடிகளிலிருந்து அந்தச் செடிகளுக்கு எந்தவிதமான வலியும் ஏற்படாமல் பூக்களைப் பறிப்பது போல் அரசன் செயல்பட வேண்டும். மரத்தை வேரோடு பிடுங்கி வெட்டி கரியாகச் செய்ய அதை எரிப்பதைப் போல் அரசன் மக்களிடம் வரிவசூல் செய்வதில் துன்புறுத்தக் கூடாது. அதாவது எந்தக் காரியம் செய்வதற்கு முன் தீர ஆலோசித்து எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை அறிந்து செயலபட வேண்டும். இயற்கையாகவே சில காரியங்கள் முடிவில் தோல்வியைத் தரும். அதில் அரசன் ஈடுபடுவது தவறு. இது ஒரு ஆண்மையற்றவனை பெண் விரும்பாததற்கு ஒப்பாகும்.
  6. குறைந்த முயற்சியில் அதிக நன்மைகள் தரும் காரியங்களில் காலம் தாழ்த்தாமல் உடனே அதில் ஈடுபடுவது ஒரு அறிவாளியின் குணமாகும்.
  7. தன் சிம்மாசனத்தில் அமைதியாக இருந்தாலும், எதையும் நேர்மையான கண்களைக் கொண்டு பார்த்து நியாயம் வழங்கும் அரசனேயே மக்கள் விரும்புவார்கள்.
  8. அரசன் மரம் போல் இருக்க வேண்டும். காய்க்காத மரங்களாக இருப்பினும், அந்த மரங்கள் பூக்களால் நிறைந்து கண்களால் பார்த்து மகிழும் அளவில் இருக்க வேண்டும்பழுக்கும் மரங்களோ பழங்களை பறிக்க முடியாதவாறு உயரமாக வளர்ந்தவைகளாக இருக்க வேண்டும். பூக்கள் நிறைந்த மரங்கள் போல் கண்களுக்கு இனியவனாகவும், பழுத்த பழங்களால் நிரம்பிய மரங்களின் பழங்களைப் பறிக்க முடியாத அளவில் உயரமாக இருப்பதைப் போல் எளிதில் நெருங்க முடியாதவனாகவும் அரசன் இருக்க வேண்டும்

ஆனால் இந்தச் செயல்கள் ஒரு அளாவோடு இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மரங்கள் ஒருபொழுதும் பூவோ, காய்களோ, பழங்களோ இல்லாமல் மொட்டையாக இருக்க அனுமதிக்கக் கூடாது

பூக்கள் இருப்பதால் அவைகள் கண்களுக்கு விருந்தாக அமையும். உயரமாக இருப்பதால் பழங்கள் பாதுகாக்கப்படுகின்றன

அரசன் தான் பலவீனனாக இருந்தாலும்அவைகளை மறைத்து தன்னை பலவானாகவும், தன்னம்பிக்கை கொண்டவனாகவும் அரசன் காட்டிக் கொள்ள வேண்டும்.

வேடனைக் கண்டு பயப்படும் மிருகங்கள் போல் ஒரு அரசன் இருப்பின், கடல் சூழ்ந்த பூமி முழுவதையும் அவன் வெற்றி கொண்டாலும் அரசனுக்குள்ள தகுதியை இழக்கிறான்.  தனது பிறப்பால் பெற்ற அரச பதவியாக இருப்பினும், அதர்மமான வழியில் ஆட்சி செய்தால், அந்த அவனது செய்கைகளே மேகத்தை மழை பெய்ய விடாமல் கலைக்கும் காற்றைப் போல் பதவி இழப்பான். நேர்மையைக் கைவிட்டு, அதர்மத்தை தேர்வு செய்து ஆட்சி செய்யும் அரசனின் ராஜ்யம் தீயில் இடப்பட்ட ஒரு தோல் கருகி உருக்குலைவதைப் போல் அழியும்.

  1. எதிரி ராஜ்யத்தை வெற்றி கொள்ள எவ்வளவு முயற்சிகள் எடுக்கப்படுகின்றதோ அதே அளவில் தனது ராஜ்ய மக்களின் நலன்களைக் காப்பதில் செயல்பட வேண்டும். நேர்மையான வழியில் தான் ஒரு ராஜ்யத்தை வென்று அதைக் காக்க வேண்டும். நற்குணங்களின் மூலம் அடைந்த வெற்றி என்பதால், அந்த நற்குணங்களை எந்த நிலையிலும் கைவிடக் கூடாது.
  2. பாறைகளிலிருந்து தங்கம் பெறுவதைப் போல் ஒரு குழந்தையின் மழலைச் சொற்களையும்,  அர்த்தமில்லாமல் உளறும் பைத்தியத்தின் வார்த்தைகளையும் மதித்து அவைகளில் உள்ள மெய்பொருளை அறிய முயலவேண்டும். அறிஞர்களின் பொன் மொழிகளைத் தேடித் தேடி அவைகளின் அறிவுரைகளின் படி பாறையில் சிதறிக்கிடக்கும் சிறிய அளவு தானியங்களால் உயிர் வாழும் துறவியைப் போல் அரசனின் ஆட்சி இருக்க வேண்டும்.
  3. பசுவின் மோப்ப சக்தி, பிராமணனின் வேத ஞானம், ஒற்றர்களின் ரகசியச் செய்தி, மற்றவர்களை எப்போதும் வேவு பார்த்தல்  - அகியவைகளை அரசன் தெரிந்து, அதன் மூலம் ராஜ்ய பரிபலானம் செய்ய வேண்டும்.
  4. பால் கறக்க அனுமதிக்காத பசு வேதனை அடையும். ஆனால் பால் கறக்க அனுமதிக்கும் பசுவுக்கு அந்த வேதனை கிடையாது. வளைந்த ஒன்றை தீயில் காய்ச்ச வேண்டிய அவசியமில்லை. வளைந்த மரக் கட்டையை மீண்டும் வளைக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையால் பணிந்து போகும் இடங்களில் பணிந்து செல்வது தான் அரசனுக்கு அழகு.
  5. சரியான எடை, அளவு ஆகியவைகளால் தானியங்களும்,  குதிரைகள் பயிற்சியாலும், பசுக்கள் பராமரிப்பாலும், பெண்களின் மானம் கிழிந்த துணியாலும் காக்கப்பட வேண்டும்.
  6. குணமில்லாதவன் உயர்குடிப் பிறந்தவனாக இருப்பினும் அது அவனுக்குக் காப்பாகாது. தாழ்வான குடியில் பிறந்தாலும் நற்குணவான் உயர் குடியில் பிறந்தவனின் மதிப்பைப் பெறுகிறான்.
  7. கற்றலில் தற்பெருமை, செல்வத்தில் செறுக்கு, குடும்பப் பெருமை ஆகிய மூன்றும் போதை கொடுக்கும் வஸ்து போன்றதாகும். நற்குணவான் இந்த மூன்றையும் தவிர்க்க வேண்டும்.
  8. நல்ல ஆடை அணிந்தவன் சபையில் மதிக்கப்படுகிறான். ஒரு பசு உடையோன் இனிப்புப் பண்டங்களை அளிப்பான். வண்டியின் சொந்தக்காரன் வெகுதூரப் பயணம் செய்வான். இதே போல் தான் உன்னதமான குணாவான் மற்றவர்களை வெற்றி கொள்வான்.
  9. குணம் தான் ஒருவனின் பாறை போன்று காப்பானது. அது உடைந்தால் ஒருவனின் வாழ்க்கை, செல்வம், உறவுகள் எல்லாம் உதவாது போய்விடும்.
  10. பணக்காரன் மாமிசம் உண்பான், நடுத்தரக் குடும்பத்தினன் பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்பான். ஏழையோ எண்ணையால் செய்யப்பட்டவைகளை உண்பான்.
  11. பணக்காரன் சாப்பாடு ஜெரிக்காது அவதியுறுவான். ஏழையோ மரக் கட்டைகளைச் சாப்பிட்டாலும், அவைகள் ஜெரித்துவிடும்.
  12. கீழ்மட்ட நபர் வேலையில்லாமல் அவதிப்படுவர். நடுத்தர வர்க்கம் சாவைக் கண்டு பயப்படுவர். எல்லோரையும் விட  மேலோன் மதிப்பிழப்பை தான் இழந்துவிடுவதைப் பற்றிப் பயப்படுவான்.
  13. கட்டுக்கடங்காமல் செயல்படும் ஐம்பொறிகள் மற்றும் அவைகளால் ஏற்படும் ஆசைகள் ஆகியவைகளால் உலகம் துன்புறுகிறது. நட்சத்திரங்கள் எப்படி சூரியனால் ஒளி யிழந்து போய்விடுகிறதோ அதே போல் தான் ஒவ்வொருவரும் துன்பப்படுகிறார்கள்.
  14. வளர்ந்து தேயும் சந்திரனைப் போல் தான் ஐம்பொறிகளால் தடம் புரண்டு மனிதன் செயல்படுகிறான்.
  15. அரசன் தன் ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்தாமல் தனது மந்திரிகளையும், தனது எதிரிகளைக் கட்டுப்படுத்துவதால் அதனால் எந்தவிதமான நன்மையும் உண்டாகாது. அவைகள் அரசனுக்கு அழிவைத் தான் தேடித் தரும்.
  16. மனித உடல் ஒரு ரதம் போன்றது. உயிர் சாரதி. ஐம்பொறிகள் குதிரைகள். மனிதன் ரதத்தில் சவாரி செய்யும் பயணி.  வாழ்வில் சந்தோஷம், நிம்மதிகிட்ட அதில் பயணம் செய்கிறான். ஆனால்,  கடிவாளம் சரியாக பயன்படுத்தாத சாரதி   ரதத்திலிருந்து தூக்கி எறியப்படுவதுடன் அதில் பயணிக்கும் மனிதனும் அழிந்து விடுகிறான்.
  17. மனிதனின் மனது, ஐந்து புலன்கள், புலன்களின் மூலம் நல்லது - கெட்டதை பகுத்தறிதல் ஆகியவைகள் ஆத்மாவை அறிய உதவேண்டும். ஆத்மா உன் நண்பனாகவோ அல்லது விரோதியாகவோ போய்விடலாம்.
  18. தூண்டிலில் மாட்டிய மீன் ஒன்றாகச் சேர்ந்து வலையைக் கிழித்து தப்பிக்கும். அதே போல் காமம் - கோபம் ஆகியவகளை வென்று, ஆத்மா விடுதலை அடையலாம்.
  19. மரக் குச்சிகள் தண்ணீரில் நனைந்தாலும் அவைகளைச் சுற்றி உலர்ந்த துணைகள் சுற்றி இருந்தால் நெருப்பு மரக் குச்சியையும் எரித்துவிடும். அதுபோல் தீயவரகளின் நட்பு தவிர்க்கப்பட வேண்டும்.
  20. வேடுவனின் அம்பினால் ஏற்பட்ட ரணம் ஆறிவிடும். அவனது கோடலி ஆகியவைகளால் அழியும் காடு கூட சீக்கிரத்தில் மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால் கடும் சொற்களால் காயம் அடைந்த உள்ளத்தின் ரணம் சுலபத்தில் குணமடையா. கர்ணி, நலிகா, நரகா ஆகியவரகள் எய்த அம்புகள் உடம்பிலிருந்து எடுத்து விடலாம். ஆனால் கடும் சொற்களால் உள்ளத்தில் ஏற்பட்ட காயங்களை நீக்க முடியாது.
  21. நேரம் சரியில்லை என்றால் அறியாமை, தீய எண்ணம் ஆகிய அழுக்குகளால் உண்மையை அறியும் திறன் மறைந்து போய்விடும். இந்த நிலையில் தவறான நேர்மையற்ற வழிகள் கூட சரியானவைகளாகவும், நேர்மையானவகளாகும் தோற்றம் கொண்டுவிடும். 

அத்தியாயம் 2-ல் உள்ள கடைசி 4 ஸ்லோகங்களில் 83 - 86 - விதுரர் மீண்டும் 'உன் மகன்களை விட யுதிஸ்டிரர் தான் ராஜாவாக ஆளத் தகுதி பெற்றவர். ஆகையால் யுதிஸ்டிரரிடம் அரசை ஒப்படைக்கவும் என்கிறார்.

 

அத்தியாயம் 3

 

திருதராஷ்டிரர் விதுரரை அறிவில் வல்லமை பெற்றவனே! என்று விளித்து, 'நற்பண்புகள், உலக க்ஷேமங்கள் ஆகியவைகளால் பொங்கும் உரைகளை மீண்டும் நீ சொல்லக் கேட்க ஆவலாய் உள்ளேன். அவைகளைச் செவிமடுத்து, என் உள்ளம் சந்தோஷமடைகிறது. ஏனென்றால் நீ உண்மைகளை அற்புதமாக உரைக்கிறாய்' என்று சொல்கிறார். 

அந்த சமயத்தில் விதுரர் கேசினி என்ற அரசிளம் குமாரியின் சுயம்வரத்தில் பங்குபெற வந்த விரோசனா என்ற பிரஹலாதனின் மகனுக்கும், அங்கீரசாவின் மகன் சுதன்வான் என்ற பிராமணனுக்கும் நடக்கும் வாதங்களைப் பற்றித் தெரிவிக்கிறார். அதற்கு பிரஹலாதன் நடுவராக இருப்பதற்கு சுதன்வான் ஒப்புக் கொள்கிறார். இருப்பினும், தெய்வீக சக்தி பெற்ற ஹம்சா என்ற அதிதி வம்சத்தின் வாரிசான ரிஷியை அந்த விவாதத்திற்கு நடுவராக இருக்க பிரஹலாதன் வேண்ட அவரே அதற்கு நடுவராகிறார். அப்போது ஹம்சா - பிரஹலாதன் ஆகிய இருவருக்கும் நடக்கும் உரையில் பல நீதிகள் தெரிவிக்கப்படுகின்றன. உண்மையிலேயே விரோசனா - சுதன்வான் உரையாடல்கள் இதில் அதிகம் இல்லை. இருப்பினும், சுதன்வான் விரோசனாவை வாதத்தில் வெற்றி பெறுகிறான்

பிரஹலாதா - ஹம்சா ரிஷி ஆகியவர்களின் உரையாடல்களிலும், அதற்குப் பிறகு விதுரர் மீண்டும் பல நீதிகளை எடுத்துரைப்பதிலும் பல நீதிகள் திரும்பவும் சொல்லப்பட்டவைகளாக உள்ளன

குறிப்பாக பல குணங்கள் முன்பு போல பல ஸ்லோகங்களில் பட்டியல் இடப்பட்டு தெரியப்படுத்துகிறார் விதுரர்

இறுதியில் முடிவாக திருதராஷ்டிரரிடம் அறிவிக்கிறார்: 'துரியோதனன், சகுனி, முட்டாள் துஷ்சாதனன், முட்டாள் கர்ணன் ஆகியவர்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு நாடு வளம்பெறும் என்று நம்புவது தவறாகும். , பாரத தேசத்தின் சிறந்தவர்களில் எல்லாம் சிறந்தோனே! பாண்டவர்கள் அனைத்து நற்குணங்களையும் பெற்றவர்கள். உங்களை தந்தையாக உண்மை அன்புடன் நடத்துபவர்கள். ஆகையால் அவர்களை உங்கள் சொந்த மகன்களாகக் கருதி ராஜ்யத்தை அவர்களிடம் ஒப்படையுங்கள்.' 

இந்த மேலே விவரித்தவைகளின் அடிப்படையில் இந்த அத்தியாயத்தின் மூல ஸ்லோகங்களின் பொருட்களை இங்கு தந்திருக்கிறோம்

விதுரர் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார்

v  புண்ணிய நதிகளில் நீராடுவதும், நடுநிலமை வகிப்பதும் - இரண்டும் ஒரே மாதிரியான நன்மை தருபவைகள்.

v  மகன்களிடம் வேற்றுமை பாராட்டாமல் இருப்பதால் பெரும் புகழ் அடையலாம் - அதனால் புண்ணியம் பெற்று, சொர்க்கம் கிட்டும்.

v  இதை விளக்க நான் ஒரு பழைய கதை ஒன்றைச் சொல்லப் போகிறேன். கேசினி என்ற ராஜகுமாரியின் சுயம்வரத்தில் பிரஹலாதனின் மகன் விரோசனாவிற்கும், ஆங்கிரசாவின் மகன் சுதான்வானுக்கும் கேசினி முன்னிலையில் நடந்த உரையாடல்கள், பிறகு பிரஹலாதனுக்கும் ஹம்சா என்ற ரிஷிக்கும் நடந்த உடையாடல்கள் விதுரரால் விளக்கப்பட்டுள்ளன.  

v  விதுரர் சொன்ன கதையின் சாராம்சம்

கேசனியின் சுயம்வரத்திற்கு முதலில் விரோசனா வந்தவுடன் கேசனி அவனைப் பார்த்துச் சொன்னாள்: 'பிராமணனா அல்லது அரச வம்சத்து க்ஷத்திரியனா - இவர்களில் யார் உயர்ந்தோர்? பிராமணன் அரசனைப் போல் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்காரலாமா?' 

விரோசனா: , கேசனி! காஸ்யப வம்சமான பிரஜாபதியின் வழிவந்தோரான என் வம்சத்தவர்கள் தான் உயர்ந்தவர்களும், சிறந்தவர்களும் ஆவர். யார் இந்த  கடவுள்களும், பிராமணர்களும்? அவர்கள் எங்களுக்கு ஈடாக மாட்டார்கள்

கேசனி: , விரோசனா! நாளை காலையில் சுதான்வான் என்ற பிராமணன் வர இருக்கிறார். ஆகையால் நாம் இருவரும் அவர் வரும் வரை காத்திருப்போம்

விரோசனா: அப்படியே உங்கள் வாக்குப்படி நாளை நானும், சுதன்வானும் சேர்ந்தே இங்கு வருகிறோம்

அதன்படி அடுத்த நாள் சுதன்வான் வந்தவுடன் அந்த அந்தணனுக்கு இருக்கை கொடுத்து, அவன் காலை நீரால் அலம்பினாள் கேசனி

சுதன்வான் விரோசனாவைப் பார்த்துச் சொன்னான்: , பிரஹலாதனின் மகனே! நீ அரச வம்சம். ஆகையால் தங்கத்தினான ஆசனத்தில் அமர்ந்து கொள்

விரோசனா: , சுதன்வானே! உனக்கு உகந்த ஆசனம் குசா தர்ப்பையிலான பாய்தான். அதை விட்டால் மான் தோல் ஆசனம். நீ எந்த விதத்திலும் எனக்குச் சரிசமமாக உட்காரும் தகுதி படைத்தவன் இல்லை

சுதன்வான்: அப்பா - பிள்ளை, இரண்டு பிராமணர்கள், இரண்டு க்ஷத்திரியர்கள், இரண்டு வைஸ்யர்கள், இரண்டு சூத்திரர்கள் - ஆகியவர்கள் தான் பக்கத்தில் ஒன்றாக அமரலாம். இருப்பினும் உன் தந்தை என் வருகைக்கு காத்திருந்து, பிறகு என் ஆசனத்திற்கும் கீழே இருக்கும் ஆசனத்தில் அமர்வார். ஆனால் நீயோ அரண்மணை ஆடம்பரத்தில் வாழ்ந்தவன். இந்த பழக்கங்களை நீ அறியமாட்டாய்

விரோசனா: , சுதன்வானே! தங்கம், கால் நடைகள்குதிரைகள், என் அனைத்துச் செல்வங்கள் ஆகியவைகளைப் பணயம் வைக்கிறேன். நான் உயர்ந்தவனா, நீ உயர்ந்தவனா என்பதை நடுவர்கள் மூலம் தீர்மானம் செய்வோம்

சுதன்வான்: தங்கம், கால்ந்டைகள், குதிரைகள் அனைத்தும் உன்னிடமே இருக்கட்டும். நான் என் உயிரையே பயணமாக வைக்கிறேன். நடுவர்கள் தீர்ப்பு வழங்கட்டும். இதற்கு நடுவராக உன் தந்தை பிரஹலாதரே இருக்கட்டும். அவர் தன் மகன் என்ற ஆசையால் தன் தீர்ப்பில் பிழை செய்ய மாட்டார்

இருவரும் பிரஹலாதரைப் போய்ப் பார்த்தார்கள்

பிரஹலாதன்: நீங்கள் இருவரும் வெறிகொண்ட இரண்டு பாம்புகள் போல் சண்டை போடுகிறீர்கள். முதலில் நான் பிராமணனான சுதன்வானை வரவேற்கிறேன். நீர் வார்த்தல் - மதுபார்க்கா பானம் அளித்தல் - பசு தானம் ஆகியவைகளால் சுதன்வானை வரவேற்று வணங்குகிறேன்

(குறிப்பு: மதுபர்க்கா என்பது தாகத்திற்கு அளிக்கப்படும் பானமாகும். தயிர், கடைந்தெடுத்த வெண்ணை, நீர், தேன், சக்கரை ஆகியவைகளை ஒன்றாக கலந்து செய்யப்படும் பானத்தின் பெயர் தான் மதுபர்க்கா. இது முன் காலத்தில் அதிதிகளுக்கு கொடுக்கப்படும் பானமாகும்.) 

சுதன்வான்: , பிரஹலாதரே! பிராமணர்கள் உயர்ந்தோரா அல்லது விரோசனன்  உயர்ந்தவனா

பிரஹலாதன்: கல்மாஷர், கபிலர், வியாசர், லோஹிதா ஆகிய எந்த ஞானிகளாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல தகுதியானவர்கள் இல்லை

சுதன்வான் பிரஹலாதனிடம் 'நீங்கள் நியாயமாகப் பதில் சொல்லாவிடில் உங்கள் தலை வெடித்துச் சிதறிவிடும்' என்று எச்சரிக்கையும் விடுத்த உடன், பிரஹலாதன் ஹம்சா என்ற அதிதியின் வம்சத்தில் பிறந்த ரிஷியைப் பதில் சொல்ல வேண்டினார். பிரஹலாதன் - ஹம்சா ஆகியவர்களின் உரையாடல்களில் பலவிதமான நீதி போதனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன

பிரஹலாதன்: முழு உண்மைகளை சொல்லாதவன் என்ன பாவம் செய்கிறான்

ஹம்சா: ஒரு கழுதை நேராகச் செல்லாமல் அங்கு மிங்கும் செல்வதைப் போல் நற்குணம் பற்றி விளக்கக் கூடாது. , ராஜாவே! நற்குணம் இழந்தவன் நாட்டை இழப்பான். மக்களின் நன்மதிப்பையும் சேர்ந்து இழப்பான். அது மட்டுமல்ல. நேர்மையைக் காண்பவன் அதை வெளிப்படுத்தாமல் மவுனம் காத்தால் அந்த நேர்மையால் அவனே ஆற்றங்கரையில் உள்ள மரங்கள் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவதைப் போல் அழிவான். ஒரு சபையில் தண்டிக்கப்படவேண்டியவன் தண்டனை பெறாமல் இருந்தால், அந்த சபையின் தலைவன் பாதி பாவத்தையும், தப்பு செய்தவன் கால் பாக பாவத்தையும், அந்த சபையின் பார்வையாளர்கள் கால் பாக பாவத்தையும் அடைவார்கள். ஆனால் அதே சபையில் அவன் தண்டிக்கப்படும் போது சபையின் தலைவன், பார்வையாளன் ஆகிய இருவரக்ளும் பாவம் நீங்கி, புண்ணியம் அடைகிறார்கள், தண்டிக்கப்பட்டவன் பாவம் செய்த காரணத்தால் தணடனை அடைகிறான்

தங்கம் பற்றிய பொய் ஒரு குடும்பத்தையே பாழாக்கிவிடும். நிலம் பற்றிய பொய் அனைவரையும் பாழாக்கிவிடும். ஆகையால் ஒருபொழுதும் பொய் பேசாதீர்

இந்த ஹம்சா - பிரஹலாத உரையாடல் முடிந்த பொழுது, பிரஹலாதன் 'சுதன்வான் தான் விரோசனாவை விட உயர்ந்தவன்' என்று தீர்ப்பு வழங்கினான்

தீர்ப்பு வழங்கிய பிரஹலாதன் விரோசனாவிடம் 'என் மகனை எனக்கு மீட்டுத் தரவும்' என்று வேண்ட, அதற்கு விரோசனன் 'உன் மகனை நான் என் பணயத்திலிருந்து விடுவிக்கிறேன். அவன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியாக எனக்கு கேசினி முன்னிலையில் பாத பூஜை செய்ய வேண்டும்' என்று சொன்னதாக விதுரர் தெரிவிக்கிறார்.  

மீண்டும் திருதராஷ்டிரருக்கு அறிவுரை தொடர்கிறது

விதுரர்: , ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவே! உன் மகன்களுக்கு ராஜ்யம் கொடுப்பதற்காக பொய் பேசாதீர். அதனால் உங்களது புத்திரர்களுக்கும், மந்திரிகளுக்கும் தீராத அழிவைத்தேடித் தராதீர். கால் நடைகளை ஓட்ட பயன்படுத்தும் கம்பை வைத்து மாடுகளை கட்டுப்படுத்துவதைப் போல் ராஜ்யத்தை நடத்துபவர்களை கடவுள் காப்பாற்ற மாட்டார். அறிவுடன் மக்களை அன்போடு அரவணைத்து நடக்கும் அரசனையே கடவுள் காப்பார். ஏமாற்றி பாப வாழ்க்கை வாழ்பவனை வேதங்கள் காக்காது. புதிதாகப் பிறந்த பறவைகள் தங்கள் கூடுகளை விட்டுப் பறப்பதைப் போல் அவரகளின் கடைசி நேரத்தில் வேதம் காப்பாற்றாமல் கைவிட்டு விடும்

(குறிப்பு: மீண்டும் விதுரர் பலவிதமான நீதிகளை 15 ஸ்லோகங்களில் (ஸ்லோகங்கள் 43 லிருந்து 57 வரை) உபதேசிக்கிறார். அவைகளில் மிகவும் முக்கியமான ஸ்லோகங்கள் சுருக்கமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.) 

விதுரர் பட்டியல் இட்டு வழங்கிய நீதி போதனையின் சுருக்கம்

v  கைரேகை பார்த்து ஜோதிடம் சொல்பவன், முன்பு திருட்டைச் செய்தவன், ஏமாற்றுபவன், வைத்தியன், விரோதி, நண்பன், நடிகன் ஆகிய ஏழுபேர்களும் சாட்சி சொல்லத் தகுதி அற்றவர்கள்.

v  மூத்தோர்கள் இல்லாத சபை - சபை இல்லை. உண்மை பேசாத மூத்தோர் மூத்தோர் இல்லை; உண்மை பேசப்படாத இடமும் சபை இல்லை.  

v  பகலில் உழைத்து இரவில் சுகமாக உறங்க வேண்டும். மழைகாலத்தில் சுகமாக இருக்க, மற்ற எட்டு மாதங்களிலும் உழைக்க வேண்டும். முதுமையில் சுகமாக இருக்க இளமையில் உழைக்க வேண்டும். மறுபிறவியில் சுகமாக இருக்க, இப்பிறவில் உழைக்க வேண்டும்.

v  நான்றாகச் ஜீரணமாகும் உணவே சிறந்தது; இளம் வயதில் கற்பைக் காக்கும் மனைவியே சிறந்தவள்; போரில் வெற்றி பெற்றவனே சிறந்தவன்; முக்தி அடைந்த யோகியே சிறந்தவன்.

v  ரிஷி மூலம், நதி மூலம், புகழ் பெற்ற குடும்பத்தினரின் பூர்வீகம், பெண்களின் முன்பு செய்த பாப காரியங்கள் - ஆகியவைகளை அறிய முயலக் கூடாது.

v  தங்க புஷ்பங்களைப் போல் உள்ள மூன்று விதமான மக்கள் இந்த பூமியில் உண்டு; அவர்கள் தான் - வீரர்கள், படித்தவர்கள், சேவை செய்வோர்கள்.

v  அறிவால் ஆற்றுகிற செயல்கள் உயர்ந்தவை; கைகளால் ஆற்றுகிற செயல்கள் நடுத்தரமானவைகள்; தொடைகளால் - அதாவது மர்ம உறுப்புக்களால் ஆற்றுகிற செயல்கள் மோசமானவைகள்; தலைச் சுமைகளால் ஆற்றுகிற செயல்கள் கீழ்த்தரமானவைகள்

இந்த நீதிகளைச் சொல்லிய விதுரர் இறுதியாக திரும்பவும் திருதராஷ்டிரனிடம் 'பாண்டவர்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து, நாடு நலம் பெறச் செய்யவும்' என்று சொல்லி, 'உன் மகன் துர்யோதனன், சகுனி, கர்ணன் ஆகியவர்களிடம் ராஜ்யம் ஒப்படைக்கப்பட்டால், நாடு நாசாமாகும்' என்றும் எச்சரிக்கை செய்கிறார்.

 

அத்தியாயம் 4

 

முன்னுரை: 

இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் விதுரர் திருப்பவும் திருதராஷ்டிரருக்கு சாத்யாஸ் என்ற கடவுள் அம்சம் கொண்டவருக்கும், ஆத்ரேய வம்சத்தில் பிறந்த ஹம்சா ரிஷிக்கும் நடந்த சம்பாஷணையை விளக்குகிறார். இது அத்தியாயம் 3-ல் சொன்ன ஹம்சா ரிஷியின் தொடர்ச்சி என்றே கொள்ள வேண்டும்.   

இதில் ஹம்சா ரிஷி இனிய சொல் தான் பேச வேண்டும்; கடும் சொற்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று விளக்கியதுடன் மேலும் பலவிதமான நீதிகளை விவரிக்கிறார்.  

இந்த நீதி போதனைகளை எல்லாம் கேட்ட திருதராஷ்டிரன் விதுரரிடம் மனம் வெதும்பிச் சொல்கிறான்: 'என் தவறான அன்பு பாராட்டலில் வளர்ந்த என் மகன் துரியோதனன் ஒரு கொழுந்து விட்டு எரியும் நெருப்பு உள்ளே இருக்க அதை மூடிய உடலை உடையவன். யுத்தம் மூலம் என்னுடைய அனைத்து முட்டாள் மகன்களையும் துரியோதனன் பலி கொடுக்கப் போகிறான். இவைகள் எல்லாம் மிகவும் கவலை அளிப்பதாகும். எனது மனம் எப்போதும் பயத்தால் சூழ்ந்துள்ளது. , சிறந்த அறிவாளியே! இந்த என் மனக் கவலைகளிலிருந்து விடுதலை அடையும் வழியை எனக்குப் போதிப்பாயாக'. 

இதைக் கேட்டு மீண்டும் விதுரர் தமது போதனைகளை தொடர்கிறார். இவைகளிலும் பல நீதிகள் முன்பே சொன்னவைகளாக இருக்கின்றன

இறுதியாக விதுரர் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார்: 'குருவம்சத்தில் பிறந்தவரே! பாண்டுவின் பிள்ளைகளுடன் சமரசம் செய்து கொள்ளவும். அவர்கள் அனைவரும் தர்மத்தை ஒருபோதும் வழுவாதவர்கள். ஆகையால் உன் மூத்த மகன் துரியோதனனை அடக்கி தர்ம வழியில் செயல்படவும்

முக்கியமான ஸ்லோகங்களின் பொருள்

v  விதுரர்: சாண்டியாஸ் என்ற தேவ தூதர்களுக்கும், ஆத்ரேய குலத்தில் ஜனித்த ஹம்சா ரிஷிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் பல நீதிகளை உள்ளடக்கியவைகள்.

v  கடும் சொற்கள் ஒருவனின் உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களைச் சுட்டெரிக்கும். எலும்புகள், இருதயம், மூச்சுக் காற்று ஆகிய அனைத்தும் அந்த கடும் சொற்களான நெருப்பால் பாதிக்கப்படும். ஆகையால் நேர்மையானவன் எப்போதும் கடும் சொற்கள் பேசுவதைக் கைவிட வேண்டும்.

v  கடும் சொற்கள் சொல்பவனின் வாயில் யமன் வாசம் செய்கிறான். ஆகையால் தான் அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் பிறரை முட்கள் போல் தைத்து தீராத வலியை ஏற்படுத்துகிறது.

v  மிகவும் கூர்மையான தீ போல் சுடும் அம்புகள் போன்ற கடும் சொற்களைக் கேட்கும் பொழுது அறிஞன் எந்தவிதமான மனச் சஞ்சலம் அடையாமல் அறியாமையால் பிறர் செய்யும் செயல் என்று அந்த வலியினைத் தாங்கிக் கொள்வான்.

v  நல்லவர்களின் நட்போ அல்லது தீயவர்களின் சகவாசமோ, நியாயவானின் நேர்மையோ அல்லது திருடனின் தீய செயலோ அவைகள் அனைத்தும் சேர்க்கையின் காரணமாக நல்லது தீயது தீர்மானிக்கப்படும். ஒரு துணி சாயத்தில் தோய்க்கப்பட்டால் அது அந்த சாயத்தின் நிறத்தை அடைவது போல் கூட்டாளிகளின் குணங்கள் கூட இருப்பவர்களையும் பாதிக்கும்.

v  கடும் சொற்களால் பாதிக்கப்பட்டாலும், அதே போல் கடும் சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும், தன்னைக் காயப்படுத்துபவர்களுக்கு ஒரு சிறிது ஹானியும் நேராமல் இருக்க விழைபவரகள் கடவுளின் ஆசிகளைப் பெற்றவர்களாவர்.

v  மவுனம் பேச்சை விடச் சிறந்தது. அப்படியே பேசுவதாக இருப்பின், உண்மையே பேச வேண்டும். அது மட்டுமல்ல - பேசும் உண்மையும் ஒருவருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்இறுதியாக அந்த உண்மையும் தர்மத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்

'உயர்குடிப்பிறந்தோரின் குணாதிசயங்கள் என்ன?' - என்று கேட்கும் திருதராஷ்டிரருக்கு விதுரர் சொன்ன நீதி போதனைகள்

v  எட்டு வகையான குணாதிசியங்கள் உயர்குடிப்பிறந்தோர் கடைப்பிடிக்க வேண்டும். அவைகள்: தவம், புலனடக்கம், ஆத்ம ஞானம், பொறுமை, வேள்வி, பெற்றோர் செய்விக்கும் திருமணம், சமாதானம், அன்னதானம்.

v  கோயில்களில் உள்ள பொருட்களைச் சேதம் செய்தல், பிராமணனின் சொத்தை அபகரித்தல், பிராமணனை அவதூறாகப் பேசுதல் ஆகியவைகளை உயர்குடிப்பிறந்தோர் தடுப்பார்கள்.

v  பணம் படைத்து குணம் இல்லாமல் இருந்தால் அவர்கள்  உயர்குடிப் பிறந்தவர்களாக மதிக்கப்பட மாட்டார்கள். அதே போல் ஏழையாக இருப்பினும், குணக் குன்றாக இருப்பின் அவர்களை உயர்குடிப்பிறந்தோராக மதிப்பர்.

v  பணம் என்பது வரும் போகும். ஆனால் நற்குணம், நல்நடத்தை ஆகியவைகளை இழந்தால் அவர்கள் முற்றிலும் எப்பொழுதும் அழிந்தவர்களாவார்கள்

v  நற்குணவான்கள் வீடுகளில் கீழ்க்கண்டவைகள் எப்பொழுதும் வீடு தேடி வரும் விருந்தாளிக்களுக்கு உபசரிக்க இருக்கும்: உட்கார பாய்கள், தங்க இடம், பருக நீர், உண்மையான இனிமைப் பேச்சு

v  சியாநந்தா மரம் சிறியது. ஆனால் அந்த மரக் கட்டைகள் மிகவும் அதிகமான எடையுள்ளவைகளைத் தாங்கும் சக்தி கொண்டவை. ஓங்கி அதிக உயரம் வளர்ந்த மரங்களின் கட்டைகளுக்கு இந்த தன்மைகள் கிடையாது. இதைப் போல் தான் உயர்குடிப்பிறந்தோர் சியாநந்தா மரக்கட்டைகளைப் போல் அதிகமான பாரத்தைச் சுமப்பர்.

v  பயத்தை ஏற்படுத்துபவன் நண்பன் இல்லை. பயத்தில் அல்லது நம்பிக்கைக் குறைவினால் உறவுகொள்பவனும் நண்பன் இல்லை. தந்தைபோல் ஆறுதல் சொல்பவன் எவனோ அவனே நண்பன். மற்றவர்கள் எல்லாம் வெறும் அறிமுகமானவரகளே.

v  எந்த சம்பந்தமும் இல்லாவிடினும், அன்புடன் பழகும் நபர்களே ஒருவனின் நண்பனாகும். அவன் தான் உறவினன், உண்மை நண்பன், உதவி செய்பவன், ஆபத்தில் காப்போன்.

v  மனக் குழப்பவாதி, வயதானவர்களின் சொற்களை மதிக்காதவன், இயற்கையாகவே மிகவும் பதட்டமுள்ளவன் ஆகிய இந்த மூவருக்கும் நண்பர்கள் அமையாது.

v  அன்னப் பறவைகள் நீர் வற்றிய ஓடையை விட்டகலும். அதே போல் திட சித்தம் இல்லாதவன், தன் ஐம்பொறிகளின் அடிமையாகி அதன் கட்டுப்பாட்டில் தன் நிலை இழந்தவன் ஆகியவனிடம் வாழ்வின் வளமை பறந்து சென்றுவிடும்.

v  திடீர் திடீர் என்று மாறும் ஆகாயம் போல், தீயோர்கள் காரணமின்றி கோபப்படுவாரகள்அவர்கள் சந்தோஷமும் எந்தவிதமான நோக்கமும் இன்றி நிகழும்.

v  விருந்தோம்பலை அனுபவித்த நண்பர்கள் அதை மறந்து செயல்படின், அவர்களின் உடல்களை பிணந்தின்னும் கழுகுகள் கூட உண்ணாது.

v  துக்கம் அழகின் சத்துரு. துக்கம் பலத்திற்குச் சத்துரு. துக்கம் அறிவுக்குச் சந்துரு. துக்கம் வியாதிக்கு வித்திட்டு அதனால் துயர்படுவர்.

v  துக்கத்தால் அடைவது ஒன்றும் இல்லை. அதனால் உடல் கெடுகிறது. ஒருவனின் விரோதிகள் சந்தோஷப்படுகிறார்கள். ஆகையால் மனம் துக்கத்தால் துயர்படுவதைத் தடுக்க வேண்டும்.

v  மனிதன் இறக்கிறான், பிறகு பிறக்கிறான். மனிதன் ஏழையாகிறான்; பிறகு பணக்காரனாகிறான். மனிதன் பிச்சை எடுக்கிறான்; பிறகு திரும்பவும் பிச்சை எடுக்கிறான். மனிதன் அழுகிறான்; மீண்டும் அழுகிறான். சந்தோஷம், துக்கம், செல்வம், ஏழமை, லாபம், நஷ்டம், இறப்பு, பிறப்பு - ஆகியவைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழத்தான் செய்யும். ஆகையால் இவைகளால் சந்தோஷமோ துக்கமோ அடையக் கூடாது.

v  மனிதனின் ஆறு பொறிகளும் ஒரு நிலையில் இருப்பதில்லை. ஒரு பொறி அதிகமாக ஆட்டம் போட்டாலும், ஒருவனின் அறியும் தன்மை ஓட்டைப் பானையிலிருந்து நீர் வெளியேறுவதைப் போல் பாதிக்கப்படும்

திருதராஷ்டிரர் சொல்கிறார்

மேலே குறித்துள்ளபடி தன் மகனை 'தீயினால் மூடப்பட்ட உடலை உடைய தீயோன்' என்று திட்டுகிறார் திருதராஷ்டிரர்.   

அவனால் யுத்தம் மூண்டு அவனுடன் அனைத்து என் மகன்களும் பலி ஆவார்கள். இதனைத் தவிர்க்கும் வழியினை எனக்குக் காட்டு என்று விதுரரிடம் மன்றாடுகிறார் திருதராஷ்டிரர்

விதுரரும் மீண்டும் தமது நீதி போதனையைத் தொடர்கிறார்

v  பசுக்களிலிருந்து அபிரிமிதமான பாலும், பிராமணர்களிடம் அதிகமான தவமும், பெண்களிடம் சபலமும் உண்டாவதைப் போல், பாரபட்சமாக நடக்கும் போது உறவினர்களிடம் பயம் உண்டாகும்.

v  பல நுண்ணிய நூல்களை ஒன்றாக இணைத்தால் அவைகளைக் கொண்டு பல கனமானவைகளைத் தூக்கும் பலம் பெறும். அதே போல் தான் நல்லவர்கள் ஒன்று சேர்ந்தால், பல நல்ல காரியங்களைச் செயல்படுத்தலாம்.

v  சருகுகள் தனியாக இருப்பின் அவைகளிலிருந்து புகைதான் வரும். ஆனால் அவைகளை ஒன்றாக்கினால் புகை போய் பெரும் நெருப்பு உண்டாகி சருகுகள் எரியும். இது உற்றார்களுக்கும் பொருந்தும்.

v  பிராமணர்கள், பெண்கள், உறவுகள், பசுக்கள் ஆகியவைகளுக்கு கொடுமை செய்தால், அவர்கள் பழுத்த பழங்கள் மரத்திலிருந்து கீழே விழுவதைப் போல் துன்புறுவர்.

v  தனி மரம் எவ்வளவு தான் வலுவாக, உயரமாக, வேர் நன்கு ஊன்றி இருந்தாலும் புயல் வந்தால் சாய்ந்துவிடும். ஆனால் தோப்பாக இருக்கும் மரங்கள் அந்தப் புயலிலுக்கு ஈடு கொடுத்து சாயாமல் வலிவாக இருக்கும். ஆகையால் ஒருவன் எல்லா திறமைகளுடன் இருப்பினும் தனியாக இருப்பின் அவன் தனிமரம் எப்படி புயலில் சிக்கி விழுகிறதோ அதே போல் தோல்வி அடைவான். ஆகையால் ஒற்றுமையாக இருக்கும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வெற்றி பெறுவர். இந்த ஒன்றுமையான உறவினர்களை ஒரு ஏரியில் இருக்கும் அல்லிகள் ஒன்றுக்கொன்று தண்டுகளால் இணைந்து வலுவாக வளருவதற்கு உதாரணமாக காட்டலாம்.

v  கோபம் ஒரு தலைவலி. இது ஒரு வியாதி இல்லை தான். ஆனால் கோபம் என்பது ஒரு வலுவான பானம் - சூடான, கசப்பான, உடம்பை கெடுக்கும் பானம். இருப்பினும் அதை விழுங்கி கோபத்தை வெற்றி கொள்பவர்கள் தான் அறிஞர்கள். ஆனால் தீயோன் கோபத்தை வெல்ல முடியாமல், வெளியில் தெரிவித்து அல்லல் படுவான். ஆகையால் திருதராஷ்டிரரே! கோபத்தை விழுங்கி, மன அமைதியைப் பெறுவீர்.

v  திரெளபதியின் கண்ணீர், சூதாட்ட வெற்றி ஆகியவைகளின் போது நான் தடுத்தேன். ஆனால் நீங்கள் என் அறிவுரையை அவமதித்தீர்கள்.

v  எளியோரை வெல்வது பலசாலிக்கு அழகல்ல. பலசாலி நியாயமாக நடக்க வேண்டும். கொடூரமான முறையில் சம்பாதித்த பணம் அழிவது நிச்சயம். ஆனால் நேர்மையான முறையில் சம்பாதித்த பணம் மகன்கள், பேரன்கள் என்று வழி வழியாக நிலைத்து நிற்கும்.

v   , அரசே! உமது மகன்கள் பாண்டவர்களைக் காக்கட்டும்; பாண்டுவின் பிள்ளைகள் உமது பிள்ளைகளைக் காக்கட்டும். குரு வம்சத்தினர்களின் நண்பர்களும், விரோதிகளும் ஒன்றேயாகும். அத்துடன் அவர்களின் குறிக்கோளும் ஒன்றே. அப்படி இருக்கும் போது ஒன்றாக சந்தோஷமாகவும், செழிப்பாகவும் இருக்கலாமே!

v  நீர் கெளரவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் தூண் போன்றவர். அஜமீதா குலத்தில் பிறந்தவரே! குருவம்சம் உம்மை நம்பி இருக்கிறது. பாண்டவர்கள் ஏற்கனவே காட்டில் அஞ்ஞாதவாசம் சென்று பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து விட்டாரக்ள். அவர்களைக் காப்பது உங்கள் கடமை. அதன் மூலம் இழந்த புகழை நீங்கள் புகழ் மீண்டும் அடைவீர்கள்.

v  ஓ குரு குலதந்தையே! பாண்டு பிள்ளைகளிடம் சமாதானமாகப் போங்கள். எல்லோரையும் விட கடவுள் அம்சமிக்கவரான நீங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மனிதர்களில் மேலான தலைவனே! உன் மகன் துரியோதனனை தர்மம் மீறாமல் இருக்க அவனை அடக்கி வையுங்கள்.

 

அத்தியாயம் 5

 

இந்த அத்தியாயத்தில் தான் விதுரர் மிகவும் புகழ் வாய்ந்த அரசியல் நீதியை மொழிகிறார்: 'குடும்பத்தைக் காக்க, ஒரு தனி நபரை இழக்கலாம்; ஒரு கிராமத்தைக் காக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம்; ஒரு நாட்டைக் காக்க, ஒரு நகரத்தை இழக்கலாம்; தன் ஆத்மாவைக் காக்க அனைத்து பூமியின் சுகங்களையும் இழக்கலாம்.'  

'வேதங்களில் குறிப்பிட்டபடி மனிதன் ஏன் நூறு வயது வாழ்வதில்லை?' என்ற திருதராஷ்டிரரின் கேள்வியும் இதில் உள்ளது

அது மட்டுமல்ல; விதுரர் நேரடியாகவே திருதராஷ்டிரரிடம் 'உங்கள் மகன்கள் அனைவரும் காக்கைகள்; பாண்டுவின் பிள்ளைகளோ அழகான தோகை விரித்தாடும் மயில்கள். உன் மக்கள் குள்ள நரிகள்; பாண்டுவின் மக்களோ வீரமுள்ள சிங்கங்கள்.  உன் மக்கள் அடர்ந்த காடு என்றால் பாண்டுவின் பிள்ளைகள் அந்தக் காட்டில் வாழும் புலிகள். காட்டை அழித்து புலிகளைத் துறத்தும் வழியினைத் தேர்வு செய்ய வேண்டாம். பாண்டுவின் பிள்ளைகள் உயர்ந்து வளரும் சாலா மரங்களாகும்; உன் பிள்ளைகளோ கொடிகளாகும். கொடிகள் மரத்தைச் சுற்றியே படர்ந்து வளரும். ஆகையால் பாண்டவர்கள் துணை இன்றி உன் மகன்கள் ஜீவித்திருக்க முடியாது

ஆகையால் ஓ, அம்பிகாவின் பிள்ளையான ராஜாவேகாடான உன் மகன்கள் பாண்டவர்களான சிங்கங்களுடன் கூட வாழச் செய்யுங்கள்.' என்று உபதேசம் செய்கிறார்.  

இந்த அத்தியாயத்திலும் சில கருத்துக்கள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. அவைகளை விடுத்து மற்றவைகளை எழுதியுள்ளோம். மீண்டும் சொல்லப்படும் கருத்துக்களில் உதாரணங்கள், அணிகள், அழகான சொற்பதங்கள் இருப்பினும் அவைகளையும் இங்கு குறிப்பிட்டுள்ளோம்

இனி மூலச் செய்யுட்களின் கருத்துக்களை சுருக்கமாகப் பார்ப்போம்

v  விதுரர் மேலும் தொடர்கிறார்

விதித்திரவீர்யாவின் மகனான ராஜாக்களுக்கெல்லாம் மேலான ராஜாவே! பிரம்மாவின் மகன் மனு 17 வகையான மிகவும் தவறான நபர்களைப் பற்றிச் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன் கேட்பீராக. அவர்கள் எல்லாம்  வெற்று வீரம் பேசுபவர்கள். வானத்தை தங்கள் முஷ்டியால் வில்லாக வளைப்பேன்வளைக்க முடியாத வான வில்லை வில்லாக வளைப்பேன், விண்ணில் ஒளிரும் சூரியன் - சந்திரன் ஆகியவைகளின் கதிர்களை கைகளால் பிடித்து விடுவேன் என்று போலி வீரம் பேசுபவர்களாகும்

அந்த 17 வகையான போலி நபர்களின் பட்டியல் இதோ:

  1. தன்னிடம் மாணவனாக இருக்க பிரியப்படாதவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தல்.
  2. சிறிய அளவு லாபத்தில் திருப்தி அடைதல்.
  3. எதிரியை காலம் கடத்தாமல் தாக்காமல் அதிக நேரம் காத்திருத்தல்.
  4. அபலைப் பெண்களைக் காப்பாற்றாதவன்.
  5. பிச்சை போட தகுதி இழந்தவர்களிடம் பிச்சை கோறல்.
  6. தற்பெருமை கொள்ளும் நபர்கள்.
  7. நற்குடியில் பிறந்தும் தகாத காரியங்களில் ஈடுபடுபவன்.
  8. தன்னை விட வலிமையுள்ளவனிடம் தொடர்ந்து எப்போதும் விரோதம் பாராட்டும்  பலமிழந்தவன்.
  9. தன் பேச்சை கேட்க விழையாதவனிடம் பேச முயல்பவன்.
  10. தவறானவைகளில் ஆசை கொள்பவன்.
  11. மருமகளிடம் தவறாக நடக்கும் மாமனார்.
  12. பெண்களைப் பயமுறுத்திய போதிலும், அவர்களிடம் மதிப்பை எதிர்பார்க்கும் நபர்.
  13. அடுத்தவன் நிலத்தில் விதை விதைப்பவன்.
  14. பெண்களைப் பற்றி வீணாக அவதூறு பேசுபவன்.
  15. தானம் பெற்றவன் தானம் கொடுத்தவனை மறத்தல்.
  16. தானம் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டு அதை நிறைவேற்றாமல் தானம் கொடுத்த மாதிரி தன்னைத் தானே புகழ்பவன்.
  17. தவறு செய்பவனை சமாதானம் செய்பவன்

இந்த 17 வகையான தீயவர்களை யமன் தனது பாசக் கயிற்றினால் நரகத்திற்கு இழுத்துச் செல்வான்

v  ஒருவன் எப்படிப் பழகுகிறானோ அப்படியே அவனிடம் பழக வேண்டும். ஏமாற்றும் எண்ணத்துடன் நடப்பவனிடம் அதே போல் ஏமாற்றியும், நியாயமான முறையில் நடப்பவனிடம் நியாயமாகவும் நடக்க வேண்டும்.

v  நூறு வயது வாழ விதுரர் சொல்லும் வழிகள்: அதீதமான கர்வம், வரம்பு மீறிப் பேசுதல், தியாகமின்மை, கோபம், காமம், உறவினர்களை ஏமாற்றல் - இந்த ஆறும் ஒருவனின் வாழும் வயதை ஒரு கூர்மையான வாளாக வெட்டிக் குறைத்துவிடும். இவைகள் தான் மனிதனைக் கொல்லும் யமன். இந்த ஆறையும் தவிர்த்து நூறு வயது வாழலாம்.

v  பிராமணனைக் கொன்ற பாபம் கீழ்க்கண்ட செயல்களைச் செய்பவர்களிடம் சேரும்: நம்பிக்கையோடு ஒப்படைத்த மனைவியிடம் தகாது நடப்பது, குருவின் மனைவியை நாடுவது, பிராமணன் கீழ் சாதிப் பெண்ணை மணம் செய்வது,  குடிப்பது, தீய காரியங்களைச் செய்ய போதனை செய்வது, ஒருவனின் வாழ்வாதாரத்தை அழிப்பது, பிராமணனை வேலையாளாக அமர்த்துவது, அடைக்கலம் அளித்தவர்களை கொல்வது. இந்தச் செய்கையால் ஏற்படும் பாவங்களைப் போக்க வேதத்தில் சொல்லிய பிராயச் சித்தம் செய்ய வேண்டும்.  

v  குடும்பத்தைக் காக்க, ஒரு தனி நபரை இழக்கலாம்; ஒரு கிராமத்தைக் காக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம்; ஒரு நாட்டைக் காக்க, ஒரு நகரத்தை இழக்கலாம்; தன் ஆத்மாவைக் காக்க அனைத்து பூமியின் சுகங்களையும் இழக்கலாம்.

v  சூதாட்டம் நடப்பதற்கு முன்பு நான் உங்களிடம் இது தவறு என்று சொன்னேன். ஆனால், நீங்கள் வியாதியஸ்தர்களின் வியாதியைப் போக்கும் சக்தி பெற்ற ஆனால் கசப்பான மருந்துகளைப் போன்ற என்னுடைய வார்த்தைகள் உங்களுக்கு கசப்பாகி விட்டன.

v  வேளையாட்களிடம் ஒருபொழுதும் கோபப்படாத யஜமானனிடம் அந்த வேளையாட்கள் பக்தியோடு சேவை செய்வார்கள். யஜமானரின் நம்பிக்கையைப் பெற்று, அவரின் கஷ்டமான நேராத்திலும் கூட இருந்து  உதவியாக இருப்பார்கள். தன்னை அண்டியவர்களின் வாழ்வாதரத்தை நிறுத்தி, புதிய ராஜ்யங்களையோ, சொத்துக்களையோ சேர்க்க முனையக் கூடாது. ஏனென்றால் நம்பிக்கைகுரிய ஆலோசகர்கள் கூட அவர்களின் பணம் - சந்தோஷம் கெடும் பொழுது அரசர்களை விட்டு விலகிவிடுவார்கள்.

v  யஜமானின் உத்தரவுகளை மதிக்காத வேலையாள்செய்யச் சொன்ன வேலைகளைச் செய்யாமல் இருக்கும் வேலையாள், தான் மிகவும் அறிவாளி என்று பெருமைகொள்ளும் வேலையாள், எப்பொழுது எதிர்த்துப் பேசும் வேலையாள் - இவர்களை உடனே வேலையிலிருந்து நீக்கி விடவேண்டும்.

v  அரசனின் தூதுவனுக்கு இருக்க வேண்டிய எட்டு குணாதிசயங்கள்: எதையும் எதிர்கொள்ளும் மன வலிமை, தைர்யம், உடனே செயலில் ஈடுபடும் திறமை, பரிவு, பழகுவதில் தூய்மை, ஊழலற்றவன், திடகாத்திர நோயற்ற உடல், நேர்மையான பேச்சு.

v  கெட்ட சகவாசம் கொண்டவர்களின் அறிவுரைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் அறிவுரை வழங்குபவர்கள் யாராக இருப்பினும் 'உன்னிடம் எனக்கு நம்பிக்கை இல்லை' என்று முகத்திற்கு நேரே சொல்லாமல் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அவனைத் தள்ளி வைத்து விடவேண்டும்.

v  கீழ்க்கண்டவர்களிடம் பணப் பட்டுவாடா செய்யக் கூடாது: உன்னை வெறுப்பவன், அரசன், கெட்ட நடத்தை உள்ள பெண், அரசனின் வேலையாள், மகன், சகோகதரர், ஒரு குழந்தையுடன் இருக்கும் விதவை, ராணுவ வீரர், சொத்து முழுவதையும் இழந்தவன்.

v  தினமும் குளிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்: வலிமை, அழகு, குரல்வளம், சுத்தமான உச்சரிப்புகள், தொடுதலுக்கு மென்மையான தோல், உடலின் நறுமணம், சுத்தம், அறிவு, இளமை, சிறந்த பெண்களின் அன்பு.

v  அளவோடு சாப்பிடுவதால் உண்டாகும் ஆறு நன்மைகள்: ஆரோக்கியம், நீண்ட வாழ்வு, பலம், சந்தோஷம், நல்ல  குணமுள்ள குழந்தைகளின் பிறப்பு, பெரும் தீனிக்காரன் என்ற அவப்பெயரின்மை.

v   இந்த கீழ்த்தரமான ஆறு பேர்களிடம் வேலை செய்யக் கூடாது: வீட்டைக் கொளுத்துதல் போன்ற மிகவும் கொடூரமான தீய காரியங்களைச் செய்தவன், தவறையே எப்போதும் செய்பவன், பொய்யின் அவதாரமாகத் திகழ்பவன், கடவுள் நம்பிக்கையில் ஒரு ஸ்திரமான புத்தி இல்லாதவன், அன்பு பாராட்டாதவன், தான் தான் எல்லோரையும் விட மிகவும் புத்த்சாலி என்று நினைப்பவன்.

v  எல்லா உயிர்களுக்கும் எது நன்மை பயக்குமோ, எது எல்லா உயிர்களுக்கும் சந்தோஷத்தை அளிக்குமோ அந்த பலன்களை கடவுளுக்கு அர்ப்பணிப்பது தான் மனித குலத்திற்கு உய்வதற்கான மூலவேராகும்.

v  கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடக்கும் யுத்தம்  இந்திராதி கடவுள்களுக்கும் வலியைக் கொடுக்கும். மேலும் இந்த இருவர்களது  விரோதமான தீமைகள் உங்களுக்கு வாழ்நாள் பூராவும் மனக் கவலைகளைக் கொடுக்கும். அதனால் உங்கள் புகழ் கெடும். உங்கள் பகைவர்களோ ஆனந்திப்பார்கள். அது மட்டுமல்ல; பீஷ்மரின் கோபம், துரோணரின் கோபம் ஆகியவைகளும் இந்த உலகத்தையே ஒரு வால் நட்சத்திரம் பூமியை நோக்கி விழுவதைப் போல் அழித்துவிடும்.

v  சமாதானம் ஏற்பட்டால் துரியோதனன், பாண்டு புத்திரர்கள் ஒன்றாக ஆட்சி செய்யலாம். காடும், புலிகளும் போலவோ, காடும் சிங்கங்கள் போலவோ, அவர்கள் ஆள்வார்கள்.

v  ஐந்து வகையான வலிமைகளை அரசன் பெற்றிருக்க  வேண்டும். அவைகள்: ஆயுதப் பயிற்சியால் அடைந்த வலிமை, அறிவில் சிறந்த ஆலோசகர்களைப் பெறுதலால் அடையும் வலிமை, செல்வம் பெறுவதால் அடையும் வலிமை, இயற்கையாக வம்சத்தின் உயர்வால் அடையும் வலிமை, வலிமைகளிலும் வலிமையான ஒருவனின் ஞானத்தால் உண்டாகும் வலிமை. கடைசியில் குறிப்பிட்ட ஞானம் தான் வலிமைகளில் எல்லாம் மேலான ஒன்றாகும் என்பதையும் அறியவேண்டும்.

v  தன் எதிரி வெகு தொலைவில் இருக்கிறான் என்று தவறாக நினைத்து அந்த எதிரியை வளர விடக்கூடாது.

v  அறிவான அம்பால் தாக்குண்ட பிராணிகளைக் காப்பாற்ற ஒரு வைத்தியனாலும் முடியாது. கடவுள்களுக்கு செய்யப்படும் ஹோம மந்திரங்களோ, மதச் சடங்குகளோ, அதர்வ வேத யாகங்களோ ஒன்றும் அறிவால் ஏற்படும் ரணங்களுக்கு மருந்தாகாது.

v  உலகத்திலேயே தீ ஒரு பெரிய சக்தியாகும். அந்த சக்தி வாய்ந்த தீ மரக்கட்டைகளில் மறைந்துள்ளது. இருப்பினும் அந்த தீ அந்த மரக்கட்டைகளை எரிப்பதில்லை. அதற்கு இரண்டு மரக்கட்டைகளை உராசி நெருப்புப் பொறிகளை உண்டாக்க வேண்டும். இதைப் போல் தான் நற்குடிப்பிறந்தோர் இந்த தீயைப் போல் சக்தி பெற்றோராகும். அது அவர்கள் உள்ளத்தில் அமைதியாக, உருவமற்று உறங்கிக் கொண்டிருக்கும்.

v  உங்களது மகன்கள் காடாகவும், பாண்டுவின் மைந்தர்கள் சிங்கங்களாகவும் ஒற்றுமையாக இருந்து ஆட்சியை அனுபவிக்கட்டும்.

 

அத்தியாயம் 6

 

விதுரர் இந்த அத்தியாயத்தில் முக்கியமாக அரசருக்கு இருக்க வேண்டிய கடமைகள், தவிர்க்க வேண்டியவைகள், பொதுவான மற்றும் சிறப்பான அரச நீதிகள் சொல்லி விளக்கி உள்ளார். இதிலும் பலவகையான நீதிகள் முன்பே சொல்லப்பட்டவைகளும் இருக்கின்றன. அவைகளைத் தவிர்த்து இங்கு எடுத்து எழுதப்பட்டுள்ளன

விருந்தினரகளை உபசரிப்பதின் முக்கியத்துவம், வேதவித்துக்கள் உபசாரித்தை நிகாகரிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள், யாரை எல்லாம் விருந்தனர்களாக உபசரிக்கக் கூடாது, யாரை விருந்தனர்களாக ஏற்கலாம், நம்பிக்கையானர்கள் யார், அரசரரின் குணாதிசயங்கள் ஆகியவைகளை விளக்கி இறுதியாக விதுரர் திருதராஷ்டிரருக்குச் சொல்வது இதுதான்: 'யுத்தப் பயிற்சியில் எல்லையற்ற வகையில் தேர்ந்த பாண்டுவின் பிள்ளைகளிடம் ராஜ்யத்தை ஒப்படைக்காமல் துரியோதனிடம் ஒப்படைத்தீர். பாலி மஹாராஜா மூன்று உலகங்களையும் ஆண்டவனாக இருந்தாலும், அவனது அகங்காரத்தால் வீழ்ந்து தோற்றான். அது துரியோதனிடம் ஆட்சியை ஒப்படைத்தால் நிகழும்.' 

இனி விதுர நீதி நூலின் உரையினை அறிந்து உலக நீதியினை உணர்வோம்

v  வயதான விருந்தாளி வீட்டிற்கு வந்தவுடன் அந்த முதியவரை வீட்டின் சொந்தக்கார இளைஞன் வரவேற்று உபசரிக்காவிடில் அவனது உடலில் உள்ள சகல சக்திகளும் அவனை விட்டு அகன்றுவிடும். ஆனால் அந்த முதிய விருந்தாளியை தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்து அவரை வணங்கிய உடன் வெளியேறிய அத்தனை சக்திகளும் மீண்டும் அவனது உடலில் புகுந்து விடும்.

v  விருந்தாளியை உபசரிக்கும் முறை இது தான்: அவருக்கு முதலில் உட்கார ஆசனம் அளிக்க வேண்டும். அவரது கால்களை நீரால் அலம்ப வேண்டும். அவரது க்ஷேமத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும். தன்னுடைய செல்வ நிலையையும் தெரிவிக்க வேண்டும். அவருக்கு அவர் வந்திருக்கும் நேரம் - காலம் அறிந்து அதற்கு ஏற்ற படி உணவு அளிக்க வேண்டும்.

v  வேதம் கற்றவன் நீர், தேன் - தயிர் - பசும் பால் ஆகியவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு ஆகியவைகளை நிராகரித்தால் அவன் வீட்டில் பலவிதமான சோக சம்பவங்கள் நிகழும் என்பது வேத விதியாகும்.

v  வைத்தியன், அம்புகள் செய்பவன், காமம் கொண்டவன், மதச் சடங்குகளைச் செய்யாதவன், திருடன், கொடுமைக்காரன், குடிகாரன், கருவைச் சிதைப்பவன், ராணுவ வீரர் , வேதத்தை காசுக்கு விற்பவன் ஆகியவர்களை விருந்தினர்களாக ஏற்று அவர்களுக்கு நீர் வார்க்கக்  கூடாது.  

v  உப்பு, சமைத்த உணவு, தயிர், பால், தேன், எண்ணை, நெய், எள், மாமிசம், கிழங்குகள், காய்கறிகள், சிவப்பு வஸ்திரம், அனைத்து வாசனைத் திரவியங்கள், வெல்லப் பாகு பானம் ஆகியவைகளை வியாபாரம் செய்தல் கூடாது

(பிராமணர்கள் மேற்கொள்ளக் கூடாத செயல்களாக இவைகளை கருத வேண்டும். வேறு சிலர் இந்தப் பொருட்கள் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியப் பொருட்களாக இருப்பதால், அரசன் இவைகள் அனைவருக்கும் கிடைக்க வழி வகுக்க வேண்டும். இலவசமாகவோ, பண்ட மாற்றமாகவோ எளிதில் இவைகளைப் பெறச் செய்ய வேண்டியது அரசன் கடமை.) 

v  பிச்சை எடுத்து வாழும் சன்னியாசிகள் கோபம் தவிர்க்க வேண்டும். அவர்கள் ஒரு பிடி மண்ணையும், ஒரு கல்லையும், ஒரு தங்கத்தையும் ஒரே மதிப்பான பொருளாக எந்தவிதமான வித்தியாசமும் இன்றி மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு துக்கம் இல்லை. பாசமோ, வெறுப்போ ஒருவரிடம் பட மாட்டார்கள். புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ இரண்டும் அவர்களுக்கு ஒன்று தான். சந்தோஷம், துக்கமும் அவர்களைப் பாதிக்காது.

v  காட்டில் யாருடைய உழைப்பின்றி வளரும் நெல், பூமியில் புதையுண்டு வளரும் கிழங்குகள், இங்குடி மர கொட்டைகள், உணவாக உட்கொள்ளத் தகுதியான இலைகள் ஆகியவைகளைப் புசித்து வாழும் ரிஷிகள் ஆத்மாவை அடக்கி ஆண்டவரக்ள், தீயை வணங்குபவர்கள். விருந்தாளியாகச் செல்ல விரும்பாமல் காட்டில் வசிப்பதையே விரும்புவர்.

v  கற்புள்ள குடும்பப் பெண்கள் வீட்டின் ஒளி விளக்கு. அவர்களை காத்து வணங்க வேண்டும். அவர்கள் லட்சுமி தேவியின் அம்சம். வீட்டின் லட்சுமி கடாட்சமான அந்தப் பெண்களை ஒரு பொழுதும் கண்கலங்கச் செய்யக் கூடாது.

v  வீட்டின் நிர்வாகம் தந்தையிடம், சமையல் அறை தாயிடம், மிகவும் தன் உயிர் போல் பாதுகாக்கும் குணமுள்ளவனிடம் பசுக்களின் பராமரிப்பு, விவசாயத்தை தானேயும் ஏற்று செயல்படவேண்டும். வியாபாரம் நம்பிக்கைக்குப் பாத்திரமான வேலையாட்களிடம், விருந்தாளி பிராமணர்களை மகன் களிடமும் ஒப்படைக்க வேண்டும்.

v  நீரிலிருந்து நெருப்பு உண்டாகிறது. பிராமண குலத்திலிருந்து க்ஷத்திரயர்கள் உருவாகிறார்கள். பூமியில் பாறைகளிடையில் இரும்பு, தங்கம் ஆகிய உலோகங்கள் கிடைக்கின்றன. அவைகளில் புதைந்து கிடக்கும் பல சக்திகள் பரவலாக முழுவதும் இருக்கின்றன. ஆதன் மூலக் கூறுகளுடன் சேரும் போது எந்தவிதமான மாற்றங்களும் உண்டாவதில்லை. உதராணத்திற்கு தீ அனைத்தையும் எரித்துச் சாம்பாலாக்கும் சக்தி பெற்றது. ஆனால் அதன் மூலமான நீரில் சேரும் போது அதன் சக்தி அடங்கி விடுகிறது.

v  உத்தமமான குணமுள்ள உயர்குலத்தில் பிறந்தவர்களின் சக்தி மரக்கட்டையில் மறைந்திருக்கும் தீயைப் போன்றது. அவர்களை தீய எண்ணத்தோடு தீண்டினால் உறங்கிக் கொண்டிருந்த அவர்களது சக்தி பொங்கி எழுந்து எதிரிகளை அழித்துவிடும்.

v  அரசனின் ஆலோசனைகள் மிகவும் ரகசியமான இடங்களில் நடத்தப்படவேண்டும். மலை உச்சி, பெரிய அரண்மனை, ஜன நடமாட்டம் இல்லாத அடர்ந்த காடு ஆகிய இடங்களே உத்தமம்.

v  நன்கு ஆலோசிக்காமல் ஒரு மந்திரியை நியமனம் செய்வது கூடாது. ஏனென்றால் அரசாங்க கஜானாவை நிறப்புதல், அரசு நிர்வாகத்திற்கு ஆலோசனை ஆகிய காரியங்களுக்கு மந்திரியைச் சார்ந்து அரசர் இருக்கிறார்.

v  வேதம் படிக்காத பிராமணன் கர்மா செய்ய அருகதை அற்றவன். அது போல் ஆறு ராஜ தந்திரங்களை முற்றிலும் அறியாதவன் அரசியல் ரகஸ்யங்களைக் கேட்கும் தகுதியை இழக்கிறான். அந்த ஆறு ராஜ தந்திரங்கள்: சமாதானம், யுத்தம், ராணுவம், அன்னிய நாட்டை சுற்றி வலைத்தல், சரணடைதல்.

v  கோபம், சந்தோஷம் ஆகியவைகள் தகுந்த அளவில் இருப்பவனிடமும், ஒரு காரியம் செய்த பிறகும் அதைப் பற்றிச் சிந்திப்பவனிடமும், சுய நம்பிக்கையை ஒரு சொத்தாக நினைத்துக் காப்பவனிடமும் இந்த உலத்தில் செல்வம் குமிழ்வது சர்வ நிச்சயம்.

v  ஒரு பிராமணனை இன்னொரு பிராமணன் தான் அறிவான். ஒரு கணவன் தான் தன் மனைவியை அறிவான். ஒரு ராஜா தான் இன்னொரு ராஜாவை அறிவான்.

v  கடவுளிடம் கோபம், அரசிடரிடம் கோபம், பிராமணரிடம் கோபம், வயதானவனர் - குழந்தை - துயரப்படுபவர் ஆகியவர்களிடம் கோபம் ஆகியவைகளைத் தவிர்க்க வேண்டும்.  

v  இந்த ஏழு நற் குணங்கள் செல்வம் கொழிக்கச் செய்யும்  காரணிகள்: மன உறுதி, மன அடக்கம், புலனடக்கம், தூய்மை, பரிவு, இன் சொற்கள், நண்பர்களுக்கு ஊறு செய்யாமை.

v  தன் வீட்டில் ஒரு பாம்பு இருப்பதை உணர்ந்தவுடன் எப்படி ஒருவன் தூக்கத்தை இழப்பானோ அதே போல் அப்பாவி மனிதனை துன்பப்படவைப்பவன் இரவில் துக்கத்தை இழப்பான்.

v  ஒரு பெண், ஏமாற்றுப் பேர்வழி, ஒன்றுமறியாத குழந்தை ஆகியவர்கள் வழிகாட்ட பயணிப்பவன் கல்லால் உருவாக்கப்பட்ட ஒரு படகு போல் ஆற்றில் மூழ்கி அவதிப்படுவான்.

v  சூதாடிகள், நாடோடிகள், வேசிகள் ஆகியவர்கள் ஒருவனை புகழ்ந்து பேசினால் அவனை உயிரோடு இருப்பவனாக் கருதாமல் இறந்தவனாகவே கருத வேண்டும்.

v  பாலி அரசர் தனது கொழுந்து விட்டு எரியும் தற்பெருமைக்கு அடிமையாகி ராஜ்யத்தை இழந்து மூன்று உலகங்களிலிருந்தும் கீழே விழுந்து அழிந்ததைப் போல் துரியோதனன் விழ அவனிடம் ராஜ்யத்தை ஒப்படக்க விழைகிறீர். இது நடவாமல் தவிர்ப்பீர்.  

 

அத்தியாயம் 7

 

இந்த அத்தியாயத்தில் உள்ள பல திரும்பச் சொல்லிய கருத்துக்களைத் தவிர்த்து மற்றவற்றை எழுதி உள்ளோம். 

திருதராஷ்டிரர் சொல்கிறார்: ஒரு மனிதன் பணக்காரனாகவோ அல்லது ஏழையாகவோ இருப்பது அவன் கையில் இல்லை. ஒரு பெண் மரப்பொம்மை நூலால் கட்டப்பட்டு தன்னிச்சையாகச் செயல்படாமல் இருப்பதைப் போல் தான் அந்த மனிதனின் நிலை இருக்கிறது. அவன் அவனை சிருஷ்டித்த கடவுளின் தலைவிதிப்படி கீழ்ப்படிந்து தான் செயல்படுகிறான். இருப்பினும் நீ சொல்ல நினைத்ததை தொடர்ந்து சொல்லவும். நான் அவைகளைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

விதுரர் தொடர்ந்து சொல்கிறார்

v  , பாரதா! பிரஹஸ்பதி கூட தன் ஆலோசனைகளை தகுந்த சமயத்தில் சொல்லாவிடில், அறிவான ஆலோசனைகளும்  அவனுக்கு இகழ்வை பெற்றுத் தந்து, அவனும் மதிப்பை இழப்பான். ஒருவனை பரிசுப் பொருட்களாலும், மற்றவனை இன்சொற்களாலும், மூன்றாம் நபரை மதுபானத்தாலும் கவரலாம். ஆனால் இயற்கையாக அன்பு பாராட்டுபவனுக்கு இத்தகைய பரிசுகள் இல்லாமலே அவன் எப்பொழுதும் விருப்பப்படும் நபராகவே இருப்பான்.

v  ஒருவனை வெறுத்துவிட்டால் அந்த நபரை நம்பிக்கையுரியவனாகவோ அல்லது அறிவுள்ளவனாகவோ அல்லது ஞானியாகவோ அந்த நபர் அவர் சொல்லும் ஆலோசனகள் எப்படி இருப்பினும் ஏற்க மாட்டார். ஆனால் அவரிடம் நம்பிக்கை வைத்து விட்டாலோ, அவர் சொல்வது அனைத்தும் நல்லதாகவே எப்போதும் படும். அதே போல் வெறுத்து விட்டாலோ, அவன் சொல்வதெல்லாம் தீமையாகவே தெரியும். 

v  ஓ, ராஜா! துரியோதனன் பிறந்த நேரத்தில் நான் உங்களிடம் இந்தப் பிறந்த குழந்தையைத் தியாகம் செய்து, மற்ற 99 குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினேன். ஆனால் என் பேச்சை நீங்கள் கேட்க வில்லை. ஆகையால் நீங்கள் இப்போது அழிவைத் தேடிக் கொண்டீர்கள்.

v  வளர்ச்சியான மாயத் தோற்றத்தைத் தருபவைகளை மிகவும் வரவேற்று மகிழக் கூடாது; ஆனால், முதலில் தாழ்வையும் இறுதியில் உயர்ந்த நிலையையும் தருபவைகளை மதிக்க வேண்டும். ஆகையால் நஷ்டம் என்று எதிர்பார்ப்பவைகள் லாபம் கொடுத்தால் அவை நஷ்டம் இல்லை. அதே போல் லாபம் முதலில் ஏற்பட்டு இறுதியில் பெரிய நஷ்டம் அடையும் செயல்களை நஷ்டம் என்று தான் தீர்மானிக்க வேண்டும்

திருதராஷ்டிரர் சொல்கிறார்: நீ சொல்வது எல்லாம் என் வருங்கால நன்மைக்குச் சொல்கிறாய். அவைகள் அத்தனையும் அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட போதனைகள். ஆனால் என் மகனை கைவிட்டு விட வேண்டும் என்று நினைப்பது கூட என்னால் முடியாத ஒன்றாகும். எங்கு நியாயம் இருக்கிறதோ அங்கு வெற்றி கிட்டும் என்பதும் எனக்குத் தெரியும்

விதுரர் மீண்டும் தொடர்கிறார்

v  நற்குணமுடையோர்களும், மிகவும் பணிவுடன் நடப்பவர்களும் எந்த உயிரனங்களுக்கும் ஒரு சிறிய துன்பத்தையும் அளிக்க மாட்டார்கள்.

v  மனிதர்களுள் உயர்தோனே! வீரமுள்ள பாண்டவர்களை சந்தோஷப்படுத்துவதற்கு ஒரு சில கிராமங்களையாவது அவர்களுக்குக் கொடுக்கவும். அவைகளை வைத்துகொண்டாவது அவர்கள் ஜீவிப்பார்கள். இதைச் செய்வதால் ஓ, அரசே! உலகத்தின் மதிப்பை நீங்கள் பெறுவீர்கள். உங்களுக்கும் வயசாகிவிட்டது. அவர்களைக் கட்டுப் படுத்துவது உங்கள் கடமையாகிறது. உங்களது நேர்மையான நடவடிக்கைகளால் பாண்டுவின் பிள்ளைகள் சூழ வாழ்ந்தால், உங்களை உங்கள் எதிரிகள் ஒன்றும் செய்ய முடியாது.

v  பணம் படைத்தவரிடம் அவரது ஏழை உறவினர்கள் உதவி செய்ய நாடும் பொழுது உதவாவிடில் அந்தப் பாவம் ஒரு வேடுவனின் விஷ அம்பால் தாக்கப்பட்டு துயர்படும் மானின் துயரம் போல் உதவாத உறவினரைப் பீடிக்கும்.

v  , ராஜாவே! வருங்காலத்தில் பாண்டவர்கள் அல்லது உங்கள்  மகன்கள் இறந்த செய்திகளைக் கேட்டும் பொழுது, நீங்கள் உங்கள் செயல்களுக்கு வருந்த நேரிடும். ஆகையால் நான் சொல்லும் நீதிகளை மனத்தில் வாங்கி சிந்தித்து நல்ல முடிவை இப்போது எடுக்கவும்.

v  வாழ்வே நிச்சயம் இல்லை. ஆகையால் எடுக்கும் எந்த முடிவுகளும் மனச் சஞ்சலம் அளித்து, ஒருவன் தனது தனி அறையில் துக்கத்தால் துயர் படும் தன்மையான  செயல்களைத் தவிர்ப்பது நலம்.

v  அசுரர்களின் குரு பார்க்கவா என்ற சுக்கிராச்சார்யார் ஆவார். அவர் அசுரர்களுக்கு நீதிக்குப் புறம்பான வழிகளைக் கற்றுக் கொடுப்பதால், அறிவாளிகள் அந்த தவறான வழிகளை அசுரர்களுக்குச் சுட்டிக் காட்டி சரியான பாதைக்கு வழிவகுக்க வேண்டும்.

v  முன்பு பாண்டவர்களுக்குச் செய்த துரோகங்களை சரி செய்ய வேண்டியது அவசியமாகும். பாண்டவரகளை அரியணை ஏறச் செய்து, உங்கள் பாபங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவீராக. அறிஞர்கள் உங்களைப் போற்றி வணங்கும் உன்னத நிலையை நீங்கள் அடைவீர்களாக. சிறந்த நீதி போதனைகளைக் கேட்டுச் செயல்படுவதால், அழியாத புகழ் அடைவீர்கள். பாப காரியங்களைச் செய்யாதவன், செல்வச் செழிப்போடு வாழ்வான். மீண்டும் மீண்டும் பாபச் செயல்களையே செய்யும் நபர்கள் நரகத்தில் தள்ளப்பட்டு அதிலிருந்து வெளியேற முடியாமல் அவதிப்படுவர்.

v  ரகசிய ஆலோசனையின் போது ஆறு ஓட்டைகள் வழியாக ரகசியம் வெளியே கசிவதைத் தடுத்து நிறுத்துவது ஒரு அறிவாளியின் கடமையாகும். இதன் மூலம் அரசனின் புகழ், அவனது அரசு காப்பாற்றப்படும். அந்த ஆறு ஓட்டைகள்: குடிபோதை, அதிகத் தூக்கம், தனக்கு எதிராகச் செயல்படுபவர்களை பற்றி அறியாமை, மனக் கலக்கத்தை வெளிக்காட்டும் முக சாடை, கெட்ட மந்திரிகளிடம் நம்பிக்கை, திறமையற்ற தூதுவர்இந்த ஆறு ஓட்டைகளையும் எப்போதும் அடைத்து விடவேண்டும்.

v  கடலில் விழுந்த பொருட்கள் வீண்; சொற்களைக் காது கொடுத்துக் கேட்கா விடில் அந்த சொற்கள் வீண்: தன்னடக்கம் இல்லாதவனிடம் அவன் கற்ற வேத ஞானம் வீண்; தீ இல்லாத ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்கள் வீண்.

v  அறிவாளி தன் நண்பர்களைத் தேர்வு செய்யும் போது, நண்பர்களின் அறிவு, நன்னடத்தை ஆகியவைகளைக் கொண்டு நிர்ணயித்தாலும், அவர்களைப் பற்றிய தற்போதைய நிலைகளை காதுகொடுத்து கேட்டு, தனது தீர்மானிக்கும் சக்தியைப் பயன்படுத்தி நண்பர்களை அவ்வப்போது சீர்தூக்கிப் பார்த்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

v  கற்பதைத் தொடர்ந்து செய்யும் அறிஞன், நற்பண்பு கொண்டவன், முக லட்சணம் கொண்டவன், சமூக சிந்தனை கொண்டவன், இன் சொல்லன் ஆகியவர்களையே நண்பர்களாகத் தேர்வு செய்ய வேண்டும். தீய மனம் படைத்தவன், படிக்காதவன், ரகஸ்யம் காக்காதவன் ஆகியவர்கள் ஒரு கிணறு புல் புதர்களால் மூடப்பட்டிருப்பதைப் போல் தங்கள் சுய உருவங்களை மறைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆகையால் அப்படிப்பட்டவர்களின் நட்பை உண்மை நிலை அறிந்து  சீக்கிரம் விட்டு விட வேண்டும்.

v  ஒரு நல்ல நண்பனின் குணாதிசயங்கள்: செய்நன்றி மறவாதவன், நற்பண்பாலன், உண்மை பேசுபவன், உயர்குடிப்பிறந்தவன், பக்திமான், நீதிமான்.

v  ஐம்புலன்களையும் அடக்கினால் சாவையும் வெற்றி கொள்ளலாம். அதே போல் அதிகமாக ஐம்புலன்களை கட்டுப்படுத்தாமல் அலைய விட்டால், கடவுள்களாலும் காப்பாற்ற முடியாத நாசம் ஏற்படும்.

v  நீண்ட வாழ்க்கைக்கு காரணமானவைகள் என்று அறிஞர்கள் சொன்னவைகள்: அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு, பொறாமைப் படாமை, பொறுமை, வீரம், நண்பர்களிடம் நட்பு.

v  ஒருவன் தோல்வியே அடையாமல் இருக்க செய்ய வேண்டியவைகள்: வருங்காலத்தில் சரிசெய்ய எடுக்க வேண்டிய காரியங்களை முன்பே அறிந்து செயல்படல், தற்போது செய்ய வேண்டிய காரியங்களில் முழு மனதுடன் ஈடுபடல், கடந்த காலத்து செயல்களின் குறைகளை அறிந்து வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு கலங்காமல் இருத்தல்.

v  ஒரு மனிதனை அவன் செயல், எண்ணம், சொல் ஆகியவகளால் அறிய வேண்டும். ஆகையால் ஒருவன் இவைகளில் நல்லவைகளையே தேர்வு செய்ய வேண்டும்.

v  ஒருவனின் செல்வச் செழிப்பிற்குக் காரணாதிகள்: சுபகாரியங்கள், விடா முயற்சி, கற்றல், தூய காரியங்கள், நேர்மை, நற்குணங்கள் கொண்டவர்களைச் சந்தித்தல்.

v  பலஹீனமானவன் பொறுமை காக்க வேண்டும். பலவான் நேர்மை காக்க வேண்டும். நல்லது, கெட்டது இரண்டையும் சமமாகப் பார்ப்பவன் தான் மன்னிக்கும் குணவான்.

v  தோல்வியால் துவண்டு துக்கம் கொள்பவன், தவறிழைப்பவன், கடவுளை நம்பாதவன், சோம்பேறி ஆகியவர்களிடம் செல்வம் தங்காது.

v  மிக்க நேர்மையாளன், பெரும் கொடை வள்ளல், மிக்க பலசாலி, கடும் விரதம் இருப்பவன், தன் அறிவைத் தானே மெச்சும் குணவான் ஆகியவர்களிடம் பயந்து செல்வம் அவரகளிடம் நிலைத்து நிற்காது விலகிவிடும்.

v  மிகவும் தர்மவானாகவோ அல்லது தர்மம் எதையும் செய்யாதவனாகவோ இருப்பவர்களிடம் செல்வம் தங்காது. ஏனென்றால் செல்வ தேவதையான லட்சுமி இவர்கள் இருவரையும் விரும்புவதில்லை. செல்வ தேவதை மிகவும் அடங்காத பசுப் போல் நல்லது கெட்டது என்ற பாகுபாட்டை மதிக்காமல் குருடுபோல் செயல்படுகிறாள்.

v  வேதம் பலன் தர அக்னி ஹோத்திரம் செய்ய வேண்டும். வேதப் படிப்பு பலன்தர நல்ல நடவடிக்கை, சிறந்த குணம் இருக்க வேண்டும். மனைவிக்கு பலன் அவள் கணவனிடம் பெறும் இன்பம் - குழந்தைச் செல்வம். செல்வத்திற்குப் பலன் தானம் மற்றும் அதனால் பெறும் இன்பம்.

v  தவறான வழிகளில் கிடைத்த செல்வத்தால் செய்யும் யாகம், தானம் ஆகியவைகள் இறப்பிற்குப் பின் சொர்க்க பலனைத் தராது.

v  தவமே தவம் செய்பவர்களுக்கு பலம். ஆத்ம ஞானிக்கு வேதமே பலம். துஷ்டர்களுக்கு துன்புறுத்துவதே பலம். குணவான்களுக்கு பொறுமையே பலம்.

v  விரதத்திற்கு இந்த எட்டில் எதைச் சாப்பிட்டாலும் பங்கம் வராது: நீர், கிழங்கு, பழம், பால், நெய்மருந்து, அந்தணனின் அறிவுரையின்படி சாப்பிடல், குருவின் சொற்படி சாப்பிடல்.

v  ஒருவன் கோபத்தை பொறுமையால் வெல்லலாம். தீதை நல்லதால் வெல்லலாம். கஞ்சத்தை தானம் செய்வதால் வெல்லலாம். பொய்யை வாய்மையால் வெல்லலாம்.

v  பண்டிதப் பெரியவர்களை வணங்குபவர்கள், முதியோர்களை மதித்து உதவுபவர்கள் ஆகியவர்களுக்கு பாராட்டு, நீண்ட ஆயுள், புகழ், பலம் ஆகிய நான்கும் அதிகரிக்கும்.   

v  வீணாக அதிக முயற்சி செய்த பிறகு கிடைக்கும் பொருள், நற்பண்புகளை கைவிட்டுச் செயல்பட்டு ஈட்டும் பொருள், எதிரியை வணங்கிப் பெறும் பலன் ஆகியவைகளில் மனம் செலுத்தக் கூடாது.

v  கற்காமல் இருக்கும் மனிதன், மகன் பிறக்க உறவு கொள்ளாமல் இன்பத்தையே குறியாக் கொண்டு உடல் உறவு கொள்ளல், அரசன் ஆட்சி செய்யும் அவன் ராஜ்யத்தில் உணவு கிடைக்காமல் கஷ்டப்படும் பிரஜைகள், ராஜா இல்லாத ராஜ்யம் ஆகியவைகள் பரிதாபப் படவேண்டிய விஷயங்களாகும்

v  நீண்ட பயணம் உடலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்; அருவி மலையை அரித்து விடும்; உடல் உறவு கொள்ளாத பெண்கள் சீக்கிரமாகவே வயதானவர்களாக மாறிவிடுவர்; கோபமாக வார்த்தைச் சண்டைகள் மன உலைச்சலையும், மன அழுத்தத்தையும் கொடுக்கும்.

v  நீண்ட நடைப்பயணம் ஒரு மனிதனை சோர்வடையச் செய்யும்; குதிரைகளை அவைகளின் லாயத்திலேயே கட்டி வைத்து அவைகளின் மேல் ஏறி ஓட வைக்காமல் இருந்தால் அவைகளின் உடல் நலம் கெடும்; உடல் உறவு கொள்ளாத பெண்களின் உடல் நலம் கெடும்; அதிக நேரம் வெய்யிலில் உலரவைக்கும் துணிகள் கெடும்.

v  வேத நூல்களைப் படிக்காமல் இருப்பது வேதத்திற்கு அழுக்கு; விரதங்கள் இருக்காமல் இருப்பது பிராமணர்களுக்கு அழுக்கு; காட்டுவாசிகளான பாஹ்லிகா ஆகியவர்களின் கொலைத்தொழிலால் பூமிக்கு அழுக்கு; மனிதர்களுக்கு அவர்களின் பொய்யே அழுக்கு.

v  ஒரு பெண் கற்பை இழப்பது அவளது அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீராத அவா; அதிக நாட்கள் கணவனைப் பிரிந்து இருக்கும் பெண் தவறு இழைக்க நேரும். தங்கம் தன் தரத்தை இழந்தால் அது வெள்ளியின் மதிப்பைப் பெறும்; அதே போல் வெள்ளி தன் தரத்தை இழந்தால் வெள்ளீயத்தின் மதிப்பைப் பெறும்; வெள்ளீயம் தன் தரத்தை இழந்தால் ஈயத்தின் மதிப்பைப் பெறும். அந்த ஈயம் உலோகங்களிலேயே மிகவும் குறைவான மதிப்புடையதாகும்.

v  நண்பர்களுக்குப் பரிசுகள், எதிரிகளைப் போரில் வெல்லுதல், மனைவிக்கு உயர்ந்த உணவு அளித்தல் ஆகியவைகளைச் செய்யும் மனிதன் எவனோ அவன் தான் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவனாகக்  கருதப்படுபவன்.

v  ஆசைகளை விட்டு விலக ஆயிரம் அல்லது நூறு பிறவிகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் பல பிறவிகள் எடுக்க வேண்டிய நிலையால், ஆசைகளை விடுவது என்பது இயலாது என்று நினைப்பது தவறு. நெல், பார்லி, தங்கம், கால்நடைகள், பெண்கள் ஆகியவகைகள் அனைத்தும் கிடைத்தாலும் ஒரு மனிதனின் ஆசை திருப்தி அடைவதில்லை. ஆகையால் இதை அறிந்து, உலகத்தில் இவைகள் அனைத்தையும் அடைய முட்டாள் தனமாக ஒருவரும் முயலமாட்டார்கள்.

v  , ராஜாவே! மீண்டும் உங்களுக்கு நான் உபதேசம் செய்வது இதுதான்: 'உங்கள் சொந்த மகன்கள் மற்றும் பாண்டுவின் மகன்கள் ஆகிய இருவர்களிடமும் சமமாக பாசம் கொண்டு நடந்து கொள்வீராக.'

 

அத்தியாயம் 8

 

இதிலும் பல நீதிகள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. அவைகளைக் கூடிய மட்டும் தவிர்த்து எழுதியுள்ளோம். 

விதுரர் தொடர்ந்து நீதி போதனை செய்கிறார்: 

v  தவசிகளால் மதிக்கப்படுபவர்களிடம் புகழ் காலம் தாழ்த்தாமல் வந்தடையும். அதே போல் கடமைகளை அவைகளால் உண்டாகும் பலன்களில் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றியும், செயலில் முழுச் சக்தியையும் பயன்படுத்திச் செயல்படுபவர்களிடமும் புகழ் வந்து சேரும். திருப்தி அடையும் நல்லோர்களின் ஆசிகளால் மனிதர்கள் சந்தோஷம் அடைவார்கள் என்பது சர்வ நிச்சயம்.

v  தவறான வழியில் ஒரு பெரும் பொருள் கிடைத்தால் அதை ஒரு பொழுதும் அடைய விரும்பாதவரகள் ஒரு பாம்பு தன் தோலை இழந்தும் சந்தோஷமாக இருப்பதற்கு ஒப்பாகும். அதனால் அனுபவிக்க வேண்டிய துன்பமும் விலகி, அவர்கள் இன்பத்தை அடைவார்கள்.

v  பொய் பேசி புகழ் அடைதல், அரச நிந்தனை, குருவின் முன்னிலையில் நேர்மையற்ற முறையில் பிடிவாதமாக இருத்தல் ஆகியவைகள் பிரும்மஹத்தி தோஷத்திற்குச் சமம்.

v  பொறாமை என்பது சாவிற்குச் சமம். கடும் சொற்கள் செல்வச் செழிப்பிற்கு சாவு மணியாகும்.

v  குரு உபதேசிக்கும் பொழுது கவனம் செலுத்தாமை, அவசரப்படுதல், அகம்பாவம் ஆகிய மூன்றும் படிப்பிற்கு சத்துரு. அதே போல் கீழே கொடுக்கப்பட்டுள்ள எட்டும் படிக்கும் மாணவர்களுக்கு பாபம் போன்றவைகளாகும்: சோம்பேறித்தனம், அறிவதில் குழப்பமும் - கர்வமும், நிலையில்லா மனம், வேண்டாத விவாதம் செய்யும் சபையில் அங்கம் வகித்தல், விடாப்பிடியாக இருத்தல், தன்னையே ஏமாற்றுதல், சுய நலம்.

v  இன்பத்தைக் குறிகோளாகக் கொண்டுள்ளவர்கள் எங்ஙனம் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்? அவர்களால் கல்வி கற்க முடியாது என்பதுடன் அவர்கள் வாழ்க்கையில் இன்பத்தையும் இழப்பார்கள்.

v  தீ எவ்வளவு விறகுகள் இருப்பினும் திருப்தி அடைவதில்லை; அதே போல் எவ்வளவு நதிகளின் நீர் கடலில் கலந்தாலும் கடல் திருப்தி அடைவதில்லை. அதே போல் தான் எவ்வளவு உயிரை யமன் எடுத்துக்கொண்டாலும் அதனால் திருப்தி அடைவதில்லை; அழகான பெண் எவ்வளவு ஆண்களுடன் பழகினாலும் திருப்தி அடைவதில்லை.

v  ஆசை ஒருவனது சுய மரியாதையை அழிக்கிறது; சாவுக் கடவுள் வளர்ச்சியை அழிக்கிறது; செல்வத்தை கோபம் அழிக்கிறது; கருமித்தனம் புகழை அழிக்கிறது; பசுக்களை பராமரிக்காவிடில் பசுக்கள் இறக்கின்றன. , ராஜாவே! தனிப் பிராமணனனின் கோபம் முழு ராஜ்யத்தையும் அழிக்கும் சக்தி கொண்டது.

v  வீட்டில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் இவைகள்: ஆடுகள், வெண்கலம், வெள்ளி, தேன், விஷ முறிவு மருந்துகள், பறவைகள், வேதம் ஓதும் அந்தணர், வயதான உறவினர்கள், கஷ்டப்படும் நற்குலத்தவரகள்.  

v  , பரதா! மனுவின் சொற்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அவைகள் கடவுளை பூஜிப்பதற்கும், பிராமணர்கள் - விருந்தாளிகள் ஆகியவர்களை உபசரிப்பதற்கும் உதவும் மங்களகரமான பொருட்களாகும். அவைகளின் பட்டியல்: ஆடுகள், மாடுகள், சந்தனம், வீணை, சந்தனம், தேன், வெண்ணை, இரும்பு, செம்பு, சங்கு, சாளிக்கிராமம், கோரோசனை என்ற நறுமணப் பொருள்.

v  இப்போது நான் சொல்லப்போகும் நீதி மிகவும் மதிப்புடையது, தரமானது, மிகவும் உயர்ந்தது - அது தான் இது: 'ஆசை, பயம் அல்லது ஏமாற்றுதல் ஆகியவைகளால் கவரப்பட்டு தன் உயிரைக் காப்பதற்குக் கூட ஒருவன் தன் நல் ஒழுக்கத்தை கைவிடக் கூடாது.'

v  நல் ஒழுக்கம் நிலையானது; இன்பம் - துன்பம் ஆகியவைகள் நிலையற்றவைகள்; வாழ்க்கை எல்லையற்றது என்றாலும் அதற்குக் கருவிகளான இந்திரியங்கள் நிலையற்றவைகள்; ஆகையால் நிலையற்றவைகளை நிராகரித்து, நிலையானவைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒழுக்க முடையோர் எப்போதும் மனத் திருப்தியோடு இருக்கும் குணமுடையோர்.

v  உலகில் நிறையான செல்வம், செழிப்பான தானியங்கள் ஆகியவைகளுடன் பலமிக்க சக்ரவர்த்தியாக கோலோட்சியவர்களும் யமனின் பாசக்கயிற்றுக்குப் பலியாகி, தங்களது அனைத்து ராஜ்யங்களையும், தங்களது இன்பமயமான வாழ்வையும் இழந்தவர்களாவர்.

v  அன்போடு வளர்கப்பட்ட மகன் இறந்தவுடன் அவனின் இறந்த உடலை வீட்டிலிருந்து சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அந்த உடலை எரித்து விடுவர். இறந்தவனின் மனைவியின் கூந்தலை அறுத்து அந்த பிணம் எரியும் தீயில் இன்னொரு எரியும் விறகு போல் தூக்கி எறிவர்

அவனது செல்வத்தை யாரோ ஒருவன் அனுபவிப்பான். பறவைகளும், தீயும் அவனது உடம்பு - ஐம்பொறிகள் ஆகியவைகளை அழிக்கும்இந்த உலகில் அவன் உயிரோடு இருந்த காலத்தில் செய்த பாப - புண்ணியங்கள் மட்டும் தான் அவனுடைய ஆத்மாவுடன் மேலுலகத்திற்கு பயணமாகும்

இறந்தவனின் உடலை எரித்த பிறகு இறந்தவனின் உற்றார் - உறவினர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள். செழிப்பை இழந்து பழங்கள் இல்லா பட்டுப் போன மரங்களை விட்டுப் பறவைகள் நிராகரிப்பதைப் போல் இறந்தவன் மறக்கப்படுவான்.  

, அரசே! நாம் வாழும் பூமி, மேல் உலகம் இரண்டும் பேரிருளால் சூழ்ந்த பிரதேசமாகும். நமது இந்திரியங்கள் அங்கெல்லாம் அவதிப்படும் என்பதை அறிய வேண்டும். ஆகையால் இந்திரியங்களால் கட்டுப்பட்டு ஆசைகளுக்கு அடிமையாக இருக்கக் கூடாது. 

என்னுடைய இந்த அறிவுரைகளைக் கேட்டு அதன் படி நீங்கள் நடந்தால், இந்த உலகத்தில் புகழ் கிட்டும். இந்த உலகத்திலோ அல்லது மேல் உலகத்திலோ பயப்படுவதற்கு உங்களுக்கு ஒன்றும் இல்லை என்ற நிலை ஏற்படும். 

v  ஓ, பரதா! ஆத்மா என்பது ஒரு ஆறாகும். அதில் குளிக்கவுள்ள இடம் தான் மத நம்பிக்கை. ஆற்றின் நீர் சத்தியமாகும். ஆற்றின் கரைகள் மனக் கட்டுப்பாடு. அதன் அலைகள் கருணை. அதில் குளிப்பவர்கள் புன்னியவான்களாகிறர்கள். ஆத்மா ஆசைகளற்று புனித நிலை அடைகிறது.

v  ஒரு ஆற்றின் முதளைகள் மனிதனின் ஆசை - கோபம் போன்ற குறைகளான ஐம்புலன்களின் குணங்களாகும். அந்த ஆறுதான் மனிதனின் பிறப்பு இறப்பு ஆகிய வாழ்க்கையாகும். அந்த ஆற்றை கடக்கும் தோனிதான் மனிதனின் சுய மன கட்டுப்பாடு ஆகும்.

v  ஜனன உறுப்பையும், வயிற்றையும் மனவலிமையுடன் கட்டுப்படுத்த வேண்டும்; கைகளையும், கால்களையும் கண்களால் கட்டுப்படுத்த வேண்டும்; கண்களையும், காதுகளையும் மனத்தால் கட்டுப்படுத்த வேண்டும். மனத்தையும், பேச்சையும் செய்யும் செயல்களைக் கொண்டு கட்டுப்பத்த வேண்டும்.

v  தினம் செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்யும் பிராமணன், பூணூலை எப்போதும் அணியும் பிராமணன், தினமும் வேத பாராயணம் செய்யும் பிராமணன், கீழ் சாதியினர் சமைத்த உணவை உண்ணாமல், உண்மையே பேசி, குருவை மதிக்கும் பிராமணன் - ஒருபொழுதும் பிரம்ம லோகத்திலிருந்து கீழே விழமாட்டான். 

v  ஒரு க்ஷத்திரியன் சொர்க்கம் அடையச் செய்ய வேண்டியவைகள்: வேதம் கற்று, ஹோமத் தீ வளர்த்து, யாகம் செய்து, மக்களைக் காத்து, பசுக்கள் - பிராமணர்களைப் பாதுகாத்து, யுத்த பூமியில் சாவிற்கு பயப்படாமல் சண்டை இட்டு - ஆகியவைகள் தான் க்ஷத்திரிய தர்மமாகும்.

v  ஒரு வைஸ்யனின் சொர்க்கம் அடையச் செய்ய வேண்டியவகள்: வேதம் கற்று, பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், தன் உறவினர்களுக்கும் தன் செல்வத்தை தானமாக அளித்து - செயல்படுவது தான் வைஸ்ய தர்மமாகும்.

v  ஒரு சூத்திரன் சொர்க்கம் அடையச் செய்ய வேண்டியவைகள்: பிராமணர்கள், க்ஷத்திர்யர்கள், வைஸ்யரக்ள் ஆகியவரகளை வணங்கி தனது பாவத்தை அக்னிக்கு இறையாக்கி அந்த மூன்று குலத்தவர்களின் ஆசிகளைப் பெற்று வாழ்க்கையில் தனது கடமைகளைச் செய்து சொர்க்க வாழ்க்கையை சாவிற்குப் பின் அடைகிறான். இது தான் சூத்திர தர்மமாகும்.

v  பாண்டுவின் மகனான யுதிஸ்டிரர் க்ஷத்திரியராகச் செயல்பட நீங்கள் அவரை ராஜாவாக அரியணையில் ஏற்றவும். 

திருதராஷ்டிரர் சொல்கிறார்: இதைத் தான் நீங்கள் என்னிடம் அடிக்கடி சொல்கிறீர்கள். எனது மனமும் நீங்கள் சொன்ன அறிவுரையின் படித்தான் செயல்பட விரும்புகிறது. பாண்டவர்களுக்கு நியாயம் வழங்க என் மனம் விரும்பினாலும், துரியோதனனைப் பார்த்தவுடன் பாசத்தால் கட்டுண்டு என்னால் நீ சொன்ன படிச் செய்ய முடியவில்லை. 

இது என் விதியின் செயல். விதியை யாரால் வெல்ல முடியும். நான் நினைக்கிறேன் விதிப்படி நடப்பது சர்வ நிச்சயம். அதை மனித முயற்சியால் தடுப்பது முடியாத ஒன்று. 

 

தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவிய நூல்களின் மின் வலை இணைப்பு:



 1. 



இணைப்பு: file:///C:/Users/DELL/OneDrive/Desktop/Vidura%20Niti%20-%20CP%20Raamaswamy%20Aiyar%201955.pdf

 

 


2. 

 

Text Box: இணைப்பு: chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/file:///C:/Users/DELL/OneDrive/Desktop/Vidura%20Niti%20-%20Gita%20Press.pdf இணைப்பு: chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/file:///C:/Users/DELL/OneDrive/Desktop/Vidura%20Niti%20-%20Gita%20Press.pdf

 


Text Box: இணைப்பு: chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.knowingourroots.com/wp-content/uploads/2021/08/Vidura-Needhi.pdf

3.

 

 இணைப்பு: chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.knowingourroots.com/wp-content/uploads/2021/08/Vidura-Needhi.pdf




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017